logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

மீ. உமா மகேஸ்வரி

சிறுகதை வரிசை எண் # 32


தொட்டில் "வாங்க ஐயா! எங்க போகணும் நீங்க ? என்று கேட்டாள் வாசுகி போஸ்ட் உமன். அருகே ஒரு வயதான நபர் நின்றிருந்தார். அவர் பெயர் எஸ். சேகரன். துறைமுகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். அம்மா நான் தொட்டில் அப்படிங்கற அப்பார்ட்மெண்ட் வீட்ல இருக்குற என் நண்பரை பார்க்க வந்தேன். முகலிவாக்கத்தில் மெட்ரோ ஸ்டேஷன் பக்கத்துல அந்த வளாகம் இருக்குன்னு எனக்கு தெரியும். ரொம்ப நாளாச்சு நான் இங்க வந்து. அதோ அந்த லைட் செட் எல்லாம் போட்டு பிரம்மாண்டமா நிக்குதே அதுதானா? என்றார். ஐயா! நீங்கள் கேட்கிற பிளாட் நமக்கு எதிர்க்க தெரியுதே அதே வளாகம்"தொட்டில்" தான். துறைமுகத்தில் வேலை செய்தவங்க நிறைய பேர் ஒரே இடத்தில் அப்பார்ட்மெண்ட் கட்டிட்டு இங்கு குடி வந்தாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நானும் நிறைய தபால்களை கொண்டு வந்து அங்கு கொடுத்து இருக்கேன். நீங்க ரிசப்ஷன் நம்பருக்கு போன் போடுங்க. அதோ அங்க போர்ட்ல எழுதி இருக்கு பாருங்க. அவங்களே கைட் பண்ணி கூட்டிட்டு போக ஆளும் வருவாங்க" என்றாள். ரிசப்ஷன் நம்பர் அங்கே ஒரு போர்டில் எழுதப்பட்டிருந்தது. கேட்டின் வாசலில் நின்றபடி சேகர் போன் போட்டு கேட்க தயாரானார். "சரிம்மா, நீ போ. நான் உள்ளே போகிறேன்" என்றார். "சரி" என வாசுகி சென்று விட்டாள். ஹலோ நான் தொட்டில் தன்னார்வ குழு நடத்தற அப்பார்ட்மெண்ட் ரிசப்ஷனிஸ்ட் ஜோ பேசுறேன். உங்களுக்கு யாரை பார்க்கணும் சார்? என்றாள். பாந்தமான புடவையை நாகரிகமாக கட்டி ரிசப்ஷன் கவுண்டரில் உட்கார்ந்திருந்தாள் ஜோ மரியா. "அம்மா! நான் சேகர். வினோவை பாக்கணும். எந்த அப்பார்ட்மெண்ட் நம்பர்ல இருக்கிறார்னு சொன்னீங்கன்னா நான் போய் அவர் வீட்டுக்கு போகணும் "என்றார் சேகர். ஜோ"சார்! இங்க 300 வீடுகள் இருக்கு. இதுல 200 பேர் மட்டுமே துறைமுகத்தில் இருந்து ரிடையர் ஆன பெரியவங்க. முதல்ல நீங்க உள்ளே வந்து ரிசப்ஷன்லே உக்காருங்க. நீங்க சொல்றவர் 150 ஆவது பிளாட்டில் இருக்கிறார். நான் அவரை வந்து உங்களை கூட்டிட்டு போக சொல்றேன்" என்றாள். இயற்கையை ரசித்தபடி வளாகத்தின் கட்டிடத்தின் உள்ளே நுழைந்தார். ரிசப்ஷனில் மிக பிரம்மாண்டமான சோப்பாக்கள் போடப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்த சேகர் சற்று நின்றார். சுற்றிலும் துறைமுக அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வருடம் வாரியாக வைக்கப்பட்டிருந்தன. 1996 97 98 .....2023 என்று நிதானமாக அவற்றைப் பார்த்தபடியே சேகர் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். குறுக்கே ஒரு இரண்டு வயது வாண்டு ஓடியது. அதனை துரத்தியபடி ஒரு பெண் நடந்து வந்தாள். அந்த குழந்தையை தேடியபடி இன்னொரு பெண் பிள்ளை ஓடி வந்தது. "ஓடாதடா ராஜா! பாட்டிக்கு முடியல. தோ பாரு, ஸ்வீட்டியும் வந்துட்டா உன்னை தேடிட்டு. உனக்கு ஒரு சாப்பாடு ஊட்டுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுது" என்றாள் சொர்ணலஷ்மி. லீவில் வந்த அவளது அண்ணன் பேரனிடம் மல்லுக்கட்டி உணவு ஊட்டுவதே அவளது அன்றாட வேலை. "ஸ்வீட்டி! ஸ்வீட்டி! என கூப்பிட்டபடி வந்தாள் ஒரு அம்மணி அது உமையாள். என்ன சொர்ணா பசங்க சாப்பிடலையா? ஏன் அந்த வாலு பின்னாடியே ஓடற. விட்டுடு. அதோ அந்த ஹால்ல வீடியோ கேம்ஸ் இருக்கு பாரு அங்க கூட்டிட்டு போ. அங்க நிறைய லவ் பேர்ட்ஸ் -பறவைகள், நாய், பூனை, முயல், கோழி,சேவல், புறா, மீன் எல்லாம் பார்த்து சாப்பிடுவான்" என்றாள். "சரி உமி வா போகலாம்" என்று இருவரும் நடந்தார்கள். அதை வேடிக்கை பார்த்த சேகர் நிதானமாக நடந்து அந்த அம்மணிகளின் அருகில் வந்தார். "சொர்ணா! உமி! என்னை தெரியுதா? என்றார் சேகர். வெளுத்த சிறிய தாடி மீசை வழுக்கை தலையில் சேகரை சற்று அடையாளம் தெரியவில்லை. இருந்தாலும் அந்த பேச்சில் கண்டுபிடித்து விட்டார்கள் அம்மணிகள். சொர்ணா "சேகர் எப்படி இருக்கீங்க நீங்க? எப்ப ஊர்ல இருந்து இங்க வந்தீங்க? கொஞ்ச நேரம் உங்களை அடையாளம் தெரியவில்லை இப்ப தெரிஞ்சிருச்சு" என்றாள். உமி " சேகர் எப்படி இருக்கீங்க? உங்க ரெண்டு பொண்ணுங்களையும் டாக்டர் மாப்பிள்ளைகளுக்கு கோயம்புத்தூரில் கட்டிக் கொடுத்துட்டீங்க. உங்க பொண்ணுங்க கல்யாணத்துல உங்கள பார்த்தது. அதோடு இப்பதான் பார்க்கிறேன். சேகர் "நீங்க எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும். உங்க ரெண்டு பேரோட பையன்களுக்கும் வரன் அமைந்துடுச்சு அப்படினு கேள்விப்பட்டேன். பத்திரிகை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். அதுக்குள்ள வினோவை பார்க்கலாம்னு ஏதோ மனசுல பட்டது தேடிட்டு வந்தேன். வீடே அடையாளம் தெரியல. ஒரே மரங்களா வளர்ந்து காட்டுக்குள்ள இருக்கிற மாதிரி அப்பார்ட்மெண்ட் மாறிடுச்சு. எல்லோரும் கிரகப்பிரவேசம் பண்ண போது வந்தேன். அதோடு இப்ப 10 வருஷம் கழிச்சு வரேன். நான் ஊரிலேயே இருந்ததினாலே எதுவுமே எனக்கு தெரியல. சொர்ணா நம்ம பிஆர்ஓ, பாமா, நந்தி, கிருஷ்ணா, கலா மேடம் லைட்டனிங் மேடம் ல்லாம் எப்படி இருக்காங்க? போய் பார்த்தீர்களா? என்று கேட்டார். சொர்ணா "நம்ம பி ஆர் ரோட பொண்ணு பெரிய செஃப் ஆயிட்டாங்க. பசங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டார். நம்ம மதுசூதன் ஒரு சிறிய பத்திரிகை நடத்தறாரு. அதுல உமையாளும் ஒரு உறுப்பினர்/ எழுத்தாளர். எல்லாரும் அவங்கவங்க பசங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. நீங்க தான் பல கல்யாணத்துக்கு வரவே இல்ல. நம்ம பாமாவும் நந்தியும், எஸ்.லஷ்மியும், கலா மேடமும் பேரன் பேத்திய பார்க்க வெளிநாடு போய் ஒரு மாசம் ஆயிடுச்சு. அடுத்த மாசம் தான் இந்தியா வராங்க. நம்ம கிருஷ்ணா பொண்ணு சி.ஏ. முடிச்சு ஒரு சி.ஏ. மாப்பிள்ளையோட கல்யாணமும் ஆயிடுச்சு. அவ அம்மா அப்பாவோட ஹைதராபாதில நல்லா இருக்கா. நம் லைட்டனிங் மேடமோட பொண்ணுக்கு வரன் பார்த்து முடிஞ்சிடுச்சி. அவளை மாதிரியே வக்கீலுக்கு படிச்ச நல்ல மாப்பிள்ளையா அமைந்தது அந்த பொண்ணோட அதிர்ஷ்டம். நாங்க எல்லோரும் அந்த கல்யாணத்துக்கு போக போறோம். நீங்களும் வந்து எங்க கூட சேர்ந்துக்கோங்க சேகர்" என்று முடித்தாள். சேகர் "இரண்டு பெண்களும் இங்கேயே இருங்கப்பா அப்படின்னு ஒரே தொந்தரவு. பிள்ளைங்க வேற தாத்தா இரு இருனு ஒரே நச்சரிப்பு. கோயில் கோயிலா நானும் என் வீட்டிலேயேயும் சுத்திட்டு இருந்தோம். இப்பதான் நேரம் கிடைத்தது. அதான் உங்களை எல்லாம் பார்க்க வந்தேன். நேற்று வினோ போன் பண்ணான். என் ஞாபகமா இருக்கு வான்னு கூப்பிட்டான் அதான்" என்றார். "தொட்டில்" வளாகம் ஒரே வயதுடைய துறைமுக ஊழியர்கள் ஒரு குழுவாக இணைந்தனர். அனைவரின் ஒப்புதலோடு ஒரு நிலத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அனைவரும் குடியேற வேண்டும் என்பது அவர்களது ஆசையாக இருந்தது. அதை செயல்படுத்தினர். தங்களது ரிட்டயர்மென்ட் பணத்தில் ஒரு பகுதியை குடியிருப்பு கட்டுவதற்கு தந்து உதவினர். இப்படியாக 200 பணியாளர்கள் தங்களது சொந்த பணத்தில் ஒவ்வொரு பிளாட்டையும் பார்த்து பார்த்து கட்டினர். அந்த வளாகம் தொட்டில் என பெயர் சூட்டப்பட்டது. அந்த நாளில் மந்திரிகளும் எம்எல்ஏக்களும் அந்த பணியாளர்களின் வரவேற்பை ஏற்று வளாகத்தை திறந்து வைத்தனர். மிக பிரம்மாண்டமான அந்த வளாகத்தில் ஒரு சிறு கோவிலும் கட்டப்பட்டது. அங்கே சிறிதளவு ஆழமான நீச்சல் குளமும், எல்லாவித விழாக்களும் மத சடங்குகளும் நிகழ்த்த ஒரு பெரிய கூடமும் அமைக்கப்பட்டது. அந்த வளாகத்தின் அருகிலேயே ஒரு அவசர சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டது. அங்கே 24*7 டாக்டர்களும் நர்சுகளும் போதுமானவர்களாக நியமிக்கப்பட்டனர். வயதான முதியோர்களுக்கு தினசரி உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மிகக் குறைந்த விலையில் மூன்று வேளையும் சத்து மிகுந்த ஆரோக்கியமான சமையல் செய்தனர். எந்த முதிய தம்பதிகள் உணவு கேட்கிறார்களோ அவர்களுக்கு வீடுகளிலேயே சென்று வழங்கப்பட்டு வந்தது. அந்த வளாகத்தின் அருகிலேயே சிறிய தோட்டமும் சிறிய சினிமா தியேட்டரும் உடற்பயிற்சி கூடமும் பெரிய அளவிலான புத்தக விற்பனையகமும் நூலகமும் திறக்கப்பட்டன. கீழ் தளத்தில் ஒரு குழந்தை காப்பகமும் வைக்கப்பட்டது. பல முதியவர்கள் அங்கே இருந்த குழந்தைகளை தங்களது பேரன் பேத்திகளாக நினைத்துக் கொண்டு குழந்தைகளோடு கொஞ்சி விளையாடினர். தனது மகன் மகள் அயல்நாடு சென்றிருந்தாலும் தனிமையாக உணர முடியாதபடி தங்களது நேரத்தை செலவு செய்தனர். அந்த வளாகத்தில் பண பற்றாக்குறையால் வீடு வாங்கி குடி புகாதவர்களும் தங்களது நண்பர்களை தோழிகளையும் காண அங்கே வந்து அவர்களுடன் பேசி பழகி மகிழ்ந்தனர். ஒரு கல்யாணம் என்று ஒரு வீட்டில் ஏற்பாடு செய்துவிட்டால் போதும் அங்கே குடியிருக்கும் நபர்களின் மகன் மகள் பேரன் பேத்திகளே பாட்டு நடனம் என்று அசத்தி விடுவார்கள். எல்லா வித மத பண்டிகைகள் அங்கே கோலாகலமாக கொண்டாடப்பட்டது. "ஹாய்! சேகர்! எப்ப வந்தே? என்று கேட்டபடி வினோ இன்றைய நாளில் அந்த வளாகத்தின் பிரபல பாடகர். முடி சிறிதளவு வெளுப்படைத்து இருந்தாலும் அதே காந்த சிரிப்பு குரல். சேகர் ஓடி வந்து வினோவை கட்டிக் கொண்டார். பழைய புகைப்படங்களையும் நிகழ்வுகளையும் பேசியபடி அந்த பெரியவர்கள் உணவகத்தில் சிற்றுண்டி உண்டனர். எல்லா முதியோர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக ஒற்றுமையாக வாழ்ந்த அந்த" தொட்டில்" வளாகத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.