ப.ராஜகுமார் சிவன்
சிறுகதை வரிசை எண்
# 44
சிகை தானம்
************************
அந்த அரங்கில் ஆண்களும் ,பெண்களும் நிரம்பி இருந்தனர் . எல்லா வயதினரும் அமர்ந்து இருந்தனர் . மேடையில் அமர்ந்து இருந்தவர்கள் எதோ விழிப்புணர்வு பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள் .கோதை நாயகி டீச்சர் தன்னோடு வந்து இருக்கும் தோழிகளோடு பேசிக்கொண்டு அமர்ந்து இருக்கிறார்.
இதுக்கு முன் பணி புரிந்த ஊரில் பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியை , தனது வகுப்பில் பாடம் தவிர்த்து மாணவ ,மாணவிகளிடையே ஒரு தோழமை உணர்வோடு பழக கூடியவர் ,ஏழை மாணவர்களுக்கு சில உதவிகளை செய்து கொடுத்து நல்வழி படுத்தும் நல்ல உள்ளம் கொண்டவர் ,நல்ல உயரமான தோற்றமும் ,கம்பீரமான பேச்சு ஆற்றலும் கொண்டவர் .அவருடைய வகுப்பு என்றால் எல்லோரும் அமைதியாகவும் , அதே சமயம் சந்தோசமாக அமர்ந்து இருந்து வகுப்பை கவனிக்க வைப்பார் .அன்று வெள்ளிக்கிழமை மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு அ பிரிவில் பாடம் எடுத்து கொண்டு இருந்தார் .மாணவ ,மாணவிகளிடைய கொஞ்சம் தூக்க கலக்கம் இருக்க பாடத்தை நிறுத்தி விட்டு உரையாடுகிறார் .
எல்லா ஆசிரியரும் கேட்பதை போல இவரும் மாணவர்களின் எதிர்காலத்தில் என்ன ஆக நினைக்கீறீங்க என கேள்வி கேட்கிறார்.வழக்கம் போல மாணவர்கள் கலெக்டர் ,என்ஜினீயர் ,டாக்டர் வக்கீல் என சொல்ல ,மாணவிகள் ஆசிரியை ,நர்ஸு ,டாக்டர் என் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள் .ஒரு சில மாணவர்கள் தந்தையின் தொழிலை தொடர்ந்து செய்ய போவதகவும் ,கொஞ்சம் மாற்று சிந்தனை உள்ள மாணவர்கள் விவசாய அதிகாரியாகவும் ,ஆராய்ச்சியளராகவும் ஆக போவதாக சொல்ல்கிறார்கள் .சாப்ட்வேர் வேலையை ஆண் ,பெண் இருபாலரும் அதிகமாக சொன்னார்கள் .அரசியவாதியான சின்னத்துரை மகள் மட்டும் தான் சமூக சேவையாகியாக போவதாக சொன்னாள் .ஆசிரியை கோதைநாயகி அனைவரையும் அவளுக்கு கரவொலி எழுப்புமாறு சொன்னதும் எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள் .யாரும் அரசியல்வாதி ஆகவேண்டும் என்று சொல்லவேஇல்லை .மதியம் இரண்டாவது பாடவேளை தலைமை ஆசிரியர் எல்லா வகுப்புகளையும் பார்வையிட வருவார் .பள்ளிக்கூடமே அமைதியாய் இருக்கும் .எல்லா ஆசிரியர்களும் தங்கள் வகுப்பில் தீவிரமாக பாடம் பாடம் எடுப்பார்கள் .கோதைநாயகி மட்டும் மாணவ ,மாணவிகளோடு உரையாடிக்கொண்டு இருக்கிறார் .தலைமை ஆசிரியர் பார்வையிட வருவார் என தெரிந்தும் தன் உரையாடலை நிறுத்தவில்லை .வகுப்பில் நான்காவது பெஞ்சில் அமர்ந்து இருந்த மாணவன் கணேசன் எழுந்து தான் முடி திருத்தும் அழகு நிலையம் வைக்க போவதாக சொன்னான் .அனைவரும் சிரித்த சத்தம் பள்ளியின் எல்லா பகுதிக்கும் கேட்டு விட்டது.கோதை நாயகி டீச்சர் அவர்களை கடிந்து கொண்டார் .அவர் சிரிக்கவில்லை .அவன் அருகே வந்தார் ,நல்ல சிந்தனை கணேசா ,அதுவும் ஒரு சுய தொழில் தான் நன்றாக செய்தல் நல்ல வருமானம் வரும்.உன் மனத்திறனை பாராட்டுகிறேன் .அந்த நேரம் தலைமை ஆசிரியர் அங்கு வர என்ன சத்தம் என கேற்கிறார்.கோதைநாயகி நடந்த விபரம் சொல்ல ...அவரும் நல்ல தொழில் வித்தியாசமான சிந்தனை என சொல்லி விட்டு கிளம்புகிறார் .கணேசன்னுக்கு உள்ளூர பயம் தலைமை ஆசிரியர் என்ன சொல்லுவாரோ ,சிரிப்புக்கு காரணம் நான் தான் என திட்டுவாரோ என பயந்தவன் ,அவர் போன பிறகு தான் நிம்மதி பெரும் மூச்சி விட்டான் .
மாலை ஐந்து மணி பல்லைக்கூடம் மணியடிக்க அனைவரும் வீட்டுக்கு செல்லகிறார்கள் .கணேசனும் நண்பேர்களோடு செல்லகிறான் .எல்லோரும் அவனை கேலியும் ,கிண்டலும் செய்கிறார்கள் . டேய் எனக்கு நல்லா ஸ்டைலில் முடி வெட்டி விடு .....மொட்டை அடித்து விட்டுவிடாதே ....உன்கிட்ட முடி வெட்டினால் முடி வளருமா என அனைவரும் கேட்டக ,கணேசன் கூனி குறுகி போனான் .அவர்களை விட்டு தனியாக நடக்க ஆரம்பித்தான் .டேய் ..சலூன் கடை ஓனர் போறான்டா .....தொழில் அதிபர் ஆகிடுவான் .நம்ம தலையெல்லாம் கணேசன் தான் கவனித்துக்கொள்ளனும் , நீ தான் எங்க தலை, நரை முடி வராம இருக்க என்ன செய்யனும்...எங்க தலையை கவனிச்சுக்கோடா கணேசா என சொல்லிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்கள் .கணேசன் அம்மா பலசரக்கு கடைலிருக்க ..அவன் நண்பனின் அம்மா அடியே ....வடிவு உன் மகன் கதையைக் கேட்டியா...பள்ளிக்கூடத்தில டீச்சர்கிட்ட முடி வெட்டுற கடை வைக்கப்போறதா சொல்லி இருக்கான் .வகுப்புல எல்லா பசங்களும் சிரிச்சாங்களாம் என கேலியாக சொல்லுகிறாள் .
கணேசன் அம்மா கோபத்தின் உச்சத்துக்கு சென்று விட வேகமாக வீட்டுக்கு வருகிறாள் .கணேசன் உடையை மாற்றிவிட்டு நிற்க ...ஏன்டா ....முடி வெட்டுற கடையா வைக்க போற ...உன்னை அதுக்கா படிக்க வைக்கிறேன் .அதுக்கு ஏன் நீ படிக்க போகணும் .பேசாம வேலைக்கு போ ..உங்க அப்பன் தினமும் குடிச்சிட்டு வாரான் .வீட்டு செலவவுக்கு பணம் கூட தருவது இல்லை.நான் கஷ்டப்பட்டு வேலை செய்து உன்னை படிக்க வச்சா நீ முடி வெட்டுற கடை வைக்க போறேனு சொல்லி இருக்க ...நீ மயிரை புடுங்க ஏன் படிக்க போகணும் .பேசாம இனி வேலைக்கு போ என சொல்லிக்கொண்டு அடித்து விடுகிறாள் .அடிபட்ட கணேசன் மனம் உடைந்த நிலையில் அழுது நாளைக்கு பள்ளிக்கூடத்திலும் எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க ,இனி இந்த ஊரில் இருக்க கூடாது .இரவோடு இரவாக குடி போதையில் இருந்த தன் அப்பாவின் சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியூர் சென்று விட்டான்.
அந்த விழிப்புணர்வு நிகழ்வு முடிந்த பிறகு ஐந்து இருக்கைகள் போட்டு பெண்கள் தங்கள் கூந்தலை வெட்டி கொள்ள கொடுக்கிறார்கள் .கோதைநாயகியும் மெல்ல எழுந்து சென்று ஒரு இருக்கையில் அமருகிறார் .ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் .சமூக சேவை ,விழிப்புணர்வு ,போன்ற நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார் .அந்த இருக்கையில் அமர்ந்து தனது கூந்தலை கழுத்து வரை வெட்டிக்கொள்ளுமாறு அளவு காண்பிக்கிறார் .இடுப்புக்கு கீழாக தொங்கிய அடர்த்தியான கூந்தல் இப்போது குறைந்து முதுகு வரை மட்டும் இருந்தது .கூந்தலை வெட்ட கத்தரி கோல் ,சீப்பு எல்லாம் எடுத்தவன் கோதை நாயகியை உற்றுப் பார்த்தான் .பரவாயில்லை தம்பி வெட்டுங்க ..இந்த கூந்தலை வைத்து நான் என்ன செய்ய போகிறேன் .இந்த கூந்தலில் இல்லை எனது அழகு ,...இதை பெற்றவுடன் ஒருவர் முகத்தில் வரும் சந்தோசம் தான் உண்மையான அழகு என சொல்ல்கிறார் .முடியை வெட்ட வந்தவன் கத்தரிக்கோலை கீழ வைத்து விட்டு கோதை நாயகியின் காலில் விழுது வணங்குகிறேன் .ஏய் ...எழுந்திருப்பா இதில் என்ன இருக்கு இதுவும் ஒரு தானம் தான் .இதுக்கு எல்லாம் கால்களில் விழுவதா என சொல்லுகிறாள் .
அவன் கண்களில் கண்ணீர் ஊற்று எடுத்தது நிற்க்கிறது .என்னப்பா ..ஏன் ...அழுகிறாய் என கேட்கிறாள்.என்னை தெரிகிறதா? ...டீச்சர் .நான் உங்க மாணவன் கணேசன் ...பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது சலூன் கடை வைக்க போறேன் என்றதும் அனைவரும் சிரித்தார்கள அந்த கணேசன் தான் ,இன்று இங்கு புற்று நோயில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முடி தானம் செய்பவர்கள் முடியை வெட்டியெடுக்க வந்து இருக்கேன்.இதற்கு நான் பணம் வாங்குவது கிடையாது .இந்த மாதரி நிகழ்வுக்கு சேவை மனப்பான்மையோடு செல்கிறேன் . நானும் வருடத்தில் ஒரு நாள் சிகை தானம் செய்கிறேன் ..ஏன்டா ...கணேசா படிப்பை பாதியில நிறுத்திட்டு ஓடி வந்துட்ட ...நான் உங்க வீட்டுக்கு சென்று உன் அம்மாவிடம் கேட்டேன்.அவன் எங்கு போனானு தெரியல என்று சொல்லிட்டாங்க ...ரொம்ப கஷ்டமா இருந்தது .
இந்த நகரத்துக்கு ஓடிவந்து ஒரு சலூன் கடையில் முதலில் உதவியாளர்களாக சேர்ந்து அப்புறம் அழகு கலை குறித்த படிப்பு படித்தேன். அந்த முதலாளி உதவியோடு சொந்தமாக அழகு நிலை ஒன்று திறந்தேன் .எங்க அம்மாவை கூப்பிட்டு வந்து கடையை திறக்க நினைத்து ஊருக்கு வந்தேன். எங்க அம்மா புற்று நோயால் இறந்து விட்டார்கள் என்று சொன்னாங்க எங்க அப்பாவும் குடியினால் இறந்து விட்டதாக சொன்னார்கள். நான் மனமுடைந்து திரும்பி வந்தேன் எங்க அம்மா பெயர் தான் கடைக்கு வைத்திருக்கிறேன். கண்ணா அழகு நிலையம் எங்க அம்மா பெயர் கண்ணம்மா. அதிலிருந்து என் கடையில் குடிகாரர்களுக்கு முடி வெட்ட மாட்டேன் .கடையில் கிடைக்கும் முடிகள் எல்லாம் தானமாகவே கொடுத்து விடுவேன் .நிறைய பிரபலங்கள், நடிகர்கள் எனக்கு வாடிக்கையாளராக இருக்கிறார்கள் மாதம் ஒரு 50 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன் 4 நபர்களுக்கு வேலை கொடுத்து இருக்கிறேன் அன்று என்னைப் பார்த்து சிரித்தவர்களை விட நான் நன்றாகவே இருக்கிறேன் .இந்த தொழிலை மன நிறைவாகவே செய்கிறேன் .உங்கள் அறிவுரை தோழமையான பேச்சு ஊக்கம் உந்துதல் தான் இன்று நான் ஒரு சிறு தொழில் அதிபராக முன்னேறி இருக்க காரணம் டீச்சர் இன்னும் சில ஊர்களில் என்னுடைய கடைகளை திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என் அம்மா இப்போது என்னோடு இல்லாமல் போனது தான் வருத்தமே தவிர வேறு ஒரு கவலையும் இல்லை .என் அடுத்தக்கடையை நீங்க ரிப்பன் வெட்டி திறந்து வைத்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் டீச்சர் என சொல்லிக்கொண்டு கோதைநாயகியின் கூந்தலை கணேசன் அளந்து வெட்டினான் .சிகையில் சந்தோசம் மிகையாக இருந்தது.
ப.ராஜகுமார் சிவன்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்