Rajesh Sankarapillai
சிறுகதை வரிசை எண்
# 23
என்னவோ தெரியவில்லை... அந்த நிகழ்ச்சி மனசில கிடந்து கொமட்டிட்டு கிடக்கு.... பல நிகழ்ச்சிகள் அப்படித்தான். கொமட்டும், குறுகுறுக்கும், மூலைல வைக்கும். எதச் சொல்ல ....
காலைல பத்துமணியிருக்கும். வீட்டுக்கு முன்னாலே பைப் மூடு.
அக்கா.... ஏலே.... காக்கா வந்திருக்கானாம், அந்த பய , ஒவ்வொரு வீட்டுக்கு வருவாளே அவளக்க மகன்...
ஆட்டோல இருக்கான். எல்லாரும் சுத்தி சுத்தி .... பாக்கா . பயலை பாக்க பாவமா இருக்கு.... நடக்க முடியல்லை.
ஒண்ணார மாட்டுகான் என்கிற குரலின் ஊடே நானும் எட்டிப் பார்க்கின்றேன்.
மண்டை மட்டும் பெரிதாய் , கொஞ்சம் முடிகள், மூக்கு காக்கா மாதிரியியே....
எங்கள் ஊர்களில் பெயர் வைப்பதில் அனைவரும் வல்லவர்கள். இவனுக்கும் இந்த பெயரை வைத்து கடந்து போய் விட்டனர்.
அந்த பெயர் மட்டும் பல வருடங்களாய் புரளும். சில நாள்கள் கழித்து அம்மாவும் கூப்பிட ஆரம்பிப்பார். பின் குடும்பமே கூப்பிடும். ஊர் கொண்டாடும். கடைசியில் காக்கா தான் பொது பெயராகி விடும்.
ஒவ்வொருத்தாய் போய் பார்க்கின்றோம்.....
அந்த அண்ணன் ஒவ்வொருத்தர் பெயரையும் சொல்லிக் கூப்பிடுகிறான். எல்லாரும் முழிக்கிறார்கள்.
கடைசியாய் அக்காவை பார்க்கணும் என்கிறான். அக்கா வருகிறார்.
தள்ளி நின்று பார்க்கிறாள். அவளுக்கும் போதா நிலை. ஊர் ஏற்றுக் கொள்ளாதநிலை.
என்னச் சொல்ல, என்னச் செய்ய
என முடிக்க முடியாத நிலை.
தம்பி .... என கூப்பிடவே இல்லை.
அவனும், அக்கா.... அக்கா.... என அரற்றுகிறான் யாரும் கண்டுக் கொள்ள வில்லை.
ஆட்டோ டிரைவரும் தனக்கு கூட்டிட்டு வந்த கூலிக் கிடைக்குமா? என
அவரும் எட்டிப்பார்க்கிறார்.
அந்த ஊர் மண்ணும் எட்டிப்பார்க்க வில்லை. நாயும் மோந்து பார்க்க வில்லை.
கடைசியாய், ஒரு பிடி மண்ணை எடுத்து தூவி நீங்க நல்லாயிருப்பிங்க என கடந்துப் போகிறது அந்த மனம்.
அப்போதும் இப்போதும் காக்கா முகம்
கொண்ட மனிதர்களை பார்க்கின்ற போது....
அதே நிகழ்வு வந்து போகின்றது.
மனம் அப்படித்தான் ஒரு நிகழ்வை
கை கொண்டால் அதே போல் என்றும் உறுத்திக் கொண்டே நிற்கும்.
அப்படித்தான், இப்படி நிகழ்வுகள் இந்த பூமியை நகர்த்திக் கொண்டே தான் இருக்கின்றது.
நான் ஒரு இடத்தில் தான், இந்த நிகழ்வு
நடக்கிறது .... ஆயிரம் இடத்தில் நடந்தால் எது சாபம், எது பாதிக்கும் என தெரியாத நிலை.
.
சரி.... அந்த காக்கா அண்ணன் ...
இப்போது இருக்கிறானா? இல்லையா?
என மனம் அடிக்கடி கேள்விக் கொண்டே இருக்கும்.
அது மட்டுமில்லாமல் அந்த சாபம் பலிக்குமா? என அடிக்கடி கேள்வி கேட்டு நடப்பேன்.
பல காக்காக்கள் குருவிகள் என்னைப் பார்த்து, பல கேட்டுக் கொண்டு தான் கடக்கின்றன ....
ஏனோ.... எதற்கு விடை தெரிவதில்லை
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்