M.prema
கவிதை வரிசை எண்
# 238
சர்வதேச மகளிர் கவிதை போட்டி 2022
மாண்புமிகு மகளிர்
அன்பின் இலக்கணமாய் அகிலத்தில் உயர்ந்த பெண்ணே
ஆசைகள் பல உன்னில் கொண்ட மலரே
இல்லறம் தன்னை இயல்பாய் நடத்தும் இனியவளே
ஈகை பண்பை இடைவிடாது காக்கும் இறைவியே
உனக்காய் வாழாது உறவுகளை உயர்த்திய உத்தமியே
ஊரார் மெச்ச உலகம் கற்ற ஊமத்தம்பூவே
எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஏந்திழையே
ஏக்கத்தோடு தூக்கம் கொள்ளும் அணையா விளக்கே
ஐயமின்றி அனைத்தும் சாதித்த அழகிய பைங்கிளியே
ஒய்யாரமாய் உலகை ஆளும் ஆதி சக்தியே
உன் புகழ் பாட ஓவியமும் உயிர்பெறுமே
தடையில்லா அன்பை வழங்கும் தங்கத் தாமரையே
நீயில்லாது போனால் அகிலத்தில் உயிர்கள் ஏது
மகளாய் தமக்கையாய் தோழியாய் தாரமாய் தாயாய்
உயர்ந்து கொண்டே போகும் உந்தன் உறவே
அழியாப் புகழ் பெற்ற அன்னைத் தமிழால்
அன்பின் வடிவாய் விளங்கும் அவளை போற்றுவோம்
அவளால் அவளை அவளுக்காக அவளது அவளே
அழகாய் வடித்த அமுத வரிகள் கொண்டே
மகளிர் தின வாழ்த்துகளுடன் வணங்குவோம் மகளிரை….
மா.பிரேமா
22.02.2021
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்