இ.செல்வ ராஜ்
சிறுகதை வரிசை எண்
# 62
அம்மையார் ஹைநூன்பீவி நினைவு
சிறுகதை போட்டி - 2024
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024.
போட்டியில் கலந்துகொள்ளும் சிறுகதை:
சிரசு
தலைமைச் செயலகம் ,தல, தலை, ஹெட், சிரசு,இப்படியெல்லாம் நம் உடலுறுப்புகளுக்கு முதன்மையானதாக சிரசு விளங்குவதால் தான் , “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என பழமொழியை அப்போதே கூறிச் சென்றிருக்கிறார்கள்.
முன்நெற்றி , சரிந்த இருபக்க நெற்றியில் வலி இருந்தா அதைக்கூட நாம் தலைவலி என்று சொல்லி தைலம் தடவுகிறோம். சிகிச்சை எடுக்கிறோம்.
அரசாங்கப் பணி முடிந்து, ஓய்வு பெற்ற பிறகு நான் செல்லும் முதல் பயணம்.
வருடாவருடம் எனக்கு பெருமையாக இருக்கும்.
ஐம்பத்தெட்டு வருடங்களில் முதல் முப்பது வருடங்கள் , சித்திரை மாதம் மூன்றாம் வாரம், தவறாது போஸ்ட் கார்டு வரும். அதில், அன்புள்ள வில் ஆரம்பித்து இப்படிக்கு, எஸ் துரை என்று முடியும் வரை பாசம் உறவு ஊறிய எழுத்துக்கள் எனை ஈர்க்கும்.. மீண்டும் மீண்டும் படிப்பேன்.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 1
எனது இறந்த தந்தை பராமரித்த குத்துப்கம்பியில் மனம் வராது அந்த போஸ்ட் கார்டை குத்துவேன்.இரண்டடி கம்பி நிறைந்து போகும் அளவுக்கு அதில் கார்டும், இன்லான்டு லட்டர்களும் குத்தப்பட்டிருக்கும்.
அதை அப்படியே, பத்திரப்படுத்தி, இன்னொரு கம்பி எடுத்து தயார் செய்வேன் ஆவணப் பராமரிப்புக்கு.
அந்த கடிதத்தில், வரும் சித்திரை கடைசிநாள் (தேதி) குடியாத்தம் கங்கையம்மன் கோவில் தேர்த்திருவிழாவும், வைகாசி ஒன்றாம் தேதி அம்மன் ஊர்வலமும் நடக்க இருக்கிறது. அனைவரும் வரவும். என்று சலிக்காது எழுதுவார் எனது மைத்துனர் எஸ்.துரை.
அதன்பிறகு செல்பேசி அழைப்பு.
எல்லா அழைப்புக்கும் , வீட்டில் பிளான்போடுவோம். பட்ஜெட் உதைக்கும். அப்படியே பின்வாங்கி விடுவோம்.
நான் மட்டும்தான் காஞ்சிபுரம் பஸ் ஸ்டேண்டில் பேருந்து பிடித்து பயணப்படுகிறேன் எனது மனைவி ஜெகதா. “என்னங்க.. ஒரு தடவையாவது அந்த கங்கம்மா திருவிழாவை பார்த்துடனுங்க ம்.ம்... நான் பார்ப்பேனோ? மாட்டேனோ..?“. என்றவளை கொரானா அள்ளிச் சென்று விட்டது.
2020-2021- இரண்டு வருடங்களும் திருவிழா விமரிசையாக நடைபெறவில்லை. என்றும் கோவிலுக்குள்ளேயே விழா எளிமையாக முடிந்ததுன்னு எனது மைத்துனர் தகவல் கூறினார்
இந்த வருட துவக்கத்திலேயே , நான் எண்ணினேன். அந்த அம்மன் திருவிழாவுக்கு செல்லவேண்டும் என்று.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 2
இதோ, வந்துகொண்டிருக்கிறேன். சில நிமிடங்கள் கழித்தே, ஒரு பஸ் வந்தது.முதல் ஆளாக சிரமப்பட்டு படிகளில் ஊன்றி ஏறி கைப்பையுடன் அமர்ந்தேன். வேட்டி அவிழ்த்து அமருமுன் எனது கட்டைகளை பின்பக்க பஸ் சீட்டிற்கு அடியில் வைத்தேன். அதற்கு முன்பக்க மூன்று பேர் சீட்டில் அமர்ந்தது, ஜன்னலோர இருக்கையில்.
நிறைய கூட்டம் அந்த பேருந்தில் முண்டியடித்து எறினர்.
பஸ் கண்ணாடிகளில் சிறப்புப் பேருந்து என சிகப்பு எழுத்தில் எழுதியிருந்தது.
எனது பக்கத்து சீட்டில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து அமர்ந்தார். நெற்றிநிறைய விப{தியும் குங்குமமும் மணத்தது.
“என்ன கங்கம்மா திருநாவுக்கா? என பழகியவர் மாதிரி கேட்க ஆம் என்றேன். புன்சிரிப்போடு.
எனக்குள் ஒரு தாழ்வு சிந்தனை வேட்டியை இழுத்து விட்டேன் அடிக்கடி. அவர் பார்த்துவிடக்கூடாது. என்று.
“நானும்தான். திருவிழாவுக்கு வருஷா வருஷம் செல்லுவேன்.“
“ ரொம்ப நல்ல திருவிழாங்க அது, நீங்க இதுக்கு முன்னாடி போயிருக்கிறீங்களா?
“இல்லீங்க இதுதான் மொததடவை. சொல்லவே வெக்கமா இருக்கு. எனது தாய் ஊருதான் நான் நிறைய தடவை குடியாத்தம் போயிருக்கேன். திருவிழாவைத்தான் பார்க்கணும்னு...
தோணல, “தோணலியா.. இல்லை.. அந்த அம்மா என்னை அழைக்கலியா? தெரியல..”
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 3
“அப்படி சொல்லாதீங்க. எல்லோரையும் காக்கும் அந்த அங்கயற் கண்ணியை வழிபடறவங்களை அவள் கைவிட்டதே இல்லை..”
மேலும் தொடர்ந்தார்.
“அம்மன் பக்திதான் ஆதி பக்தி. ஆரம்ப காலத்துல பெண் தெய்வ வழிபாடுதான் இருந்தது.
உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் ஒப்பற்ற தாய் அந்தம்மா ஆயிரம் கண்கொண்டவள். அவளுக்கு பேரும் ஆயிரம் பெருமைகளும் ஆயிரம்.
“என்னங்க.. ரொம்ப அதிகமா புகழுரை தர்றீங்களே. எனக்கு சமயபுரம் மாரி அம்மா தான் இஷ்டதெய்வம். மலையனூர் அங்காளி குலதெய்வம்.
இது நான்...
எங்கள் பேச்சு, கண்டக்டரின் டிக்கெட் வழங்கிய நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தது. “வேலூர் வரைதான் வண்டிசெல்லும் அப்புறம் மாறிக்குங்க / கண்டக்டர் சொன்னார்.
எனக்கு, அவரைப்போல் எல்லாம் ரொம்பவும் பக்தி கிடையாது மனசுக்குள்ளே மேஜர் வழிபாடு. எல்லோரும் போல மனைவியுடன் ஆன்மீக விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல்.. ஆபீஸில் மிதவாதியாக பக்தியில் புத்தி செலுத்துதல்..
இவர் பேசுவதைப் பார்த்தால் நிறைய அம்மன் விஷயம் தெரிந்தவராகவேத் தெரிகிறார்.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 4
“நீங்க சொல்றதப் பார்த்தா கெங்கைஅம்மன் வரலாறு தெரியாத வரா இருப்பீங்க போலிருக்கே.“
“ஆமாங்க நான் பல தடவை வரணும்னு நினைச்சு இன்ணைக்குத்தான் வாய்ப்பு கிடைச்சுதுங்க.“
“சந்தோஷம் நீங்க பொறுமையாக கேட்டீங்கன்னா நான் அந்த அம்மாளைப்பற்றி சுருக்கமா சொல்லுவேன்.
“சொல்லுங்க.”
“மொதல்லே ராஜாக் காலத்துலேர்ந்து.. தொடங்கறேன். போர் அடிங்காதுங்க புராணம் வெரி இன்ட்ரஸ்டிங்.”
நான் என்னடா இது பெரிய கதை சொல்வார் போலிருக்கு. தூக்கம் வராம இருந்தா சரி டைம் பார்த்தேன். பகல் பதினொன்று பத்துமணி. என் கண்கள், பின்பக்க சீட்டுக்கு அடியில் வைத்த கட்டைகளை கண்காணித்தது.
“கெங்கையம்மாவுக்கு வேறுபேரு உண்டு. ரேணுகாதேவி. அவங்க விதர்ப்பா தேசத்தை ஆண்ட விஜரவதமகா ராஜாவின் மகள்.
அவருக்கு ரொம்ப நாள் குழந்தை இல்லாது பிரம்மதேவனிடம் கடும்வரம் இருந்து குழந்தைவரம் கேட்டு பெற்றான். சீரும்சிறப்புமாக மகளை வளர்த்தான். அழகு தெய்வமாக இருந்த ரேணுகாதேவியை பருவம் வந்தததும் ஜமதக்னிமுனிவருக்கு கட்டி வைத்தார் மகாராஜா.
நான் கதையை ரசிக்க ஆரம்பித்தேன். எனக்கு இது புதிய வரலாறு முனிவர் பெயர் கேட்டமாதிரி இருந்தது சற்று நேரத்திற்கு அவர் கதைசொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டிருந்தார்.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 5
நான் கேட்டேன். “என்னங்க.. கதையை தொடராம விட்டுட்டீங்களே...“
சற்று கண்விழித்து, “நீங்க உங்களப்பத்தி ஏதும் சொல்லலிங்களே..”
”நான், வஜ்ஜிரவேல். தனிக்கட்டை இந்த காஞ்சிபுரம்தான் சொந்த ஊர். பட்டுத்தறி நெய்பவன். சொசைட்டிலமெம்பர். எனக்கு குடும்பமெல்லாம் கிடையாது.“ - ன்னு அவரை என்னிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார்.
“உங்களப்பத்தி சொன்ன பிறகு என்னைப்பத்தி சொல்லனும் இல்லியா என்பேரு சங்கரன். எனது மனைவி பற்றி சொன்னேன். இரண்டு பெண்கள் கட்டிக் கொடுத்தாச்சு. நான் மட்டும் வீட்லே தனிமரம்.“ எனக்கு என்னவோ அவரு தனிக்கட்டைன்னு சொன்னதாலே நான் என்னை தனிமரம்னு சொல்லிக் கிட்டேனா?
“வருத்தமா இருக்கிறது வேர்போல மனைவி இருந்திருப்பாங்க.“ என்னை சமாதானப் படுத்தினார்.
“சரிங்க கதையை கன்டினியு பண்ணுங்க.” ஆர்வமாயிருந்தது. கேட்க..
“கதை இனிமே கொஞ்சம் டிராஜடியா இருக்குமுங்க. ஜமதக்னி முனிவர் ரேணுகாதேவி தம்பதியருக்கு விஷ்ணுவின் அம்சமான
பரசுராமன் என்றும் இன்னும் மூன்று பிள்ளைகளும் பிறந்து சந்தோஷமா போய்க்கிட்டிருந்தது, அந்தக் குடும்பம்.
தொடர்ந்தார். நானும் அவர் பக்தியோடு கதை சொல்லும் நேர்த்தியை ரசித்தேன்.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 6
நாள்தோறும் ரேணுகாதேவி தாமரைக்குளத்தில் நீராடச் செல்வது வழக்கம் மண்ணாலே குடம் செய்து திரும்பிவரும்போது அந்த மண் குடத்திலேயே வீட்டுக்கு தண்ணீர் கொண்டுவருவது வழக்கம்.
“வஜ்ஜிரவேல் சார். இப்ப பார்த்திங்களா, நாம ரூட் பஸ்லே போயிருந்தா நிறைய ஸ்டாப்பிங், விசில் சப்தம், வண்டி நின்னு நின்னு போய், டிஸ்டர்ப் ஆகி கதையை கேட்கவிடாமல் ஆகி இருக்கும். ஆனா அந்த கெங்கையம்மா கருணை நிம்மதியா நீங்க “அதுமட்டுமில்லை... சொல்றதை கேட்க முடியுது.. “சந்தோஷப்பட்டேன்.
அவர் விட்டதை ஆர்வமுடன் தொடர்ந்தார்.
வஜ்ஜிரவேல் ஆர்வமுடன் வாலாஜா வந்திருக்கு குடியாத்தம் போறதுக்குள்ளே வரலாறு முடிச்சுடுவேன்.“ ஆனால் வேலூர் வரைதான் இந்த வண்டிபோகிறது.
“சரி. சொல்லுங்க கேட்கவே இன்டரஸ்டிங் வழக்கமாக நீராடச் சென்ற ரேணுகாதேவிக்கு அன்று குளத்தில் நீராடும் போது, தேவர்குல கந்தர்வன் வடிவில் சோதனை வந்தது.
குளத்தில் கந்தர்வனின் அழகுநிழல்பட்டது. அந்த நிழலின் அழகில் மனதை பறி கொடுத்து சில நிமிடம் ரேணுகாதேவி மயங்கிவிட்டார்.“
“ஓ அப்புறம்...”
கடும் தவத்தில் இருந்த ஜமதக்னி முனிவர் இதை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்து, கோபம் கொண்டார்.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 7
தனது மனைவியிடம் இதுபற்றி தெரிவித்து, கற்புநெறி தவறிவிட்டாய் என குற்றம் சாட்டினார்.
தகுந்த தண்டனையையும் தர நினைத்தார் உடனே. தனது மகன் பரசுராமனை அழைத்து. “உன் தாயின் தலையை வெட்டி எடுத்துவா...“ என உத்தரவிட்டார்.
“என்னங்க இது? இதுவாங்க பெரிய குற்றம்? நீரில் நிழல் பார்த்தது குற்றம் என்றால் இன்றைய உலகத்தில் எல்லாமே நடக்குது. குற்றம் எது என்றே சுமத்தமுடியாது. பொதுவில் ஆகிவிட்டது.”
கதையை விறுவிறுவென்று உறத்தொடங்கினார்.
“ பரசுராமனும் தந்தையிடம் ஏன்? எதற்கு? என்று கேட்காமல் தன் தாயின் தலையை வெட்டப் புறப்பட்டுவிட்டான்.
தான் பெற்ற மகனே. தனது தலையை வெட்ட வருகிறான் என உணர்ந்த ரேணுகாதேவி கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தார்.
செய்வதறியாது திகைத்து நின்றாலும் காத்துக்கொள்ள தப்பிக்கும் எண்ணத்தில் ஓட ஆரம்பித்தார். விடாது துரத்தி வந்தான் பரசுராமன்.“
“என்ன கொடுமை இது சரவணா..? -ன்னு சினிமா டயலாக்தான் சொல்ல நினைக்கிறேன்...
“வெகுநேரம் ஓடிவந்த களைப்பில் , ஒரு சலவைத் தொழிலாளி வீடு பாதுகாப்பாக தெரியவே, அங்குபோய் அடைக்கலமானாள்.
விடாமல் விரட்டிவந்த பரசுராமனைக் கண்டு, “இவனிடம் வெட்டுப்பட்டு சாவதை விட கடலில் குதித்து உயிரை விட்டுவிடலாம். என ரேணுகாதேவி முடிவெடுத்தாள்.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 8
அப்படிப்போகும் போது கடற்கரையில் ஒரு சிவலிங்கத்தை கண்டார். அதன்பின்னால் ரோணுகாதேவி மறைந்து கொண்டார்.
“கதையைக் கொஞ்சம் நிறுத்துங்க நாளைக்கு காலைல கெங்கையம்மன் ஊர்வலம் எத்தனை மணிக்கு? நிறைய கூட்டம் இருக்குமாமே? எங்கே போனால் பார்க்கலாம்? திருவுருவச்சிலையை வண்டியிலே அமர்த்தி இழுத்து வருவாங்களா?... இப்படியெல்லாம் கதை சொன்னவரிடம் நான் கேட்டேன். ஊர் வந்ததும் இறங்கி விடுவாரே... அதனால் முந்திக்கொண்டு கேட்டேன்.
“காலையில் ஆறுமணிக்கெல்லாம் அம்மன் வந்து விடுவார் ஆட்டோ காரர்களிடம், விடச் சொன்னா, விட்டுவிடுவாங்க, என்ன கேட்டீங்க? முழுதிருவுருவச்சிலையான்னா? இல்லீங்க “சிரசு கங்கையம்மன் திருவிழாங்க இது...”
“சிரசு விழாவா? புரியல. முழுஉருவ வழிபாடு கிடையாதுங்களா?
“நான் புதுசாக் கேள்விப்படறேன். சிலை வழிபாடு இல்லீங்களா? மீண்டும் கேட்டேன்.
கேட்டதும், “போச்சு இது கூடத் தெரியாத இருக்கறீங்களே. என் கதையைமுழுசா கேளுங்க அப்பதான் பரசு (பரசுராமன்) பற்றியும் சிரசு பற்றியும் நீங்க முழுசாத் தெரிஞ்சுக்கமுடியும்.. “பரசுன்னா பரசுராமர்.”
ஆற்காடு தாண்டி பேருந்து போய்க் கொண்டிருந்தது. இருபது நிமிடத்தில் வேலூர் அடைந்துவிடும். கதை அதற்குள் முடியுமா? ன்னு தெரியலியே.?
“கதை வேலூர் வருவதற்குள் முடியுமாங்களா? என்று கேட்டேன். முடியாதுன்னு தலையை ஆட்டி பதிலிறுத்தார்.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 9
அதற்கு “தாயே கங்கம்மா. இந்த கதையை மீதியாருகிட்டேயாவது கேட்டுக்கறேன். இந்த அய்யா மாதிரி ஒருத்தரை அனுப்புங்களேன்..”
வேலூர் , இறங்கும் போது வஜ்ஜிரவேல் கையைப்பிடித்துக் கொண்டு எழுந்தேன். அவர் எனது பிடியின் கடுமை தெரிந்து, “ஓ நீங்க ஊனமுற்றவரா? கால்கள் இல்லியா?. “ஆச்சர்யத்தால் அகலக் கண்கள் விரித்து கரங்களைப்பற்றிக் கொண்டார். “எதுவும் கட்டை வச்சுக்கலியா? என்றார். இருக்கும் இடத்தை காட்டினேன். அவரே குனிந்து அதை எடுத்து என்னிடம் தந்தார். கைத்தாங்கலாகவும் பிடித்து படிக்கட்டில் இறங்க வைத்தார். நீங்க குடியாத்தம் தானே வர்றீங்க? என்றதற்கு “இல்லீங்க வேலூரில் ஒரு வேலை இருக்கு. பார்த்துட்டு, பஸ் ஏறுவேன்..” என்றார். என் கண்கள் பனித்தது.. நன்றி சொன்னேன்.
வரிசையாக குடியாத்தம் பஸ் இருந்தது.
ஒரு பஸ் பிடித்து ஏறி அமர்ந்தேன். கைகொடுத்து ஒரு இளைஞர் என்னை ஏற்றிவிட்டார்.
எனது பின் இருக்கையில் பெண்கள் மூவர் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தார்கள்.
அவர்கள் பேச்சு “சிரசு” “சிரசே பிரதானம்” என்ற கருத்தில் அது அமைந்திருந்தது.
பேருந்து நகர ஆரம்பித்தது கண்களை மெல்ல மூடியது மென்காற்று.
“ஏம்மா நளினி, கதையை எங்கே நிறுத்தினேன்?
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 10
“சிவலிங்கத்தின் பின்பக்கம் ரேணுகாதேவி மறைந்து கொண்டதில விட்டே. ஜானு நளினி சரியாக நினைவ{ட்டினாள்.
மூவரும் நடுத்தரவயது. அவர்களும் திருவிழாவுக்கு உறவுக்காரவீட்டுக்கு முன் நாளே போய் விடுகிறார்கள் என்பது பேச்சில் தெரிந்த்து.
முடிக்காதகதையை, அம்மனே..இவர்களது வடிவத்தில் சொல்ல வைக்கிறாரோ? என நான் எனது செவிகளை கூர்மையாக பாவித்துக் கொண்டேன். கேட்டேன்.
“மீனவர்கள் ஆடல் பாடல் என்று கூட்டமாகக்கூடி கலைநிகழ்ச்சி நடத்தவே, பரசுராமனால், தனது தாயை கண்டு பிடிக்க முடியவில்லை மீனவர்கள் காப்பாற்றியதிலிருந்து வேறு இடம் நோக்கிப்போகிறாள் ரேணுகாதேவி.”
அப்போது வெட்டியான் வீடு வருது.. அங்கு போய் மறைந்து கொள்வதை பரசுராமன் பார்த்து விடுகிறான்.
தாயை வெட்ட துணிகிறபோது, வெட்டியானின் மனைவி சண்டாளச்சி அதை தடுக்கிறாள்.
அவளது தலை வெட்டப்படுகிறது. உடல் தனியே போய் விழுகிறது. அடுத்தது தனது தாயையும் வெட்ட அவளது தலையும் தனியே போய் விழுந்தது.
தனது கண்ணெதிரே, தனது மனைவி துண்டாய் துண்டு பட்டதைப் பார்த்து வெட்டியான் கதறி அழுதான்.
“அப்புறம், நளினி கவலையுடன் கேட்டாள்.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 11
ஜானு, “பரசுராமன் தந்தையிடம் சென்று “நீங்கள் கட்டளையிட்டவாறு தாயின் தலையை வெட்டி சாய்த்துவிட்டேன்.. என்று கூற, அதற்கு ஜமதக்னி முனிவர். “மகனே என் கட்டளையை நிறைவேற்றிய உனக்கு என்னவரம் வேண்டும்? கேள்” என்றார்.
“தந்தையே, உங்கள் சொல்லை வேதவாக்காகக் கொண்டு ஏன்? எதற்கு? எனக்கூட கேட்காமல் இந்த செயலை செய்து விட்டேன். தயவுகூர்ந்து எனக்கு எனது தாயை உயிர்ப்பித்துத்தர வேண்டும். எனக்கு பெற்ற தாயை விட உலகில் வேறு எதுவும் வேண்டாம், என கதறி அழுது கேட்டான்.
ஜமதக்னி முனிவரும், கோபம் குறைந்து., ஒரு பாத்திரத்தில் புனித நீர் நிரப்பி, “இந்தா மகனே.. இதை உனது தாய் மீது தெளித்து, உயிர்ப்பித்துக் கொள்.” என்றார்.
அடுத்து, துண்டான உடல்கள் சிரசுகள் நோக்கி விரைந்தான் பரசுராமன், கையில் புனிதநீர்ப் பாத்திரத்துடன்.
அந்தோ..பரிதாபம்!! அவசரத்தில் சண்டாளச்சியின் உடலோடு ரேணுகாதேவி என்கிற கெங்கையம்மன் தலையையும், இன்னொரு தலையை கெங்கையம்மன் உடலோடும் தவறுதலாக பொருத்தி கொண்டுவந்த புனித நீரை தெளித்துவிட்டான்.
இருவரும் உயிர் பெற்றனர். ஆனால் மாறுபட்ட சிரசு உடல்களோடு.
இந்தப் புராணத்தைதான் மையமாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 1ஆம் தேதி “சிரசுத்திருவிழா“ ன்னு சொல்லி முடித்தாள் ஜானகி.
எதிர் பாராத திருப்பங்கள் எனது மனதை என்னவோ செய்தது.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 12
குடியாத்தம் பஸ் நிலையம். இறங்கினேன் ஊன்று கோல்களோடு. எங்கு நோக்கினும் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் என எழுத்து பொறித்த சிரசு.
ஜனங்களிடையே நீந்தி, பஸ் நிலையம் அருகே இருந்த எனது மைத்துனர் துரைவீடு அடைந்தேன். என்னை சந்தோஷமாக எனது தங்கையும், மைத்துனரும் வரவேற்றனர்.
திருவிழாக் கோலம் ப{ண்டிருந்த புதிய குடியாத்தத்தை அன்றுதான் பார்த்தேன்.
விரதமிருந்து வலிமை மிக்க ஒரு பக்தனும் விழாக்குளு மக்களும் அழகிய கெங்கையம்மன் சிரசு, மாலை சார்த்திய நிலையில் தனது இரு கைகளில் ஏந்தி,
தாய்வீடான முத்தியாலம்மன் கோவிலிலிருந்து எடுத்து புறப்படுகிறார்கள்.
வீதிதோறும் அம்மன் கோஷங்கள். சிரசு போஸ்டர்கள்.
அன்னதானங்கள் - ஆர்ப்பாட்டமான ஆன்மீக கோஷங்கள் அன்று காலை யார் வீட்டுலேயும் சிற்றுண்டி செய்யத் தேவையில்லாதவாறு, ஒட்டல்கள் கூட அன்னதான சிறப்பு செய்து.. பக்தர்கள் வயிற்றை நிரப்புகிறார்கள்.
நீராகார பரிமாறல்கள். நெகிழியில் குளிர்பானம், மோர், பானகம்.
சிரசுத் திருவிழா மட்டும் அல்ல.. தேங்காய்த் திருவிழாவும் கூட.
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 13
எல்லாத் தெரு முனையிலும் சிரசு கங்கைஅம்மன் வரும்பொழுது, தான் வேண்டி கொண்ட வேண்டுதலை நிறைவேற்றித் தந்த காணிக்கையாக ஐந்து, ஐம்பத்தி ஒன்று, நூற்றி ஒன்று என தேங்காய்களை கோணிப்பைகளில் கொண்டுவந்து ச{றை விடுவது பழங்கால பழக்கம்.
உடைத்த தேங்காய் மூடிகளை, தம்மிடம் உள்ள கோணியில் அடுத்த வினாடியே எடுத்துப் போட்டு மகிழ்ச்சி கொள்கிற இருளர் உட்பட பழங்குடியினர்.
வெடிச் சத்தம் - வேட்டு சப்தம். சிரசு ஊர்வலம் அல்லோல கல்லோலப்பட்டது.
கௌடன்ய நதிக்கரையில், கோபாலபுரத்தில் அமைந்துள்ள தனது கோவிலில் தனது தலையைப் பொருத்த விரைகிறாள்.
ஸ்ரீ கங்கைஅம்மன். அவள் முகத்தில் ஏக சந்தோஷம். மாமியார்வீட்டிலிருந்து தாய்வீடு போகிறார் அல்லவா?
சிரசு அம்மனின் அருளாசிகளால் மக்கள் மனம் நிறைகிறார்கள் நானும் இதைக்கண்டு கண்ணீர் மல்க, அம்மா. தாயே.. என்கிறேன்.
சிரசு கங்கையம்மனை தரிசித்த ஆர்வம், நீண்ட நாள் நெஞ்சில் பதியனிட்டுக் கொண்டிருந்தது.
X-----X-----X
------ இ. செல்வராஜ்
குடியாத்தம்
சிறுகதை / சிரசு / இ. செல்வராஜ் / பக்கம் - 14
உறுதிமொழி
போட்டி விதிமுறைகள் எண் - 1 ன் படி நான் அதிகப்பட்சமாக ஒரு கதை மட்டுமே எழுதி அனுப்பியுள்ளேன் என்றும் எண் - 2ன் படி எனது கதை 2000 வார்த்தைகளுக்குள் அமைந்துள்ளது. எண் - 2ன் படி கதையை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடவில்லை என்றும் எண் - 9ன் படி கதையின் தலைப்பும் கதை கருவும் எனக்கு சொந்தமானது என்றும் இந்த கதை வேறு எங்கும் வேறு எந்த வடிவிலும் பிரசுரமாகவில்லை பரிசும் பெறவில்லை என்றும் உறுதிகூறுகிறேன்.
மேலும் கதை எனது சொந்த படைப்பு, தழுவலோ அல்லது நகலோ இல்லை என்றும் மீண்டும் உறுதிமொழி அளிக்கிறேன்.
நாள்: 02.04.2024 இப்படிக்கு,
இடம்:குடியாத்தம் எழுத்தாளர் இ.செல்வராஜ்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்