logo
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்

Kanagambal natarajan

கவிதை வரிசை எண் # 237


மாண்புமிகு மகளிர் இறைவனின் இணையில்லா படைப்பு பெண்... அன்பில் சிலிர்த்து மகிழும் சீமாட்டி... வீடும் நாடும் போற்றும் விநோதினி... கலைதனை உற்றவருக்கு கற்பிக்கும் கலைவாணி. பழமையும் புதுமையும் கற்றறிந்த கற்பகம்... பாவலர் போற்றும் பண்பாடுமிக்க பராசக்தி... பிறரை மகிழ்வித்து மகிழும் பொம்மலாட்டகாரி... பொறுமையில் வியக்கத்தகு பூமாதேவி. பொதுநலத்தில் பலரும் வியக்கும் புதுமைப்பெண்... குறிக்கோள் நோக்கி பயணிப்பதில் சிங்கப்பெண்... தன்னிகரில்லா தாய்மையின் ஏகபோக உரிமையவள்... வலியினை தாங்கி குலம் தழைக்கும் காமதேனு. பெண்ணிற்கு பெண்ணே வியக்கும் தங்கப்பதுமை... நிலை கெட்டவரை காணின் பொங்கியெழும் அலைகடல்... பாரம்பரிய பண்பாட்டை வளர்க்கின்ற வளர்பிறை... தாதியாய், தன்னலம் கருதா குடும்பவிளக்கு. துணைவியாய், துணைவனின் வெற்றிக்கு பின்னிருக்கும் குலவிளக்கு... தாயாய், தன்மக்களை சான்றோனாக்கிய பல்கலைகழகம்... மகளாய்,மனையில் மணம் வீசும் மலர்... உடன்பிறப்பாய், உறவுகளை இணைக்கும் பாசமலர். வீட்டையும் நாட்டையும் நிர்வகிக்கும் அரசி... பழமையும் புதுமையும் கற்றறிந்த பாரதப்பெண்... சரிநிகராய் சாதனை புரியும் சங்கீதம்... துறைகள் அனைத்திலும் பங்களிக்கும் கல்பதரு. மறுபிறப்பில் மங்கையராய் பிறக்கவே பேராசை கொண்டோம்... பெண்மையை போற்றுவோம்!! --கனகாம்பாள் நடராஜன். 8903489977.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.