logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Bala murugan.V

சிறுகதை வரிசை எண் # 82


மனிதனுள் அமர் அமர் என்ற பெயரில் ஒரு ஏழை வீட்டு சிறுவன். பெயரைப் போலவே மனதையும் கொண்டவன் .பிறக்கும் போது ஒரு செல்வந்தரின் மகனாக பிறந்தவன். ஆனால் அந்த மகனுக்கு ஆறு வயது இருக்கும் போது, தன் தந்தையை இழந்த சூழல் நேர்ந்தது. அவன் முதல் பிறந்தநாள் அன்று பத்து சவரன் தங்க சங்கிலியை தன் மகனுக்கு பரிசாக அளித்தார். தந்தை இறைவனடி சேர்ந்த பிறகும், தந்தையின் ஞாபகமாய் அமர் கழுத்தில் தங்க நகை இருந்தது. தன் கணவனை இழந்த துக்கத்தில் அமரின் தாயானவள் பாத்திரம் கழுவும் வேலைக்கு சென்றாள். கணவனை இழந்த பரிதாப நிலையில் வறுமைக்காகவும், வயிற்று பசிப்பிணிக்காகவும், வாடும் நிலை நேர்ந்தது. ஆனால் தன் மகனை மட்டும் அரசு பள்ளியில் படிக்க வைத்தாள். அவனும் படித்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐந்தாம் வகுப்பு வரை படித்து முடித்தான். அவன் அல்லவா அமர்!! அமர் ஆறாம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும் என்று தாய் எண்ணினாள். ஊரே, அவன் பள்ளிக்கு சென்று வரும்போது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை வியந்து பார்க்கும். ஒரு நாள் அமர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை திருட முயற்சித்து திருடர்கள் பொதுமக்களிடம் மிதிபட்டனர். பள்ளி ஆசிரியர் ஒருவர் அமரிடம் பள்ளியில் தங்கத்திற்கு அனுமதி இல்லை என்று கூறிய போது , "நான் என் தந்தையின் ஞாபகமாக அவர் கொடுத்த இந்த தங்க சங்கிலியை அணிந்துள்ளேன் "என்று கூறினான். எத்தனை பேர் அந்த தங்கத்தை வாங்க நினைத்தும் அதனை பெற முடியவில்லை.. தாயானவளே கேட்டாள் கூட அவன் தர பிடிவாதம் பிடித்தான். குடும்ப சூழ்நிலைக்காக தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து பணம் பார்க்கலாம் என்று நினைத்து கேட்டால் கூட ,அவன் தர விரும்பவில்லை. ஒரு நாள் 60 வயது முதியவர் ஒருவர் தள்ளாடிக் கொண்டு அங்கும் இங்குமாய் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எமதர்மன் போன்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாய் வந்து கொண்டிருந்தது. தடுமாறிக் கொண்டு வந்த முதியவர் சாலையின் நடுவே எதிர்பாராத வகையில் விழுகிறார். கட்டுப்பாட்டை இழந்த லாரியானது சாலை ஓரத்தில் விழுந்த முதியவர் மீது பரிதாபமாய் ஏறியது. அதே சாலையில் பள்ளி முடிந்து அமர் நடந்து வருகிறான். முதியவர் மீது லாரி ஏறியதை பார்த்த அதிர்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடி வருகிறான். சாலை எங்கும் இரத்தம் லாரி ஏறியதால் கால்கள் உடைந்தது.முதியவர் தலையில் பலத்த காயம். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் முதியவர். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அமர் தன் பள்ளி ஆசிரியரின் வாக்கிற்கிணங்க,அந்த முதியவர் பையில் இருந்த தொலைபேசி எடுத்து 108 என்ற எண் மூலம் அழைத்தான் அமர். மருத்துவ அவசர ஊர்த்தி வந்தவுடன் அந்த முதியவருடன் அவனும் ஊர்த்தியில் அமர்ந்தான். ஊர்த்தி மருத்துவமனை வரைக்கும் சென்றது.. யாரோ ஒரு தெரியாத நபருக்கு உதவும் அந்த குணம் இருக்கிறதே அது இறைகுணத்திற்கு சமமாகுமே!!! அது அமருக்குள் மனிதம் இருந்ததல்லவா? மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் முதியவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீவிர முடிவெடுத்தனர். முதியவருக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் கூறினர். அதற்கு ரூபாய் 6 இலட்சம் செலவாகும் என்று இரசீது பெறப்பட்டது. அதிர்ந்து போன அமர் அந்த இடத்திலேயே தரையில் அமர்ந்து கண்கலங்கினான்... அந்தக் கண்ணீர் துளிகள் அவன் கால்களில் விழுந்தது.. பிறகு அவன் தந்தையின் பரிசான தங்க சங்கிலியிலும் விழுந்தது.... அப்போது யோசித்த அமர் இந்த தங்கச் சங்கிலியை வைத்து அறுவை சிகிச்சை நடத்தலாமே என்று முடிவெடுத்து, அதனை கழற்றி அடமானம் வைத்து 7 லட்சம் தயார் செய்தான். அறுவை சிகிச்சைக்கு தேவையான 6 இலட்சத்தை அளித்தவுடன் அறுவை சிகிச்சை உடனே நடைபெற்றது நல்லபடியாக முடிந்தது. முதியவர் அமராமல் உயிர் தப்பினார். பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு முதியவரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று செவிலியரிடம் கூறிவிட்டு அவன் உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். ஆனால் அவனே அறியாமல் அவனுடைய பள்ளி அடையாள அட்டை முதியவரின் படுக்கை அறையில் இருந்தது. முதியவர் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நினைவுக்கு திரும்பும் போது, எழுந்தவுடன் கத்தி கூச்சல் இடுகிறார் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பிறகு யார் உங்களை காப்பாற்றியது என்ற செய்தியினை செவிலியர்கள் தெளிவாக விளக்கம் கூறுகின்றனர். அப்போது தான் தெரிந்தது அந்த முதியவருக்கு அமர் தான் தன்னை காப்பாற்றியது என்று.... நான்கு வருடங்களுக்குப் பிறகு,, அமர் குடும்ப கஷ்டத்தோடும் வறுமையோடும் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தான். ஒரு நாள் அமர் வாழ்ந்து வரும் கூரை வீட்டின் வாசலில் அந்த முதியவர் அமரை நேரில் பார்ப்பதற்காக கண்கலங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தார். மெதுவாய் அமர் வெளியே வந்தான். இந்த முதியவர் ஓடி வந்து அமரை கட்டியணைத்தார். அமரின் வீட்டில் முதியவர் அமர்ந்து உணவு உண்டு, அவனுடன் நேரம் கழித்து வீடு திரும்பும் போது, தன்னுடைய உயிரினை காப்பாற்றுவதற்காக தங்கச் சங்கிலியை அடமானம் வைத்தானே... அந்த தங்க சங்கிலியை மீட்டு விட்டு மீண்டும் அவன் கழுத்தில் போட்டு விட்டார். அதிர்ந்து போன அமரின் கண்கள், என் தந்தை கொடுத்த சங்கிலியை பார்த்தவுடன் ஆனந்த கண்ணீர் வடிந்தது. தன் தந்தையின் சங்கிலியை பரிசாக கொடுத்தது மட்டுமில்லாமல் , ஒரு கட்டப்பை முழுவதும் 10 இலட்ச ரூபாய் அவனுக்கு அன்பு பரிசாக அளித்தார். ஆனால் ,அமர் அதனை வாங்க மறுத்தான். தந்தையின் பரிசு மட்டும் போதும் என்றான். அப்போது அந்த முதியவர் கூறியதாவது "நீ நல்ல ஒரு இளைஞன் உன்னால் இந்த இந்தியாவின் தலையெழுத்தே மாறும்" என்று கூறிவிட்டு, பணத்தொகையை கையில் கொடுத்து விட்டு படிப்பு செலவிற்காக வைத்துக் கொள் என்று சொல்லிவிட்டு ,அந்த முதியவர் அவருக்கு ஒரு முத்தம் கொடுத்து விடைபெற்றார். இருப்பினும், படிப்பிற்கு தேவையான தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை அருகில் இருக்கும் அனாதை ஆசிரமத்திலும், கல்வித் தொண்டு நிறுவனத்திற்கும் அளித்தான். இதுதான் அமரின் பெருந்தன்மை இவனே உண்மையான அமர் (அழகு). யாரோ ஒருவருக்கு உயிர் கொடுத்தது, பிறகு அவரின் விஸ்வரூபத்திலே பல மடங்கு உதவி வீட்டை தேடி வந்தது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கிற் கிணங்க, மனிதம் போற்றுவோம்! புனிதம் காப்போம்! இதுதான் மனிதனுள் அமர்!!!!!! -வி.பாலமுருகன் இளங்கலை முதலாம் ஆண்டு பொறியியல் துறை ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி தொலைபேசி எண் 7305539368.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in