logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

பா. நீலாம்பரி

சிறுகதை வரிசை எண் # 35


விவாகரத்து ************* அந்த குடும்ப நல நீதிமன்றத்தில் அம்மாவின் பெயர் அழைக்கப்பட்டது. அம்மா என்னையும் அங்கு அழைத்து சென்றிருந்தாள். "அகிலா… அகிலா… அகிலா…" டவாலி மூன்று முறை அழைத்தார் நீதிபதி கேட்டார், "உன் கணவன் அருண் என்பவர் உங்கள் மீது விவாகரத்து வழக்கு தொடுத்திருக்கிறார். உங்களுக்கு இதில் விருப்பமா இல்லையா என்பதை மனம் திறந்து சொல்லலாம்" என்றார் நீதிபதி. அகிலாவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. "எனக்கு இதில் விருப்பம் இல்லை" என்றாள். “உங்கள் நடத்தையில் சந்தேகம் என உங்கள் கணவர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். யோசித்து உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள்” என்றார் நீதிபதி. "உங்களுக்கு ஆறுமாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது". என்றார் நீதிபதி. நீங்கள் “ஏற்கனவே மூன்று மாதம் பிரிந்து தான் இருந்தீர்களா”, என்று நீதிபதி கேட்டதற்கு. ஆமாம் என்றாள் அம்மா. குடும்ப நல ஆலோசனை மையத்தில் ஆலோசனை தரப்படும். இருவரும் கலந்தாலோசித்து பதில் மனு தாக்கல் செய்யுங்கள்.. அதுவரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்தார் நீதிபதி. இதை பார்த்துக்கொண்டிருந்த என் கண்கள் என்னையும் மீறி அழ தொடங்கியது. அப்பா ஏன் இது போல் செய்கிறார். அம்மாவும் படித்த பெண் தான், வெளிநாட்டு நிறுவனத்தில் வெலை செய்பவள் தான். ஆனாலும் கணவன் என்று வந்து விட்டால் எல்லா பெண்களும் ஒரே மாதிரி தான் போலிருக்கிறது என்று நினைத்து கொண்டேன். நீதிமன்றம் வெளியே என் தாத்தாவிற்கும் அப்பாவின் உறவினருக்கும் இடையே பெரிய தகராறு கொண்டிருந்தது. அப்பாவை வளைத்து பிடித்த தாத்தா "என் மகளின் நடத்தையில் என்ன சந்தேகம் என்று சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும்”என்று அப்பாவின் சட்டையை பிடித்துக்கொண்டார். காவல்துறை வந்து சமாதானம் செய்து, எங்களை எங்கள் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த பிரச்சினைக்கு, ஊர் பஞ்சாயத்து நடத்த தாத்தா முடிவு செய்தார். அப்பாவின் மிகுந்த மரியாதை உண்டு தாத்தாவிற்கு. ஆனாலும் அப்பா ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பதை அவரால் கண்டு பிடிக்க இயலவில்லை. இதற்கு ஊர் பஞ்சாயத்து தலைவர் தான் சரி என்று முடிவு செய்தார். தலைவர் உடனே கண்டுபிடித்து விடுவார் என்பதில் தாத்தாவிற்கு அப்படி ஒரு நம்பிக்கை இருந்தது. என் அத்தைக்கும் இதே போல் பிரச்சினை வந்த பொழுது, ஊர் தலைவர் தான் பிரச்சினைக்கு காரணம் கண்டு பிடித்து அத்தையை அவரது கணவனுடன் சேர்த்து வைத்தார். ஊர் பஞ்சாயத்து நடத்த ஒரு மனதாக ஒப்பு கொண்டார் அப்பா அவ்வாறே , அப்பா வழி தாத்தா பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, அம்மா வழி தாத்தா பாட்டி , பெரிய மாமா,சின்ன மாமன், அத்தை எல்லோரும் வந்திருந்தார்கள். . ஆளாளுக்கு இதை பற்றியே கண்ணும் காதும் வைத்து இஷ்டத்துக்கு பேசிக்கொண்டிருந்தார்கள், அவன் சரியில்லை, இவள் சரியில்லை என்று, மாறி மாறி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசப்பட்டது. அப்பாவின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அம்மாவின் நடத்தை சரியில்லை என்பதை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டனர் ஊர் பஞ்சாயத்தினர். மூன்று மாதமாக அம்மா மனம் வெறுத்து போய் கிடந்தது ஊருக்கே தெரியும். அப்பா தெளிவாக சொல்லிவிட்டா ர், இனிமேல் இவளுடன் வாழ்க்கை நடத்த முடியாது என்று. இவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளது என்றே பொய் மேல் பொய் உரைத்தா ர். இதை திரும்ப திரும்ப கேட்ட,பஞ்சாயத்து தலைவருக்கோ கோவம் உச்சிக்கே சென்று விட,, அம்மாவின் வேறு ஒரு உறவு பற்றி நீ விளக்கம் தராவிட்டால், இங்கிருந்து நகரமுடியாது என்று சுற்றி வளைத்தார்… அப்பா திரும்பவும் அதையே தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இவனுடன் பேசுகிறாள், அவனுடன் பேசுகிறாள், அலுவலகத்தில் ஆண் நண்பர்களுடன் உணவகம் செல்கிறாள், தேநீர் அருந்த செல்கிறாள், இரவெல்லாம் அவர்களுடன் இவளுக்கு என்ன பேச்சு, புலன பேச்சுக்கள் என்று தொடர்ந்துஅடுக்கி கொண்டே போனார் அப்பா... பஞ்சாயத்து தலைவர் கேட்டார் “இப்பொழுது, அகிலா எங்கு வேலை செய்கிறாள் அருண்” என்றார். “வெளிநாட்டு நிறுவனத்தில்”, என்றார் அப்பா. “அப்போது, அவர்கள் நாட்டு கலாச்சார முறைப்படி, அலுவல் ரீதியாக உணவகம் சென்றிருப்பாள், இதில் என்ன இருக்கிறது, எல்லாமே இங்கு கண்காணிப்பு காமெராவிற்குள் தானே வருகிறது, அவள் வேலை செய்யும் அலுவலக உணவகம், குழம்பிக்கடை எல்லாமே பாதுகாப்பு கமெராக்கள் பொருந்திய இடங்களே". "இங்கு எல்லா பெண்களும், ஆண்களுக்கு மத்தியில் தான் வேலை செய்தாக வேண்டும், நீயோ… இரவு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது என்கிறாய், அவளோ கால் சென்டர் மென் பொருள் பழுதாகியதால், வேறு வழியின்றி என்னை தொடர்பு கொண்டனர் என்கிறாள். நீயும் அருகில் தானே இருந்தாய். தவறாகவா பேசினாள்?... தவறு செய்பவள் கணவனை அருகில் வைத்துக்கொண்டா பேசுவாள் ?...ஏன் இப்படி அபாண்டமாக பிதற்றுகிறாய்” என்றார் தலைவர். "உங்களுக்கு என்ன தெரியும், கூட வாழ்பவனுக்கு தான் தெரியும் கஷ்டம் என்னவென்று". என்றான் அப்பா. பஞ்சாயத்து தலைவர் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார் இப்பொழுது, உனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா ஏன் அவளை வேளைக்கு அனுப்பின, நீயே உட்காரவைத்து சோறு போட வேண்டியதுதானே என்றார் தலைவர். எனக்கும் இது தான் சரியெனப்பட்டது. இவ்வளவு சந்தேகப்படும் அப்பா, அம்மாவை ஏன் வேலைக்கு அனுப்புகிறார்?. பேசாமல் வீட்டிலேயே இருந்துகொள் என்று சொல்லிவிட வேண்டியது தானே என்றேன் நான். உடனே ஊர் தலைவர் அதட்டினார் என்னை. அப்பாவை எதிர்த்து பேசும் அளவிற்கு வளர்ந்து விட்டாயா நீ , இதில் பிள்ளைகள் தலையிட கூடாது. பேசாமல் போய் உக்காரு என்று திட்டி அனுப்பிட்டார் ஊர் தலைவர். உனக்கு அவள் மூலம் வருமானம் வேண்டும், அதே சமயம், அவள் அலுவல்ரீதியாக கூட யாரிடமும் பேசவோ, பழகவோ செய்ய கூடாது, அப்படி தானே அருண் என்றார் தலைவர்... நீ எப்படி உன்கூட வேலை செய்யும் பெண் சகாக்களிடம் பேசுவதே இல்லையா, அலுவலக ரீதியில் கூட என்றார் தலைவர். “பேசித்தான் ஆக வேண்டும், அதெப்படி பேசாமல் இருக்கமுடியும்” என்றார் அப்பா. “அதே தானப்பா உன் மனைவிக்கும். அவளை மட்டும் சந்தேகப்படுகிறாய். உன் தங்கையும் தான் வேலைக்கு செல்கிறாள், உடனிருக்கும் மேலாளர், தாளாளர் யாரிடமும் அவள் பேசுவதில்லையா. இது என்னப்பபா, உன் பேச்சு சரி இல்லையே” என்றார் தலைவர். “இன்றைய கால கட்டத்தில், பெண்கள், நூறு ஆண்களுக்கு மத்தியில் தான் பேசி பழக வேண்டியிருக்கிறது. கற்பின் அவசியம் என்னவென்று, இந்த கால பெண்களுக்கு தெரியும். கற்பு ஒன்றும் பிற்போக்கு தானம் இல்லையப்பா, அது தான் வேலி என்று பெண்களுக்கு நன்றாகவே தெரியும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு இல்லையென்றால், அவள் எப்படி நிம்மதியாக வேலை செய்வாள். கற்பு என்பது அவர்களை காக்கவே என்று பெண் பிள்ளைகள், நன்கு அறிந்திருக்கிறார்கள் அருண்” என்றார் தலைவர் “உனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள், அந்த குழந்தைகள் என்ன செய்யும். இந்த சிறிய வயதில், இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அகிலா என்ன செய்வாள். அவள் நிலை, யாது இனிமேல். ஒன்று அவளுடன் சேர்ந்து குடும்பம் நடத்து. இல்லையெனில், அவளுக்கும் அவள் பிள்ளைக்கும் ஜீவனாம்சமாக பெரும் தொகையை தரவேண்டியிருக்கும். உங்கள் சம்பளம், சொத்து ஆகியவற்றை விற்றால் கூட தர முடியாது என்பதை நினைவில் கொள்” என்றார் தலைவர் “அதையும் மீறி நீ ஏதாவது செய்தால், உன் சிநேகிதியுடன் இருக்கும் கள்ள தொடர்பு வெளியில் கொண்டு வரப்படும். ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அப்புறம் ஜீவனாம்ச தொகை இதை விட நூறு மடங்கு அதிகம் கேட்கப்படும். இல்லை எனில் சிறை தான்.. இனிமேல் உன் இஷ்டம் “ என்று பஞ்சாயத்து தலைவர் எழுந்து கொண்டார். தாத்தாவிடம் சென்று, ஆறுதல் பஞ்சாயத்து தலைவர் சொன்னார், “பையனிடம், போட்ட போட்டிற்கு, உடனே வழிக்கு வந்துவிடுவான், பேசாமல்அவனை அரவணைத்து செல்” அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். தாத்தா அப்பாவை தொலைவிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தார். சொந்தம், பந்தம் எல்லோரையம் வீட்டிற்கு அனுப்பி விட்டு, அப்பாவிற்காக தனியே காத்திருந்தார். எல்லோரும் சென்று விட, அப்பா ரொம்ப நேரமாக இடிந்து போய் உட்கார்ந்திருந்தானர். “மாப்பிள்ளை இன்னும் இவ்ளோ நேரம் இப்படியே இருப்பிங்க. இங்க ஊர் தலைவர் பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது” என்றார். “எவ்ளோ யோசித்தாலும் அவரை மீறி ஒன்றும் நடக்காது. உங்கள் காதலியை திருப்பி அவள் வீட்டிற்கே அனுப்புவதை தவிர வேறு வழி இல்லை மாப்பிள்ளை” என்றார். “அந்த பெண்ணின் வீட்டில் பக்குவமாக பேசி நானே கொண்டுபோயி சேர்த்துவிடுகிறேன், நானே வேறு மாப்பிள்ளையும் அவளுக்கு பார்த்து தருகிறேன். அவள் நிலை என்னாகுமோ என்று கவலை படாதீங்க. அவளும் எனக்கு இன்னொரு மகள் போல தானே” என்றார் அகிலாவின் அப்பா. அவள் வாழ்க்கையை நானே கெடுத்திட்டேன் மாமா என்று தாத்தாவிடம் கதறிக்கொண்டிருந்தார் அப்பா. எனக்கு எதுவும் புரியவில்லை அந்த வயதில். அப்பா எதற்கோ அழுகிறார் என்று மட்டுமே தெரிந்தது. சிறிது நாட்கள் கழித்து, தாத்தா யாரோ ஒரு பெண்ணிற்கு திருமணத்திற்கு அலைந்து திரிந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்பாவின் முகத்தில் சிரிப்பே இல்லை சில மாதத்திற்கு. சில வருடம் கழித்து தான் சகஜ நிலைக்கே வந்தார். அம்மாவோ எங்களுக்காக மட்டுமே அப்பாவை அனுசரித்து வாழ்ந்து கொண்டிருந்தார். யாரோ ஒரு பெண்ணின் உறவு எங்கள் குடும்பத்தையே அசைத்து போட்டுவிட்டதை என்னால் முழுமையாக உணரும் வயது அப்போது எனக்கில்லை… பா. நீலாம்பரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.