logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

முகமது இப்ராஹிம்அலி

சிறுகதை வரிசை எண் # 60


கையாலாகாதவனின் வாக்குமூலம் நான் எப்பவுமே இப்படித்தான். ஒரு செயலை செய்யவே கூடாது என்ற பிடிவாத்துடன் இருப்பேன், ஏனெனில், அந்த செயலினால் பட்ட அவதியினால் தான் அப்படி ஓர் முடிவு, இருந்தும் அந்த செயலை செய்வேன், அச்செயலை செய்யும் பொது ஏற்படக்கூடிய ஒரு பத்து வினாடி இன்பத்திற்காக அந்த செயலை செய்து முடித்து அவவின்பத்திலிருந்த உடல் துன்பிலுணர்வுக்கு மாறும் தருவாயில் "ஏன்டா இப்படிப் உன்னை அழிச்சுகுர" என்னை நானே கடிந்துக் கொள்வேன். அதேபோலத்தான் இப்பொழுதும் இந்த நடு ஜாமத்தில் செய்த செயலின் வெளிப்பட்டால் உண்டான வலியில் துடித்துக் கொண்டிருக்கையில் எதனால் இந்த நிலமை என்று என்னுடய சிந்தனையோட்டம் என்னை பின்னோக்கி இழுத்துச் சென்றது இன்று காலையா, இல்லை இல்லை, நேற்றிரவிலிருந்து தான் இந்த தொந்தரவு தொடங்கியது. எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது, பழக்கம் எனபதை விட ஒரு விதமான போதை என்று கூறிக்கொள்ளலாம், போதை என்பதால் அந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன். அப்பழக்கம் சுயமைதுனம் தான். ஆரம்ப நாள்களில் இது ஒரு உடலியல் தேவையாகதான் இருந்தது. கல்லூரியில் பயிலும் நாள்களில் பாலுணர்வை தூண்டக்கூடிய படங்களின் கைமாறுதல்கள் அதிகமாக இருந்தபோது என்னிடம் கணினியோ மடிக்கணினியோ ஏதுமில்லை அதனால் நண்பர்களின் இருப்பிடத்துக்குச் சென்று கூட்டமாக அமர்ந்து அந்த படங்களை ரசித்து மட்டும் கொண்டிருந்ததில் அனுபவமில்லாமல் இருந்தது. பட்டபடிப்பின் மூன்றாம் ஆண்டின் போது எனக்கொரு மடிக்கணினி வேண்டுமென நச்சரித்துக் கொண்டிருந்ததில் வீட்டில் வாங்கி தந்தனர். இதற்குப் பின்பு தான் நான் அனுபவிக்கத்துவங்கினேன். தனிமையின் பெரும்பான்மையான நேரம் எல்லாம் என்னுடைய வலக்கை கால் இடுக்குகளுக்குகிடையில் இருக்கும் உறுப்பைதான் பிடித்துக் கொண்டது. இப்படியே ஒரு நாளுக்கு எத்தனை முறை தோணுகிறதோ அத்தனை முறை, ஒரு சிறிய தனிமையை நாடி கற்பனையில் பல நினைவுகளை ஓடவிட்டு கையை குலுக்கிக்கொள்வேன். இதற்கு நான் மட்டுமே பொருப்பென்று சொல்ல என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. பள்ளியில் பத்தாவது படிக்கும் வரை இப்படி ஒன்று இருக்கிறது என்று எனக்கு எந்த ஒரு அறிவுமில்லை, சில நேரங்களில் நண்பர்கள் என்னை இவ்விடயத்தை வைத்து கிண்டலடிப்பதுமுண்டு, அப்போதெல்லாம் எனக்கு இதை பற்றிய எந்த ஒரு ஞானமுமில்லை. பள்ளியின் கடைசி இரு ஆண்டுகளில் உண்டான புதிய நட்பால் இந்த ஒரு இன்பச்சுவையை அறிந்தேன். ஆனால், 2009 இல் துவங்கிய கல்லூரி உலகம் தான் என்னை இந்த போதைக்கு அடிமையாக்கியது. அது வரியிலான என்னுடைய பார்வை பெண்களின் முகங்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தது, நண்பர்கள் தங்களின் பார்வையின் அனுபவத்தை பகிரப் பகிர என்னுடைய பார்வையும் பெண்களின் முகங்களை கடந்து அங்கங்களின் மேல் ஊடுருவ ஆரம்பிதத்து. நண்பர்கள் கூறும் வர்ணனைகளான மார்பக வடிவங்கள், இடுப்பின் வளைவு நெளிவுகள், பின் அங்கத்தின் அளவுகோல் என அவர்கள் உரையாட நானும் அதை கண்டு அனுபவித்துக் கொண்டிருந்தேன். அப்போதிருந்த காலகட்டதில் இச்செயல்கள் அப்படியே என்னுடைய கற்பனை தேவைக்கு பேருதவியாக இருந்தது. 2013 ஆம் ஆண்டு கல்லூரி முடித்து ஒரு வருடகாலம் வேலையின் தேடுதல் வேட்டையின் வெற்றிடத்தை நிரப்ப இப்பழக்கம் பேறாறுதலாக இருந்தது. அப்போதிருந்த அந்த ஒரு வருடத்தில் தான் கணக்கு வழக்குகள் இல்லாமல் இச்செயலை செய்து அடிமையாகி இருந்தேன். ஒரு நாள் ஏதோ ஓர் ஆழ்ந்த மன அழுதத்தால் பல முறை செய்ததின் விளைவாக சிறுநீர் வரும் இடத்தில் எரிச்சலாக இருந்தது விரையும் வலியில் கணக்கத்துவங்கியது. என்ன செய்தும் இந்த எரிச்சலும் வலியும் நின்றபாடில்லை. உடல் சூட்டினால் தான் இந்த வலி இருக்குமோ என சப்ஜா விதையையும் பாதாம் பிசினையும் ஊற வைத்து மோரில் கலந்து குடித்தும் வலி குறைந்ததாகயில்லை. என் கால் இடுக்கில் குறியை அழுத்தி பிடித்து எப்படியோ உறங்கியதில் வலியும் எரிச்சலும் சற்று குறைந்ததாக இருந்தது. இந்த வலி வரத்துவங்கியதிலிருந்து ஒரு நாளுக்கு ஒரு முறை மேல் கையை குலுக்கிக்கொண்டால் வலி உதிக்கத்துவங்கியது. இந்த வலியை கண்டு அஞ்சி ஒரு முறைக்கு மேல் என்னுடைய கை குறியை நோக்கி சென்றால் என்னை நானே கடிந்துக் கொள்வேன், அதை மீறியும் வலியை அனுபவித்து சில நாள்களை கடந்துளேன். ஆரம்பத்தில் இருந்த எரிச்சலும் வலியும் அடுத்து ஒவ்வொரு முறை வரும்போது முன்பு இருந்ததைவிட அதிகரித்துக்கொண்ட சென்றது. வேலைக்குச் சேர்ந்து இந்த ஒரு வருட காலம் இச்செயல் சற்று தணிந்திருந்தது அப்படி இருந்தம் இன்று இந்த நடுஜாமத்தில் செய்த இந்த செயல் எரிச்சலின் உச்சத்தில் என்னை வாட்டிவதைத்துக் கொண்டிருந்தது. முன்பு கூறியது போல நேற்று தான் இதற்கான விதை விதைக்கப்பட்டது. நான் வசிக்கும் ஊரின் நண்பர்கள் நிறைந்த வாட்சாப் குழு ஒன்றில் நண்பன் ஒருவன் கதை எழுதி பதிவிடுவான். கதையின் கரு காமத்தை சுழன்று கொண்டிருக்கும், கதை மாந்தார்களோ அந்த குழுவில் உள்ள நண்பர்களாகத்தான் இருப்பார்கள். நேற்றைய கதையில் நான் தான் கதாமாந்தர், அதனால் என்னுள் கிளர்ச்சி அதிகரித்து உச்ச ஸ்துதியில் இருந்தேன், பின்பு எவ்வளவோ அந்த கிளர்ச்சியை அடக்கி அஸ்தமித்து உறங்கினேன். காலை எழுந்ததிலிருந்து அந்த கதையின் பிம்பம் என் நினைவோடையில் ரீங்காரித்துக் கொண்டே உணர்ச்சியை சீண்டிக் கொண்டிருந்தது. அச்சிந்தனையை ஒரு புறம் தள்ளி, குளித்து உண்டு உடுத்தி பைக்கை எடுக்கும் போது பைக்கை தள்ள கடினமாக இருந்தது, டயரை பார்க்கும் போது பின் டயர் பஞ்சராகி இருந்தது. நேரம் எட்டரை மணியை கடந்திருந்தது, பஞ்சர் கடைகள் திறக்க பத்து மணியாவது ஆகும். வேறுவழியின்றி பேருந்தில் பயணிக்கலாம் என்று வீட்டிலே வண்டிய நிறுத்தி விட்டு முதுகில் பையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். அக்காலையிலே கதிரவன் கர்ஜித்துக் கொண்டிருக்கையில் வெக்கை சூழ்ந்திருந்தது. பேருந்து நிலயத்தில் காதிருந்த மனித முகங்களில் சோர்வும் கவலையும் கலந்து வியர்வையாக வழிந்து கொண்டிருந்தது. நான் வந்து நின்ற ஓரிரு நிமிடத்திலேயே தி. நகர் செல்லும் வண்டி பேருந்து நிலையத்தில் நுழைந்தது. நின்ற கூட்டம் வண்டியை நோக்கி பாய்ந்தது. வண்டியில் இருப்பவர்கள் எல்லாம் இறங்கும் முன் இவர்கள் முந்தியடித்துக் கொண்டிருந்ததால் அங்கு சில சலசலப்பு உண்டானது. நான் அவர்கள் எல்லாம் ஏறட்டும் என்று காத்திருந்தேன். இருக்கையகள் எல்லாம் நிறைந்திருந்தது. ஓட்டுனரும் நடத்துனரும் தேநீர் அருந்த செந்திருந்தனர். வண்டியை எடுக்க பத்து நிமிடத்துக்கு மேல் ஆகும் என்பதால் வண்டியிலிருந்து இறங்கி காத்திருந்தேன். வெய்யிலும் ஒரு புறம் வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது. நடத்துனர் வந்ததும் பயணச்சீட்டை தர ஆரம்பித்தார். நான் வண்டியின் மையத்திலுள்ள ஒரு கம்பியில் சாய்ந்துக் கொண்டிருந்தேன். பேருந்தும் நகரத்துவங்கியது காற்றும் வண்டியின் ஜன்னல்கள் வாயிலாக ஊடுருவியத்தில் இளைப்பாறாக இருந்தது. அப்போது தான் அமர்ந்திருந்த பயணிகளின் முகத்திலும் புத்துணர்ச்சி பூத்தது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் கூட்டங்கூட்டமாக ஜனங்கள் பேருந்தின் வயிற்றை நிறப்ப, அதில் பெண்கள் தான் அதிகமாக இருந்தனர். அதுவும் என்னை சுத்தி பெண்களின் உடல்கள் என்னை உரசிக் கொண்டிருக்க என்னுள் உணர்வுகள் தழும்பிக்கொண்டிருந்தது. இதுநாள் வரை வெறும் கண்களுக்கு ஊட்டபட்ட காமம் உடல் உருப்புகளுக்கும் இன்று பருகத்துவங்கியதில் ஓர் விதமான பெரின்பத்திளைப்பு. பல நிறுதத்தை கடந்ததும், காற்று புகக்கூட வழியில்லாத அளவுக்கு எனக்கும் அவவுடலுக்கும் உண்டான நெருக்கம் இருக்கையில் என் குறியின் விரைப்புத்தன்மை உச்சத்திலிருந்தது. பெண்களுக்கே உண்டான ஒரு வாசத்தின் வீச்சு என்னை கிருக்கப்பிடிக்க வைத்தது. வாகன நேரிசலால் பேருந்து குலுங்கி நகர நகர உடல்கள் உரச உரச உஷ்ணம் அதிகரித்தது. நான் எவ்வளவோ அடக்க முயற்சித்தும் விந்து பீரிட்டு வெளிவந்து விட்டது. அப்போது எனக்கிருந்து உடற்க்கூசலை இப்போது நினைக்கும் போது நானே என்னுடைய குறியை அறுத்தெறிந்து விடலாம் என்று தோன்றுகிறது. அந்த சூழலில் என்ன செய்வதென்று தெரியாமல் நலிந்து கொண்டிருந்தேன். என்னுடைய நலிவை உணர்ந்த அவர்களில் சிலர் உச்சு கொட்டினார்கள். எரிச்சலும் வலியும் வந்துவிடுமோ என்ற அச்சமும் என்னை பீதியில் ஆழ்த்தியது. நான் இறங்கும் இடமான கிண்டி வந்தவுடன் கூட்டமும் குறைய நான் பைய்யை முன்னால் மறைத்து இறங்கினேன். யாரும் பார்க்காத ஓரிடத்தில் நின்று கால் சட்டையினுள் சொருகியிருந்த மேல் சட்டையை எடுத்து விட்டேன் கால் சட்டையின் மெல்லிய ஈரம் தெரியாததாக இருந்தது. நடைபாதையில் சென்றுகொண்டிருந்த போது இரு கைகள் இல்லாமல் இருந்த ஒரு இளம் வாலிபன் குழந்தைகளின் புத்தகத்தை விற்பனை செய்து கொண்டிருந்தான். அவனை கண்டதும், கைகள் இல்லாத இவன் எப்படி கையடித்துக் கொல்லவான் என்று ஏனோ தோன்றியது. ஏதோ அவன் தேவைக்கு அவன் செய்து கொள்கிறான் என்று நான் நடையை துரிதப்படுத்தினேன். கம்பனியினுள் நுழைந்ததும் கழிவறையை நோக்கி சென்றேன். கால் சட்டையை கழற்றி உள்ளாடையையும் கழற்றி என் குறியை கழுவி உள்ளாடையில் இருந்த விந்தை டிஷ்யூவில் என்னத்தான் துடத்தாலும் ஈரம் காயாமலும் பிசுபிசுத் தன்மை போகாமலும் இருந்ததால் ஜட்டியை நீரில் அலசி பையினுள் வைத்துக்கொண்டேன். கால் சட்டையில் இருந்த ஈரம் அவ்வளவாக இப்பொதில்லை டிஷ்யூவில் தேய்த்ததும் ஈரம் குறைந்திருந்தது. ஜட்டியில்லாமல் கால் சட்டையை அணிவது சங்கோஜமாக இருந்தது. ஜீப்பும் குறியில் உரசுவது ஓர் மாதிரியாக இருந்தது. இப்படியே இன்றைய வேலை பொழுது எப்படி கழியப் போகிறது என்பது ஒரு பெரிய கேள்வியாக என் முன்னே நின்றது. எப்போதும் நான் கம்பெனிக்கு வந்ததும் வேறொரு துறையில் இருக்கும் ஒரு நண்பனிடம் சென்று அரைமணி நேரம் வேலை சம்பந்தமாகவும் படங்கள் விளையாட்டுகள் ஓவியங்கள் என உரையாடல் செல்லும். அவருக்கு பெண்களின் பின் அங்கங்களின் மீது ஒரு பேரன்பு இருந்தது. அவர் அமர்ந்திருக்கும் இடத்துக்கு அருகில் தான் பெண்களின் கழிவறை இருந்தது, அவருக்கு அது வசதியாக இருந்தது. என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது பெண்கள் அவ்விடத்தை கடக்கும் போது அவரின் கண்கள் அந்த அங்கங்களின் மேல் ஒரு கனம் லயித்து நிக்கும். ஆரம்பத்தில் இது எனக்கு உவப்பாக இல்லாமல் தான் இருந்தது. சில நாள்கள் கழிந்த பின்பு என்னுடை கண்களுக்கும் அந்த அங்கங்கள் பேரழகாகத் தோன்றியது. நானும் அவரைப் போல லயித்து இருந்தேன். இன்று சற்று தாமதமாக வந்ததால் ஓர் ஐந்து நிமிடம் மட்டும் இருந்து வந்து விட்டேன். வேலை செய்யுமிடத்தில் சுற்றிலும் குளுமையினால் சூழப்பட்டிருந்ததால் இந்த ஜீப்பின் உராய்வு என்னுள் கிளர்ச்சியை தூண்டி விரைப்புத்தன்மையை அதிகரிப்பதாவும் அதை நான் அடக்க போராடிக் கொண்டிருந்ததாகவே பெரும்பான்மையான வேலையின் நேரங்கள் கடந்தது. அதிகமாக நடக்காமல் உட்கார்ந்த படியே இருந்தேன். மத்தியம் உண்டு முடித்ததும் வேறேதும் விளையாடாமல் வேலைக்கு வந்து அமர்ந்து கொண்டேன். மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு கிளம்பும்போது பேருந்தை தவிர்த்து ஷேர் ஆட்டோவில் செல்லாம் என்றிருந்தேன். கம்பனியின் வாசல் முன்பே ஒரு ஷேர் ஆட்டோ காலியாக இருந்ததும் ஏறி அமர்ந்து கொண்டேன். எனக்குப் பக்கத்தில் இருந்த காலி இருக்கைகளை கண்டதும் இதில் பெண்கள் வந்து அமர்ந்து கொண்டு காலை உராய்ந்தது போல இப்போதும் உராய்ந்து கிளர்ச்சியை சீண்டுவார்களோ என்ற அச்சம் என்னுள் எழுந்தாலும் மற்றொரு மனம் அந்த சுகத்தை எதிர்ப்பார்த்த உடல் ஏங்கிக்கொண்டு தான் இருந்தது. பேருந்து நிருத்தத்தில் வந்தமர்ந்தவர்கள் உடல் என்னுடைய உடலுக்கு ஏமாற்றத்தை தந்தது. எல்லா நிறுத்ததிலும் இந்த ஏமாற்றமே என்னுள் ஒரு தணலை அதிகரிக்கச் செய்தது. வீட்டிற்கு வந்ததும் அந்தணலை தணிக்க குளியல் அறைக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தேன். விரையும் வலிப்பது போல தோன்றியது. உடல் சூடால் தான் இருக்குமென பல குளுமையான உணவுகளை உண்டேன் சில நீர் ஆகாரங்களையும் அருந்தினேன், வலியும் குறைந்தது போல இருந்தது. உடல் சோர்வாக இருந்ததில் வேறதும் உண்ணாமல் படுக்கையறையினுள் சென்று படுத்துக்கொண்டு காம உணர்வுகளை தீண்டாமல் இருக்கும் படங்களை தேடித்தேடி ஒரு ஆக்ஷன் படமான 'ஜான் விக்' படத்தை மடிக்கணினியில் இறக்கி பார்த்துக் கொண்டிருக்கும் போது காலை நிகழ்ந்த அச்சம்பவம் என்னுடைய நினைவு திட்டுகளிலிருந்து அவ்வப்போது வெளிவந்து என்னை சஞ்சலப்படுத்திக் கொண்டிருந்தது. படம் முடிய நள்ளிரவை நெருங்கியதும் அச்சம்பவம் என்னை கிளர்ச்சி படுத்தத் துவங்கியது கூடவே நேற்று நண்பன் எழுதிய கதையின் பிம்பமும் என்னை கிளர்ச்சியின் உச்சத்தில் நிறுத்தியது. என் கையும் கட்டுபட்டை இழந்து நான் எவ்வளவோ தடுத்து வைத்திருந்த அச்செயலை செய்தது. அப்போது துவங்கிய அந்த எரிச்சலும் வலியும் என்னை பைத்தியக்காரன் போல புலம்பவைத்து, செய்த அந்த வலக்கையால் சுவரில் பல குத்துகளை குத்தி தண்டனையும் வழங்கியது. கால் இடுக்குகளுக்கிடையில் குறியை எவ்வளவு தான் அழுத்தினாலும் வலி குறைந்த பாடில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பித்து நிலை என்னுடைய குறியை அறுத்து எறிந்திடு என்று கூறிக்கொண்ட இருக்கையில் எனக்கு வேறு வழியும் தெரியவில்லை. செத்து ஒழியலாம் என சாவும் என்னை வரவழைத்தது. இந்த போதையிலிருந்து மீண்டு வர வழியே இல்லையா என நான் சாவை கேடக்கும் போது. அதுவும் "அறுத்தெறி" என்று கூறவது போல இருந்தது. கட்டிலில் இருந்து இறங்கி சமையலறையை நோக்கி சென்று அங்குள்ள கத்திகளில் எது கூர்மையானது என்று தேடி எடுத்து லுங்கியை அவிழ்த்து குறியை இடக்கையால் இழுத்து பிடித்து வலக்கையில் இருந்த கத்தியை குறியின் மேல் வைத்து சாவிடம் மீண்டும் கேட்கையில் "அறு அறு அறு அறு .. .. " என்று கூறிக்கொண்டே இருக்கையில். அறுத்தெறிந்தேன். ரத்தம் பீரிட்டு அடித்தத்தில், தூக்கத்திலிருந்து அலறி கண்கள் பிதுங்கி எழுந்தேன். குறி இருக்கிறதா என்று தேடி தடவிப் பார்த்து உருஜிதம் படுத்திக் கொண்டபோது தான் சுவாசம் சீரானது. தூங்கி எழுந்து குளித்து உண்டு உடையுடுத்தி வேலைக்கு கிளம்பும்போது தான் வண்டியின் நிலை நிணவிவு வர வேலைக்கு செல்லலாமா வேண்டாமா என்ற மன ஊசலாட்டத்தில் நிலைகுத்தி இருந்தேன். இப்ராஹிம் 25/03/2024 20:11

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.