logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

*சிறுகதை * ------------------ *அமைதி தேடிய ஆத்மா*-- ------------------------------------- "சமீர் ஆஹா!" "சொல்லி வேலையில்ல!" என்ன அழகுடா நீ!" என்றான் நியாஸ்! "அவன் சரத்குமார் தான்டா!" "ஆ.. அந்த நடையப் பாரு!" அவனைக் கண் பட்டுடாதீங்க!" என்றான் நசீம்! "கோட்சூட் அடிச்சி சமீர் மாப்ள வெளிக்கிட்டாச்சு!" என்று சொல்லிக்கொண்டு வெள்ளையன் மச்சான் வெளியே வந்தார்! "எத்தனை பொம்புளப் புள்ளயள் தான் சமீர் மச்சானை துரத்தித் துரத்தி லவ் பண்ணத் திரிஞ்சாங்க!" "அவன் சமீர் தான் இடம் குடுக்கல " என்றார் வெள்ளையன் மச்சான்! "சமீரின் நானாவும் வெளிக்கிட்டாச்சு!" என்றார் நியாஸ். அந்த வீட்டில் அன்று அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நாளிற் கலியாணம் நடந்தது! அங்கு உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டிருந்தனர்! அவர்களின் திருமணம் ஆரவாரமில்லாத ஆயத்தங்களுடன் நடந்தேறியது. இரண்டு சகோதரர்களும் இல்லற வாழ்வில் ஆனந்தம் கண்டனர் . அண்ணன் சதாத் சாதாரண குடும்பத்தில் மணம் செய்தார் ! வசதிபடைத்த குடும்பத்தில் தாயில்லாப் பிள்ளையான றிகாவை தம்பி சமீர் மணமுடித்தார். சமீரின் மனைவி றிகா , சொகுசையே விரும்புவாள்! கொஞ்சமும் உடம்பை வளைத்து வேலை செய்யமாட்டாள்! சமீர் சமாளித்துக் கொள்வார்! "றிகா டீ ஆறுது! எழும்பிக் குடிங்களேன் " என்றார் சமீர். ம்.. சரிங்க "என்றபடி எழுந்தாள் றிகா! "வேலைக்காரி வெள்ளம்மா காலைல வந்திடுவா என்ன?" என்றார் சமீர்!" "ஓ அவ நேரத்தோட வருவா!" "எங்களுக்குச் சமைக்கத் தெரியாதே!" "அவதான் சமைச்சுத் தாறவ!" என்றாள் றிகா! அதைக் கேட்டதும் அதிர்ந்து போனார் சமீர்! "எங்கட ஊட்ல, அஞ்சு சகோதரிகளும் ருசியாச் சமைச்சித் தருவாங்க!" "இதென்னயிது இவங்களுக்குச் சமைப்பது அவ்வளவுக்குக் கஷ்டமாமே!" என்று சிந்தனையில் மூழ்கினார் சமீர். "இங்க ஒவ்வொரு நாளும் வேலக்காரிட சமையல்தான்!" றிகாவின் தாயும் வேலைக்காரியின் சமையல்தான் சாப்பிட்டதாம்! வேலைக்காரி வராவிட்டால் கடைச் சாப்பாடுதானாம்!" "இது யாரோ சொன்னது!" " இப்பதான் ஞாபகம் வருது!" "என்ன செய்யிற சமாளிப்போம்" "போகப் போகச் சமையலப் பழக்குவம்!" "படிச்சுப் போட்டு வேலையில்லாம வீட்டுல கெடந்த நேரம் தாய்க்குச் சமையலில ஒதவி செஞ்சதானே!" "நமக்குத்தான் நல்லாச் சமைக்கத் தெரியுமே!" என எண்ணி ஆறுதலடைந்தார் சமீர்! வேலைக்காரியின் உதவியுடன், வாழ்க்கை, பிரச்சினையில்லாமலே போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள், "இஞ்சருங்க!" "வீட்டு வேலையெலாம் என்னால செய்ய முடியல" என்றாள் றிகா! "சரி சரி!" "பிள்ளை கெடைக்க இருக்குத் தானே!" "பிறகு சரியாயிடும்" "இப்ப நீங்க செஞ்சி கஷ்டப் படவாணாம் றிகா" என்று சொல்லி அன்பு காட்டினார் சமீர்! பிறந்த முதற்பிள்ளை, தாயின் கருவறையில் ஆறுமாதமே வாழ்ந்தது! பிறந்து ஆறு நாளே பூமியில் வாழ்ந்தது. பின்னர் அது இறையழைப்பை ஏற்றுக் கொண்டது. "அதுவும் இறைவன் நாட்டமே"என்று அமைதி கண்டார் சமீர். காலச்சக்கரம் சுழன்றது! அவர்கள் தனிக்குடித்தனம் போகவேண்டிய நேரமும் வந்தது! வீட்டுவேலையும் செய்து கொண்டு, பொதுச்சுகாதார அதிகாரியாகப் பணி புரிவது சமீருக்குச் சிரமமாகவே இருந்தது. வேலைக்காரி எடுக்கவும் சமீருக்கு விருப்பமில்லை! "றிகா!" " நம்ம வேலையை ரெண்டு பேரும் சேந்து செஞ்சிருவோம்" என்றான் சமீர். சரி என்று தலையாட்டினாள் றிகா! காலப்போக்கில் சமீர் வீட்டு வேலை முழுவதையும் செய்ய வேண்டிய நிலை வந்தது! வீடு சுத்தம் செய்தல், சமைத்தல், சமையலறைச் சுத்தம் கழிவறைச் சுத்தம் , வீட்டுச் சுற்றுப்புறச்சுத்தம் என்று சகல வேலைகளையும் அவர்தான் செய்வார்! "இறைவன் எந்த ஆத்மாவையும் தாங்கும் சக்திக்கு மேலதிகமாகச் சிரமப் படுத்துவதில்லை" என்பதையெண்ணியே சமீர் சாந்தியடைவார் . "எனக்கு இவ்வளவு தாங்கும் சக்தியிருக்குதா? "எனத் தனக்குள் சிரிப்பார். சிலநேரம் மனசுக்குள் அழுவார்! மோட்டார் சைக்கிளில் அவசரமாக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த சமீருக்கு, முன்னால் வந்த மாடு மோதுமென அவர் எண்ணவில்லை! "யா அல்லாஹ்" என்றவாறு கீழே சரிந்தார். தோள்பட்டையில் அடிபட்டுவிட்டது. அப்போது அவ்வழியாற் பயணம் செய்த வாகனம் ஒன்றிலிருந்து பலர் இறங்கினர். "இது நம்ம சமீர் தானே! அடிபட்டுக் கெடக்கார்! ஓடி வாங்க!" என்றார் ஒருவர்! "மாடு ஒன்றுதான் குறுக்கால போன! அதில தான் மோதிட்டார்!" "மிச்சம் நல்ல மனிசன்!" " எல்லாருக்கும் நல்ல ஹெல்ப் செய்வார்" என்றார் இன்னொருவர்! "பாவம்! விழுந்திட்டார்!" "நல்லவேளை பெருசாக் காயங்கள் இல்ல!" "சரி வாங்க" "பக்கத்துலதானே ஹொஸ்பிடல்! அங்க கொண்டு போவோம்!" என்றவாறு சமீரை தங்களின் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றனர்! பெரிய காயங்கள் இல்லாததால் சமீரை வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர்! சமீருக்கு வலது குறைந்த பிள்ளை ஒன்று இருந்தது. அதனை மனைவி தனக்குப் பராமரிக்க முடியாதென்றே சொல்லுவாள். அக்குழந்தை பிறந்ததிலிருந்து சமீரின் நிம்மதி கழன்று விட்டது. றிகாவின் பெற்றோர் அவளுக்குச் சீதனமாக நிறைய வயற்காணிகள் கொடுத்திருப்பதால் அவள் தலைக்கனம் கொண்டிருந்தாள். "ஒன்ட புள்ளய நீதான் பார்க்கணும்!" " என்னால இந்தச் சனியனோட கஷ்டப்பட ஏலாது !" என்று வார்த்தைகளால் குத்துவாள்! "வேலைக்கள்ளிக்குப் பிள்ளைச்சாட்டு" பிள்ளையை வைத்திருந்தால், வீட்டு வேலைகள் எதனையும் செய்யமாட்டாள்! சமீர்தான் அவசர அவசரமாகச் சுழன்று விட்டு அரசபணிக்குச் செல்வான் ! வீட்டு வேலைக்கு ஆள் தேடிக் கொண்டு வந்தாலும், வேலைக்காரியுடன் குழம்பித் திருப்பி அனுப்பி விடுவாள் றிகா ! "எனக்கு நிம்மதியே போச்சுது!" என் பொண்டாட்டி என்னை மதிக்கிறாயில்லயே " என்று பிள்ளையுடன் அமர்ந்து கொண்டு அன்புக்கு ஏங்குவார்! உயர்தர வகுப்பில் படிக்கும் ஒரே மகனும் குழப்படிதான்! எப்பவும் தலையிடி கொடுப்பான்! "யா அல்லாஹ்! ஏன் எனக்கு இவ்வளவு சோதனை!" என்று மனதுக்குள் அழுவார்! வேலைமுடிந்து வீடு வந்ததும் வளர்ச்சி குன்றிய மகளைப் பொறுப்பேற்று விட வேண்டும்! இல்லையென்றால் வீடு இரண்டாகிவிடும்!மனைவி போடும் சத்தம் அயலாருக்கும் ஆத்திரம் கொடுக்கும். ஆனால் யாரும் வரமாட்டார்கள்!யாரவது வந்தால் வெருட்டித் துரத்தி விடுவாள்! சமீரின் உறவுகள் யாரும் வந்தாலும் அவமதித்து அனுப்பிவிடுவாள். சமீருக்கு நடக்கும் பூசைகள் உறவுகளுக்கு விளங்கிடும் என்றே அவர்களின் உறவைத் துண்டித்து வைத்தாள் மனைவி றிகா. "சீ! என்ன வாழ்க்கையிது!" என்ர கஷ்டத்துக்கு முடிவே இல்லையா அல்லாஹ்!" என வேதனைப்பட்டுப் பெருமூச்சு விடுவார் சமீர்! தன் நண்பனிடம், "இவளை உட்டுப் போட்டு வேறு கலியாணம் முடிச்சா என்ன நியாஸ் " "சரியான மனநெருக்கடியாக் கெடக்கு!" "எங்கட சகோதரங்களையும் வரவேணாமாம்!" "என்னைப் பார்க்க என்ர சகோதரங்கள் இங்க வந்தா, அவள் தூக்குப் போட்டுச் சாவுவாளம் !" "எனக்கென்றா அவளை அடிச்சு முறிக்கத் தான் ஆசை " " என்னை மிரட்டிவெச்சிருக்காடா". "சில வேளை தற்கொலை செஞ்சிடுவாளோ என்று பயமாயிருக்குடா நியாஸ்!" "என்ன தான் செய்யிறது நியாஸ் என் மனசுக்கு எங்கே தான் ஆறுதல் கெடைக்கும் " என்று சொல்லிஅழுதான் சமீர்! "நீ விரும்பினா இன்னொரு கலியாணம் முடிச்சிப் பார் சமீர் " "நிம்மதியில்லாம இருந்து நீ நோயைத் தேடிக் கொள்ளாதே சமீர்நீ ஆம்புளடா!" . என்றான் நண்பன் நியாஸ்! "அப்புடித்தான் யோசிக்கிறன் நியாஸ் ஆனா,புள்ளையல நெனச்சாக் கவலையாக் கெடக்குடா " என்றான் சமீர்! ஆனால் அவரது மனம் தன் பிள்ளைகளை நினைத்து அழுதது! இப்படியே காலங்கள் கடந்தன! மகிழ்ச்சியை மறந்து நடைப் பிணமானார் சமீர்! அன்று டெங்கு ஒழிப்பு சம்பந்தமான கூட்டம் நடந்தது , அதனால் அவருக்கு வீடு வரச் சுணங்கிவிட்டது! "இவ்வளவு நேரமும் என்ன செஞ்ச!" "இண்டைக்கு ஏன் சொணங்கி வந்த நீங்க" "ஒங்கட ராத்தா தங்கச்சிமாரப் பாக்கப் போனதோ!" என்று தொண்டை கிழியக் கத்தினாள் றிகா ! சுணங்கிய காரணத்தைச் சமீர் சொன்னார்! அவள் அடங்கவில்லை! அங்கு புதிதாக வேலைக்கு வந்த வேலைக்காரி சமீரின் மனைவியின் செயலைப் பார்த்து அதிர்ந்தாள்! சமீரின் இருவிழிகளும் நனைந்தன! "யா அல்லாஹ் என்ன சோதனையிது!" என்று ஏங்கினார்! உடுப்பை மாற்றியதும் மகளைத் தூக்கினார்! வேலைக்காரி கொடுத்த போத்தல் பாலைப் பிள்ளைக்கு ஊட்டினார்! படலையடியில், "சமீர் சமீர்" என்று கூப்பிட்ட குரல் தன்சகோதரியுடையது போலிருந்தது! "இங்க யார் தான் வரப்போறா" என நினைத்தார் ! "எதற்கும் போய்ப் பாப்போமே!" எனப் படலையடிக்குப் போனார் ! "வாங்க ராத்தா வாங்க!" "எல்லாரும் வாங்க!" என்று அங்கு வந்திருந்த சகோதரியையும் அவரின் மகனையும் மருமகளையும் அழைத்து வீட்டுக்குள் வந்தார். உறவுகளின் வருகை சமீருக்கு மனதினில் மகிழ்வைக் கொடுத்தாலும் சாடையான பயத்தையும் கொடுத்தது! "மீண்டும் ஒரு சண்டை வருமோ " என எண்ணியதும் தலை சுற்றியது சமீருக்கு! அவர்களைக் கண்டதும் சமீரின் மனைவி தொழப்போவது போல் பாசாங்கு பண்ணிக் கொண்டு ரூமுக்குள் போய்விட்டாள்! வேலைக்காரி டீ ஊற்றிக் கொடுத்தாள்! சமீரின் ராத்தா கொண்டு வந்த கேக் வாழைப்பழத்தை அவர்களுக்கே வைத்துக் கொடுத்தார் சமீர்! சொந்தக்கதை சோகக்கதை, உறவுகளின் ஆனந்தக் கதை எனச் சந்தோசமாக அந்த மாலைப் பொழுது கடந்தது! அந்தச் சந்தோசம், அனைவருக்கும் மீளாத் துயர் தருமென்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்! இரவு ஒன்பது மணிபோல் வீடுதேடி வந்த உறவுகள் வெளியேறினர்! அங்கு குத்தாட்டம் தொடங்கியது! மனைவி றிகாவிடமிருந்து எறிகணை வார்த்தைகள் சமீரைத் தாக்கின! "என்னால தாங்கேலாதே அல்லாஹ்!" என்று சத்தமிட்டார். அவருக்கு நெஞ்சுக்குள் ஒருவகையான எரிவு தொடர்ந்தது! வாய்வுக்குணமோ என வேலைக்காரியிடம், "வெள்ளைப் பூடு கொஞ்சம் வறுத்துத் தாங்க புள்ள" என்றார்! வேலைக்காரி, தேடிப் பார்த்து விட்டு, "வெள்ளைப்பூடு இல்ல நானா "என்றாள். வலதுகுறைந்த மகளையும் தூக்கிக் கொண்டு பக்கத்துக் கடைக்கு மெல்ல மெல்ல நடந்து போனர் சமீர்! நெஞ்சுவலி கூடிக் கொண்டிருந்தது! வீடு வந்ததும், பிள்ளையை அருகில் படுக்க வைத்துத் தானும் கட்டிலில் சாய்ந்தார் சமீர்! அவருக்கு வியர்த்துக் கொட்டியது! உலாத்தப் போன மகனும் இரவு பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தான் ! சமீர் மகனைக் கூப்பிட்டார்! மகனிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை! மீண்டும் கூப்பிட்டார்! மகன் பொருட்படுத்தவில்லை! சமீருக்குக் கடுமையாக நெஞ்சுவலித்தது! "என்ர அல்லாஹ்! என்ர அல்லாஹ்! என்ற வார்த்தைகளோடு மயங்கினார்! அந்த ஆத்மா அடங்கி, அமைதியடைந்தது! அதனைக் கண்ட வேலைக்காரி, சத்தமிட்டு அலறினாள்! அவளின் சத்தம் கேட்டு, ரூமில் இருந்து வெளியே வந்தாள் மனைவி றிகா ! அப்போது எல்லாம் முடிந்துவிட்டது! ஓடிப் போய் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினாள் றிகா! "வந்து பாருங்களேன் என்ர புருஷன்*அமைதி தேடிய ஆத்மா*-- "சமீர் ஆஹா!" "சொல்லி வேலையில்ல!" என்ன அழகுடா நீ!" என்றான் நியாஸ்! "அவன் சரத்குமார் தான்டா!" "ஆ.. அந்த நடையப் பாரு!" அவனைக் கண் பட்டுடாதீங்க!" என்றான் நசீம்! "கோட்சூட் அடிச்சி சமீர் மாப்ள வெளிக்கிட்டாச்சு!" என்று சொல்லிக்கொண்டு வெள்ளையன் மச்சான் வெளியே வந்தார்! "எத்தனை பொம்புளப் புள்ளயள் தான் சமீர் மச்சானை துரத்தித் துரத்தி லவ் பண்ணத் திரிஞ்சாங்க!" "அவன் சமீர் தான் இடம் குடுக்கல " என்றார் வெள்ளையன் மச்சான்! "சமீரின் நானாவும் வெளிக்கிட்டாச்சு!" என்றார் நியாஸ். அந்த வீட்டில் அன்று அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நாளிற் கலியாணம் நடந்தது! அங்கு உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டிருந்தனர்! அவர்களின் திருமணம் ஆரவாரமில்லாத ஆயத்தங்களுடன் நடந்தேறியது. இரண்டு சகோதரர்களும் இல்லற வாழ்வில் ஆனந்தம் கண்டனர் . அண்ணன் சதாத் சாதாரண குடும்பத்தில் மணம் செய்தார் ! வசதிபடைத்த குடும்பத்தில் தாயில்லாப் பிள்ளையான றிகாவை தம்பி சமீர் மணமுடித்தார். சமீரின் மனைவி றிகா , சொகுசையே விரும்புவாள்! கொஞ்சமும் உடம்பை வளைத்து வேலை செய்யமாட்டாள்! சமீர் சமாளித்துக் கொள்வார்! "றிகா டீ ஆறுது! எழும்பிக் குடிங்களேன் " என்றார் சமீர். ம்.. சரிங்க "என்றபடி எழுந்தாள் றிகா! "வேலைக்காரி வெள்ளம்மா காலைல வந்திடுவா என்ன?" என்றார் சமீர்!" "ஓ அவ நேரத்தோட வருவா!" "எங்களுக்குச் சமைக்கத் தெரியாதே!" "அவதான் சமைச்சுத் தாறவ!" என்றாள் றிகா! அதைக் கேட்டதும் அதிர்ந்து போனார் சமீர்! "எங்கட ஊட்ல, அஞ்சு சகோதரிகளும் ருசியாச் சமைச்சித் தருவாங்க!" "இதென்னயிது இவங்களுக்குச் சமைப்பது அவ்வளவுக்குக் கஷ்டமாமே!" என்று சிந்தனையில் மூழ்கினார் சமீர். "இங்க ஒவ்வொரு நாளும் வேலக்காரிட சமையல்தான்!" றிகாவின் தாயும் வேலைக்காரியின் சமையல்தான் சாப்பிட்டதாம்! வேலைக்காரி வராவிட்டால் கடைச் சாப்பாடுதானாம்!" "இது யாரோ சொன்னது!" " இப்பதான் ஞாபகம் வருது!" "என்ன செய்யிற சமாளிப்போம்" "போகப் போகச் சமையலப் பழக்குவம்!" "படிச்சுப் போட்டு வேலையில்லாம வீட்டுல கெடந்த நேரம் தாய்க்குச் சமையலில ஒதவி செஞ்சதானே!" "நமக்குத்தான் நல்லாச் சமைக்கத் தெரியுமே!" என எண்ணி ஆறுதலடைந்தார் சமீர்! வேலைக்காரியின் உதவியுடன், வாழ்க்கை, பிரச்சினையில்லாமலே போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள், "இஞ்சருங்க!" "வீட்டு வேலையெலாம் என்னால செய்ய முடியல" என்றாள் றிகா! "சரி சரி!" "பிள்ளை கெடைக்க இருக்குத் தானே!" "பிறகு சரியாயிடும்" "இப்ப நீங்க செஞ்சி கஷ்டப் படவாணாம் றிகா" என்று சொல்லி அன்பு காட்டினார் சமீர்! பிறந்த முதற்பிள்ளை, தாயின் கருவறையில் ஆறுமாதமே வாழ்ந்தது! பிறந்து ஆறு நாளே பூமியில் வாழ்ந்தது. பின்னர் அது இறையழைப்பை ஏற்றுக் கொண்டது. "அதுவும் இறைவன் நாட்டமே"என்று அமைதி கண்டார் சமீர். காலச்சக்கரம் சுழன்றது! அவர்கள் தனிக்குடித்தனம் போகவேண்டிய நேரமும் வந்தது! வீட்டுவேலையும் செய்து கொண்டு, பொதுச்சுகாதார அதிகாரியாகப் பணி புரிவது சமீருக்குச் சிரமமாகவே இருந்தது. வேலைக்காரி எடுக்கவும் சமீருக்கு விருப்பமில்லை! "றிகா!" " நம்ம வேலையை ரெண்டு பேரும் சேந்து செஞ்சிருவோம்" என்றான் சமீர். சரி என்று தலையாட்டினாள் றிகா! காலப்போக்கில் சமீர் வீட்டு வேலை முழுவதையும் செய்ய வேண்டிய நிலை வந்தது! வீடு சுத்தம் செய்தல், சமைத்தல், சமையலறைச் சுத்தம் கழிவறைச் சுத்தம் , வீட்டுச் சுற்றுப்புறச்சுத்தம் என்று சகல வேலைகளையும் அவர்தான் செய்வார்! "இறைவன் எந்த ஆத்மாவையும் தாங்கும் சக்திக்கு மேலதிகமாகச் சிரமப் படுத்துவதில்லை" என்பதையெண்ணியே சமீர் சாந்தியடைவார் . "எனக்கு இவ்வளவு தாங்கும் சக்தியிருக்குதா? "எனத் தனக்குள் சிரிப்பார். சிலநேரம் மனசுக்குள் அழுவார்! மோட்டார் சைக்கிளில் அவசரமாக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த சமீருக்கு, முன்னால் வந்த மாடு மோதுமென அவர் எண்ணவில்லை! "யா அல்லாஹ்" என்றவாறு கீழே சரிந்தார். தோள்பட்டையில் அடிபட்டுவிட்டது. அப்போது அவ்வழியாற் பயணம் செய்த வாகனம் ஒன்றிலிருந்து பலர் இறங்கினர். "இது நம்ம சமீர் தானே! அடிபட்டுக் கெடக்கார்! ஓடி வாங்க!" என்றார் ஒருவர்! "மாடு ஒன்றுதான் குறுக்கால போன! அதில தான் மோதிட்டார்!" "மிச்சம் நல்ல மனிசன்!" " எல்லாருக்கும் நல்ல ஹெல்ப் செய்வார்" என்றார் இன்னொருவர்! "பாவம்! விழுந்திட்டார்!" "நல்லவேளை பெருசாக் காயங்கள் இல்ல!" "சரி வாங்க" "பக்கத்துலதானே ஹொஸ்பிடல்! அங்க கொண்டு போவோம்!" என்றவாறு சமீரை தங்களின் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றனர்! பெரிய காயங்கள் இல்லாததால் சமீரை வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர்! சமீருக்கு வலது குறைந்த பிள்ளை ஒன்று இருந்தது. அதனை மனைவி தனக்குப் பராமரிக்க முடியாதென்றே சொல்லுவாள். அக்குழந்தை பிறந்ததிலிருந்து சமீரின் நிம்மதி கழன்று விட்டது. றிகாவின் பெற்றோர் அவளுக்குச் சீதனமாக நிறைய வயற்காணிகள் கொடுத்திருப்பதால் அவள் தலைக்கனம் கொண்டிருந்தாள். "ஒன்ட புள்ளய நீதான் பார்க்கணும்!" " என்னால இந்தச் சனியனோட கஷ்டப்பட ஏலாது !" என்று வார்த்தைகளால் குத்துவாள்! "வேலைக்கள்ளிக்குப் பிள்ளைச்சாட்டு" பிள்ளையை வைத்திருந்தால், வீட்டு வேலைகள் எதனையும் செய்யமாட்டாள்! சமீர்தான் அவசர அவசரமாகச் சுழன்று விட்டு அரசபணிக்குச் செல்வான் ! வீட்டு வேலைக்கு ஆள் தேடிக் கொண்டு வந்தாலும், வேலைக்காரியுடன் குழம்பித் திருப்பி அனுப்பி விடுவாள் றிகா ! "எனக்கு நிம்மதியே போச்சுது!" என் பொண்டாட்டி என்னை மதிக்கிறாயில்லயே " என்று பிள்ளையுடன் அமர்ந்து கொண்டு அன்புக்கு ஏங்குவார்! உயர்தர வகுப்பில் படிக்கும் ஒரே மகனும் குழப்படிதான்! எப்பவும் தலையிடி கொடுப்பான்! "யா அல்லாஹ்! ஏன் எனக்கு இவ்வளவு சோதனை!" என்று மனதுக்குள் அழுவார்! வேலைமுடிந்து வீடு வந்ததும் வளர்ச்சி குன்றிய மகளைப் பொறுப்பேற்று விட வேண்டும்! இல்லையென்றால் வீடு இரண்டாகிவிடும்!மனைவி போடும் சத்தம் அயலாருக்கும் ஆத்திரம் கொடுக்கும். ஆனால் யாரும் வரமாட்டார்கள்!யாரவது வந்தால் வெருட்டித் துரத்தி விடுவாள்! சமீரின் உறவுகள் யாரும் வந்தாலும் அவமதித்து அனுப்பிவிடுவாள். சமீருக்கு நடக்கும் பூசைகள் உறவுகளுக்கு விளங்கிடும் என்றே அவர்களின் உறவைத் துண்டித்து வைத்தாள் மனைவி றிகா. "சீ! என்ன வாழ்க்கையிது!" என்ர கஷ்டத்துக்கு முடிவே இல்லையா அல்லாஹ்!" என வேதனைப்பட்டுப் பெருமூச்சு விடுவார் சமீர்! தன் நண்பனிடம், "இவளை உட்டுப் போட்டு வேறு கலியாணம் முடிச்சா என்ன நியாஸ் " "சரியான மனநெருக்கடியாக் கெடக்கு!" "எங்கட சகோதரங்களையும் வரவேணாமாம்!" "என்னைப் பார்க்க என்ர சகோதரங்கள் இங்க வந்தா, அவள் தூக்குப் போட்டுச் சாவுவாளம் !" "எனக்கென்றா அவளை அடிச்சு முறிக்கத் தான் ஆசை " " என்னை மிரட்டிவெச்சிருக்காடா". "சில வேளை தற்கொலை செஞ்சிடுவாளோ என்று பயமாயிருக்குடா நியாஸ்!" "என்ன தான் செய்யிறது நியாஸ் என் மனசுக்கு எங்கே தான் ஆறுதல் கெடைக்கும் " என்று சொல்லிஅழுதான் சமீர்! "நீ விரும்பினா இன்னொரு கலியாணம் முடிச்சிப் பார் சமீர் " "நிம்மதியில்லாம இருந்து நீ நோயைத் தேடிக் கொள்ளாதே சமீர்நீ ஆம்புளடா!" . என்றான் நண்பன் நியாஸ்! "அப்புடித்தான் யோசிக்கிறன் நியாஸ் ஆனா,புள்ளையல நெனச்சாக் கவலையாக் கெடக்குடா " என்றான் சமீர்! ஆனால் அவரது மனம் தன் பிள்ளைகளை நினைத்து அழுதது! இப்படியே காலங்கள் கடந்தன! மகிழ்ச்சியை மறந்து நடைப் பிணமானார் சமீர்! அன்று டெங்கு ஒழிப்பு சம்பந்தமான கூட்டம் நடந்தது , அதனால் அவருக்கு வீடு வரச் சுணங்கிவிட்டது! "இவ்வளவு நேரமும் என்ன செஞ்ச!" "இண்டைக்கு ஏன் சொணங்கி வந்த நீங்க" "ஒங்கட ராத்தா தங்கச்சிமாரப் பாக்கப் போனதோ!" என்று தொண்டை கிழியக் கத்தினாள் றிகா ! சுணங்கிய காரணத்தைச் சமீர் சொன்னார்! அவள் அடங்கவில்லை! அங்கு புதிதாக வேலைக்கு வந்த வேலைக்காரி சமீரின் மனைவியின் செயலைப் பார்த்து அதிர்ந்தாள்! சமீரின் இருவிழிகளும் நனைந்தன! "யா அல்லாஹ் என்ன சோதனையிது!" என்று ஏங்கினார்! உடுப்பை மாற்றியதும் மகளைத் தூக்கினார்! வேலைக்காரி கொடுத்த போத்தல் பாலைப் பிள்ளைக்கு ஊட்டினார்! படலையடியில், "சமீர் சமீர்" என்று கூப்பிட்ட குரல் தன்சகோதரியுடையது போலிருந்தது! "இங்க யார் தான் வரப்போறா" என நினைத்தார் ! "எதற்கும் போய்ப் பாப்போமே!" எனப் படலையடிக்குப் போனார் ! "வாங்க ராத்தா வாங்க!" "எல்லாரும் வாங்க!" என்று அங்கு வந்திருந்த சகோதரியையும் அவரின் மகனையும் மருமகளையும் அழைத்து வீட்டுக்குள் வந்தார். உறவுகளின் வருகை சமீருக்கு மனதினில் மகிழ்வைக் கொடுத்தாலும் சாடையான பயத்தையும் கொடுத்தது! "மீண்டும் ஒரு சண்டை வருமோ " என எண்ணியதும் தலை சுற்றியது சமீருக்கு! அவர்களைக் கண்டதும் சமீரின் மனைவி தொழப்போவது போல் பாசாங்கு பண்ணிக் கொண்டு ரூமுக்குள் போய்விட்டாள்! வேலைக்காரி டீ ஊற்றிக் கொடுத்தாள்! சமீரின் ராத்தா கொண்டு வந்த கேக் வாழைப்பழத்தை அவர்களுக்கே வைத்துக் கொடுத்தார் சமீர்! சொந்தக்கதை சோகக்கதை, உறவுகளின் ஆனந்தக் கதை எனச் சந்தோசமாக அந்த மாலைப் பொழுது கடந்தது! அந்தச் சந்தோசம், அனைவருக்கும் மீளாத் துயர் தருமென்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்! இரவு ஒன்பது மணிபோல் வீடுதேடி வந்த உறவுகள் வெளியேறினர்! அங்கு குத்தாட்டம் தொடங்கியது! மனைவி றிகாவிடமிருந்து எறிகணை வார்த்தைகள் சமீரைத் தாக்கின! "என்னால தாங்கேலாதே அல்லாஹ்!" என்று சத்தமிட்டார். அவருக்கு நெஞ்சுக்குள் ஒருவகையான எரிவு தொடர்ந்தது! வாய்வுக்குணமோ என வேலைக்காரியிடம், "வெள்ளைப் பூடு கொஞ்சம் வறுத்துத் தாங்க புள்ள" என்றார்! வேலைக்காரி, தேடிப் பார்த்து விட்டு, "வெள்ளைப்பூடு இல்ல நானா "என்றாள். வலதுகுறைந்த மகளையும் தூக்கிக் கொண்டு பக்கத்துக் கடைக்கு மெல்ல மெல்ல நடந்து போனர் சமீர்! நெஞ்சுவலி கூடிக் கொண்டிருந்தது! வீடு வந்ததும், பிள்ளையை அருகில் படுக்க வைத்துத் தானும் கட்டிலில் சாய்ந்தார் சமீர்! அவருக்கு வியர்த்துக் கொட்டியது! உலாத்தப் போன மகனும் இரவு பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தான் ! சமீர் மகனைக் கூப்பிட்டார்! மகனிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை! மீண்டும் கூப்பிட்டார்! மகன் பொருட்படுத்தவில்லை! சமீருக்குக் கடுமையாக நெஞ்சுவலித்தது! "என்ர அல்லாஹ்! என்ர அல்லாஹ்! என்ற வார்த்தைகளோடு மயங்கினார்! அந்த ஆத்மா அடங்கி, அமைதியடைந்தது! அதனைக் கண்ட வேலைக்காரி, சத்தமிட்டு அலறினாள்! அவளின் சத்தம் கேட்டு, ரூமில் இருந்து வெளியே வந்தாள் மனைவி றிகா ! அப்போது எல்லாம் முடிந்துவிட்டது! ஓடிப் போய் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினாள் றிகா! "வந்து பாருங்களேன் என்ர புருஷன் மயங்கிட்டார்" என்று சத்தமிட்டு அழுதாள்! அந்த நேரத்தில் சமீரின் செய்தியறிந்து ஊரே அழுதது! அவரின் வீடு, ஊர்ச் சனங்களால் நிரம்பியது! முற்றும் மயங்கிட்டார்" என்று சத்தமிட்டு அழுதாள்! அந்த நேரத்தில் சமீரின் செய்தியறிந்து ஊரே அழுதது! அவரின் வீடு, ஊர்ச் சனங்களால் நிரம்பியது! முற்றும்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.