logo
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்

அருண்மொழி வில்லாளன்

கவிதை வரிசை எண் # 236


மாண்புமிகு மகளிர் பாட்டால் பெண்களை பண்புடன் உயர்வாய் போற்றி/ ஏட்டில் பெண்ணியம் எடுத்துரைக்கும் மாய உலகில்/ வரலாற்றை மாற்றிய வஞ்சகர்களின் புகழாரங்களை நினைக்க/ நிரந்தர ஏமாற்றம் நித்தம் நெஞ்சை பிசைகிறது/ ஏற்றம் கண்டு இம்மையில் இன்பம் சேர்க்க/ மாற்றம் வேண்டும் மண்ணுலகில் மனிதம் வாழ்வதற்கே/ மதுவாய் மாதுவாய் மங்கையை வர்ணித்தது போதும்/ புதுமைப்பெண் இவள் புரட்சிகள் செய்ய வல்லவள்/ பூவென்றுச் சொல்லி பூவையரைப் புகழ்வதை விடுத்து/ தீயென்று எண்ணிப்பார்த்தால் தீண்ட மறுப்பான் கயவன்/ மூடர்கள் மத்தியில் முடங்கிக்கிடந்த பெண்ணறம் தழைக்க/ வேடதாரிகளின் முகத்திரையை வேரறுக்கத் துணிந்திடடி கண்ணம்மா/ பிரசவிக்கும் வலிகள் பிரபஞ்சத்தில் மங்காத வானவில்லாய்/ முரசு கொட்டட்டும் முன்னேறும் நேரமிது கண்ணே/ அடுக்களையே கோவிலாக அடைபட்ட நாட்கள் போகட்டும்/ படுக்கைக்கு மட்டுமே பாவை தேவையென்பது மாறட்டும்/ நிராகரிக்கப்பட்ட உரிமைகள் நிரந்தரமல்ல உணர்ந்திடு பெண்ணே/ பராசக்தியாய் உருமாறி பாரினில் போராடத் துணிந்தெழு/ கசிந்துக் கொண்டிருக்கும் கண்ணீரைத் துடைத்தெழு அன்பே/ விசித்திரப் புவியிது வேற்றுமையில் உறவாட விரும்புது/ அகிலத்தின் பெருஞ்சக்தியாய் ஆற்றலைக் கொண்ட தேவியே/ சகித்து வாழ்ந்து சஞ்சலங்களில் வீணே சுழலாதே/ ஆணாதிக்க சமூகத்தில் ஆணிவேராம் பெண்ணின் அடிமைத்தனம்/ பேணாத பெண்ணறம் பேச்சளவில் உள்ளதடி கண்மணியே/ அருண்மொழி வில்லாளன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.