Prabavathi
சிறுகதை வரிசை எண்
# 159
மாரிச் செல்வமும், பூங்க னியும் தங்களது முறையற்ற காதலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர்."மாமா... நீ முதல்லயே என்ன கட்டியிருக்கலாம் இல்ல"?.
"ஆமா தான். ஆனா உங்க அப்பா தா நீ ஆளான உடனே அந்த பயலுக்கு கட்டிக் கொடுத்து விட்டாரே .."
"நீ அந்நேரம் வேலை வெட்டிக்கு போகாமல் ஊர சுத்திட்டு இருந்த. உனக்கு யாரு பொண்ண கொடுப்பாங்களாம் ?".
"சரிதான். ஆனாலும் எனக்கு நீதான்னு எழுதி வெச்சிருக்கு, பாத்தியா?" என்றவாறு அவளை அணைக்க முற்பட்டான் .
"போ மாமா, உனக்கு உன் பொண்டாட்டி தான் முக்கியமா போச்சு .இப்படி ராக்கோழி புடிக்கிற திருடன் மாதிரி வந்து போற.
எனக்கு இருக்கிற தைரியம் உனக்கு இருக்கா?" என நொந்து கொண்டாள். "இதப் பார்ரா செல்லம். நீதான் எனக்கு முதல்ல. அப்புறம் தான் மத்த எல்லாரும். இப்போ ஏண்டி அதெல்லாம் பேசிட்டு .முதல்ல கிட்ட வா" என்றவாறு அவளை நெருங்கினான்.
ரதியின் மனதிலோ ஆயிரக்கணக்கான போராட்டங்கள். தன்னுடைய வாரக் கூலி அன்றாட உணவிற்கே சரியாக போய்விடுகிறது. இதில் அடுத்த மாதம் காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா வேறு வருகிறது. ஊர் மொத்தமும் கூடி மகிழும் விழா இது .அவ்வூர் மக்கள் வேலையின் நிமித்தமாகவோ, படிப்பின் நிமித்தமாகவோ வெளியூரில் இருந்தாலும் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்து விடுவர். திருமணம் ஆகி வெளியூர் சென்ற பெண்களை, பெற்றோர் சீர் கொடுத்து அழைத்து வருவர். சம்பந்தக்காரர்களையும் அழைப்பர் .ஒரு வாரத்திற்கு முன்பே கோவிலுக்கு சென்று, கையில் காப்பு கட்டுவர். முழு மஞ்சளை நூலில் கட்டி அதை வலக்கை மணிக்கட்டில் கட்டுவர் .மஞ்சள் நீரில் நனைத்த வெள்ளைத் துணியால் கட்டை மூடி விடுவர். அன்று முதல் விரதம் தான்.
"டேய் ,ஏன் சாப்பிடல?"
"விதரம் சார். மதியம் சாப்பிடக்கூடாது" என்று ஆசிரியரிடம் மாணவர் கூறுவர். "எல்லோர் வீட்டுப் பிள்ளைகளும் புதுத்துணி போடும்போது, எம் பிள்ளைக மட்டும் ஏக்கமா பாக்குமே!" என ரதி மனம் வரு ந்தினாள்."ஏட்டி, உங்கப்பன் ரா வுக்கு வந்துச்சுன்னா பொங்கலுக்கு துணி எடுக்கணு ம்னு காசு கேளு" "சரிம்மா" என்றா ள் சின்ன குட்டி. அவளுக்கு எப்போதுமே அப்பாவின் மேலே பாசம் அதிகம்." ப் பா.. காசு கொடுப்பா.." என்றவாறு அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டா ள். "என்கிட்ட ஒரு நயா பைசா கூட கிடையாது" எ ன்றவனிடம்," நீ எனக்கு தர வேண்டாம். உன் பிள்ளைகளுக்காவது குடு. துணி எடுக்கணும்ல" என கேட்டாள் ரதி. "ஆமா, பெருசா பேச வந்துட்டா.. நீ நான் சொல்றத கேட்டியா? நா மட்டும் உனக்கு காசு தரணுமாக்கும்?. அதெல்லாம் முடியாது". "எல்லாம் அந்த சண்டாளியால வந்த வினை. அவ தான் இப்படி உனக்கு சொல்லிக் கொடுக்கிறா". "அவளை பத்தி ஏதாவது பேசு னே.." என்றவாறு கன்னத்தில் ஓங்கி அறைந்தான். நிலை தடுமாறி கீழே விழுந்த ரதியை பார்த்த குழந்தைகள் ஓவென அழுதனர்.
"சே !இவ மூஞ்சில முழிச்சாலே ஒரே ரோதன தா. மனுஷனை நிம்மதியா இருக்கவுடுராலா பாரு" என்றவாறு கைவியை இறுக்கி கட்டிக் கொண்டவன் 'டமார்' என கதவை சாத்திக்கொண்டு வெளியே போனான். நேராக நண்பன் ராசுக்குட்டி வீட்டிற்கு போனவனை "மாப்ள வாடா, என்ன முகம் ஒரு மாதிரி இருக்கு?" எனக் கேட்டான். "ஆமா, இவள ஏன் தான் கட்டு னேன்னு வருத்தப்படுறேன் .வீட்டுக்கு போனா கொஞ்சம் கூட நிம்மதி இல்லை. சும்மா எப்ப பார்த்தாலும் காசு காசு ன்னு கேட்டு உயிரை எடுக்கா"" " "கொடுக்க வேண்டியது தானே மாப்பிள?" "நீ வேற, பூங்கனிக்கு புதுச் சேலை வாங்கி கொடுத்துட்டு செலவுக்கு 2000 ரூபாயும் கொடுத்துட்டேன். என்ன விட்டா அவளுக்கு யாருப்பா இருக்கா ?""ஆமா அவ உ ன்ட்ட ரொம்ப அன்பா இருக்கால்ல "என எரியும் தீயில் எண்ணெய் ஊற்றினா ன் ராசுக்குட்டி." சரி மாப்ள கவலைய விடு. இந்தா பனையில் இறக்கிட்டு வந்த கள்ளுப்பதனி இருக்கு. கலையம் முட்ட குடிச்சுக்கோ. மனசு காத்த பறக்கும்."
" அதான மாமா உன்னை தேடி வந்தேன். என் செல்ல மாமா" என்றவாறு அண்ணாந்த வாக்கில் ஒரு கலய பதனியையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தான். ஊரில் பொங்கல் களைகட்டியது. எல்லார் வீட்டிலும் ஒரே கலகலப்பாக இருந்தது. ராட்டினங்களும் பலூன் கடைகளும் இன்னும் பொம்மை கடைகளுமாய் ஊரே வண்ணமயமாக மாறி இருந்தது. திடீர் மிட்டாய் கடைகளில் மி க்சரும், காராசேவும் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது .லட்டு, ஜிலேபி ,மைசூர் பாக்கு போன்ற இனிப்பு வகைகளை மக்கள் ஓலை கொட்டான்களில் வாங்கிச் சென்றனர். ஜவ்வுமிட்டாய் விற்கும் மனிதன் கம்பின் உச்சியில் ஒரு பொம்மையை வைத்திருந்தான். அதன் கைகளில் இருந்த ஜால்ரா அவனது கயிற்று இழுப்பிற்கேற்ப 'ஜி ங்.. ஜிங் என ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லார் வீட்டிலும் கறிக்குழம்பு மணத்தது. "இன்னிக்கி மாடசாமி வெட்டுன பன்னிக்கறி நல்லா கொழுப்பா இருந்துச்சு"
" ஆமா நான் அதை வதக்கிட்டு, வீட்ல இருந்த செவல கோழிய அடிச்சு குழம்பு வச்சுட்டேன் உன் மாமன்காரன் வேற ஆட்டுக்கறி எடுத்து வந்துட்டான் .ஒரே வேலை தான் போ "என்றவாறு இசக்கியக்காவும், மாரியம்மாவும் பேசிக்கொண்டார்கள். அன்று மா ரிச் செல்வம் ரதியின் வீட்டிற்கு வரவே இல்லை. பூங்கனியுடன் அருகில் உள்ள நகரில் சினிமா பார்க்க சென்று விட்டான். புதுப் புடவை உடுத்தி அலங்காரமாக இருந்த அவளிடம் மகிழ்ந்து கொண்டிருந்தான் ரதியின் கணவன்.
"செல்லம் நீ இந்த புடவையில தேவத மாதிரி இருக்கடா "
"போ.. மாமா" என சிணுங்கினாள் பூங்கனி. படம் முடிந்ததும் நல்லதொரு உணவகத்திற்கு சென்று மட்டன் பிரியாணியும், கோழி சுக்காவும் சாப்பிட்டனர். "ஐஸ்கிரீம் கொண்டு வா" என சர்வரிடம் கூறிவிட்டு சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்தனர் .
"மாமா உன்கிட்ட பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரியல. வா கிளம்புவோம். ஊர்ல இன்னிக்கு ராத்திரி கூத்து நடக்கும். பாக்கணும்" என்றவுடன் ஊரை நோக்கி பைக் பறந்தது.
ரதியும் குழந்தைகளும் சோகத்தில் இருந்தனர். ராஜா ஜவுளி கடையில் கடனுக்கு வாங்கிய கவுனும். சுடிதாரும் நவீனாவுக்கும் சுனிதாவிற்கும் அழகாக இருந்தது.
"என்ன ரதி அக்கா! புதுச்சேலை எடுக்கலையா?" என்றாள் பக்கத்து வீட்டு பானு." ஏய் சும்மா இருடி. ரதி ,நீயும் பிள்ளைகளும் எங்க வீட்டுக்கு வாங்க. சாப்பிடலாம்." என்ற பானுவின் அம்மாவிடம், "இல்லக்கா. வேண்டாம்" என்றவாறு வீட்டை நோக்கி நடந்தாள் ரதி.
மாரிச்செல்வம் அவ்வப்போது வீட்டிற்கு வருவான். பிள்ளைகளை பார்த்துவிட்டு மீண்டும் பூங்கனியை தேடி சென்று விடுவான். பூங்கனியின் பெற்றோர் இவர்களது நடவடிக்கையை கண்டு மிகுந்த வேதனை உற்றனர் ."இவள இப்படியே விடக்கூடாதுங்க. தொலைதூரத்துல யாராவது வரன் கிடைச்சா கட்டிக் கொடுத்தரனும்"_ இது பூங்கனியின் அம்மா .
"ஆமாடி .பாவம் அந்த ரதி பொண்ணு. அவளுக்கு பெத்தவங்க சைடுலையும் சப்போர்ட் இல்ல. ரெண்டு பெண் குழந்தைகளை வச்சிட்டு பாடா படுறா" என்றார் பூங்கனியின் அப்பா .அவர்கள் நினைத்தவாரே துபாய் வரன் ஒன்று தகைந்தது. பூங்கனியின் பெரியம்மா அருப்புக்கோட்டையில் இருந்து வந்திருந்தாள். பையனின் புகைப்படத்தையும் காண்பித்தாள்.
" பையனுக்கு இது இரண்டாவது திருமணமாம். மூத்த மனைவி டைவர்ஸ் கொடுத்துட்டாளாம் "என்றவுடன் "சரி எப்படியாவது இவ்வரனை முடித்து விட வேண்டியது தான்" என்றார் ரதியின் அப்பா.
அருப்புக்கோட்டைக்கு கோவிலுக்கு செல்வதாக கூறி பூங்கனியை காரில் அழைத்துச் சென்றனர். முதலில் மறுத்தாலும் மற்ற சொந்தங்கள் வற்புறுத்தியதால் அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. "ஏ பூங்கனி.. மாப்பிள நல்லா கை நிறைய சம்பாதிக்கிறார். பார்க்க நல்லா சிகப்பா வளத்தியா இருக்காரு. உன்ன நல்லா பார்த்துப்பாரு" என்ற அண்ணியிடம் "இல்லை அண்ணி! என்னால மாரிய மறக்க முடியாது"எனக் கெஞ்சினாள்.
அவளது அண்ணன் அதுவரை அமைதியாக இருந்தான். பூங்கணியின் பதிலை கேட்டதும் அவனது கோபம் தலைக்கு ஏறியது.
" என்னடி ஒரேடியா தான் திமிரா பேசுற. கைய கால உடைச்சு போட்டுருவேன் பாத்துக்க. நீ அந்த ரதிப் புள்ளைய கொஞ்சம் நெனச்சு பாத்தியா? அவளும் ஒரு பொண்ணு தானே! மறுவாதையா இந்த கல்யாணத்துக்கு சம்மதி" என்று கையை ஓங்கினான். "ஆமாம் மா. என்னைக்கி இருந்தாலும் ரதிதான் சட்டப்படி மாரி செல்வத்துக்கு பொண்டாட்டி. உன் இளமை தீர்ந்ததும் அவனுக்கு நீ வேண்டாதவளாயிடுவ" என அத்தை கண்ணீரோடு அறிவுரை கூறினாள்.
இனிதாக திருமணம் முடிந்தது. அத்தை வீட்டில் இருந்தே பூங்கொடியை துபாய் அனுப்பி வைத்தனர் அவளது பெற்றோர். செய்தியைக் கேட்ட மாரிக்கு தேள் கொட்டியது போல் இருந்தது. கொஞ்ச நாள்களாக நன்கு குடித்தான். உடல் நலிவுற்று நோய்வாய்ப் பட்டான். அவனை கவனிப்பார் யாரும் இல்லை.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்