logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

இரா. மதிராஜ்

சிறுகதை வரிசை எண் # 4


சிறுகதை நீல நிற கால் சட்டை (புளு டவுசர் ) பவுன்ராஜ் உள்ளூர் ஹை ஸ்கூல்ல ஒன்பதாவது வகுப்பு படிச்சிட்டு இருக்கான், பவுன்ராஜ்க்கு சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறவே ஏறாது அஞ்சு பாடத்துல கண்டிப்பா ரெண்டு பாடம் தான் பாஸ் ஆகுவான் மீதி மூன்று பாடம் கண்டிப்பா பெயில் ஆகிடுவான் ஸ்கூலுக்கும் கரெக்டான நேரத்துக்குப் போகவும் மாட்டான், இப்படி இருக்கும்போது பள்ளிக்கூடம் வந்து அவங்க வீட்டில் இருந்து ஒரு அரை கிலோமீட்டர் தூரத்துக்குள்ள தான் இருந்துச்சு, இடைவேளை டைம்க்குக் கூட வீட்டுக்குப் போயிட்டு வந்துருவான், சாப்பாட்டுக்கும் வீட்டுக்குப் போயிட்டு வந்துருவோம் சாப்பிட்டு விட்டு மீண்டும் ஸ்கூலுக்கு வந்துருவான், எட்டாம் வகுப்பு வரைக்கிம் படிக்கும் போது அவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, படிச்சானோ,படிக்கலையோ அவனை அப்படியே தூக்கி அடுத்த கிளாஸ்ல போடுவாங்கன்னு சொல்லுவாங்களே அதே மாதிரி அடுத்தடுத்து கிளாஸ் பாஸ் ஆகி வந்துட்டான், இப்போ ஒன்பதாம் வகுப்பு அதான் பயலுக்கு பயம் வந்துச்சு பவுன்ராஜ்க்கு அவன் படிக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் மொத்தம் நான்கு செக்சன் இருக்கு ஆனா பத்தாம் வகுப்புக்கு மூன்று செக்சன் மட்டும் தான் இருக்கு, அதாவது மொத்தத்துல ஒன்பதா புள்ள பெயில் ஆக்குறது ஒரு செக்ஷன்ல உள்ள மொத்த எண்ணிக்கை அதாவது அந்த அளவுக்கு வந்து மாணவர்களை வடிகட்டி மூன்று செக்சன் பசங்கள தான் பத்தாம் வகுப்புக்கு அனுப்புவாங்க நிறைய பேரை பெயில் ஆக்கிருவாங்க அதாவது பில்டர் பண்ணிருவாங்க அப்போ படிச்சா தான் அந்த ஸ்கூல்ல ஒன்பதாவதுல இருந்து பத்தாம் வகுப்புப் போக முடியும் இதுல வேற அந்த பள்ளிக்கூடத்துக்கு புதுசா ஒரு தலைமையாசிரியர் வந்து இருக்கிறார் பாட்டு எல்லாம் நல்லா பாடுவாருங்க ஆனா மத்த தலைமையாசிரியர் மாதிரி இந்த மர்காஷியஸ் கிடையாது ரேங் கார்டுக் கொடுக்கும் போது இவரே கூட வருவாரு அப்படிதான் பவுன்ராஜ் ஒன்பதாம் வகுப்புல்ல என்ன பண்ணிட்டான் ரெண்டு பாடம்தான் பாஸ் ஆனான் மூன்று பாடம் பெயில் ஆயிட்டான் தலைமையாசிரிர் மர்காஷியஸ் வர்ராரு ரேங் கார்டு கையில் எடுத்துட்டு வர்ராரு கூடவே ஸ்கூல் பியூன் அண்ணாச்சியும் வர்ராரு கையில் பிரம்பு ஐ தூக்கிட்டு பரிட்சைல ஃபெயிலான மாணவர்களை அடிக்கிறதுக்கு தலைமையாசிரியர் மர்காஷியஸ் ரேங்க் கார்டில் இருக்கிற ப் பெயரை வரிசையாக வாசிக்கிறார் "பவுன் ராஜ் " "..." பவுன்ராஜ் பெயர் வாசிக்கப்படுகிறது பெயிலான அவங்க எல்லாரையும் முன்னாலக் கூப்பிட்டு "ஏல பெயிலான மாணவர்கள் எல்லாம் இங்க முன்னால வந்து வரிசையாய் போர்டைப் பார்த்து நில்லுங்கலே " நிக்க சொல்லிட்டாரு நம்ம பவுன்ராஜ்ம் நிக்கிறான் ஒரு பாடத்துக்கு ஒரு பிரம்பு அடி வீதம் பவுன்ராஜ் க்கு பின்பக்கத்தில் மூன்று பிரம்படி" சொட்டில் சொட்டில்" என்று அடி விழுகிறது, இது போகாதக் குறைக்கு ஸ்கூலுக்கு போகும்போது லேட் ஆயிட்டு அப்படின்னா லேட்டா வர்றவங்கள பின்புறம் பிரம்பால் ஓட விட்டு அடிப்பாங்க அது உடற்பயிற்சி ஆசிரியர்களின் கடமைகளில் ஒன்று, இப்படி அடி வாங்கி, அடி வாங்கி நம்ம பவுன்ராஜ் உடைய நீலக் கலர் கால் சட்டை பின்பக்கம் ரொம்ப கிழிஞ்சிட்டு போய்ட்டு கூடப் படிக்கிற நண்பர்கள் எல்லாம் இப்ப பவுன்ராஜைப் பார்த்த உடனே எக்ஸ்பிரஸ்ன்னு சொல்லிக் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க கிழிஞ்ச கழிச்சு போன அந்த நீலக் கலர் டவுசர் தைச்சதுனால எக்ஸ்பிரஸ் டவுசர் ஆயிட்டு ஏன்னா கிழிந்து போன நீல கலர் கால் சட்டையில் பின்பக்கம் தையல் நூல் ரெண்டு பெருக்கல் அடையாளம் மாதிரிப் போட்டு இருக்குல்ல இதெல்லாம் பார்த்து பவுன்ராஜ் அம்மாவுக்கு ரொம்ப வேதனை தாங்க வில்லை, எப்படியாவது பிள்ளைக்கு புதுசா ஒரு டவுசர் எடுத்து கொடுக்கணும்னு நினைக்கிறாங்க இதுக்கு இடையில பவுன்ராஜ் அப்பாவுக்கு கொஞ்சம் தைக்க தெரியும், பவுன்ராஜ்க்கு ஒரு கால் சட்டை அதாவது அவரே தையல் மெஷினில் தைச்சுக் கொடுத்தாரு "மக்கா என்ன மக்கா இது உன் டவுசர் பாவாடை மாதிரி இருக்குது" "ஏலே அப்படி எல்லாம் சொல்லாதில்லே இல்லலே டவுசர் ல பேக்கீஸ் மட்டும் கொஞ்சம் பெருசா இருக்குது" " இதை வெளியே சொல்லாத இது பாரின் டவுசர்" "..." "அதனால இது அப்படித்தான் இருக்கும்" ஆனா அந்த துணி வந்து பாலிஸ்டர் துணி கொஞ்சம் மெதுவாக இருந்துச்சு, மினுமினுப்பா வேற இருந்தது அதனால பவுன்ராஜ் வந்து அதை அப்படியே சொல்லி சமாளிச்சான் இன்னொரு கொடுமை கேட்டீங்கன்னா அடுத்த நாள் பவுன்ராஜ் கிளாஸ்க்குள்ள வர்ரான் எல்லா நண்பர்களும் "வாங்க ஃபாரின் டவுசர் " அப்படி என்கிறார்கள் ".... ' ஸ்டடி டைம்லக் கூட காலையில மரத்தடியில் உட்கார்ந்து ஆண் மற்றும் பெண் மாணவர்கள் எல்லாரும் தரையில் உட்காந்து படிக்கணும் அவன் புக்கை வைத்து படிக்கிறத விட இந்த பாவாடை மாதிரி இருக்குற அந்த டவுசரை (?) மறைக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கு, அவன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த டவுசரைப் போட்டுட்டுப் படாதபாடு பட வேண்டி இருக்கு சரி பவுன்ராஜ் அம்மா எப்படியோ புதுசா இன்னொரு நீல கலர்ல ஒரு டடவுசர் தைக்க தூத்துக்குடியில் இருந்து துணி வாங்கி தைக்கக் கொடுத்தாங்க புதுக்கோட்டையிலேயே அவர்தான் பேமஸான டெய்லர் அவர் பெயர் கூட தங்கராஜ் டெய்லர் "அண்ணாச்சி எங்க அப்பா துணி வாங்கிட்டு வர சொன்னாங்க" "ஏலே என்னலே அவசரம் " " போயிட்டு சாயங்காலம் வா லே தைச்சி வெச்சிருக்கேன் லே " " சரி அண்ணாச்சி " அந்த பச்சை கலர் சைக்கிள் மாதா கோவில் கேபி வழியாப் போயி, சத்திரம் போயி, ஒன்னுக்கு நாலு தடவை அலஞ்சதுல அந்த தங்கராஜ் டெய்லர் எப்படியோ தைச்சும் கொடுத்துட்டாரு புதுக்கோட்டையில் தைக்கிறதுல அவர அடிக்சுக்க ஆளே இல்ல அப்படின்னு தான் சொல்லணும் பவுன்ராஜ்க்கு அப்படி ஒரு டவுசர் வந்து சொக்காய் அமைந்து விட்டது புது டவுசர் வந்தப் பிறகு, இப்ப எல்லாம் ஸ்கூலுக்குப் போறதுக்குள்ள பவுன்ராஜ் ரொம்ப ஆர்வமா இருக்கான் அசெம்பிளியில் வந்துட்டு வெள்ளை சட்டையை டக்கின் பண்ணிட்டு புது டவுசர்ல பயங்கரப் பந்தாக் காட்டுறான் புதுக்கோட்டைக்கு மேற்கே நடுக்கூட்டுடன் காடு என்று ஒரு கிராமம் இருக்குது கிணத்துப் பாசனம் தான் நெல்லு விளையிற பூமி, அங்க கண்ணாடிக் கிணறு என்று ஒரு கிணறு இருக்குது, இன்னைக்கு கூட்டாளிகள் எல்லாரும் கூடயும் சேர்ந்து பவுன் ராஜும் கண்ணாடிக் கிணத்துக்கு குளிக்கப் போறான் அந்த கிணத்துக்கு ஏன் கண்ணாடி கிணறு என்று பெயர் சொன்னால் தண்ணீர் சும்மாக் கண்ணாடி மாதிரியே இருக்கும் அடியில் கிடக்கிற கல்லு முதற்கொண்டு மேல தெள்ளத் தெளிவாத் தெரியும், அந்த அளவு தெள்ளத் தெளிவா இருந்ததால எவனோ நம்மள மாதிரி குளிக்கக் வந்த ஒருத்தன் கண்ணாடிக் கிணறு என்று பெயர் வைத்துவிட்டான் அது ஒரு சாயங்கால நேரம் குளிக்க போறாங்க பவுன்ராஜ் ஸ்கூலுக்கு போயிட்டு அதே யூனிஃபார்ம்ல(புது டவுசர் )குளிக்கப் போயிட்டான் நாலஞ்சு பேர் குளிக்கும் போது ஒருத்தன் மேல இருந்து கல்லெடுத்து போடுவான் ஒருத்தன் கிணத்து ஆழம் வரை உள்ளே நீந்தி சென்று போய் அதே கல்லை போய் எடுத்து அதை "இந்தா நான் எடுத்துடேன் "அப்படின்னு காமிப்பான் இப்படி அவங்களோட நீச்சல் திறமையை எல்லாத்தையும் கண்ணாடிக் கிணத்துல ஜாலியா க் குளிச்சா நேரம் போவதே தெரியாது பவுன்ராஜுக்கும் அதே மாதிரி குளிக்கிற இன்ட்ரஸ்ட்ல நேரம் போனதே தெரியாம பொழுது சாய்ந்துட்டு இருட்டிட்டு தண்ணீல அலசி வச்ச அந்தப் புது டவுசர் வந்து கிணத்துக்குள்ள விழுந்துட்டு ரொம்ப ஈரமா இருந்ததுனால டவுசர் புது டவுசர் கண்டுபிடிப்பதற்கு பவுன்ராஜ் ஏதோ அவனுக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச நீச்சல் எல்லாத்தையும் போட்டு காட்டி டவுசர் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தான் பவுன்ராஜ் நண்பர்களும் உனக்கு ரொம்ப துணையா தேடினாங்க, ஆனாலும் வந்து காணாம போன நீல கலர் புது கால் சட்டையைக் கண்டுபிடிக்கவே முடிய வில்லை, கடைசி வரைக்கும் அந்த கண்ணாடி கிணறு பவுன்ராஜ்க்கு நல்லா" தண்ணி "காட்டிட்டு புது டவுசர் கிடைக்கவே இல்லை நைட்டு ரொம்ப லேட் ஆகிவிட்டது, பவுன்ராஜ் எப்படியோ வீட்டுக்கு வர்ரான் வீட்ல புது டவுசர் காணாமப் போச்சுன்னு சொன்னா அடிதான் விழும் பயந்து பயந்து வீட்டுக்கு வந்தான், இப்பவும் அவனுக்கு பயம் வருகிறது அரையாண்டு தேர்வு பரீட்சை வேற நெருங்கிட்டு இருக்கு அதுலயும் ஒவ்வொரு பாடமும் பெயிலானால் ஒவ்வொருப் பாடத்துக்கும் பிரம்படி உண்டு அந்த தலைமை ஆசிரியரை நினைச்சாலே இப்பவும் வயித்தைக் கலக்குது வெளியே யார்கிட்டயும் சொல்லாத பவுன்ராஜ் திரும்பியும்" எக்ஸ்பிரஸ் கால் சட்டையை எடுத்து அணிய தப்பித் தவறிக் கூட யாரும் புதுகால் டவுசரை பத்தி பேசக்கூடாது என்று அந்த "ஆண்டவரை "வேண்டுகிட்டு பள்ளிக் கூடம் போகிறான், ஆனாலும் நினைப்பு எல்லாமே கண்ணாடி க் கிணறைச் சுற்றியே வருகிறது. இரா. மதிராஜ்,

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.