ABINAYA.M
கவிதை வரிசை எண்
# 239
மாண்புமிகு மகளிர்....
______________________
பெண்ணின் கையில் கரண்டியைப் பிடுங்கு.. ஆணுக்குப் பெண் சமம் என தொடங்கு..!
சிலர் மனிதனாய் மாறியும் இன்னும் குரங்கு...
நீ சமத்துவம் படைத்து சரித்திரமாய் உறங்கு..!
புத்தகம் படித்து புத்தியை தீட்டு.. யுத்தத்தின் போதும் அறிவையே காட்டு!
வீரப் பெண்ணே நீ அறிவு கிடங்கு..
உன் வீச்சும் பேச்சும் உனக்கு நூறு மடங்கு..!
பெண் எதற்கும்
அஞ்சா எரிமலை..
நீ யார் கொடுக்க எனக்கு விடுதலை..!
என்னை வார்த்தையாலே கில்லாதே..
இனியும் அழகி என சொல்லாதே..!
நாங்கள் பூமித்தாயின் செல்லப்பிள்ளை இனி
எவரெஸ்ட் தாண்டியும்
எங்கள் எல்லை..!
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்