logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

சுகுமார் கவி

சிறுகதை வரிசை எண் # 124


தீர்ப்புகள் திருத்தப்படலாம் - சிறுகதை """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" “கல்பனா நம்ம பையன் போக்கு சரியில்லைன்னு நினைக்கிறேன்”.  ”ஏங்க அப்படி சொல்றீங்க?” “அவன் பிரண்ட்ஸுங்க கூட டாஸ்மாக்ல அவனை பார்த்ததா என் பிரண்டு சீனு சொன்னான்”. “அவங்க வேற யாரையோ பார்த்து இருப்பாங்க. நம்ம ரகு அந்த மாதிரி பையன் இல்லீங்க”. “அன்னைக்கு அவன் செல்போன்ல பார்த்தேன்  கன்ராவி போட்டோ எல்லாம் வச்சுட்டு இருக்கான்”. “நாமளும் அந்த வயசெல்லாம் தாண்டிதானேங்க வந்தோம். எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடுவான்ங்க”. “நீ செல்லம் கொடுத்து குட்டி சுவர் ஆக்குற. இந்த வருஷம் பிளஸ் டூ வேற. நல்ல மார்க் எடுத்தாதான் காலேஜ்ல சேர்க்க முடியும்”. "அதெல்லாம் எடுப்பாங்க. அவன் நல்லா படிக்கிறான்". “என்னவோ போ அவன் போக்கே சரி இல்ல” என்று அசோக் குமார் கிளம்பினார்.  அவர் ஒரு வக்கீல். ஒரு மகன் ஒரு மகள். மகன் ரகு பிளஸ் டூ.. மகள் சின்னவள் பிளஸ் ஒன். ********** அன்று மாலை ரகுவும் அவனது மூன்று நண்பர்களும் டாஸ்மாக்கில் இருந்தார்கள். ரகு  கஞ்சா விற்பவர்களிடம் சேர்ந்து போதைக்கு அடிமையாகி இருந்தான். அவர்கள் எல்லாம் இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் இருந்தார்கள். அதில் ரகு மட்டுமே  மைனர்.   ”டேய் ரகு உன் கிளாஸ்லையே அழகா ஒரு பொண்ணு இருப்பாளே அவ பேரு என்ன?”  சந்துரு கேட்க,  “அனிதா”  “அவளுக்கு உன் வீடு தெரியுமா?” “தெரியாதுணா”   ”அப்ப சரி, அவளை உன் பர்த்டேன்னு சொல்லி என் வீட்டுக்கு கூட்டிட்டு வா”. “என் பர்த்டேக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே”  ”அட யார்ரா இவன் நான் சொல்ல வந்த கான்செப்ட் புரிஞ்சிக்காம பேசுறியே”  ”நாளைக்கு பர்த்டேனு சொல்லி சும்மா அழைச்சுட்டு வா மத்தத நாங்க பாத்துக்குறோம்”. மற்ற இரு நண்பர்களும் “ஆமா ஆமா” என்று ஆமோதித்தார்கள். “புரிஞ்சி போச்சு” என்று நமட்டு சிரிப்பு சிரித்த ரகு, “எதுவும் பிரச்சினை ஆகாதுல்ல” என்றான். “அதெல்லாம் ஒன்னும் ஆகாது  நீ கூட்டிட்டு வா” சந்துரு சொல்ல, “வருவாளான்னு தெரியல நான் கேட்டுப் பார்க்கிறேன்ணா” என்றான். ********* மறுநாள்  லஞ்ச் டைமிங் போது அனிதா அருகே வந்த ரகு,  "அனிதா, இன்னிக்கு என்னோட பர்த்டே"  ”ஓ விஷ் யு ஹாப்பி பர்த்டே ரகு” கை குலுக்கியவள்,  "ட்ரீட் இல்லையா"  ”உனக்கு இல்லாமலா அனிதா, சாயந்திரம் வீட்டுக்கு வா ட்ரீட் தரேன்.  "வீட்டுக்கெல்லாம் வரலப்பா இங்கேயே பேக்கரில கேக் வாங்கி கொடு" “இல்ல அனிதா, என்னோட பர்த்டேக்கு நீதான் ஸ்பெஷல் கெஸ்ட்.  நீ கண்டிப்பா வீட்டுக்கு வரணும்”.  ”அப்படியா, சரி வேற யாரை எல்லாம் கூப்பிட்டு இருக்க?” "நான்தான் சொன்னேனே நீ மட்டும்தான் ஸ்பெஷல் கெஸ்ட் ன்னு" “உங்க வீட்ல அம்மா அப்பா ஒன்றும் சொல்ல மாட்டாங்களா?” “கிளாஸ்மேட் ன்னு சொல்லுவேன் அதுல என்ன இருக்கு”  ”சரிடா வர்ரேன் எத்தனை மணிக்கு?” “ஸ்கூல் முடிஞ்சதுமே அப்படியே வீட்டுக்கு போலாம்” “சரிடா” மனதுக்குள் மகிழ்ந்தான் ரகு.வெளியே வந்தவன் சந்துருவுக்கு போன் செய்தான். "அண்ணா, அனிதா வரேன்னு சொல்லிட்டா இன்னைக்கு சாயந்திரம் ஸ்கூல் விட்டதும்  நாங்க கிளம்பி வரோம்”. “சரி, என் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடு எங்க வீட்லதான் யாரும் இல்ல” "சரிணா" “நாங்க டோர் லாக் போட்டுட்டு உள்ளே ரூமில் இருக்கிறோம். மெயின் டோர் ஜன்னல் அருகில் சாவியை வைச்சிடறோம். நீ அதை எடுத்து திறந்து உள்ளே வந்துடு” “சரிணா” அப்புறம் உள்ள வந்ததும் சமையல் அறையில் ஒரு ஜூஸ் வச்சிருக்கேன் அதை அவளுக்கு குடு  அதுக்கு அப்புறம் நாங்க பார்த்துக்கிறோம். “சரிணா” ********* மாலை ஸ்கூல் விட்டதும் அனிதாவிடம் வந்த ரகு, “போலாமா அனிதா”  ”ம் போகலாம் ரகு” என்றாள்.  இருவரும் கிளம்பி வரும் போது சந்துருவிடம் இருந்து போன் வந்தது.  போனை எடுத்தவன், “சொல்லு அண்ணா” என்றான் “என்னடா ஸ்கூல் விட்டாச்சா?”  ”ஆமாணா”  ”அந்த பொண்ணு உன் கூடதான் வராளா?” “ஆமா”  ”சரி சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குதானே” .”இருக்குண்ணா”  ”அவ, உங்க வீட்ல யாரும் இல்லையான்னு கேட்டா, ஏதாவது காரணம் சொல்லிக்கோ. அப்புறம் அவ வந்ததும் மறக்கமா அந்த ஜூஸை குடுத்திடு”  "சரிணா"  போனை அணைத்தவனிடம் அனிதா, “போன்ல யாரு” “அண்ணா”  ”உனக்குதான் அண்ணா இல்லையே தங்கச்சி மட்டும்தானே”  ”அதா….வது எங்க பெரியப்பா பையன்”  ”ஓ அப்படியா”  ”அப்புறம் பர்த்டேக்கு புது டிரஸ் எல்லாம் எடுத்துட்டியா?”  ”ம் எடுத்துட்டேன் இப்ப வீட்டுக்கு போனதும் அதை போட்டுக்கிட்டுதான் கேக் வெட்டனும்”.   ”ஆமா உங்க தங்கச்சியும் நம்ம ஸ்கூல்தானே அவ உன் கூட வர மாட்டாளா”  ”இல்ல அவ ஃபிரண்ட்டுங்க கூட வருவா”  அதற்குள் சந்துரு வீடு வரவே, கேட்டை திறந்து  ஜன்னல் அருகில் இருந்த சாவியை எடுக்க,  “என்னடா வீடு பூட்டியிருக்கு”  “அம்மாவும் அப்பாவும் கேக் வாங்க போய் இருக்காங்க இப்போ வந்துடுவாங்க ” கதவை திறந்தவன், “உள்ள வா அனிதா”   தயங்கியபடி உள்ளே நுழைந்தாள்  “உட்காரு” என்று சோபாவை காட்ட அமர்ந்தாள்   “இங்கேயே இரு” என்றவன் சமையல் அறைக்குச் சென்று அங்கு ஏற்கெனவே கலந்து வைக்கப்பட்டிருந்த ஜூஸை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். ஜூஸை வாங்கிக் கொண்டவள்,  ”உனக்கு?” "இல்ல நான் அப்புறம் குடிக்கிறேன் முதல்ல நீ குடி" என்று சொல்ல ஜூசை குடித்தாள்.  ******** அவள் குடித்து முடித்ததும் டம்ளரை வாங்கிக் கொண்டு போய் சமையல் அறையில் வைத்தான்.திரும்பி வந்த போது “நேரமாகுதுடா உங்க அம்மா அப்பா எப்ப வருவாங்க”  “இதோ இப்ப வந்திருவாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரூமிலிருந்து அந்த மூன்று பேரும் வெளியே வந்தார்கள்.அவர்களை பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்தாள் அனிதா.  “உட்காரு, உட்காரு” என்று சந்துரு சொல்ல, பயந்து போனவள் ரகு அருகில் சென்றாள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என உணர்ந்தவள்,  “ரகு நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று பேகை எடுக்க, “ஆங்.... நீதான் இன்னைக்கு சீப் கெஸ்டே அது எப்படி வெளிய போயிடுவ” என ரகு கைகள் இரண்டையும் நீட்டியவாறு அவளை மறித்து நிற்க திடுக்கிட்டவள், “ரகு என்ன இது? விடு என்னை….  நான் வீட்டுக்கு போகணும்…..”  அதற்குள் சந்துரு “கண்டிப்பா அனுப்பி வைக்கிறோம் அதுக்குள்ள ஒரு சின்ன வேலைய முடிச்சுப்போம்.  நீ கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணா போதும் சீக்கிரமாவே போயிடலாம்”  என்று விகாரமாய் சிரித்தப்படி அவள் தோளை தொட அவன் கையை தட்டி விட்டு ஓட எத்தனித்தாள். ஆனால் கால்கள் இரண்டும் தடுமாற, தலை சுற்ற ஆரம்பித்தது. அவள் குடித்த ஜூஸில் கலந்திருந்த கஞ்சாவின் விளைவு என அவளுக்கு தெரியவில்லை  “ரகு என்னை காப்பாத்துடா உன்னை நம்பி வந்தேன் இல்லையா என்னை எதுவும் செஞ்சிடாதடா ப்ளீஸ்” வார்த்தை குளறலாக வந்தது. அதற்குள் ரகுவும் சந்துருவும்  அவள் தோளை கைத்தாங்கலாகப் பிடித்து  பெட்ரூமுக்கு இழுத்துச் சென்று அவளை பெட்டில் படுக்க வைத்தார்கள். “வேணா ரகு.... வேணா ரகு…” அரை மயக்கத்தில் அவள்  கூறிக் கொண்டிருக்க அதை எதையம் பொருட்படுத்தாமல் அவள் உடைகளை களைய ஆரம்பித்தான் ரகு.  ”தம்பி இந்த ஐடியா கொடுத்தது நான்தான் அதனால நான்தான் பர்ஸ்ட்   அப்புறம்தான் நீ அதுக்கு அப்புறம் தான் அவங்க ரெண்டு பேரு”. “ சரிணா சரிணா” என ஆமோதித்தான் ரகு.  ”ரகு நீ ஒன்னு பண்ணு, இங்கே நடப்பதை அப்படியே வீடியோ எடு” “சரிணா” என மொபைலில் வீடீயோ  எடுக்க ஆரம்பித்தான்.  போதை அதிகமாக ஏறியதால் அனிதா சுயநினைவு இல்லாமல் படுத்திருந்தாள்.  எதிர்ப்பு ஏதும் இன்றி ஒருவர் பின் ஒருவராக அவளை சீரழித்தார்கள். ******** எல்லாம் முடிந்த பிறகு சந்துருவின் நண்பர்கள் இருவரும் "சரிடா நாங்க வரோம்டா என்று கிளம்பிப் போனார்கள். அவர்கள் இருவரும் சென்ற பிறகு கண்விழித்தாள் அனிதா படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத அளவு  உடல் வலித்தது  அப்போதுதான், பிறந்த மேனியாக இருப்பதை உணர்ந்தாள். சட்டென்று அங்கிருந்த போர்வை எடுத்து உடம்பில் சுற்றிக் கொள்ள ரகுவும் சந்துருவும் அவளை பார்த்து சிரித்தார்கள் . “டேய் ரகு உன்ன சும்மா விடமாட்டேன்டா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உங்க எல்லாரையும் ஜெயில்ல போடுறன்டா" ஆத்திரமும் அழுகையுமாக அவள் கூற திடுக்கிட்டுப் சந்துருவை பார்தான் ரகு.  அதற்குள் சந்துரு “இத பார் இங்க நடந்தது எல்லாம் வீடியோ எடுத்து இருக்கோம்.  நீ போலீஸ்ல சொல்லாம இருந்தா உன்ன அப்படியே விட்டுடுவோம். போலீஸ்ல சொல்லுவேன்னு சொன்னா இந்த வீடியோவை நெட்ல விட்டுடுவோம். யோசிச்சு சொல்லு என மிரட்டினான்”.  ”கண்டிப்பா நான் போலீஸ் சொல்லுவேன் உங்க எல்லாருக்கும் தண்டனை வாங்கி கொடுப்பேன்”  ஆவேசமாக அனிதா கத்த,  ”அண்ணா இவ வெளிய போனா போலீஸ்ல சொல்லிடுவா போல இருக்கு இவளை இங்கேயே முடிச்சிடலாம்ணா” அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதும் அனிதா கட்டிலில் இருந்து எழுந்து ஓட முயன்றாள். ஆனால் உடம்பு ஒத்துழைக்காமல் அப்படியே கீழே விழுந்தாள் “பிடி பிடி அவளை” சந்துரு கத்த உடனே ரகு பாய்ந்து அவள் மேல் அமர்ந்தான். "நீயே அவ கழுத்தை நெறிச்சி கொன்னுடு. ஏன்னா  நீ மைனர் கொலை பண்ணி மாட்டிக்கிட்டாலும்  ஒரு வருஷத்திலே வெளியே வந்திடலாம்” என்று சொன்னதும் “சரிண்ணா” என்று வலுவாக அவள் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தான் ரகு அதற்குள் சந்துரு அவள் கை கால்களை இறுக்கப் பிடித்துக் கொள்ள சில நொடிகள் துடித்து அடங்கினாள். மூக்கில் கை வைத்து பார்த்த ரகு,  “செத்துட்டா அண்ணா” என்றான்  “அண்ணா, இப்ப பாடியை என்ன பண்றது எரிச்சிடலாமா”  இல்லை முழு பாடியையும் எரிக்க முடியாது . அதுவும் வீட்டுக்குள்ள பண்ண முடியாது.  “அப்போ ஆற்றுல தூக்கிப் போட்டுடலாமா” அதுதான் சரி ஆனா அதுக்கு இருட்டுற வரைக்கும் காக்திருக்கனும் “அண்ணா பாடியை எப்படி எடுத்துட்டு போறது”.  ”என் ஃபிரண்ட் ஒருத்தன்கிட்ட கார் இருக்குது அவன்கிட்ட வாங்கி வந்து அதுல எடுத்து போட்டுடுவோம்” . “அதுவும் சரிதான்” என்று ரகு சொல்ல “அவ பேக்ல செல்போன் இருக்கா பாரு”. அவள் பேகை செக் பண்ணி பார்த்தவன் ”எதுவு‌ம் இல்லண்ணா” என்றான்  ”சரி நீ இங்கே இரு நான் ஃபிரண்டு வீட்டுக்கு போய்ட்டு கார் எடுத்துட்டு வரேன்” என்று கிளம்பினான் சந்துரு.  சந்துரு கிளம்பிச் சென்றதும், அம்மாவுக்கு போன் செய்தான் ரகு. “அம்மா இன்னைக்கு என் ஃபிரண்டோட பர்த்டே பார்ட்டி இருக்குமா நான் வீட்டுக்கு வர பத்து மணிக்கு மேல ஆகும்மா”  ”எந்த ஃபிரெண்ட்டா” அம்மா கேட்க சட்டென “சந்துரு” என்றான்  ”சரி சீக்கிரம் வாடா அப்புறம் அப்பா என்ன திட்டுவாரு”  ”சரிம்மா” என்று போனை அணைத்தான். ********** அனிதா ஆறு மணி வரை வீட்டிற்கு வராததால் அனிதாவின் அப்பா  அவள் தோழிகளிடம் விசாரிக்க அதில் ஒரு தோழி “அவ ரகு கூட கிளம்பி போனா” என்று சொல்ல அவள் மூலமாக ரகுவின் மொபைல் நம்பரை வாங்கி அவனுக்கு போன் செய்ய ரகு எடுக்கவில்லை. உடனே அனிதாவின் அப்பா  ரகுவின் விலாசத்தை விசாரித்து வாங்கி அவன் வீட்டுக்கு சென்று அவன் அம்மாவிடம் “ரகு இருக்கானா?” என கேட்க “இல்ல சார் அவன் ஃப்ரண்ட்டோட பர்த் டே பார்ட்டிக்கு போய் இருக்கான் . நீங்க யாரு? விஷயத்தை அவர் சொன்னதும் “அப்படியா இருங்க சார் போன் பண்ணி கேக்குறேன்” என்று ரகுவின் அம்மா போன் செய்ய அவன் எடுத்ததும்,  ரகு எங்கடா இருக்க? “அம்மா நான்தான் சொன்னேன்மா இங்க ஒரு பர்த்டே பார்ட்டி ல இருக்கேன்னு”   உன் கூட அனிதான்னு ஒரு பொண்ணு இருக்காளா?  அம்மா கேட்டதும் தூக்கி வாரி போட்டது ரகுவுக்கு.  “இல்லை.....யேம்மா ஏ....ன் கேக்குற?”  “அவங்க அப்பா வந்திருக்கார் ஸ்கூல் விட்டு உன் கூடதான் அவ வந்தாளாமே” .  ”ஆ....ஆமாம்மா என் கூடதான் வந்தா அப்புறம் யாரையோ பிரெண்ட பாக்கணும்னு சொல்லிட்டு போயிட்டா….”  ”இரு அவங்க அப்பா உன் கூட பேசணுமாம்”  ”ஹலோ ரகு”,  “ஆ... சொல்லுங்க அங்கிள்” “அனிதா எந்த ஃபிரிண்ட பாக்க போறேன்னாப்பா “பேர் தெரில அங்கிள். ஆனா அது எங்க கிளாஸ் பொண்ணு இல்ல. பக்கத்து கிளாஸ் பொண்ணு”  ”எந்த இடம்னு சொன்னாளா?”  “இல்லை அங்கிள்”  ”உன் கூட எங்க வரைக்கும் வந்தா”  ”பிள்ளையார் கோவில் வரைக்கும் வந்தா அங்கிள் அப்புறம் அவ தனியா போயிட்டா”  ”சரிப்பா” போனை ரகு அம்மாவிடம் கொடுக்க,   ”டேய் ரகு அனிதா எங்க போனான்னு கொஞ்சம் தேடிப் பாருடா பாவம் அவங்க அப்பா பயந்து.போய் இருக்காரு” “ஒன்னும் பயப்பட வேணாம்னு சொல்லுமா வந்துருவா” “சரிடா” என்று போனை அணைத்தாள். ********* ஒரு மணி நேரத்தில் சந்துரு திரும்பி வந்தான்  “என்ன ஆச்சுன்ணா”  “ கார் எடுத்துட்டு வந்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் இருட்டட்டும்”. “ அண்ணா அனிதாவோட அப்பா போன் பண்ணி இருந்தாங்க”  ”உனக்கு ஏன்டா பண்ணாரு?”  ”ஸ்கூல்ல இருந்து நாங்க ரெண்டு பேரும் கிளம்பி வந்ததை அவ ஃபிரிண்ட் பாத்துட்டு இருக்கா” “போச்சி....... அப்புறம்?” “என் கூடதான் இருக்காளான்னு கேட்டாங்க…. இல்ல வேற ஒரு ஃபிரிண்ட் வீட்டுக்கு போயிட்டான்னு சொல்லிட்டேன்”. “அப்ப பாடிய சீக்கிரம் டிஸ்போஸ் பண்ணனும் அப்புறமா அவங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து உன்ன விசாரிச்சா இப்ப சொன்ன மாதிரியே போலீஸ்கிட்டேயும் சொல்லிடு” “சரி அண்ணா”  ”சரி பாடிய புடி” இருவரும் அனிதாவின் பாடிய தூக்கி டிக்கியில் போட்டு மூடி கிளம்பினார்கள். சிறிது தூரம் காரை ஓட்டிய பின் அமராவதி ஆற்றின் அருகில் காரை நிறுத்தி யாரும் இல்லாத சமயம் பார்த்துப் பாடியை ஆற்றில் தூக்கி வீசினார்கள். பின்பு அங்கிருந்து ரகு வீட்டிற்கு கிளம்பி சென்றான். ************ அனிதாவின் அப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மகளைக் காணவில்லை என்று கம்ப்ளைன்ட் கொடுத்தார். அத்துடன் மகள் கடைசியாக ரகுவுடன் சென்றதையும் கூற  ”அவன் நம்பர் இருக்கா”  ”இருக்குங்க சார்”  ”சொல்லுங்க”  நம்பரை கூறியதும் போலீஸ் அவன் நம்பருக்கு போன் செய்ய ரகு எடுக்கவில்லை.   ”அவன் வீடு தெரியுமா”  ”தெரியுங்க”  ”சரி வாங்க போலாம்” என்று இன்ஸ்பெக்டரும் போலீஸூம் ஜீப்பில் அவரை ஏற்றிக் கொண்டு ரகு வீட்டுக்கு சென்றார்கள். அப்போது ரகு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.  போலீஸ் கதவைத் தட்டியதும் அசோக்குமார் கதவை திறந்தார். “ரகு இருக்கானா?” “சாப்டுட்டு இருக்கான் என்ன விஷயம் சார்” “இவங்க பொண்ணு காணாம போன விஷயமா அவன்கிட்ட விசாரணை பண்ணனும்”. அதற்குள் சத்தம் கேட்டு ரகுவின் அம்மா வர  பின்னல் ரகுவும் வந்தான்.  ”அனிதா எங்கடா”  ”தெரியாது சார்”  ”கடைசியா உன் கூடத்தான் பார்த்ததா சொன்னாங்க”  ”ஆமா சார் அப்புறமா அவ கிளம்பி போயிட்டா”  ”நீ எங்க போன?”  ”நான் என் ஃபிரண்டு பர்த்டே பார்ட்டி போனேன் சார்”  ”சரி நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு வா உன்னை விசாரிக்கணும்”.  அதற்குள் அசோக்குமார், “சார் நான் வக்கீல்” என்று கூற   ”சார் நாங்க விசாரணை பண்ணிட்டு அனுப்பி வைக்கிறேன்” என்று அவனை அழைத்துக் கொண்டு ஜீப்பில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்கள்.  உள்ளே நுழைந்ததும் இன்ஸ்பெக்டர் பளாரென அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டார் .” உண்மைய சொல்லுடா எங்க அனிதா? அவளை என்ன பண்ண?” மீண்டும் பளார் என கன்னத்தில் அறைய அந்த இரண்டடியில் நிலைக்குலைந்து போன ரகு “சா….ர் சொல்லிடுறேன் சார்” என எல்லா உண்மையும் கூறினான். ரகு கொடுத்த தகவலின் படி சந்துரு மற்றும் அவன் இரண்டு நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள். கரை ஒதுங்கி இருந்த அனிதாவின் உடல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் செய்த பின் அனிதாவின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது ரகுவிற்கு மைனர் என்பதால் அவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான். மற்ற மூவரின் மேல் பாலியல் குற்றம் மற்றும் கொலை குற்றம் பதிவு செய்யப்பட்டு கேஸ் நடந்து கொண்டிருந்தது. ************** ஒரு வருடத்திற்கு பிறகு ரகு சீர்திருத்த பள்ளியிலிருந்து விடுதலையாகி வீட்டுக்கு வந்தான். ரகுவை பார்த்ததும் அவன் அம்மா, “ரகு வாடா எப்படிடா இருக்க?” “ம் ஏதோ இருக்கேம்மா”  உடனே செல்போன் எடுத்து கால் செய்தவள்,  ”என்னங்க நம்ம ரகு விடுதலையாகி வந்துட்டாங்க” என்று சொல்ல “அப்படியா சரி அவனை எங்கேயும் போக வேணாம் வீட்டுலேயே இருக்க சொல்லு” “சரிங்க என்று போனை அணைத்தாள்.    மாலையை வந்தவர் “எப்படிடா இருக்க” “ம் நல்லா இருக்கேன்பா” கை கால் முகம் அலம்பியவர் ரெடியான பிறகு, “சரி வாடா ஆத்துக்கு போலாம் உனக்கு நீச்சல் கத்து தரேன்”  ”எதுக்குங்க இப்ப நீச்சல்?” ”அவனுக்கு படிப்புதான் வரல நீச்சலாவது கத்துக்கட்டும் .அந்த காலத்துல நான் நீச்சல்ல ஸ்டேட் சாம்பியன். அதனால என் பையனையும் அந்த மாதிரி சாம்பியனா மாத்தி காட்டலாம்னுதான்.   ********   அவனை அழைத்துக் கொண்டு ஆத்தங்கரைக்கு வந்தவர் டவுசர் போட்டுக் கொண்டார். ரகுவும் ஆடைகளை கழற்றி ஜட்டியுடன் நீச்சலுக்கு தயாரானான். முதலில் சிறிது ஆழமான இடத்தில் தன் இரண்டு கைகளையும் விரித்து அதன் மேல் அவனை படுக்க வைத்து கை கால்களை அசைக்க சொன்னார். அப்படியே கால் மணி நேரம் செய்ததும் இன்னும் கொஞ்சம் ஆழமான இடத்துக்கு அழைத்து சென்றார்.  சேஃப்டிக்காக வளைவு மிதவையை அவனுக்கு மாட்டி விட்டார். இப்ப அந்த மிதவை சாப்போர்ட்டுல கை, காலை ஆட்டு என்று சொல்ல  ரகுவும் அப்படியே செய்தான்.  ”சரி நீ இப்படியே பண்ணிட்டு இரு நான் அவசரமா ஒரு கால் ஒன்னு பண்ணிட்டு வந்துடறேன்” என்று கரைக்கு திரும்பியவர் கையில் வைத்திருந்த குண்டூசியை தூக்கி கீழே போட்டு விட்டு மொபைலை எடுத்து தீயணைப்பு துறைக்கு போன் செய்தார். “ சார் நான் அமராவதி ஆற்றங்கரையில் இருக்கிறேன் என் பையன் ஆற்றுல அடிச்சுட்டு போறான் சார் சீக்கிரம் வந்து காப்பாத்துங்க சார்”. பதற்றமாக சொல்ல, எதிர்முனையில் “சீக்கிரம் கிளம்பி வரோம் சார்” என்று குரல் கேட்டதும் போனை அணைத்துவிட்டு திரும்பி ஆற்றை பார்த்தார். அங்கே ரகு வளைவு மிதவை காற்று இறங்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு கொண்டிருந்தான் "அப்பா, காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று அலறினான். சலமின்றி அவனை பார்த்தார் “அன்னைக்கு இப்படித்தானே உன்னை நம்பி வந்த அனிதாவை நட்டாற்றில விட்டாய். சட்டத்தின் தீர்ப்பிலிருந்து நீ தப்பிச்சி இருக்கலாம் ஆனா இது நான் மாற்றி எழுதிய தீர்ப்புடா”. “எனக்கும் ஒரு மகள் இருக்கா உன்னை மாதிரி காமம் தலைக்கேறிய பையனை எப்படி வீட்ல வச்சுக்க முடியும்.அதுக்குதான் உன்னை முடிச்சிட்டேன்”. “இனிமேல் பாலியல் குற்றம் செய்தால் மைனர் ஆனாலும் தண்டனை தர வேண்டும் என்று சட்டத்தை மாற்றனும் அப்பத்தாண்டா உங்களை மாதிரி தப்பு பண்ண நினைக்கறவங்களுக்கு ஒரு பயம் வரும்” என நினைத்தவர் தீயணைப்பு வண்டிக்காக காத்திருக்க ஆரம்பித்தார். சுகுமார் கவி மைசூர் **********

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.