Suriyadoss
சிறுகதை வரிசை எண்
# 83
தேவதை
---------------------
அவள் பெயர் பிரேமா. எந்த வகையான ஆடை கட்டினாலும் அவள் தேவதை போலவே தோற்றமளிப்பாள்.ஐந்து வயதுக் குழந்தை. அவளைத்தான் இங்கு காணவில்லை. அவளை அழைத்துக் கொண்டு அவளது பெற்றோர் இந்தத் திருமண வீட்டிற்குக் காரில்
வந்திருந்ததனர்.
அ வள் ஒரு அழகி. அவளை அவளது பாட்டி கூட அழகி என்றுதான் அழைப்பார். "செல்லக்குட்டி சொல்லுடா அழகி " என்று தான் கொஞ்சுவார். அவளது தாத்தாவுக்கு அவளைப் பார்ப்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி .
அவள் “அப்பா “என்று அழைக்கும் பொழுது அவளது தந்தை கூட மகிழ்ந்து , நெகிழ்ந்து போவார். எவ்வளவு வேலைக்கு மத்தியிலும் அவளைத் தூக்கிக் கொஞ்சு வார். அவளது தாயார் கூட அவளைச் 'சோனு' என்றுதான் அழைப்பார். சோனு என்றால் 'தங்கம்' என்று பொருள். அப்படி ஒரு அழகிய நிறத்தவள். 'முற்றிய நெல் வயலின் மாலைப் பொன்னிறமாக ' அந்தக் குழந்தை தகதகப்பாள். ஐரிஸ் யெல்லோ என்று பாராட்டக் கூடிய நிறத்தினள். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் 'நடிகை அமலா ' வைச் சொல்லலாம்.
அவள் யாருடனும் எளிதாக ஒட்டிக் கொள்வாள். அவள் "சோசியலாகப் பழகக் கூடியவள் " என்று பெயரெடுத்த பெண் குழந்தையை. அவள் ஒரு “ஹைப்பர் ஆக்டிவ்” குழந்தையாகவே இருந்தாள். அவள் 'அங்கிள் ' என்று தன் மழலை மொழியில் பேச ஆரம்பித்தால் எவராயினும் சொக்கித்தான் போவர்.
அந்தத் திருமண வீடு ஒரு அடுக்ககத்தின் முதல் மாடியில் இருந்தது. அந்த அடுக்ககத்தின் முன்னும், பின்னும், பல வீடுகளின் வாசலிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அவற்றைப் பார்த்து அவளைத் தேடிக் கொண்டே வந்தபோது அவள் அங்குள்ள வாட்ச்மேனிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.அந்த வாட்ச்மேனுக்கு 60 வயது இருக்கலாம்.
'குழந்தைக்குத் தொடை தெரியும் படியாகவா ட்ரெஸ் பண்ணி விடுவது. யாருக்குத்தான் ஆசை வராது ' என்று ஒருவன் கூற 'அப்படியானால் நீ தான் என் குழந்தையை எதுவும் செய்தாயா ?' என்று அவனை அவளது தந்தை அடிக்கச் சென்று விட்டார். அவன் அங்கிருந்து மெல்ல நகர்ந்து சென்று விட்டான்.
சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான'கார்க்கி ' சித்தார்த் நடிப்பில் வெளியான 'சித்தா' போன்ற படங்கள் வெளிவந்திருந்தபோதும் அதே போல் தவறு செய்ய மனிதர்களுக்கு மனம் எப்படி வருகிறது?
ஒரு கலைஞன் எத்தனை முறைதான் சொல்வான். இது பற்றி ஒரு கவிஞன் கூட'இன்னும் பால் பற்கள் விழாதவள்' என்று கவிதை எழுதியுள்ளான்.
அதற்குப் பிறகு எந்தச் சிசிடிவி கேமரா ஃபுட்டேஜும் காணப்படவில்லை. அந்தக் கால் மணி நேரம் மின்தடை ஏற்பட்டிருக்கிறது . அது முடிந்து மின்சாரம் வந்த பொழுது அந்தக் குழந்தையையும் ,அந்த வாட்ச்மேன் மகளையும் , அவர் பேத்தியையும் அங்கே காணவில்லை. அவர் மட்டும் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்
அந்தக் குழந்தையின் தாயார் மிகுந்த கோபத்தில் இருந்தார். யார் தன் மகளைக் கடத்திக்கொண்டு சென்றார்களோ அவர்களைத் தெரிந்தால் குரல்வளையைக் கடித்துக் கொன்றுவிடும் ஆத்திரத்துடன் இருந்தார் ஆனால் அதை எல்லாம் வெளிக்காட்டாமல் அவர் மௌனமாகவே இருந்தார்
அந்தக் குழந்தையின் தந்தையோ ஒரு உதை விட்டால் எதிரியின் விதைக் கொட்டை கண்ணுக்கு ஏறிப் பிதுங்கி வெளியில் விழுந்து விடும் கோபத்தில் தான் இருந்தார் ஒரு அரிவாளை எடுத்து எதிரியின் தலையை வெட்டி அவரைக் கொன்றுவிடும் ஆத்திரத்தில் தான் அவரும் இருந்தார் .
ஒரு நாள் முழுவதும் தன் குழந்தையைக் காணாமல் அந்தப் பெற்றோர் தவியாய்த் தவித்தனர் அக்குழந்தையின் பெற்றோர் அன்றிரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டேயிருந்தனர்.
மறுநாள் மின்தடை ஏற்பட்டிருந்த நேரத்தில்தான் அவளது தாய் வாட்ச்மேனின் ரூமிற்கு அருகில் வரும் பொழுது உள்ளே இருந்து அந்தக் குழந்தை காலில் ரத்தப் பிசுக்கோடு அம்மா என்று ஓடி வந்தது . அதன் தாயும் அக்குழந்தையைத் தூக்கி தோளில் அணைத்துக்கொண்டார். மீண்டும் ஒருமுறை எல்லோரும் அந்த வாட்ச்மேன் அருகில் கூடி அவரை திட்டத் தொடங்கினர் ’ .நீயெல்லாம் ஒரு மனுசனாய்யா !’ ’உனக்கு வயசு 60ஆவுது. ’ ’நீ இப்படிச் செய்யலாமா?’
அந்த வாட்ச்மேனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.அந்தக் குழந்தையின் தாயின் காலில் விழாத குறையாக விழுந்து ‘அம்மா நான் ஏதும் செய்யவில்லை. எனக்டுக் கூட மூன்றாம் வகுப்புப் படிக்கும் பேத்தி இருக்கிறாள். நான் அப்படிப் பட்டவன் இல்லம்மா. உங்கள் குழந்தையிடம் கூடக் கேட்டுப் பாருங்கள்’ என்றார். அந்தக் குழந்தையோ தன் தாயின் தோளில் படுத்துக் கொண்டு திரும்பவே இல்லை.ஆனாலும் அந்தத் தாய்க்கோ வேறு ஏதோ மனதில் பட்டுக்கொண்டே இருந்தது அதனால் அந்த வாட்ச்மேனைக் கண்டுகொள்ளாமல் அவர் நகர்ந்தார்.
எதற்கும் அந்த வாட்ச்மேனிடம் சென்று தன் குழந்தையைப் பற்றிக் கேட்டு வரலாம் என்று அவள் சென்ற பொழுதுதான் அவர் தன் பேத்தியைப் பற்றிக் கூறினார்.
அந்த வாட்ச்மேனின் பேத்தி தான் சொன்னாள். அந்த மின்சாரத் தடை விதிக்கப்பட்டிருந்த அந்த கால் மணி நேரத்தில் ஒரு கார் வந்ததாகவும் அதில் குண்டாக முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் இருந்ததாகவும் அதில் தான் அவர்களது குழந்தை ஏறிச் சென்றதாகவும் அவள் குறிப்பிட்டாள். அந்தத் தாய் வாட்ச்மேனின் பேத்தியைச் சந்தித்தார்.
‘குட்டி என் குழந்தையை அழ அழ வச்சிருக்காங்கடா. .நீ நேத்து உன் தாத்தாவைப் பார்க்கச் சென்ற பொழுது என்ன நடந்தது என்று கொஞ்சம் விளக்கமாச் சொல்லுடா.’ ‘கார் என்ன கலருப்பா?’ ‘கருப்பு கலர் ஆன்ட்டி.’
கருப்பு என்றதும் இராகவனின் கார் நினைவுக்கு வந்தது.
ஆனால் அவனாயிருக்காது என்று தலையை ஆட்டிக் கொண்டே அந்தக் குழந்தையிடம் மீண்டும் ‘நல்லா பாத்தியாடா, கருப்பு கலர்தானா?’ ‘ஆமா ஆன்ட்டி கருப்புதான்’. ‘அது நம்பர் என்னன்னு பார்த்தியாடா நீ ?’ ‘பாக்கலயே ஆன்ட்டி’ அவனாக இருக்க வாய்ப்பில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
ஓர் ஆலமரத்தில் இரவு அடைந்து விட்டு காலையில் கலைந்து செல்லும் குருவிகளில் ஒரு குறிப்பிட்ட குருவியை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது போல் அந்தத் திருமண வீட்டிற்கு வந்தவர்களில் காரில் சென்றவனை எப்படிக் கண்டுபிடிப்பது என்று அவள் குழம்பித்தான் போனாள். அதை அப்படியே விட்டு விட்டாள்.
‘அண்ணா, அக்கா நான் ஆபீஸுக்குப் போயிட்டு வரேங்க்கா. பாப்பாவைப் பத்திரமாப் பாத்துக்கங்கக்கா . குட்டி செல்லம் அங்களுக்கு ஒரு பிளேயிங் கிஸ் கொடுப்பா’ என்று வீட்டுக்குள் வந்து இராகவன் சொல்லிச் சென்றான் குழந்தை தன் தாயின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டது . அந்தச் சம்பவத்திற்குப் பிறகு தன் தாத்தாவையோ சித்தப்பாக்களையோ கண்டாலோ, எதிர்ப்பட்டாலோ தன் ஆச்சியின் பின்னாலோ அல்லது தன் தாயின் பின்னாலோ ஒளிந்து கொள்ளும்.
தாமரைப் பூவானது தான் வளரும் தண்ணீரையும் சூரியனையும், அல்லி மலரானது தண்ணீரையும் நிலாவையும் வேண்டாம் என்பது போல் அக்குழந்தை தன் தந்தையைக் கண்டாலே அவளது ஆச்சியின் பின்னாலோ அல்லது தாயின் பின்னாலோ ஒளிந்து கொண்டது. இதில் பக்கத்து வீட்டு ஆண்பிள்ளையான இராகவனைக் கண்டு ஒளிவதை அவளது தாயார் இயல்பாக எடுத்துக் கொண்டார்.
பழைய துள்ளல் இன்றி அந்தக் குழந்தை வீட்டிலேயே மௌனமாக இருப்பதைக் கண்டு அவளது பெற்றோர் மிகவும் மன வேதனை அடைந்தனர். பள்ளிக்குச் சென்று தன் சக மாணவ மாணவியரோடு விளையாடினால் அக்குழந்தையின் மனநிலை மாறலாம் என்று அவளது பெற்றோர் நம்பினர். அதனால் தாயும் தந்தையும் அவளை அழைத்துக்கொண்டு பள்ளிக்குக் காரில் சென்றனர்.
அந்தக் குழந்தை கார் சத்தத்தைக் கேட்டதும்… அதன் ஹாரன் சத்தத்தைக் கேட்டாலே நடுங்க ஆரம்பித்து விடும். அழவும் ஆரம்பித்து விடும். அவளது தந்தையும் தாயும் அவளைத் தனது காரில் அழைத்துக் கொண்டு போகும் பொழுது அவள் அழ ஆரம்பிப்பாள் காரில் இருந்து கீழே இறக்கி விட்டவுடன் அவள் பதற்றம் தணிந்து அழுவதை நிறுத்தி விடுவாள்.
ஒரு நாள் குழந்தை தன் வீட்டு வாசலுக்கு வெளியே யூனிபார்ம் பூட்சைப் போட்டுக் கொண்டிருந்தபோது எதிரே அதை வழிமறித்து நின்றான் இராகவன் . அக்குழந்தை அழ ஆரம்பித்தது. 'உஷ் ' என்று வாயில் விரல் வைத்து அதட்டினான். அக்குழந்தை அழுகையை நிறுத்தி மிரட்சியோடு அவனைப் பார்த்தது. இராகவன் பின்னால் திரும்பிப் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் அந்தக் குழந்தையை மிரட்டலானான்.
தாய் தன் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தாள். ராகவன் அந்தக் குழந்தையைப் பார்த்து 'நீ என்னையப் பார்த்து அழுது என்னைக் காட்டிக்கொடுக்க நினைச்சின்னா... நான் அன்னைக்கு மாதிரி உன்னைத் தூக்கிட்டுப் போயி வலிக்க வலிக்க அழவைப்பேன். புரியுதா' என்றான்.
. அதைக் கேட்ட அவள் தாய் 'டேய் நீயா ?' என்று அவன் மேல் பாய்ந்தாள். இராகவன் அக்காவை முதல் முறையாகப் பெண் பேயாகப் பார்த்தான். அவன் தன் அலுவலகப் பையால் அவளை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். அவளோ 'ஏங்க இங்க வாங்க. இவந்தாங்க நம்ம பிள்ளையைக் கொடுமைப்படுத்திருக்கான்' என்று சொன்னதும் அவள் கணவன் வந்து அவனை உதைக்க ஆரம்பித்தார்.
அதற்குள் இராகவன் வீட்டார் அங்கு வர அந்த இடமே போர்க்களம் போல் மாறிவிட்டது. 'நீங்க Good touch, Bad touch சொல்லிக் கொடுக்க மாட்டீங்களா ? 'என்றனர். 'என்ன சொல்லிக் கொடுத்தாலும் இவவளவு பெரிய எருமை மாட்டுக்கு எதிரா சின்னக் குழந்தை என்ன செய்யும்?,' என்றார் அவளது தாய். 'உங்க பிள்ளைக்கு ஒண்ணும் சொல்லிக் குடுக்க மாட்டீங்க.? பாதிக்கப்பட்ட
என் குழந்தைக்குத்தான் அதச் சொல்லிக் கொடுத்தீங்களா இதச் சொல்லிக் கொடுத்தீங்களான்னு கேப்பீங்க' என்று அக்குழந்தையின தந்தை அவனைக் குத்தக் கத்தியை எடுக்க உள்ளே செல்லப் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்குப் போன் செய்ய போலீஸ் வந்தது. இராகவனைப் போலீஸ் கைது செய்த பொழுது நடந்ததை ஒத்துக்கொண்டு அவன் சொன்ன வார்த்தைகள்தான் கீழே உள்ளவை.
அந்தக் குழந்தை தெரிந்த குழந்தை என்பதால் வண்டியை நிறுத்தினான்.அவனைக் கண்டதும் அக்குழந்தையும் ஓடிச் சென்று கார் கதவின் பக்கத்தில் நின்று கொண்டது. அவன் முன்பக்கக் கதவைத் திறந்து உள்ளே அழைத்தான். குழந்தையும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டது. 'அங்கிள் உங்கள் Cell -லக் குடுங்க அங்கிள்' என்றது. அவனும் தனது Cell -ஐக் கொடுத்தான். அந்தக் குழந்தை அந்தச் செல்லை வாங்கி 'குழந்தைப் பாடல்கள் ' பகுதியை ஆன் செய்தது. My name is Chicky… Chicky… Chicky…. Chicky, My name is cha…c.ha….cha….Cha My name is boom…boom…boom…Boom My name is lya ... lya ... lya... Lya… என்று பாடியது.
முதலில் தான் வழக்கம் போல் கடைக்குச் சென்று விட்டு அந்தக் குழந்தையை அதன் வீட்டில் இறக்கி விட வேண்டும் என்றுதான் எண்ணினான். ஆனால் போகப் போக அக்குழந்தையின் மேல் அவனுக்கு ஆசை பிறந்தது. தன் இடது கையால் அதன் தொடை மீது கை வைத்த போதும் மெதுவாகப் பாவாடையைத் தூக்கிய போதும் அக்குழந்தை எதுவும் சொல்லாமல் அந்தக் குழந்தைப் பாடலிலேயே கவனம் செலுத்தியிருந்தது.
கவுனுக்குள்ளே அது பேம்பர்ஸ் அணிந்திருந்தது.எனவே அவன் தனது காரை ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் நிறுத்தினான். அந்தக் குழந்தையைப் பின் சீட்டுக்குப் போகச் சொல்லிக் கதவைத் திறந்து விட்டான். அது ஒரு நாய்க்குட்டி போல அவன் சொன்னபடி பின் சீட்டுக்குச் சென்றது.அப்போதும் அக்குழந்தை அந்த Cell -ல் உள்ள பாடலிலேயே கவனம் செலுத்தியிருந்தது. அவன் வேகவேகமாக அக்குழந்தையின் ஜட்டியோடு பேம்பர்சைக் கழற்றி எறிந்தான். அப்போதுதான் அக்குழந்தை "ஏன் அங்கிள் என் பேம்பர்சை அவுக்கிறீங்க?" என்றது.
மேலும் எதுவும் பேசவிடாமல்அவன் அதன் வாயைப் பொத்தி வல்லாங்கு செய்ய ஆரம்பித்தான். அந்தக் குழந்தை வலி தாளாமல், கத்த முடியாமல் இருகண்களிலும் கண்ணீர் சொரிந்தபடியிருந்தது. அவன் அது குறித்த கவலை ஏதுமின்றித் தன் செயல் முடிந்த பிறகே எழுந்தான். அக்குழந்தை மயக்கமடைந்திருந்தது. அவன் தனது காரை ஷெட்டில் நிறுத்திவிட்டுத் தனது அறைக்குச் சென்றான்.
.
ஒரு பருந்து கோழிக்குஞ்சைத் தூக்கிச் செல்லுகிற பொழுது அதைக் குஞ்சாகப் பார்க்காமல் அதைத் தன் இரையெனக் கருதுவதைப் போல காலையில் எழுந்த அவன் தன் கார் ஷெட்டிற்குச் சென்று
தன் ஆசை ஒன்றையே முக்கியமானதாகக் கருதி அதைக் குழந்தை என்றும் பாராமல் துடிக்கத் துடிக்க மீண்டும் மீண்டும் வல்லாங்கு செய்தான். அக்குழந்தை கண்ணீர் சிந்தி மீண்டும் மயக்கமடைந்தது.
அவன் நேற்றைய நேரத்திற்கு அந்தத் திருமண வீட்டிற்குச் சென்றான். அவனது நல்ல நேரம் அந்த வாட்ச்மேன் அவர் ரூமில் இல்லை. அவன் அங்கு தன் காரை நிறுத்தி முன்கதவைத் திறக்க, அக்குழந்தை வேகமாக இறங்கி அந்த வாட்ச்மேனின் ரூமிற்குள் ஓடிச் சென்று மறைந்து கொண்டது. அவன் அந்த மிதைடை நேரம் முடிவதற்குள் யாரும் பார்க்காமல் தன் காரை எடுத்துக் கொண்டு நிம்மதியாகச் சென்றான்.
அவனைப் போலீஸ் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.
அதன் பிறகு அவள் பெற்றோர் அவளுக்கு விளையாட மட்டுமல்லாது சோறு சாப்பிடக் கூட அவர்களது செல்லைக் கொடுப்பதில்லை.
புதிதாக வீடு மாற்றிச் சென்ற
இடத்தில் அடுத்த வீட்டுக்குக் கூட அக்குழந்தையை அனுப்புவதில்லை. இந்நிகழ்வு 'எந்தப் புத்துல எந்தப் பாம்போ?' என்னும் அவநம்பிக்கையை விதைத்தது.
இன்று இரண்டாம் வகுப்புப் படிக்கும் அக்குழந்தை பழைய துள்ளலோடு இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டாலும்
அந்தப் பாதிப்பிலிருந்து அந்தத் தேவதையைக் காலம் தான் மீட்டெடுக்க வேண்டும்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்