Ponnulakshmi M
சிறுகதை வரிசை எண்
# 73
" மகளும் பெண்தான் "
அன்று ஞாயிற்றுக்கிழமை கலைக்கதிரவன் தன் பொன்னொளியினை காதல் கரங்களாக்கி பிரபஞ்சத்தின் அத்துனை உயிர்களையும் ஆரத்தழுவி புத்துயிரூட்டி துயில் கலைத்துக் கொண்டிருந்தான் அவன் ஆரத்தழுவலில் காயத்ரியும் தப்பவில்லை . அந்த ஐந்து அடி அழகிய சிலை கண்கள் திறக்கவியலாது தன் விரல்களால் கைபேசியை தேடுகிறாள், தன் பாதச்சலங்கைகளால் இசை செய்கிறாள் கட்டிலில் .கைபேசியில் நேரத்தை பார்த்துவிட்டு தூக்கத்திற்கு துணையாகச் செல்ல ஆயத்தமானாள் .அப்போது அம்மாவின் குரல் காயத்ரி எந்திரி என்று சமையலறையிலிருந்து படுக்கையறையின் நிசப்தத்தை நொடியில் உடைத்து அறையினை அலறச் செய்தது ,காயத்ரியின் காதுகளில் அதிர்ந்தது .ஒருவழியாக எழுந்து காலைக்கடமைகளை முடித்து ஓவியமான தன்னை மேலும் வண்ணங்களால் மெருகேற்றிவிட்டு கிளம்பினாள் .
அவளை பார்த்து அவளது
அம்மா சுஜாதா என்னடி இது அதிசயம் ஞாயிற்றுக்கிழமை பக்கத்தில் வந்து தடி வைத்தாலும் எழுந்திருக்க மாட்ட , இவ்வளவு சீக்கிரம் எழுந்து கிளம்பி வந்துருக்கியே என்றாள் . காலியாக இருந்த சுஜாதாவின் நெற்றி அவள் விதவை என்று சொல்லிற்று ,அலங்காரமாக மாட்டப்பட்டிருந்த போட்டோக்கள் சுஜாதாவிற்கு ஒற்றை மகள் என்றும் , அவள் மாடலிங் துறையில் ஈடுபாடு கொண்டவள் என்றும் ,வீட்டில் உள்ள பொருட்களின் வயது அந்த இல்லத்தின் பொருளாதாரத்தினை நடுத்தர வர்க்கம் என்றும் சொல்லிற்று ..ஞாயிற்றுக்கிழமை என்ன மீட் நேத்து எதுவும் சொல்ல
லையே என்று கேட்க லேட்நைட் தான் எனக்கே மெசேஜ் கிடைச்சது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுஜாதாவின் அடுத்த கேள்வியை அறிந்தவளாய் நான் வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறேன்
என்று சுஜாதாவின் பதிலுக்கு காத்திராமல் தன் வண்டியை ஓடவிட்டாள் .
காற்றை கிழித்துக்கொண்டு சென்ற வாகனம் ஒரு நட்சத்திர ஓட்டலின் பார்க்கிங்கில் அவளைச் சேர்த்தது
. உள்ளே வரவேற்பு பகுதியில் ஏதோ கேட்டுவிட்டு லிப்ட்க்கு காத்திராமல் படிகளில் வெள்ளை நிற ஆடையில் முயல் குட்டியாக துள்ளி குதித்தேறினாள். கடந்து சென்ற எந்த கண்களும் இரண்டாம் முறை அவள் அழகை அளக்க தவறவில்லை ஒரு அறையின் முன்பாக நின்று அழைப்பு பொத்தானை அழுத்தினாள் ,அவளின் வருகைக்கு காத்திருந்தவாரு தன் உடலை உள்ளே இழுத்து வழி விட்டது கதவு .
உள்ளே ஒரு ஆடவன் நிற்கிறான் என்ன காயத்ரி இவ்வளவு லேட் என்றான். அதான் வந்துட்டேனே என்றாள் ,சரி சரி நீங்கள் தயாராக இருக்கீங்களா சந்தீப் என கூறிக்கொண்டே தனது ஆடைகளை கலையத் தொடங்கினாள் . சந்தீப் அவளுக்கு சில மாதங்களாகவே நன்கு பரிச்சயம் ,அவள் பணிபுரியும் அலுவலக நிர்வாக இயக்குனர் வழியாக அறிமுகம் மாடலிங் மற்றும் சினிமாத்துறை பிரபலங்களுக்கு மிகவும் பரிச்சயமான
புகைப்படக்கலைஞன். இருவருக்குமான பழக்கம் தெரிந்த நபர் என்பதற்கும் நல்ல நண்பர்கள் என்பதற்கும் இடையிலான வர்க்கத்திற்குள் அடைந்தது .
பேசிக் கொண்டே சேலைக்குள் அடைபட்டிருந்த மேற்கத்திய ஆடைக்கு சுவாசம் தந்தாள் பின் அங்கு தயாராக இருந்த புகைப்படக்கருவி முன் நின்று முகபாவனைகளாலும் , உடல் மொழிகளாலும் , அவளின் அழகின் பரிமாணங்களால் அந்த காமிராவை திக்குமுக்காட செய்தாள் . வேலை முடிந்ததும் தன் அழகை மீண்டும் ஆடைக்குள் அடைத்துவிட்டு
நான் கிளம்பறேன் சந்தீப் என்றாள் . உன் வேலை முடிந்ததும் கிளம்பறேன் என்கிறாயே ,டி ஆர் காபி சாப்பிட்டு கிளம்பலாம் என்றவனுக்கு , உடனே பதில் வந்தது அவளிடமிருந்து ஆர்டர் பண்ணி வர்றதுக்கு லேட் ஆகும் அம்மாகிட்ட ஹோட்டல் னு சொல்லிட்டு வரல. வழக்கமான பார்க் னா சொல்லிருப்பேன் ஹோட்டல் னா ரொம்ப யோசிப்பாங்கனு ஆபீஸ் மீட்னு சொல்லிருக்கேன் , அதனால சீக்கிரம் கிளம்பணும் .அவளுக்கு ஹோட்டல் வருவது இதுவே
முதல் முறை என்று தெரிந்தது . பரவாயில்லை இந்த ஜூஸ் மட்டுமாச்சும் குடி என்று தயாராக இருந்த அந்த பாட்டிலை திறந்து கண்ணாடிக்குவளையில் ஊற்றினான் வேறு எந்த காரணமும் சொல்ல இயலாது என யோசித்து அதை சுவைக்க ஆரம்பித்தாள். அவளின் எண்ணம் அனைத்தும் அந்த அறையை விட்டு வெளியேறுவதில் குறியாக இருந்தாள் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என ஆரம்பித்தான் .அதற்குள் அழைப்பு மணி அடித்தது சந்தீப் சென்று கதவை திறந்தான் நாற்பது வயது தோற்றத்தில் மிடுக்காக ஒரு ஆண் நின்றிருந்தான் .தலைச்சாயம் மற்றும் சில மெனக்கெடல்களால் வயதை பத்து குறைத்திருக்கிறான்
என யூகிக்க முடிந்தது. ஹலோ சார் என்று வேகமாக கைகுலுக்கி உள்ளே அழைத்து வந்தான் சந்தீப். காயத்ரியும் எழுந்து வணக்கம் சொல்லி சார் நீங்க என்ன இங்க என்பது போல் பார்த்தாள் வந்திருந்தது அவளின் எம். டி. பிரகாஷ் எழுந்து நின்றளிடம் ,
நோ பார்மாலிட்டிஸ் சிட் டவுண் காயத்ரி என்றான் . சந்திபிடம் ஒரு பிசினஸ் பத்தி பேச வந்தேன் என்று கூறிக்கொண்டே அமர்வதற்க்குள் அவனது கைபேசி அழைக்க ஜஸ்ட் எ மினிட்ஸ் என சொல்லிக்கொண்டு
நகர்ந்தான் . பிரகாஷ்
வந்ததிலிருந்து சந்தீப் மற்றும் காயத்ரியின் மனமும் வெவ்வேறு திசைகளில் ஓட ஆரம்பித்தது நிசப்ப்தத்தை கலைத்தது சந்தீப்பின் குரல் . அப்பறோம் என்ன பிளான் என்று தொடர்ந்தான், இவளுக்கு ஒன்றும் புரியவில்லை . நீங்க எண்ண சொல்லணும்னு சொல்லுங்க சந்தீப் என்றாள் . அவனுக்கு முகம் மாறி பேச்சில் தயக்கமும் நாவில் தழுதழுப்பும் ஏற்பட்டது . ஒரு வழியாக தன்னை தயார் செய்து கொண்டவனாக இந்த துறையில் சக்ஸஸ் அவ்வளவு எளிதல்ல. அழகும் ,திறமையும் ,நம்பிக்கையும் மட்டுமல்ல வேறு சில விஷயங்களும் தேவை என்றான் அவள் புரிந்தும் புரியாததுமாக விஷயம் என்னனு சொல்லுங்க சந்தீப் என்றாள் . ஒரு பெரிய மனிதர் உனக்கு விளம்பரப்பட வாய்ப்பு தரவிருக்கிறார் ஆனால் அதற்கு விலையாக அவர் கேட்பது உன்னை என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் பளீரென ஒரு வலியை உணர்ந்தான் ,கண்கள் இருட்டின .
கண்கள் சிவக்க , கண்ணீர்த்த்துளிகள் சொட்ட உன்னிடம் போய் இத்தனை நாள் பழகினேனே .என்பது போல் அவளது முகபாவனை இருக்க ,
அவன் இதற்கு முன் இப்படி கேட்டும் கன்னங்களில் வாங்கியும் பழக்கப்படாதவன் போலும் வெட்கித் தலைகுனிந்தான் . அவள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் நேரத்தை பயன்படுத்திக் கொண்டான் . அவனுக்கு கொடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் உன் குடும்ப சூழல் என்று ஆரம்பித்து அவனுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட வார்த்தைகளை பிழைகளின்றி நொடிப்பொழுதில் சொல்லி முடித்தான். அவளின் அத்தனை கோபமும் அவளது வார்த்தைகளை சிறை பிடித்துக்கொண்டது .புயலாக அந்த அறையை விட்டு வெளியேறினாள் . உள்ளே நடந்தவற்றை ஒட்டுக்கேட்டுக் கேட்டுக்கொண்டிருந்த குள்ள நரி பிரகாஷ் .
மனதில் குழப்பம் , கோபம் ,ஏமாற்றம் , வெறுப்பு என அத்தனை உணர்வுகளும் அலையாடிட வந்து அடைபட்டாள், சுஜாதாவின் அன்புக் கரங்களில்..... என்னம்மா என கேட்ட சுஜாதாவிடம் அப்பா இல்லாம நீ கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானதுனு இப்போ புரியுதுனு சொன்னாள் .
தன் மகளின் அமைதிக்குப்பின்னால் இருக்கும் காரணம் அறியா விடினும் ஏதோ யூகித்தவளாக அவளைத் தேற்றினாள். இரவுகள். கழிந்தன இமயம் ஏறுவதாக . காலை அம்மாவின் குரலுக்கு காத்திராமல் எழுந்து கணினி முன் அமர்ந்து ஏதோ மின்னஞ்சல் செய்து கொண்டிருந்தாள் . அருகில் அவளது புகைப்படம் சுமக்கும் ஆல்பங்கள் சுஜாதாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் , தன் புதுப்பாதையில் . மின்னஞ்சலை திறந்தே வைத்துச்சென்றித்திருந்தாள் சுஜாதாவிற்காக. அது அவளது ஜாப் ரெசிகனேஷன் லெட்டர் .அதில் பிரகாஷ் எம் .டி .கு .குறிப்பும்
"உங்கள் மகளை வீட்டிலேயே அடைகாத்துக்கொள்ளுங்கள். வெளியுலகில் உங்களைப்போன்று ஆண்கள் என சொல்லித்திரியும் நரிகள் ஏராளம் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மகளும் பெண் தான்" என முடித்திருந்தாள் .
ஹோட்டல் அறையினை விட்டு வெளியே வந்தவள் பிரகாஷ் இன் எண்ணக்குறிப்பை முகத்தில் காண தவறவில்லை அந்த. வேகத்திலும் .....இவளும் பெண் தானே......
_பொன்கவி
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்