Muthu jeya
சிறுகதை வரிசை எண்
# 7
அது அவன் அவள்.
எழுந்ததும் கண்ணாடி பார்க்கும் பழக்கம் உண்டு... நிவி... இன்னுமா தூங்குற என்ற அப்பாவின் குரல் கதவு வரை வந்தது. அதை தாண்டி வரும் அளவிற்கு அவருடைய குரல் இல்லை. எழுப்பதவாக இருந்தாலும். எதாவது ஒரு முக்கியவிஷத்தை சொல்லுவதாக இருந்தாலும் அவர் அப்படி தான்
இரண்டோரு நாள் முன்பு.
பால் கிண்ணதை அடுப்பில் வைத்துவிட்டு மொபைல் போனோடு சோபாவில் அமர்த்தவளுக்கு அது தீஞ்சி போன வாசனை கூட வரவில்லை. எழுந்து போய் பார்த்தவர் அடுப்பை அணைத்து கிண்ணத்தை கழுவிட்டு வந்துசொன்னார். 'அடுப்புல எதாவது வச்ச.. கவனமா இருக்கணுமா... என்கிட்டே கேட்டிருந்த நான் காச்சி குடுத்துருப்பேன்ல..' என்று.
அடிக்கடுக்காய் சாரி சொன்னாள் . அவர் தான் சமாதான படுத்தினார் நிவியை. தூங்கும் போது தான் அவளுக்கு தோன்றியது. ஒரு வார்த்தை திட்டலாம்ல.. அவருக்கு இல்லாத உரிமையா.. இல்ல.. இருக்குற.. ஒரு துணையும் எதிரி ஆகியிரும்னு பயப்படுறாரா.. ஒரு அன்பு ஒரு மனுஷனை அவ்வளவு பொறுமைசாலிய மாத்துமா?அம்மாவ இருந்துருந்த இந்த நாள் முழுக்க அதை தானே பேசிகிட்டு இருப்பா..
'இதோ... எழுந்துட்டேன் ப்பா..'என்று குளியல் அரை கதவை மூடி கொண்டாள்.
எதிர் கேள்வியை கேட்பவரையும், வாதம் செய்பவர்களையும். ஏன் சண்டை போடுபவர்களை கூட சமாதானம் செய்யலாம். எல்லாவற்றுக்கும் சுதந்திரம் தருபவர்களை பார்த்து தான் பயம் வரும். எதோ ஒரு சமயத்தில் தோல்வியோடு அவர்கள் முன்னால் நிற்க நேர்ந்தால்.. முன்னாவர்கள் நம்மோடு நிற்பார்கள் நம்மை திட்டிவிட்டு.
சுதந்திரம் தந்தவர்களிடத்தில் எந்த பதிலும் இருக்காது. பெரும்பாலும் மவுனத்தை வழங்கிவிட்டு வெளியேறி விடுவார்கள். நிவியின் அப்பாவும் அந்த ரகம் தான். அவளுடைய பயமும் இது தான்.
அன்பை காரணம் காட்டி ஒருபோதும் கீழ் படித்தளில் அவளுக்கு விருப்பமில்லை.. சரி சரிசமமாய் வாழ முடியாத அல்லது முயற்சிக்காத ஒருவராக அப்பா இருக்கிறார் என்பதில் அவளுக்கு நிறைய தாக்கங்கள் உண்டு.
நேரடியாக கேட்டதும் உண்டு.
'என்னப்பா இது.. எல்லாத்துக்கும் நான் சொல்லுறது தான.... முடிவுனு ஒன்னு உங்ககிட்டு இருந்து வராத?'என்றாள்.
'எதுக்கு வரணும்ம்மா.. நீ தான் சரியா பேசுற.. அதுல்லாம சின்ன பொண்ணு இல்லைல நீ.. இனி நான் சொல்லுறது என்ன இருக்கு' என்றார்.
என்ன பதில் சொல்லுவது என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. எதை சொன்னாலும் ஏற்கும் மனநிலையில் இல்லையவள். இப்படி முரண்டு பிடித்த போது நடேசன் பார்க்கில் வைத்து சந்துரு நிவியை ஓங்கி அறைந்ததை கூட மறுநாளே மறந்துவிட்டால். நூறு முறை ஒன்றும் இல்லாததற்கு சாரி கேட்க்க சொல்லுமவல், அந்த சண்டைக்கு ஒன்றுமே சொல்ல வில்லை. மறுநாள் டைரி மில்க் சாக்லேட் தந்துவிட்டு 'ஏன்டா லேட்..?' என்றாள்.
நிச்சயமாக தானோடு இருக்கும் எவருக்கும் தன்னை பிடிக்காது என்பது அவனுக்கு நன்றாக தெரியும். அதற்க்கு அந்த கருத்த தோல் காரணமில்லை. அதீத கோபம் தான். 'ஆபீஸ்ல ஒரு நாய் இருகுல்ல..' என்ற வார்த்தையை அவனாகவே கேட்டதுண்டு. பொறுமையா இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க துவங்கி. மஞ்சள் கலர் பந்தை பேண்ட் பாக்கட்டில் வைத்துக்கொண்டு வருவது வரை எல்லாம் நடக்கிறது. கோபம் ஒருவேளை அதிகார திமிரா என்று கூட தோன்றும். ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அது என் இயல்பு என்று இப்போது அதை கண்டுகொள்வது இல்லை.
ஆனால் எல்லோரையும் விட என் கோபம் நிவிக்கு பயப்படுகிறது என்று தோன்றியது. அவள் கேட்கும் எதற்கும் நான் உடனே சம்மதம் சொல்ல கூடாது. அடம் புடிக்க வேண்டும். கோபித்துகொண்டு செல்லுபவளை சமாதானம் செய்ய வேண்டும். குறைஞ்சபட்சம் முகத்தில் அடிக்கிற மாதிரியான நான்கு வார்த்தைகளாவது வேண்டும் அவளுக்கு.
எத்தனையோ முறை அவளை திட்டிவிட்டு அதே வறுத்ததோடு வண்டியில் வீடு வரை போனதுண்டு.. நிச்சயமாக அவள் அழகிற்கு நான் பொருத்தமானவன் இல்லை. காதலுக்கு என்ன பொருத்தம் வேண்டி கிடக்கிறது. அது அப்படி தான் முகட்டுக்கும் பள்ளத்திற்கும் நிற்கும். அதனால் தான் பெற்றவர்களால் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை போல.
எத்தனையோ முறை இவள் நமக்கு சரியாக இருக்கமாட்டாள் என்று நினைத்து கொஞ்சம் விலகினாலும் அடுத்தடுத்த நாட்களில் அடைமழையாய் அன்பை பொழிவாள்.எதோ ஒரு நாண் என்னை அவளிடம் கட்டி வைத்திருக்கிறது என்பது உண்மை.
'எதுக்கு இப்படி பண்ற... அப்புறம் நீயா வந்து கெஞ்சிக்கிட்டு கிடக்க..' என்பதற்கு.
'அது அப்டி தான்டா.. உனக்கு புரியாது' என்பாள்.
வா வீட்டுக்கு என்று எதார்த்தமாக அழைத்தவள், அவள் அப்பாவின் முன்பு என்னுடைய நிவியாக இல்லை.
அளவாக பேசினாள்.எதுக்கு இப்டி பயப்படுற என்பதற்கு சிரித்துக்கொண்டே சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
'எனக்கு எதையும் உடைக்கதெரியாதுடா.. அப்படி தான்.. இதே இடத்துல உன் மடியில உக்காந்தாலும் அப்பா எதும் சொல்லமாட்டாரு.. ஆன நமக்கு கல்யாணம் ஆனாலும் இந்த வீட்டுல இப்படி தான் நான் இருப்பேன்.'
அவளுக்கு பிடித்த மஞ்சள் கலர் சுடிதாரில் வந்துருக்கிறாள். ஸ்கூட்டியை பார்க்பன்னிட்டி வரேன் என்று சைகை காட்டினால். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணுற அளவுக்கு ஒன்னும் இல்லை, நான் உங்க அப்பாகிட்ட பேசுறேன் என்று இரண்டு வரங்களாக எவ்வளவோ சொல்லிவிட்டேன். எனக்கு அது தான் வேணும் என்கிறவளை என்ன சொல்லி மாற்றுவது என்று புரியவில்லை. என் அம்மாவை விட்டுட்டு எப்படி என்றேன்.'அவங்கள கூட்டிகிட்டு வா.' என்றாள். அப்போ உன் அப்பாவையும் கூப்புடு என்றேன்.
வரமாட்டேனு சொன்ன வாழுகட்டாயமா கூட்டிட்டு வருவேன்.. இல்லைனா காத்திருப்பேன். சண்டை போடுவேன். ஆன நான் கூப்புட்டதும் வந்துருவாரு. அது நான் தினம் தினம் பாக்குற காட்சிடா.. அதுக்கு ஏன் கல்யாணம் பண்ணனும். புதுசா நான் பாக்கணும் எல்லாத்தையும் எல்லாரையும் என்றாள்.
எதையும் உடைக்கமாட்டேன் என்கிறவள். தன்னோடு உடைக்கவேண்டிய பொருளோடு அழைக்கிறாள் என்று தோன்றியது. உன் செய்கை வலிக்கும் அல்லவா அவருக்கு என்றேன். வலி யாருக்கு தான் இல்லை. உன்னை நான் செய்யும் கொடுமையை காரணம் காட்டி நீயே கூட என்னை பிரியலாம் அல்லது இவ்வளவு அன்போடு இருக்கும் நானும் கூட அதை செய்யலாம். உலகம் அப்படி தான் என்பதை ஏற்க மறுக்கிற மனதோடு என்னால் நிச்சயமாக சண்டை செய்ய முடியாது. அது ஒரு பரிதாப நிலை. விட்டு விலகிவிடுகிற மனிதனை உயிரோடு இருக்கிறான் என்று கூட சொல்ல முடியாது என்றாள். போராட வேண்டும் எனக்கு அதற்க்கு இங்கே யாராவது வேண்டும். தவறுகள் இல்லை என்றாள் சரி என்பது எப்படி உருவாகும் என்றால் .
அவளை நான் புத்தகமாக பார்க்க பழகியிருந்தேன். எதற்குகெடுதலும் முன் பல் வரிசையை காட்டி சிரிக்கும் போது ஒரு பயணத்தில், குரங்கு என்றேன். சரியான பெயர் என்று அதற்க்கு கோபபடவில்லை. உனக்கு கோபம் வரவில்லையா என்றேன் அந்த கேள்வி கேட்கும் போது எனக்கு சுற்றுலா போதை.
கோபம் வராது, அது உன் ஆதி கேள்வி உன்னுடையது இல்லை என்றாள்.
மெதுவாக என் போதையை இறக்கியது.
"என்ன முடிவு பண்ணிருக்க..?'
'ஒரு வாரம் எனக்கு டைம் வேணும்.'
'எதுக்கு..?'
'எதுக்காக வேணாலும் இருக்கலாம். உன்கிட்ட சொல்லணும்னு அவசியல் இல்லை..'
'அப்போ நீ என்ன மதிக்கல..'
'எப்படி வேணாலும் எடுத்துக்கோ.. எனக்கு பிரச்சனை இல்ல.. முடிஞ்சா வெய்ட் பண்ணு..'என்றேன்.
'ம்ம்.. நானா இத பத்தி பேச மாட்டேன்..
ஆன... என்ன மாத்திரலாம்னு எதாவது யோசனை இருந்த மாத்திக்கோ.. உன் வீட்டு வாசல்ல இருப்பேன்...' என்று சாளை தூக்கி தோளில் மடக்கிவிட்டு நடந்து போனால்..கொஞ்சமும் பயமும் இல்லை. அதீத தைரியத்தின் உச்சம். என் கோபத்தின் உச்ச பட்ச நிலையை எனக்கு முன்னால் காட்டி விட்டு சென்றாள்.
நாளையே என் முடிவை மாற்றி கொண்டாள். பாலுக்கு அழும் சிறு பிள்ளையாக நிவியை பார்க்க முடியும் அவ்வளவு தான் அவள். தானே எல்லாமும் என்றவளை என்னால் நிர்வாகிக்க முடியவில்லை.
உன் கோபமும்.. அப்பாவின் மவுனமும் ஒன்றும் இல்லை என்று நடுவில் நிற்கிறாள். எதாவது ஒன்றை பற்றிக்கொள்ளும் மனிதம் தானே வாழ்வியல் என்ற என் என்னத்தை நான் என்ன செய்வது. எனக்கு கீழ் என்ற மனநிலையில் அம்மாவை கூட கடுஞ்சொல்லில் பேசியது உண்டு. அன்பை முழுவதுமாக நிரப்பி ஒரு உயிரை அதனோட போக்கில் வாழ வைப்பது என்பது நிவிக்கு எப்படி தெரியும் என்று யோசித்தேன்
நிவி அப்பாவின் தொலைபேசி எண் என்னிடம் இருந்தது.
உனக்கு கோபம் தானே வேண்டும் என்று நிவியை நினைத்து கொண்டு டயல் செய்தேன்
எனக்கு
அது அவள் அவன்
வேண்டும்.
முத்துஜெயா.
9841753982.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்