logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

செந்தூர்குமார்

சிறுகதை வரிசை எண் # 148


காய்கறி வியாபாரி ############### "என்னங்க பஸ் வரும் நேரம் ஆயிடுச்சு எந்திரிங்க "என்று அதிகாலை நாலு மணி வாக்கில் எழுப்பி விட்டாள் வசந்தி. துடித்தெழுந்து கடகடவென்று ஒரு செம்பு பச்சை தண்ணீயை குடித்துவிட்டு அதே தண்ணீரில் முகம் கழுவியதும் கழுவாததுமாக லக்கேஜ் பைகளை தூக்கிக்கொண்டு வேகமாக பஸ் ஸ்டாப் வந்தடைந்தான் ராமு. டெப்போவில் கழுவியதா அல்லது பெய்யும் பனியில் நனைந்ததா என்று யூகிக்க முடியாத அளவுக்கு ஈரம் சொட்டும் அந்த பேருந்தில் ஏறி உட்கார்ந்தான் ராமு. பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு வழக்கம் போல் தூங்க தொடங்கியவன் சந்தை வந்ததும் தானாகவே விழித்துக் கொண்டு இறங்கினான் முன்பு ஒரு முறை சரியான இடத்தில் இறங்காமல் அடுத்த நிறுத்தத்தில்இறங்கி நடந்து வந்ததில் அன்றைய வியாபாரத்திற்கான சரக்குகள் கிடைக்காமல் போனதிலிருந்து சந்தை வரும் முன்பே உஷாராக விழித்துக் கொண்டு இறங்கி விடுவான் ராமு. சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கும் காய்கறிகளை நோட்டமிட்டு வந்தாலும் வழக்கமாக வாங்கும் காந்திமதி அம்மாள் விரித்திருக்கும் கடையில் தான் எல்லா காய்கறிகளையும் வாங்குவான் 'இன்று அமாவாசை தினமாச்சே' என்று பிரத்தியேகமாக சில காய்கறிகளை வாங்க நினைத்தவன் கீரை சுரைக்காய் பூசணிக்காய் போன்றவைகளை அதிக அளவில் வாங்கி வந்தான் என்னதான் இவன் நல்ல காய்கறிகளை வாங்கி வந்து தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்தாலும் எப்போது வாங்கும் வாடிக்கையாளர்களே இவனிடம் வாங்கி செல்வர். ஒவ்வொரு நாளும் சந்தைக்குச் சென்று காய்கறிகளை பைகள் நிறைய வாங்கி வந்து நீராடி விட்டு நெற்றி நிறைய திருநீர் பொட்டு வைத்துக் கொண்டு காலை சாப்பாடு பற்றி கவலைப்படாமல் தள்ளு வண்டியில் காய்கறிகளை நிரப்பி கொண்டு வியாபாரத்துக்கு சென்று விடுவான் ராமு .தேவியோ காலை சாப்பாடு தயார் செய்து கொண்டு ராமு தள்ளுவண்டி நிற்கும் இடம் தேடி சரியாக சென்று விடுவாள் தேவி சில நேரம் வியாபாரம் நன்றாக நடந்து விடுவதும் சில நேரம் வியாபாரம் படுத்து விடுவதும் உண்டு. எப்படியாக இருந்தாலும் தினமும் சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து விற்பனை செய்தால் தான் நிம்மதி ராமுக்கு வயலில் வேலை இருக்கும் நாட்களில் தள்ளு வண்டியை வீட்டிலேயே போட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்று விடுவான் ராமு. வயல் வேலைகளான நாற்றுப்பறிப்பு, அறுவடை, வைக்கோல் கட்டுதல் போன்ற வேலைகளில் மும்முரம் காட்டுவதும் வயலில் வேலை இல்லாத சமயத்தில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்வதுமென எல்லா காலங்களிலும் உழைக்கும் பாட்டாளியாக இருந்தான் ராமு வெயில் காலத்தில் கிடைக்கும் வெள்ளரிப்பிஞ்சு ,இளநீர் ,தர்பூசணி போன்றவைகளை வழியில் வரும் வியாபாரிகளிடம் வாங்கி வைத்துக் கொண்டு தள்ளு வண்டியில் சரக்கு குறையாமல் பார்த்துக் கொள்வான் ராமு. வெயிலின் தாக்கத்தில் களைத்துப் போகும் ராமு .ஏதாவது ஒரு மரத்தடியில் படுத்து இளைப்பாறி கொள்வான் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் பிறந்தாலும் ஒன்று கூட தங்காமல் போனது தேவிக்கு .நான்காவதாக குழந்தை பெறுவதற்கான திறன் இல்லாததால் அத்துடன் நிறுத்திக் கொண்டாள் தேவி ஒருமுறை சந்தைக்கு காய்கறி எடுக்க போகும்போது வாய் பேச முடியாத எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவனை வளர்ப்பு மகனென்று அழைத்து வந்தான் ராமு. தேவியும் அவனை தன் பிள்ளையென நினைத்து வளர்த்து வந்தாள் அவனும் தொழில் மற்றும் விவசாயப் பணிகளில் உதவியாக இருந்து வந்தான் நான்கு ஆண்டுகளுக்கு பின்பு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிலிருந்து வெளியேறி விட்டான் அவன் . அவன் சென்றதில் ராமுக்கும் தேவிக்கும் ரொம்ப வருத்தம் . அவன் நினைப்பில் முன்பு போல் சந்தைக்குப் போய் காய்கறிகள் எடுத்து வந்து வியாபாரம் செய்யாமல் இருந்தான் ராமு நீண்ட நாட்களுக்கு பிறகு தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்ய தொடங்கினாலும் முன்பு போல் வியாபாரம் அவ்வளவாக இல்லை. விவசாய பணிகளுக்கும் போக உடலும் ஒத்துழைக்கவில்லை. காய்கறி வியாபாரிவாழ்க்கையில் துவண்டு போயிருந்த ராமு அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் துவண்டு போயிருந்த காய்கறிகளுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள் என்றாவது ஒரு நாள் வாழ்வில் வசந்தம் வரும் என்று நம்பிக்கையில் செந்தூர் குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.