Mani murugan .M
சிறுகதை வரிசை எண்
# 86
வானவில்
சிறுகதை.
வா வந்திட்டயா
லேசான ஒரு துள்ளல் தலையை சாய்த்து வேப்ப மரத்தின் கிளையில் இருந்து குகனை பார்த்தது அந்த காக்கை
முற்றம் தெளித்த சாணப்பொடியை தினமும் அம்மா கூட்டி வீட்டின் அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில் ஒதுக்கு வாள்
அந்த சாணத் துகள்கள் மிருதுவான இருக்கும் அதன் மீது அமர்ந்தால் மெத்தையின் சுகம் இருக்கும்
காச்சல் வந்த போது தர்ம ஆஸ்பத்திரியில் மெத்தையில் படுத்திருக்கான் குகன்.
சரி நீ வந்திட்ட அவனைக் காணும் என்று மண்ணில் அந்த மைனா வின் படத்தை வரைந்தான் மண்ணில் படம் வரைவதில் ஒரு வசதி தவறாக வரைந்தால் அழித்து விட்டு மீண்டும் சரியாக வரையலாம்.
க்கீச் க்சீச் என்று தனது ஓட்டு வீட்டின் முகட்டில் அந்த மைனா குரல் எழுப்ப
நீயும் வந்திட்டாயா என்று அம்மா வறுத்து கொடுத்த பயிரை இருவருக்கும் நீட்டினான்
இந்த காக்கைக்கு பயமே கிடையாது அவன் கையில் வந்தது கொத்தி தின்னும் மைனாவுக்கு கொஞ்சம் பயம் இருக்கும்.
வெகு நேரமாச்சு அப்பாவை இனியும் காணவில்லையே என்று நினைக்கையில் கிரிச் கிரிச் என சைக்கிள் சப்தம் . ம் அப்பா வந்தாச்சு
கையில் சில முருங்கைக்காய் கொஞ்ச முருங்கை கீரையுடன் பாண்டி சைக்கிளை நிறுத்தி விட்டு என்னையா நேரமாயிடிச்சா
குகன் தனது மந்திர புன்னகையுடன் ம் ம் எங்க
சரி எழுந்திடு என தனது முழு வலிமையும் கொடுத்து தூக்கி சற்று தூரத்தில் சிறுநீர் கழிக்க செய்தார்
பிறந்த நாள் முதல் தனது கால்கள் செயல்படவில்லை இப்போது வயது பத்து இருக்கும் தன்னை பற்றி கவலைப் பட மாட்டான் குகன்
ஆனால் அந்த ராகவி பாப்பா தான் மனசை சலனப்படுத்துவாள் எப்ப பார்த்தாலும் ஏங்க வீட்டுக்கு முன் தான் அவ அப்பாவுடன் ஓடி பிடித்து விளையாடுவாள் அவுங்க அப்பாவும் அவளிடம் தோற்பது போல அவளை ஜெயிக்க வைப்பார் .
அம்மா எப்பயா போனாள்
குளத்து வேலைக்கு போட்டா எடுக்க போனாள் இன்னும் வரலப்பா
சரி வாயா சாப்பிடலாம் என்று வீட்டிற்குள் சென்றனர் ராசாத்தி வேக வேகமாக வந்தாள்
ஏயா அந்த கூனிப் பாட்டி செத்திடுச்சு அதான் தலையை காட்டிட்டு வாரேன் அந்த பச்சை குடத்து தண்ணியை சாவடியில் ஊத்துங்க ஒரு போனி ஊத்திட்டு வந்திடுறேன்
வேலையை வேற துட்டினு நிறுத்திட்டாங்க
புலம்பி கொண்டு குளிக்க போகிறாள்
ராசாத்தி நல்ல உழைப்பாளி தன் பிள்ளைகாக ரெண்டு சீட்டு போட்டு பணம் சேமிக்கிறார்கள்
பாண்டியும் எந்த செலவும் செய்ய மாட்டார்
மீண்டும் குகன் மரத்தடியில் அமர வைக்க படுகிறான்
வேலை இல்லாததால் மரண வீட்டிற்கு மறுபடியும் பாண்டியும்
ராசாத்தியும் செல்ல
மீண்டும் சிறுநீர் கழிக்கும் அவசரம் யாரும் வரவில்லை
குகன் தனது கைகளின் உதவியால் சற்று தூரம் நடந்து சென்று சிறுநீர் கழிக்க அந்த நேரம் பார்த்து தனது தந்தையின் நண்பர் பசும்பொன் மாமா வருகிறார் அவர் மிலிட்டரியில் வேலை செய்கிறார்
குகனின் இந்த கஷ்டங்களை பார்த்து இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உடனே புறப்பட்டு டவுனுக்கு சென்றார் அங்கு கைகளால் செலுத்தும் வகையில் சைக்கிள் ஒன்றை வாங்கி வந்தார்
அப்போது வீட்டில் இருந்த பாண்டி வா பசு எப்படி இருக்க எப்ப வந்த
சிரித்த படி
காலையில் நாலு மணிக்கு எல்லாரும் எப்படி இருக்கீங்க
ராசாத்தி சிறிய தலை வாசலில் குனிந்த படி வந்து வாங்க பசு நல்லா இருக்கீங்களா என்று தனது முந்தானையால் முகத்தை துடைத்து கொண்டு வருகிறாள் குளிச்ச உடன் சன்னல் இல்லாத வீடு என்பதால் கொஞ்சம் வெக்கையாக இருக்கிறது.
இந்த குகன் உனக்கு இந்த மாமாவோட பரிசு இனி நீ நம்ம ஊர் முழுதும் சுற்றி பார்கலாம்
குகன் முகத்தில் வழக்கத்தை விட சிரிப்பு அதிகமாக இருந்தது.
எதுக்கு பசு உனக்கு வீன் செலவு
இது என்ன செலவு என் கடமை.
குகனின் பார்வை சைக்கிளையே சுற்றியது
பசும்பொன் குகனை தூக்கி சைக்கிளில் அமரச் செய்து சிறிது தூரம் ஓட்டி அழகு பார்த்தார்.
சற்று நேரம் கடந்தது
பசும்பொன் மாமா திருப்பி சென்று விட்டார்
குகன் லேசாக அப்பா நம்ம மேக் குளத்தில் பசங்க கிரிக்கெட் விளையாடுவாங்க போய் பார்ப்போமா சைக்கிளில்
கொஞ்சம் பொறுப்பா வெயில் அதிகமாக இருக்கு சாயங்காலம் ஐந்து மணிக்கு போவோம் என்க
குகனின் மனதில் ஐந்து மணி எப்போது வரும் என்ற ஆவல்.
அந்தி பொழுதில் சைக்கிளில் அமர்ந்து கொண்டு குகன் குளத்தை நோக்கி பயணிக்கிறான் வழியெங்கும் அவன் பார்வையில் ஆடு மாடு கோழி குருவிகள் தான் பட்டது
இல்லை அவன் தேடினான் என்றே வைத்துக் கொள்வோம்
இன்னும் சிறு வயதில் இருக்கையில் இவனை விளையாட யாரும் அழைப்பதில்லை இவனாக சென்றாலும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.ஆனால் பறவைகளும் விலங்குகளும் இவனிடம் நட்பாக இருக்கும்
அது எப்படி
இவன் அதனுடன் பேசுவான் இது பலநாள் பழக்கம் இவன் மொழி அவைகளுக்கு தெரியும்.
ஒரு வழியாக குளக்கரைக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்
சிலர் பார்வையாளர்களாக இருக்க
போட்டி தொடங்கியது
ஒருவன் பந்து வீச மற்றொருவன் பந்தை அடிக்க பார்க்கிறான் அவனுக்கு பந்து சிக்க மறுக்கிறது பலமுறை பந்தின் போக்கை கவனித்தவன் இப்போது எல்லா பந்துகளையும் எல்லைக் கோட்டை தொடச் செய்தான்
பந்து வீச்சாளன் சற்று தடுமாற
வேறு ஒருவன் பந்து வீச வருகிறான் இவனின் பந்து வீச்சு அசுர வேகத்தில் வந்தது
இப்போது கணிப்பு தவற பேட்ஸ்மேன் அவுட் ஆகிறான்
அந்த நேரத்தில் பந்து வீச்சாளன் தனது கை விரல்களை மடித்து ஓங்கி குத்துவது போல் தனது வெற்றிக்களிப்பை வெளிப் படுத்த குகனின் முகம் சற்று மாறத் தொடங்கியது
இதைக் கவனித்த பாண்டி
சரி வீட்டிற்கு போகலாமா என்க
குகன் அமைதியாக தலை அசைக்கிறான்.
மறுநாள் வகுப்பறையில் குகன்
பாடத்தின் நடுவே தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி
வகுப்பு ஆசிரியை அதை வாசிக்கிறார்
நமது பள்ளியில் ஒரு தன்னார்வலர்கள் மாணவர்கள் திறனை மேம்படுத்த ஓவியப் போட்டி நடத்த இருப்பதால் ஆர்வமுள்ள யாவரும் கலந்து கொள்ளலாம் வெற்றியாளருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
யார் யாரெல்லாம் கலந்து கொள்ளுகிறேன் க
குகனும் கையை தூக்குகிறான்
வகுப்பு இடைவெளியில் எல்லோரும் இந்த ஓவிய போட்டியைப் பற்றியே தான் பேச்சு.
சரியாக மாலைநான்கு மணி இருக்கும் பள்ளி விடும் வேளை பசும்பொன் ஓடி வருகிறார் குகனின் தந்தை பாண்டி
கட்டிடத்தில் வெளிப்புற சுவர் பூசும் வேளை தவறி விழந்து கால் முறிவு ஏற்பட்டதாக கூற அவருடன் குகனை அனுப்பி வைக்கிறார்கள்.
பெரிதும் பாதிக்கப்பட்ட பாண்டியை கட்டுமான ஒப்பந்ததாரர்கள் முழுயாக மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டார் குடும்ப செலவுக்கு ஒரு தொகையை முன்கூட்டியே கொடுத்தார்.
மருத்துவமனையில் இருந்து பாண்டி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் ராசாத்தி கூடவே இருந்து பாண்டியைக் கவனிக்க
குகனின் மனநிலை சற்று தடுமாற்றம் கொண்டது இவனும் பள்ளிக்கூடம் போகவில்லை.
இன்று பள்ளியில் ஓவியப் போட்டி
குகனை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆளில்லை
மணி காலை ஒன்பது
மோட்டார் சைக்கிள் சப்தம் கேட்டது வீட்டிற்கு முன்
ராசாத்தி வெளியே வந்து பார்க்கிறாள் அங்கே பசும்பொன் நிற்கிறார்
குகனை அனுப்புங்க பள்ளிக்கூடத்தில் ஓவியப் போட்டியில் சேர்ந்து இருக்கிறான் நான் கூட்டிக்கொண்டு போகிறேன்.
பசு நீங்க இன்னிக்கு வேலைக்கு போவதாக சொன்னீர்கள்
ட்ரெயின் மாலைஏழு மணிக்கு தான் நிறைய நேரம் இருக்கு
வா குகா
இருவரும் புறப்பட்டனர் பள்ளியில் போட்டி தொடங்கியது வகுப்பு வாரியாக நடக்க குகன் கலந்து கொள்ளுகிறேன்
மாலை போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட அதில் குகன் பெயர் வரவில்லை.
பசும்பொன் அவனுக்கு ஆறுதல் கூறி திரும்ப அழைத்து செல்லுகிறார்
அப்போது குகனின் பெயர் அழைக்கப்படுகிறது அனைத்திலும் சிறந்த ஒவியமாக தனது தந்தையின் இப்போதைய நிலையை வரைந்திருந்தான் குகன்.
அது அவனுக்கு முதல் பரிசை பெற்றுத் தந்தது பரிசை வாங்கியவன் தனது வெற்றி முத்திரையாக அன்று பந்து வீசிய அந்த சிறுவன் செய்தது போல தனது விரல்களை மடித்து ஓங்கி குத்துவது போல் வெளிப்படுத்த இதைக் காண பாண்டி அருகில் இல்லை.
மூ.மணிதிருமுருகன்
சங்கரன்கோவில்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்