Veeralakshmi
சிறுகதை வரிசை எண்
# 145
கதையின் தலைப்பு : தேடலின் வலி
தேடலின் வலி…
தொடர்வண்டி ஒரு பக்கமாக ஓசையிட்டு கொண்டே மெதுவாக செல்ல, அந்த இதமான ஓசையைக் கேட்டு இமைகளை மூடி லேசாக கண் அசைகின்றாள்.. தாலாட்டு இசை கேட்கவில்லை என்றாலும் தாயின் மடியில் படுத்திருப்பது போல ஒரு உணர்வு என்ற ஒருமித மகிழ்ச்சியின் அலையில் போய் கொண்டிருக்கிறாள் திவ்யதர்ஷினி…
திவ்யதர்ஷினி தன்னுடைய அம்மா, அப்பா, அண்ணன் ,அக்கா.. இவங்களுக்கு தெரியாமல் பாட்டி, தாத்தாவை சந்திக்க தனியாக போகிறாள்… ..
அவளும் லேசாக கண் அசந்து தூங்க… அருகில் உள்ளவர்களின் சலசலப்பால் சட்டென்று கண் விழிக்கிறாள்..
..ச்சே.. சற்று நேரம் தான் கண் அசைந்தேன்..அதுக்குள்ளேயும் இவங்களோட சலசலப்பு சத்தத்தினால் தூக்கம் கலைந்துவிட்டதே… .இன்னும் நமக்கு தூக்கம் வராது என புலம்பிக்கொண்டே நேரத்தைப் பார்க்க இரண்டு மணி ஆனது…
அட, மணி இரண்டு ஆயிடுச்சே… இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதா,மூன்னு மணிக்கு நம்ம ஊரில் போய் இறங்கிடலாம் என்ற ஆனந்தத்தில் இருந்தாள்… .அவளுடைய கேன் பேக்கில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து மெதுவாக அசைப்போட, மனதில் இனம்புரியாத ஒரு சந்தோஷம்….
பத்து வருடங்களுக்கு பிறகு நம்ம தாத்தா,பாட்டியை சந்திக்க போகிறோம்…
சிறுவயதில் மாட்டுவண்டியில் தாத்தாவுடன் பின்னாலில் அமர்ந்து கொண்டு காடு வளத்தையும், அதில் விளையும் நெல் பயிர்களையும் இயற்கையான காற்றையும் ரசித்து கொண்டும் அவங்களோட பாசத்திலும் அரவணைப்பிலும் அவங்க என் மேல காட்டிய பாசமும்,இப்ப கூட கண்ணுக்குள்ள நிறைஞ்சு இருக்குது…
நம்ம சின்ன பிள்ளையாக இருந்த போதிலும் பாட்டி என்னோட அருகில் அமர்ந்து குட்டி குட்டி கதைகளாக சொல்வாங்க அதை கேட்டுட்டு அப்படியே தூங்கிடுவேன்… அதெல்லாம் நினைச்சு பாரக்கும் போது மீண்டும் சிறுபிள்ளையாக இருந்து விடக்கூடாதா, என்று மனசு ஏங்குது… .
திவ்யதர்ஷினி சின்ன வயசில் நடந்த சம்பவங்கள், குறும்புகள், அனைத்தையும் நினைத்து தனக்குள்ளேயே புன்னகையித்துக் கொண்டாள்… .
எதிரில் இருந்த ஒருவன் இவள் சிரிப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்தான். ….
ஹலோ… கொஞ்சம் மெதுவாக சிரியுங்கள்… எனக்கு எரிச்சலாக இருக்கு என்று அவன் சொல்ல,
உடனே திவ்யதர்ஷினி.. நான் சிரிச்சா….
.உங்களுக்கென்ன ….
சிரிக்கிறத எதுக்காக பாக்குறீங்க… உன்னுடைய வேலையைப் பாரு…
அப்படித்தான் சிரிப்பேன்..
என்னடா.. பண்ணுவ..
என்ன. .டா.. வா… ஒழுங்காக பேசு.. டி.. இல்லைனா.. வாயை ஒடைச்சுடுவேன்…
ஓய்.. டி.. யா.. எங்க வாயை ஒட.. பார்ப்போம் என்று எழுந்து சண்டைக்குச் சென்றாள் ...
அவனும் இவள் சண்டை போடுவதைக் கண்டு அப்படியே அமைதியானான்…
அவன் பேசாமல் இருந்ததைக் கண்டதும் திவ்யதர்ஷினியும் கெத்தாக அமர்ந்து அந்த பயம் இருக்கனும்ல என கைகளைத் தட்டி கொண்டு அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தாள்…
இப்படியொரு திமிரு பிடிச்ச பொண்ணை பார்த்ததில்லையே என நினைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டான்…
திவ்யதர்ஷினியை அவங்க வீட்டில் உள்ளவர்கள் திவ்யா என்று தான் அழைப்பார்கள்.. யாரிடமும் சொல்லாமல் வந்து விட்டேனே,அதுவும் எல்லாரிடமும் தோழியின் கல்யாணத்திற்கு போகிறேன் என சொல்லிட்டேன்… பொய் சொல்லிட்டோம்மே என்று ஒரு பக்கம் கவலையில் இருந்தாலும் தாத்தா,பாட்டியைச் சந்திக்கும் அத்தருணத்தை நினைத்து முகம் மலர்ந்தாள்… .
இவளும் செம்புலிபாக்கம்
ஊரை நெருங்கி கொண்டிருந்தாள்…
தொடர்வண்டி மெதுவாக செல்ல செல்ல அப்பாவின் சொந்த ஊரை நெருங்கி விட்டேனே என்ற ஆனந்தம் அவளுடைய மனசில் குதூகலத்தை ஏற்படுத்தியது… .
அந்த ஊரில் அவள் பாதத்தை எடுத்து வைத்ததும் இனம்புரியாத ஒரு உள்ளுணர்வு அவங்க அம்மா சுவர்ணாவுக்கு தோன்றியது .தூங்கிக் கொண்டிருந்தவள் வெடுக்கென எழுந்தாள்..
.சுவர்ணா பதற்றத்தில் எழுந்ததும் கேசவன் வேகமாக ஓடி வந்து என்னாச்சும்மா.. என்று கேட்டார்… .
ஏங்க நம்ம பொண்ணு திவ்யாவை எங்க, அவளை பார்க்கனும் ..
ஏம்மா.. திவ்யா அவளுடைய தோழியின் கல்யாணத்திற்குச் சென்றிருக்கிறாள்… உன்னிடம் சொல்ல சொன்னாள் நான் தான் மறந்து விட்டேன்… .
அவ கிளம்பும் போது உன்னைப் பார்த்து சொல்லத்தான் வந்தால் நீ தான் நல்லா தூங்கிக் கொண்டு இருந்தீயா… உன்னை தொந்தரவு செய்யக்கூடாதுனு நினைத்து என்னிடம் சொல்லிட்டு சென்றாள்…
சரிங்க.. நான் தான் மாத்திரை போட்டதால் நல்லா தூங்கிட்டேன்..அவ கூட யாராவது போயிருக்கா என்று. கேட்டாள்…
சுவர்ணா, அவளுடைய தோழியின் கல்யாணத்திற்கு அவ ப்ரண்ட்ஸ்ஸோட போவாள்… அவளும் தனியாக ஜாலியாக இருக்கட்டும்மே என்று நினைத்து அனுப்பி விட்டேன்.
சரிங்க.. காலையில் எத்தனை மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பினாள்… இப்போது மணி எத்தனை ஆகுது…
அம்மா, அவ காலையில் பத்து மணிக்கு கிளம்பினாள்… மணி மூன்று ஆகுது..
என்னது.மூன்னு ஆகுதா… காலையில் பத்து மணிக்கு போனவள் இன்னும் வராமல் இருக்கிறாளே என்ற கவலை உங்களுக்கு இல்லையா…
ஐய்யோ.. சுவர்ணா.. ஸாரிம்மா… கொஞ்சம் பணிச்சுமை அதிகம் அதனால் தான் பிஸியாக இருந்து விட்டேன்.. இதோ இப்பவே பண்றேன்.
அப்பா… ஒரு இருங்க…
நானும் அவளோட போனுக்கு டிரை பண்ணிட்டு இருக்கேன்.. சுவிட்ச் ஆப்பென்று வருது என்றான் கோகுல்….
என்னடா.. கோகுல் சொல்ற… அவ கூட நீயாவது போய் இருக்கனும்…இன்னும் வீட்டுக்கு வரல என்று பதற்றத்துடன் பேசினாள்..
சுவர்ணா.. ஒன்னும் ஆகாது திவ்யா அவ தோழிகளோடு பேசிக்கொண்டு இருப்பாள்.. கொஞ்சம் பொறுமையாக இரும்மா.. அவளே வந்து விடுவாள்…
என்னங்க.. நம்ம பொண்ணு திவ்யா சொந்த ஊரான அத்தை ,மாமா வீட்டுக்குத் தான் போயிருக்காளே என்று மனசு சொல்லுது… .
அவ, எதுக்காக அங்க போக போக போறாள்.. தனியாக அவளுக்குப் போகவும் தெரியாது… .அப்படியே போனாலும் நம்மலிடம் சொல்லாமல் செல்லவே மாட்டாள் என நம்பிக்கையோடு சொன்னார் கேசவன்..
திவ்யா ஏற்கனவே தாத்தா,பாட்டியை பார்க்கனும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள்.. இந்த தடவை என்னை கூட்டிட்டு போகாவிட்டால் உங்க யாரிடமும் சொல்லாமல் நானே தனியாக ஊருக்குச் சென்றிடுவேன்….
அதனால் தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றாள்…
கோகுல் நீ போய் அவளுடைய கைப்பேசி ரூமில் இருக்கிறதா என்று பார்த்துட்டு வா என்று கூறினார்..ஒரு வேளை சார்ஜ் இல்லையென்றாலும் வீட்டிலேயே வைச்சுட்டுச் சென்றிருப்பாள்…
சரிங்கப்பா.நான் போய் பாரத்துட்டு வருகிறேன்… கோகுலும் விரைவாக போய் திவ்யாவின் அறையை பார்த்து விட்டு வந்தான்…
அப்பா, அவளுடைய கைப்பேசி வீட்டில் இல்லை.. கண்டிப்பாக கொண்டு தான் சென்றிருப்பாள்… .
நீ திரும்பவும் முயற்சி செய், அவள் எங்க தான் போயிருப்பாள் என்று தெரியனும்… .
கேசவன் ஒரு பக்கம் டிரை பண்ணிட்டே இருந்தான்… மாடியில் இருந்து. போனில் பேசிக்கிட்டு கீழே இறங்கி வந்தாள்..திவ்யதர்ஷினியின் அக்கா…
அனைவரது முகத்திலும் ஒரு பதற்றம் தென்பட்டதைக் கவனித்து போனை துண்டித்து விட்டு பரபரப்பாக வந்தாள் வினோதினி என்னவென்று கேட்போம் என அப்பாவின் பக்கம் நெருங்கினாள்…
தங்கையைப் பத்தி பேசிக்கொண்டிருந்தார்கள்…
அப்பா, என்னாச்சு.. அம்மா.அம்மா உங்களுக்கு என்னாயிற்று… .நீங்க உங்க ரூமில் தான் ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தீங்க.. அதுக்குள்ளேயும் ஹாலில் வந்து படுத்து இருக்கீங்க…
வினோதினி திவ்யா உன்னிடம் எதுவும் சொல்லிட்டு போனாளா..
இல்லம்மா… என்னிடம் எதுவும் சொல்லலயே!... அவ கல்யாணத்துக்குச் சென்றுள்ளதாக அப்பா தான் சொன்னாங்க என்றாள்…
காலையில் போனவள் இன்னும் வீடு திரும்பவில்லை என்ற வருத்தமாக பேசினாள்… அவளுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல.. இந்த நிலைமையில் அவளை தனியாக அனுப்பி வைச்சுட்டீங்களே என புலம்பஆரம்பித்தாள்…
கேசவனும்,கோகுலும் அவளுடைய போனுக்கு மாறி மாறி போட, அவளுடைய போன் சுவிட்ச் ஆப்ல தான் இருந்தது… .
அம்மா.நீங்க புலம்பாமல் இருங்க… அவளுடைய தோழியைச் சந்தித்து பேசிக் கொண்டிருப்பாளோ என்னம்மோ.. அதனால் கூட தாமதம் ஆகலாம்...நீங்க பதற்றப்படாமல் இருங்கள் என்று சமாதானப்படுத்தினாள்…
திவ்யதர்ஷினி அவங்க தாத்தா வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க வயலோரமாக இயற்கையை ரசித்தபடி மெதுவாக நடந்து சென்றாள்…
.அப்போது வீட்டில் சொல்லி விடுவோம் என்று தனது கைப்பேசியை சுவிட்ச் ஆப்ல இருந்து எடுத்து விடவும் போன் ஒலித்தது…
உடனே திவ்யதர்ஷினி, அட அப்பா தான் போடுறாங்க என சந்தோஷத்தில் அழுத்தி பேசினாள்… .
ஹலோ… திவ்யா எங்கம்மா இருக்குற, கல்யாணம் முடிஞ்சா வீட்டைப் பார்த்து வராமல் அங்க என்ன பண்ணிட்டு இருக்குற… முதலில் நீ எங்க இருக்குற.. சொல்லு அண்ணனைக் கூப்பிட வரச் சொல்றேன்…
அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்…உங்களிடம் ஒரு பொய் சொல்லிட்டேன்… இப்போது நான் நம்ம தாத்தா ஊரில் தான் இருக்கிறேன்… .
அப்பா… . நானும் உங்ககிட்ட தாத்தா, பாட்டி ஊருக்கு கூட்டிட்டு போங்க என்று பல முறை சொல்லியிருந்தேன்… ஆனால் நீங்க தான் அடுத்த மாதம் போகலாம் என்று சொல்லி சொல்லி அப்படியே ஏமாற்றி விட்டீர்கள்…
இனிமேல் உங்ககிட்ட சொன்னாலும் நீங்க அழைச்சுட்டு போக மாட்டீங்க… அதனால் நானே கிளம்பி வந்துட்டேன்…
திவ்யா.. நீ மட்டும் எப்படிம்மா..
தனியாக சென்றாய்…
உன்னுடன் தோழி யாரும் வரலயா…
இல்லப்பா… நான் மட்டும் தான் தனியாக வந்துருக்கேன்…
இப்ப தான் வந்து இறங்குனேன்…
என்னது ஊரில் இருந்து தான் பேசுறீயா….
ஆமாம்.. நான் வீட்டிலிருந்த உடனே கிளம்பிட்டேன்….இதோ பாட்டி வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கிறேன்… நீங்க அம்மாவிடம் சொல்லி விடுங்கள்..
அப்பா.. அப்பா… கேட்கல.. பா..
ஹலோ,!.திவ்யா.. திவ்யா… என்று சொல்ல…
அப்பா.. நீங்க பேசுறது எனக்கு கேட்கல, என்று சொல்லி போனை துண்டித்தாள்…
அப்பா.. என்னாச்சு… அவ எங்க இருக்கிறாளாம் என வினோதினியும், கோகுலும் கேட்க… அதற்கு கேசவன் மெளனமாக இருந்தார்..
திவ்யா, பாட்டி தாத்தாவைப் பார்க்க தான் போயிருக்காள்…
நான் தான் சொன்னேன்ல, அவ அங்க தான் போயிருப்பானு… நீங்க தான் நம்பல…
ஆமாம்.. சுவர்ணா .இப்போது தான் புரியுது…ஆரம்பத்திலேயே அவளிடம் உண்மையைச் சொல்லி இருக்கனும்… நான் தான் தப்பு செய்து விட்டேன் என்று வருத்தத்தில் இருந்தார்.. அவ நம்மகிட்ட சொல்லாமல் போகமாட்டாள் என்று நம்பிக்கையில் இருந்தேன்… ஆனால் அவள் பாட்டி,தாத்தா மேல வச்ச பாசத்தில் இந்த தகப்பனை மறந்து விட்டாள் என்று உருக்குலைந்து பேசினார்…
மெதுவாக எழுந்து அமர்ந்து கேசவனின் கையைப் பிடித்து உட்காரச் சொன்னாள்… கோகுலும் வினோதினியும் அவங்க அம்மா என்ன சொல்ல போறாங்க என்று ஆவலாக இருந்தார்கள்… .
ஏங்க, கவலைப்படாதீங்க, அவளுக்கு உண்மை சொல்ற நேரம் வந்து விட்டது…அவளே அங்க போய் தெரிஞ்சுக்கிறதுக்குள்ள நம்ம அவகிட்ட உண்மையைச் சொல்லனும்… வாங்க நம்ம எல்லாரும் ஊருக்குப் போவோம் என்றாள்..
அனைவரும் பரபரப்பாக கிளம்பி செம்புலிபாக்கம் ஊரை நெருங்கி சென்றார்கள்… .
திவ்யதர்ஷினியை அந்த ஊரில் உள்ள மக்கள் ஒரு கண்ணோட்டத்தோடு பார்வையிட்டனர்… .அவளும் அதை கண்டுகொள்ளாமல் மெதுவாக நடந்து சென்றாள்.. அப்போது ஒரு வயல் வழியாக சென்று கொண்டிருந்த போது வேப்பமரத்தில் ஒரு பலகையில் சிறு ஊஞ்சல் தொங்கவிடப்பட்டிருந்தது…
அதை பார்த்தவள்
அந்த ஊஞ்சலை தொட்டு பார்த்து உற்சாகமடைந்தாள்…
.ஊஞ்சலில் அமர போகும் போது சிறு பிள்ளைகள் வந்து அமர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள்..
திவ்யதர்ஷினியும் சின்னகுழந்தைகள் ஊஞ்சலில் ஆடும் அழகை ரசித்து விட்டு பாட்டி. வீட்டை நோக்கி சென்றாள்…
பாட்டி,தாத்தா வீட்டை வெளியே நின்னு ரசித்து கொண்டாள்… வாசலில் யாருமே இல்லை…
பாட்டி தாத்தாவுக்கு ஒரு சர்ப்ரைஸ்ஸாக இருக்கனும்னு நினைச்சு திவ்யதர்ஷினி தனது கண்களைக் கட்டிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்… .
பாட்டியம்மா… தாத்தா..எங்க இருக்கீங்க.. இதோ உங்களோட திவ்யதர்ஷினி வந்துவிட்டேன் என்று சொல்லி ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்தாள்.. ஆனால் யாருமே பதில் அளிக்க வில்லை…
பாட்டியம்மா.. நீங்க ஏதாவது பேசுங்க… இத்தனை நாள்கள் வராமல் இருந்தது தப்பு தான்… பேசுங்க பாட்டியம்மா… .
திவ்யதர்ஷினி இன்னொரு ஒரு அறைக்குள்ளே நுழைய சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த அவங்க தாத்தா,பாட்டியின் புகைப்படம் அவளுடைய கைக்குத் தென்பட்டது… .
என்னது இது…போட்டோ மாதிரி தெரியுது… மாலை போட்டுருக்காங்க, என்று கேட்க… அந்த வீட்டில் பணி செய்யும் பெண்… ஏம்மா.. நீ. யாரு.. இங்க என்ன பண்ற என்று குரல் கேட்டது..
அதைக் கேட்டவள் கண்ணில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தாள்… .
நீங்க யாரு ,எங்க பாட்டியம்மா, தாத்தா.. உங்களை வேலைக்கு வச்சுருக்காங்களா…
ஏம்மா.. எந்த பாட்டியம்மா… இங்க அப்படி யாரும் இல்லை...இது எங்க முதலாளி அம்மாவோட வீடு.. அவங்க ஞாபகமா பாதுகாத்து கொண்டும் வருகிறேன்.
அந்த போட்டோவில் உள்ளவர்கள் தான்..எங்க முதலாளி ஐயாவோட அம்மா, அப்பா என கை நீட்டினாள் பெண்… .
திவ்யதர்ஷினியின் பார்வை புகைப்படத்தை நோக்க.. அதை பார்த்தவள் தலைசுற்றி கீழே விழுந்தாள்….
அவள் விழுந்ததும் பணிசெய்யும் பெண் ஓடி வந்தாள்… தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டாள்… அவளும் எழுந்து புகைப்படத்தை பார்த்து அழுதாள்… .
ஏம்மா.. நீ.. யாரு.. இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் உனக்கு சொந்தமா என்று கேட்டாள்…
ஆமாம்.. எங்க தாத்தா.. பாட்டி..என்று கதறி கதறி அழுதாள்.. அப்படியே இடிந்து போய் வாசலில் அமர்ந்தாள்…
உங்க தாத்தா,பாட்டி இறந்து இரண்டு வருஷம் ஆகுது… மா.. உனக்கு தெரியாதா… .
என்னது.. இரண்டு வருடமாகுதா..
எனக்கு தெரியாமல் போச்சே.. எங்க வீட்டில் உள்ளவர்கள் யாரும் சொல்ல வில்லையே என தலையில் அடித்து அழுதாள்…
அவங்க வீட்டில் உள்ள அனைவரும் காரில் வந்து இறங்கினார்கள்… .
திவ்யா இப்படி ஒரு தவிப்பில் இருந்ததைக் கண்டு மனம் உடைந்து போனார்கள்…
நில்லுங்க.. யாரும் எம் பக்கத்தில் வராதீங்க… ..
கேசவன் பொறுமையாக பேசி திவ்யாவின் அருகில் அமர்ந்து முட்டி இட்டு மன்னிப்பு கேட்டார்… .
ஏம்ப்பா.. என்னிடம் உண்மையைச் சொல்லாமல் மறைச்சுட்டீங்க… நான் தாத்தா,பாட்டி மேல எம்புட்டு பாசமாக இருந்தேன்.. இறுதியாக அவங்களோட முகத்தைக் கூட பார்க்க விடாமல் செஞ்சுட்டீங்களே என்று முகத்தை மூடிக் கொண்டு ஏங்கி அழுதாள்…
சுவர்ணாவை மெதுவாக அழைத்து வந்து திவ்யாவின் பக்கத்தில் அமர வைத்தாள் வினோதினி… .
திவ்யா.அழாதே.. நீ அழுதா உங்க பாட்டியால் தாங்கிக் கொள்ள முடியாது… .
போம்மா. என்னிடம். யாரும் பேசாதீங்க… இத்தனை வருடங்களாக ஒரு உண்மையை மறைச்சுட்டு பேசிட்டு இருந்துருக்கீங்க… .வேண்டாம் .
யாரும் பேச வேண்டாம்… .
உங்க விருப்பத்திற்காக நான் வெளியூரில் படித்தேன்… ஆனால் என்னோட ஆசை ,கனவு எல்லாமே பாட்டி,தாத்தா.தான்.. அவங்க இறந்ததைத் கூட சொல்லாமல் இருந்துட்டீங்களே… .
உடனே சுவர்ணா.. அம்மா இந்த விஷயத்தை வேணும்னு மறைக்கல.. தாத்தாவும், பாட்டியும் உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்கள்.. அதனால் தான் அம்மாவும்,அப்பாவும் நடந்த சம்பவத்தைச் சொல்ல வில்லை… .
வேண்டாம்…..வேண்டாம்.. என்ன இருந்தாலும் நீங்க எல்லாரும் சேர்ந்து என்னிடம் உண்மையை மறைத்து விட்டீர்கள்… தாத்தாவும், பாட்டியும் சொல்ல வேண்டாம் சத்தியம் வாங்கினாலும் நீங்க பண்ணிருக்கக் கூடாது…
இனிமேல் நான் வாழும் வாழ்க்கையில் உங்க யாரிடமும் பேச போவதில்லை என்ற ஆதங்கத்திலும் மன உளைச்சலிலும் பேசி விட்டு
சென்றாள்…
திவ்யதரிஷினியின் படிப்பு வீணாக போககூடாது என்று நினைத்த சுவர்ணா,கேசவனின் விருப்பம் நிறைவேற வில்லை…
உண்மையை தன் மகளிடம் மறைத்து விட்டோம்மே என்று தப்பை உணர்ந்து அவளிடம் மன்னிப்புக் கேட்க.. திவ்யதர்ஷினி மன்னிக்கவே இல்லை …
அவளுக்கு பிடித்த உறவோடு சேரவும் விடல, பார்க்க விடாமல் செய்து விட்டார்களே என்று ஒவ்வொரு நாளும் நினைத்து நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.அவளைப் பொறுத்த வரையில் தாத்தா,பாட்டி அருகில் இருந்து வாழ்வது போல அவளே ஒரு வாழ்க்கையை தேடிக் கொண்டாள்..
.
பிஞ்சு நெஞ்சில் வளர்ந்த அன்பும் இறுதி மூச்சு வரையிலும் குறையாது…
திவ்யதர்ஷினியின் பாசமும் இது போல தான் ……அவளின் தேடலே இப்போது வலியானது… .
….முற்றும்… .
.
.
.
.
.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்