மெகராஜ் பேகம்
சிறுகதை வரிசை எண்
# 33
#மூன்று நண்பர்களும் முச்சந்தியில் கிடந்த பிணமும்....
"இயேசு ஒரு நூல் கொடுத்தார்
நபிகள் ஒரு நூல் கொடுத்தார்
கண்ணன் ஒரு நூல் கொடுத்தார் இந்தியா என்னும் நூலகம் அமைக்க"
கல்லூரி தோழமைகளான சங்கர் சலீம் சாலமன் மூவரும் பாலிய காலத்தில் இருந்தே உயிர் சிநேகிதர்கள்
விடுமுறை நாள் ஒன்றில் சினிமாவிற்கு சென்று வீடு திரும்ப கையில் மாலை 4 மணி இருக்கும் ஈக்கள் மொய்த்துக் கொண்டும் நாய் முகர்ந்த பாடியுமாக ஒரு சடலம் கிடப்பதை மூவரும் பார்க்க நேர்ந்தது
"டேய் சலீம் யாருடா ஒரு முதியவர் போல் இருக்கிறது உணர்வுகள் அற்ற நிலையில் உறக்கமா? இல்லை மயக்கமா?!
என்றபடி நண்பர்களை அழைத்துச் சென்றான் சங்கர்
சுவாசத்தை பரிசோதித்தவனாய் சாலமன்
"டேய் உயிர் இல்லடா பாவம் அனாதை போல இருக்கிறது வா அக்கம் பக்கம் விசாரிப்போம்....
தொண்டை வலிக்க கத்தியும் ஒருவர் கவனத்தை கூட திருப்ப இயலவில்லை
" சரி வாடா நாமே ஏதாவது முயற்சி செய்வோம் என்ற படி முதலில் சாலமன் சமூகத்தில் கல்லறை தோட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்..
"பூர்வீகம் தெரியாத நபராக இருக்கிறார்...
" இல்லை இங்கு புதைக்க அனுமதி இல்லை எடுத்துச் செல்லுங்கள்" என்று விட்டார்...
இப்போ என்னடா செய்வது என்றவனை
"சரி வா நான் அழைத்துச் செல்கிறேன்" என்றபடி சமாதானம் செய்தான் சலீம்..
பள்ளி கபஸ்தானில் தலைமை மோதினாரிடம் ஐயா இது அனாதை பிணம் தாங்கள் இங்கு நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றவனை
"அடடா இஸ்லாத்தை ஏற்காத ஒருவரை இங்கு புதைக்க அனுமதிக்க இயலாது பெரும் பாவமாகிவிடும் எடுத்துச் செல்லுங்கள் "
என்ற வரை முறைத்தபடி
"என்னடா உங்கள் சமூகமும் இப்படித்தானா என்றவாறு
" வாங்க சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சங்கரை
"முறைப்படி கோவிலில் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இங்கு எரியூட்டப்படும் வீன் முயற்சி சென்று விடுங்கள் என்று மறுதலிக்க....
"அட பாவமே ஒரு பிணத்திற்கு கூடவா சாதி மதம், பேதம் பார்ப்பார்கள் "என்னடா சமூகத்தில் வாழ்கிறோம் ....
ஒரு செத்த எறும்பை கூட மற்ற எறும்புகள் தனித்து விட்டு செல்லுமா என்ன...
" மனிதனை மனிதனே இரக்கம் காட்டவில்லை என்றால் கடவுள் எப்படி மனிதனுக்கு இரக்கம் காட்டுவான்"
கவலையை விடுங்கள் இனி நாமே ஆள் அரவமற்ற பகுதிக்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்வோம் என்றபடி பிணத்துடன் சென்றவர்களை
சமூகம் புறம் தள்ளியதோ இல்லையோ இனி இவர்கள் பெயரளவில் மட்டுமே
சங்கர்...
சலீம்...
சாலமன்...
என்பது சத்தியமான உண்மை.....
✍️ மெகராஜ் பேகம்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்