Gomathi maheshkumar
கவிதை வரிசை எண்
# 235
ஆல மரத்தின் ஆணிவேராய் என் தந்தை
அவ் மரத்தின் விழுதாக என் அன்னை
அதில் கிளைகளாம் என் சகோதர சகோதரிகள்
இலைகளாம் என் உறவினர்கள்
நீராய் என் ஆசிரியர்
உரமாய் என் கல்வி
அம்மரத்தில ஊஞ்சலாய் என் நண்பர்கள்
அதில் கூடு கட்டி குடி இருக்கும் குட்டி பறவை நான் இவ்வுலகில்
சிறகு முளைத்தது
அதை விரித்து
பறக்கும் முன்பே
என்னை வேட்டையாட
துடிக்கும்
வேடனோ இந்த குழந்தை திருமணம்!!!
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்