logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

Ayyappan

சிறுகதை வரிசை எண் # 25


தூரத்து மின்னல் பொழியும் மழை ____________________________ புதிய அலைபேசி எண்ணில் இருந்து இரண்டு தவறிய அழைப்பை பார்த்ததும் யாராக இருக்கும் என்று யோசித்தபடியே ஆர்டர் செய்த தேநீரை வாங்கி பருகி கொண்டிருந்தேன் குறுஞ்செய்தியும் நிறைய வந்து கிடந்ததால் அவைகளையும் திறந்து பார்த்து கொண்டு இருந்தேன் அப்போதுதான் தவறிய அழைப்பு எண்ணிலிருந்தும் ஒரு குறுஞ்செய்தி வந்திருப்பதை கண்டேன். புதிய அலைபேசி எண்ணுடன் அவருடைய பெயரும் குறுஞ்செய்தியின் விபரமும் இருந்தது நினைவுகளில் சற்றே பின்னோக்கி நகர்கிறேன் மைத்ரி பார்க் பேருந்து நிறுத்தம் இரவு ஒன்பதரை மணி இருக்கும் . நான் வந்து கொண்டிருந்தேன் கும்மிருட்டாய் இருந்த பேருந்து நிறுத்தத்தில் வாட்டசாட்டமான அந்த இளைஞன் எனக்கு முன்பே அங்கு நின்று கொண்டிருந்தான் என்னை கண்டதும் நிலவிய அமைதியை மெல்ல கலைத்தவாறு இந்த வழியாக குர்லா செல்வதற்கு எதாவது பேருந்து வருமா சார் என்றான் தினமும் அங்கு இருந்து தான் பேருந்து பிடிப்பேன் என்பதால் அந்த சாலையில் வரும் அனைத்து பேருந்துகளின் வழித்தடமும் எனக்கு அத்துப்படி . இளைஞர் கேட்ட இடத்திற்கு பேருந்து வராது என்பதால் இங்கிருந்து கிடைக்காது வேண்டுமானால் இங்கு வரும் பேருந்தில் ஏறி இரண்டு சமிக்ஞை தாண்டி மூன்றாம் சமிக்ஞையில் இறங்கலாம் அங்கிருந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்து கிடைக்கும் என்றேன்... இந்த வழித்தடத்தில் அவ்வளவாக பேருந்து வசதி கிடையாதா? அரைமணி நேரமாயிற்று இன்னும் ஒரு பேருந்து கூட வரவில்லை. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை இன்று "மே " தினம் விடுமுறை நாள் என்பதால் பேருந்து குறைக்கப்பட்டிருக்கிறது கொஞ்சம் தாமதியுங்கள் பேருந்து வரும் என்றேன். பேருந்து வரும்வரை பேசிக்கொண்டு இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ? எத்தனை ஆட்சி மாறினாலும் விடிவு இல்லை பாருங்க இங்கு சரியா சாலை விளக்குகள் எரியவில்லை அங்கே பாருங்க சாக்கடை நீர் சாலையில் ஓடுகிறது. ஆளுமைகளை குறை சொல்லி சலித்துக்கொண்டார். ஐநூறுக்கும் ஆயிரத்திற்க்கும் வாக்கை விற்கும் அவலம் மக்களிடம் தானே இருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டு அதற்கு பதிலேதும் சொல்லாமல் சிறு புன்னகை மட்டும் உதிர்த்தேன். என்ன சார் சிரிக்கிறீங்க நான் சொல்வது தவறா? இல்லை.... அக்கரைக்கு இக்கரை பச்சை இக்கரைக்கு அக்கரை பச்சை அப்படித்தானே இங்கு அரசியல் அமைப்புகள் இருக்கிறது அதான் சிரிச்சேன். மாற்றம் வேண்டாமா சார் மாற்றத்தை எல்லோரும் விரும்புகிறார்கள்.. மாற்றம் தான் கேள்வி குறியாக இருக்கிறது... மேலும் பேசுவதற்குள் மஞ்சள் ஒளியை பீய்ச்சி அடித்தபடி சற்று தூரத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தது. எதோ தூரத்து பகுதியில் வசிப்பவராக இருக்கவேண்டும் பேருந்து வருகிறது தம்பி நீங்கள் செல்ல வேண்டிய இடம் எதுவென்று சொன்னால் உங்களுக்கு எதாவது என்னால் உதவ முடியும். நான் மும்ரா செல்ல வேண்டும் ஒரு வேலையாக இங்கு வந்தேன் திரும்புவதற்கு நேரமாகி விட்டது இரவு என்பதால் கொஞ்சம் திசை குழப்பமாக இருக்கிறது. நீங்கள் விரும்பினால் இங்கிருந்து சயன் வரை செல்லுங்கள் அங்கிருந்து உங்களுக்கு சுலபமாக இருக்கும். இரயில் மூலமாக சென்று விடலாம் என்றேன் அதற்குள் பேருந்து வந்து விட இருவரும் ஏற்றிக்கொண்டோம் நான் சயனுக்கு பயணச்சீட்டு வாங்க அவரும் சயனுக்கே பயணச்சீட்டு வாங்கினார் . இப்போதெல்லாம் பேருந்தில் ஏறியவுடன் முன்பு போல யாரும் பேசிக்கொண்டு வருவதில்லை அவரவர் தொடுதிரையில் எதையாவது பார்த்து நேரத்தை போக்கும் காலம் ஆகிவிட்டது அப்படித்தான் நானும் தினமும் வந்தேன் முகம் தெரியாத மனிதரென்றாலும் அவர் வழிகேட்டு என்னை நம்பி வந்தவரென்பதால் இன்று தொடுதிரைக்கு கொஞ்சம் ஓய்வு அளித்து விட்டு அவருடன் பேசிக்கொண்டே வந்தேன் சற்று நேரம் கழித்ததும் சயன் எப்ப வரும் சார் என்றார். இன்னும் இரண்டு நிலையங்கள் தாண்ட வேண்டும் வாருங்கள் நானும் இரயில் நிலையம் தான் செல்ல வேண்டும் உங்களை அழைத்துச் செல்கிறேன் நான் சொல்கிறேன் என்று சொல்லி மீண்டும் தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தேன் சில்லென்ற மழைக்காற்றுடன் மின்னல் தூரத்து வானை கிழித்து கொண்டிருந்தது . மழை வரும் பருவகாலம் அல்ல ஆனால் திடீர் மழைக்கு பருவகாலம் ஏது? மழை வந்தாலும் வரலாம். பேசிக்கொண்டு இருக்கும் போதே சயன் வந்து விட இருவரும் ஒன்றாகவே இறங்கி ரயில் நிலையம் வரை நடந்து வந்தோம். நடைமேடை "ஒன்றில் "அவருக்கான இரயில் வரும் என்று அறிவிப்பு பலகையில் டிஜிட்டல் விளக்கு ஒளிர்ந்து அறிவிப்பு செய்துகொண்ட ருக்க சரிசார் நான் கிளம்பறேன் என்று பரபரத்தார் ஒருநிமிடம் நில்லுங்கள் நீங்கள் இன்னும் பயணச்சீட்டு எடுக்க வில்லை அதை முதலில் பெற்றுக்கொள்ளுங்கள் என்றேன் இல்லை சார் நான் இப்படியே சென்று விடுகிறேன் . இரயிலில் யார் சார் டிக்கெட் கேட்கப்போறாங்க அதுவும் இந்த இரவில் என்றார் சற்று முன்புதான் அரசியல் ஆளுமைகளை குறை கூறினீர்கள் இப்போது நீங்களே இப்படி சொன்னால் எப்படி? அரசாங்கத்தை ஏமாற்றுவது தவறில்லையா? அரசாங்கம் மக்களை ஏமாற்றுவது மட்டும் சரியா சார்? ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக பதிலுக்கு ஏமாற்றுவது நியாயம் இல்லையே இப்படி ஒவ்வொருவரும் நினைக்க தொடங்கி விட்டால் இந்த பூனைக்கு யார் மணிகட்டுவது? பரிசோதகரிடமிருந்து தப்பலாம் மனசாட்சியிடமிருந்து உங்களால் தப்ப முடியுமா? நேர்மை என்பதை எப்போதும் தன்னிடமிருந்து தொடங்காமல் அடுத்தவரிடத்தில் தேடுவது என்ன நியாயம். பணம் இல்லை என்றால் சொல்லுங்க ஒரு பயணச்சீட்டு நான் வாங்கி தருகிறேன்..நேர்மையாக செல்லுங்கள்.. என்றேன் மன்னிச்சிடுங்க சார் . உண்மையில் என்னிடம் பணம் இல்லை அதை மறைக்கத்தான் அப்படி சொல்லிட்டேன் . அதைக்கேட்ட பிறகு பயணச்சீட்டு ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினேன் நன்றி கூறிவிட்டு என்ன நினைத்தாரோ திடீரென உங்கள் அலைபேசி எண்ணை தரமுடியுமா சார் என்றார் இப்போது தான் ஆன்லைன் பே வசதி நிறைய இருக்கிறதே ஆதான் நம்பர் கேட்டு பேமென்ட் பண்ண போறார் போல என்று நினைத்து இல்லை பரவாயில்லை நீங்கள் செல்லுங்கள் தம்பி என்று கூறி விட்டு நானும் நகர ஆயத்தமானேன் அதற்குள் அவர் உங்களிடம் பேசி கொண்டு வந்தது கொஞ்ச நேரம் என்றாலும் மனம் நிறைவாக இருந்தது அதான் அடிக்கடி இல்லை என்றாலும் எப்பவாவது பேசலாம் என்று கேட்கிறேன் என்றார் அன்பாக கேட்டதால் நானும் மறுக்க மனம் வராமல் அலைபேசி எண்ணை தந்து விட்டு நகர்ந்தேன் நான் செல்ல வேண்டிய வழித்தடத்தில் இரயில் வருவதற்கு சொற்ப நிமிடமே இருந்ததால் நீங்கள் பார்த்து செல்லுங்கள் என்று கூறிவிட்டு எனக்கான நடைமேடை நோக்கி நடக்க தொடங்கினேன். அதன் பிறகு எப்பவாச்சும் பேசுவது என தொடங்கி ஓரளவு நட்பு வளர்த்து இருந்தார் கடைசியா ஏதோ மேல்படிப்பு படிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார் அதன் பிறகு ஒரு வருடம் ஓடியிருக்கும் இப்போது தான் அவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது அதுவும் புது அலைபேசி எண்ணில் இருந்து. ஐயா வணக்கம் இரயில்வேயில் புதிய மேளாலர் பதவி கிடைத்திருகிறது. விரைவில் பொறுப்புயேற்க உள்ளேன் இந்த நற்செய்தியை உங்களுக்கு பகிர்வதில் மகிழ்கிறேன். இதை தெரிய படுத்தி உங்களிடம் ஆசி பெறவே அழைத்தேன் அழைப்பில் தொடர்பு கொள்ளமுடியாமல் போனதால் குறுஞ்செய்தியாக தெரிவிக்கிறேன். குறுஞ்செய்தியை படித்ததும் மனசு சந்தோசத்தில் ஈரமானது. எப்போதாவது தூரத்து மின்னல் பொழியும் மழை கூட பேரழகுதான் அவசரத்திற்கு ஒரு பூங்கொத்து எமோஜியை அழுத்தி வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். க அய்யப்பன் மும்பை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.