M. Rahini
கவிதை வரிசை எண்
# 234
அம்மா என்னும் நான்...
பூக்கள் பூக்கும் அந்த காலை வேளையில் தான் என்னுள் அவன்என்பதை அறிந்தேன்.
வற்றிய ஆற்றில் புது வெள்ளம் வந்து பாய்ந்த நிகழ்வு அது.
புது மனிதன் வரவேற்க மகிழ்வாய் தான் கழிந்தது இரண்டு மாதம்
வேலை நிமித்தம் பயணிக்க இரு மணி நேரம் ஆகும். அடிக்கு ஒரு நொடி வரும் வாந்தி அடக்கி சுழன்று வரும் மசக்கையை விரட்டி பேருந்தின் வேகத்தைவிட முன்னோக்கி எப்படி என் பயணம்.
தேகம் மெ லி ய ஊனை உருக்கி உயிர் கொடுத்த காலம் அது
வயிறு பசிக்கும் அன்னம் அ ள் ளி உண்ண ஆவல் துள்ளும் கிட்ட வந்த உணவு எட்டு காத தூரம் பிடிக்காமல் ஓடும்.
மண் சட்டியில் கொதிக்கும் கறிக் குழம்பின் வாசனை கூட அப்போதுதான் நாற்றமெடுக்கும் என அறிந்தேன்.
நாட்கள் நகர.....நகர...
கொடி இடையும் பானை வயிறு என ஆனதென்ன!
இறக்கிவைக்க முடியாத பாரமாய் மனமகிழ்வுடன் நான்.
8 மாதத்தில் தான் குட்டி குறும்புகள் அதிகமானது.
உழவுக்கு வந்த செக்குமாடு போல வயிறு முழுவதும் சுரண்டும் உழன்றும் வரவை உணர்த்தியவாறு..
வளையல் இடும் ஓசைக்கு தான் வளைந்து நெளிந்து ஆடியதை தான் மறக்க முடியுமா!?
பணிநிமித்தம் ஆயத்தமாக, பனிக்குடம் உடைந்து தன்னிச்சையாய் ஓடும் வெள்ள நீரானது.
உள்ளத்தில் மகிழ்ச்சி பூ ஒருநொடி பூத்து சிரித்தது.
தன் பங்கிற்கு பதற்றமும் வந்து பற்றிக்கொண்டது
சில மணி நேரத்திற்கு பின் எலும்பை யாரோஒடி க்கும் சத்தம்
குருதி குளத்தில் குளித்த தேகத்தோடு நான் பெற்றெடுத்தேன் ஒரு தங்க மகனே!!!
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்