கோவை. நா.கி.பிரசாத்
சிறுகதை வரிசை எண்
# 6
"என் இனிய குரலே...!"
***************************
ஹாலோ... குங்குமம் மேட்ரிமோனியிலிருந்து சுவாதி பேசறேன்...!" என்ற குரல் கேட்டதும்
"வாவ்... உங்க வாய்ஸ் சூப்பர் மேடம்! வயசு என்ன!?" - ராகுல் தன்னிலை மறந்து உலறினான்.
"மிஸ்டர் என்ன கேட்டிங்க!?" காட்டமான வார்த்தைகளால் தன்னை சுதாரித்துக்கொண்ட ராகுல்
"அய்யோ... சாரி மேடம், நான் ஒரு குறும்பட இயக்குனர், இந்த குரலைத்தான் தேடிட்டு இருந்தேன், ப்ளீஸ் என் படத்துக்கு நீங்க வாய்ஸ் ஒவர் தரமுடியுமா!?"
"சாரி... சார், உங்க வீட்ல திருமண வயசுல யாராவது இருக்காங்களா!?"
"நானே யங் & ப்யூட்டி பேச்சலர்தான்தான் மேடம்! அதைவிடுங்க, வாய்ஸ் ஓவர்...!"
"சார், நான் சீரிஸா பேசீட்டு இருக்கேன்! நீங்க காமெடி பண்றீங்க?"
"எது மேடம் காமெடி? அம்மா சத்தியமா நான் யங் & ப்யூட்டிதான்...!"
சிரிப்பை அடக்கிக்கொண்ட சுவாதி, "சார்... இது ரெக்காடிங் கால்... இப்படியெல்லாம் பேசாதீங்க...!" என்றதும்
"ஓ... ஒ.கே... ஒ.கே... எனிவே... ப்ளீஸ் நோட் மை நம்பர்!" என தனது மொபைல் எண்ணை ஒப்பித்துவிட்டு, "மேடம் நமக்கு ப்ரைட் ஃபியூட்சர் இருக்கு, அய்யோ... சாரி உங்களுக்கு...!'
***
இரண்டு நாளிற்கு முன்பு...
"யம்மா... நான் கட்டை பிரம்மச்சாரியா போனாலும் போவனே தவிர அத்தை மவளை மட்டும் கட்டமாட்டேன்...!" ராகுலின் அலறல் சப்தம் கேட்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்த, அவனின் அப்பா கோதண்டம்
"ஏண்டா... என் தங்கை மகளுக்கு என்னடா குறை!? என்ன கொஞ்சம் கறுப்பு, கொஞ்சம் குட்டை, கொஞ்சம் குண்டு, அவ்வளவுதான்...!" எனச்சொல்லி பலமாய் சரிக்கவும்
"யப்பா... என்னை தற்கொலைக்கு தூண்டினதா, வீணா ஜெயிலுக்கு போயிடாதீங்க...!" ராகுல் பதறினான்.
"சரிடா, இன்னும் ஒரு மாசம் டைம் தர்றேன் அதுக்குள்ள உனக்கு பார்க்குற ஜாதகம் செட்டானாலும் சரி, இல்லை நீயே லவ் பண்ணினாலும் சரி! இல்லைன்ன என் தங்கை மகள்தான் உனக்கு மனைவி!" கோதண்டம் கராராய் சொல்ல
"அய்யோ... ஆயுள் தண்டனைக்கு ஒரேமாசம்தான் ஜாமீனா,!? இது டூ மச்பா...!" ராகுலின் கதறலை யாருமே கண்டுகொள்ளவில்லை.
***
தற்போது...
"என்னடா உன்னோட ஒரு மாச ஜாமீன்ல பத்து நாள் காலி! ஆனா ஜாலியா இருக்கையே ஏதாவது செட்டாயிடுதா!?" ராகுலின் ஃபிரண்ட் மகி அவனை பிராண்டினான்.
"செட்டான மாதிரி ஒரு செட் பண்ணீட்டேன்...!" என சொல்லிச்சிரித்தான் ராகுல்.
"நீ தெளிவா பேசினாலே குழம்பும்! இப்படி குழப்பமா பேசினா எப்படிடா!?" மகி முழிக்க ராகுல் ஸ்டைலாய் தனது மொபைலின் வாய்ஸ் ரெக்கார்ட்டை ஆன் செய்து ஹெட்செட்டை மகியின் காதில் சொருகினான்.
"ராகுல் என்னை கைவிட்ற மாட்டிங்கில்ல!? ஐ லவ் யூ சோ மச்...!" என ஒரு பெண்ணின் காதல் கலந்த பரிதவிப்பை கேட்டு மகி அசந்துபோனான்.
"டேய்... என்கிட்டை கூட சொல்லாம இது எப்ப? எப்படி நடந்தது? யார்றா அந்தப்பொண்ணு!?" ஆச்சர்யம்தாங்காமல் அடுக்கடுக்காய் கேட்டான் மகி.
குங்குமம் மேட்ரிமோனியல் சுவாதியின் போன்கால் பற்றி சொல்லி நிறுத்தினான் ராகுல்.
"வெரி இன்ட்ரஸ்டிங்! ஆமா நீ மொபைல் நம்பர் தந்த ஒ.கே. அப்புறம் அவங்க உனக்கு கூப்பிட்டாங்களா?" ஆவலில் ஆர்வமானான் மகி.
ராகுல் தனது நினைவுகளை நடந்தது நடந்தபடி விளக்கினான்.
அன்று மாலை...
ராகுல் செல்லை நோண்டிக்கொண்டிருந்தபோது க்ளிங் என மெசேஜ்ஜில்
"Hi... am swathi...!"
"Which swathi...!"
"Sir, kungumam matrimonial, voice over...!"
"ஆ... வாய்சு... வயசு...அட...டா... ஐ காலு நவ்வு...!" என மெசேஜ்ஜை விடுத்து சுவாதிக்கு குதூகலமாய் போன் போட்டான் ராகுல்.
"ஹலோ... சுவாதி பேசறேன்...!"
"ஆமா... அது... அதேதான்...!"
"என்னங்க...!?"
"ஆஹா... அதே குரல்...ங்க...!"
"உண்மையாவே வாய்ஸ் ஓவர் வாய்ப்பு இருக்காங்க...!?"
"என்னை நம்புங்க, உங்களை கைவிடமாட்டேன்...!"
"வாட் யூ மீன்...!?"
"ஐ... மீன்... உங்களுக்கு வாய்ப்பு உறுதின்னு சொன்னங்க...!"
"ரியலி...!?"
"யெஸ்... யெஸ்... இப்ப நான் ஒரு சேம்பில் டயலாக் அனுப்புறேன் அதை அமைதியான இடத்துல இருந்து ஹெட்செட் போட்டு பேசி அனுப்புங்க, நாளைக்கு ஸ்டூடியோல டெஸ்ட் வாய்ஸை செக் பண்ணிட்டு சொல்லிடறேன்...!" என்ற ராகுல்
"ராகுல் என்னை கைவிட்ற மாட்டீங்கில்ல!? ஐ லவ் யூ சோ மச்...!"
இதை அனுப்பவும் மறுநாள் காலை அது வாய்ஸ் ரெக்காடாய் சுவாதியின் குரலில் வந்துவிழுந்தது.
தற்போது...
"டேய்... நீ பலே கில்லாடிடா... ஆமா இதை வைச்சு என்ன பண்ணுவ!?" மகி கேட்கவும்
"என்னை ஒரு பொண்ணு லவ் பண்றதா அப்பாவை நம்ப வைச்சு ஒரு மாசம் சமாளிப்பேன்...!"
"டேய்... சுவாதிக்கு இப்படி துரோகம் பண்றையே...!"
"யார் சொன்னா நான்தான் அவளை உண்மையாவே லவ் பண்றனே...!"
****
அந்த காபி ஷாப்பிற்கு முன்னதாகவே வந்திருந்த சுவாதியின் முன்பாக "ஹாய்...!" என்றபடி அமர்ந்த ராகுல்
"டிபியை விட நேர்ல ரொம்ப அழகா இருக்கீங்க...!" ராகுல் வழியவும்
"தேங்ஸ்...!" என வெட்கப்பட்டாள் சுவாதி
"யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பற இந்த வெகுளித்தனம்தாங்க எனக்கு ரொம்பபிடிச்சிருக்கு...!" என ராகுல் சிரிக்க, சுவாதியின் முகம் சட்டென கோபமானது.
"அய்யோ... செம! எப்படீங்க? வாய்ஸ் ஓவரை விட நடிப்பு உங்களுக்கு செம தூக்கலா வரும்போல...!" எனச்சொல்லி ராகுல் கண்னடிக்க சுவாதி மெளனமானாள்.
"என் வாழ்நாள் லட்சியமே டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகனும்ங்கிறதுதான். அதுக்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றிங்க!'
"அட... நமக்குள்ள நன்றியெல்லாம் எதுக்குங்க!?" பை தி பை உங்களுக்கு ஒரு குட் நியூஸ். என் குறும்படத்திற்கு நீங்க வாய்ஸ் தரவேண்டாம்....!" ராகுல் சொல்லி நிறுத்தவும் சுவாதி புரியாமல் ஏறிட்டாள்,
"லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு வாய்ஸ் தரப்போறீங்க!" ராகுல் சொல்லவும் ஒன்றும் புரியாமல் முழித்தாள் சுவாதி.
"அட ஆமாங்க... டைரக்டர் சூர்யவசந்த் என்னோட க்ளோஸ் ஃபிரண்ட், உங்க வாய்ஸை அவனுக்கு அனுப்பினேன். ரொம்ப புடிச்சுபோச்சாம், அவனோட நெக்ஸ்ட் படத்தோட கதாநாயாகிக்கு நீங்கதான் வாய்ஸ் ஓவர். ஹேப்பியா!?
ராகுலின் வார்த்தைகளால் இறக்கை கட்டி பறக்கத்துவங்கினாள் சுவாதி.
***
டப்பிங் ஆர்ட்டிஸ்ஸின் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் ஆக சுவாதி படு பிசியானான பின் ஒருநாள் ராகுலை சந்தித்த சுவாதி
"என்னோட லட்சியம் கனவு எல்லாத்தையும் நிறைவேற்றி எனக்கு நல்லதொரு வாழ்க்கை அமைச்சு கொடுத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைங்க!" நெகிந்துபோய் பேசினாள் சுவாதி.
"அதெல்லாம் சரிதாங்க "அழகு பெண்ணின் தாயாறென்றால் அத்தை என்றே அர்த்தம்"-னு வைரமுத்து பொய் சொல்லீட்டாருங்க!" என்ற ராகுலை "என்ன சம்மந்தமில்லாம உளர்றீங்க!?" என சற்று கோபமாகவே சுவாதி கேட்க
"ஆதி முதல் அந்தம் வரை உண்மமைச்சொல்லி, மன்னிப்பு கேட்ட ராகுல்... "எனிவே எனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை தந்த உங்களுக்கும் என் நன்றிங்க...!'
"என்ன சொல்றீங்க...!"
"ஆமா நீங்க மட்டும் எனக்காக குரல் கொடுக்காம விட்டிருந்தீங்க இன்நேரம் என் வாழ்க்கை அத்தை பொண்ணுகிட்ட சிக்கியிருக்குமே...!' அதைச்சொன்னங்க
"அவ்வளவு சீக்கிரமா நீங்க தப்பிக்க முடியுமா? இப்ப என்கிட்ட மாட்டிங்கிட்டீங்க... ஐ லவ் யூ ராகுல்...!" என சுவாதி வெட்கத்தோடு சொல்ல,...
"ஆஹா.... இது அந்த வாய்ஸ் ஓவர் இல்லையே....!" என ராகுல் குதியாட்டம் போட...
"உங்களுக்குத்தான் ஓவர் வாய்" என செல்லமாய் ராகுலை கட்டி அனைத்துக்கொண்டாள் சுவாதி!
-கோவை.
நா.கி.பிரசாத்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்