logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்

ச. சத்தியபானு

சிறுகதை வரிசை எண் # 21


காலத்தின் அறுவடை சற்று படபடப்பாக இருந்தது பாலுவிற்கு இருந்தாலும் மனதை தேற்றிக்கொண்டு இடப்புறமாக வரிசையாக போடப்பட்ட இருக்கையில் கடைசியில் அமர்ந்தான்.... எதுவும் பேச முடியாத அளவுக்கு மனதிற்குள் ஒரு புழுக்கமாகவே இருந்தது. தன் முகம் கலையாது அப்படியே இருக்கும் சட்டைக்கு சில வாசனை திரவியங்களை இட்டும் அணிந்து வந்த சட்டைக்கு மேல் வியர்வை நாற்றமானது வர ஆரம்பித்தது. எதுவும் பேசாமல் பதட்டத்தோடு தன் எதிரில் இருப்பவர்களின் முகத்தை பார்த்து பார்த்து தனது முகத்தை கைக்குட்டைகளால் மறைத்துக் கொண்டான். எப்பொழுது மருத்துவரின் அழைப்பு மணி வருமோ என்ன சொல்வாரோ வேறு ஏதும் பிரச்சனை என்று சொல்வாரோ என்று ஆயிரம் குழப்பங்களோடு மருந்து சீட்டை வைத்தபடியே மருத்துவரின் கதவுகளை பார்த்துக் கொண்டிருந்தார் பாலு சற்று நேரம் கழித்து மருத்துவரின் அறைக்கு உள்ளே இருந்து அழைப்பு மணி வந்தது பாலு சட்டென்று இருக்கே விட்டு எழுந்து வேகமாக நடந்து உள்ளே சென்றான் வணக்கம் டாக்டர் வாங்க பாலு வேற ஏதும் பிரச்சினை ஏன் டாக்டர் அதெல்லாம் எதுவும் இல்ல என்ன அவங்களுக்கு இப்போது உடல்நிலை ரொம்ப வீக்கா இருக்கு என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க? நீங்க சொன்ன மாதிரி தான் உணவு எல்லாம் கொடுத்தேன் அவரை ஒருவேலைக் கூட பார்க்க விட வில்லை. அப்படி இருந்தும் நேத்து எதிர்பாராத விதமா இல்லாத நேரம் இப்படி ஆயிப்போச்சு… கவலைப்படாதீங்க பாலு அதெல்லாம் ஒன்னும் ஆகாது எப்படி சார் இப்படி சொல்றீங்க நான் பார்த்தேன். என் கண் முன்னாடி தான் இது நடந்துச்சு…எப்பவும் தனிமிடு கோடு அழகூடும் அணியும் அவரது வெள்ளை சட்டையில் சற்றும் எதிர்பாராத அந்த கரையானது படிந்தது…. “புகைச்சலோடு கலந்த லேசான இருமல்” ஆக இருக்கும் என்று நான் நினைத்தேன்….. அவர் நெஞ்சை அழுத்தி பிடிக்கும் போது தான் தெரிகிறது… “ஆழமான இருமல்” அவருக்கு இருக்கிறது, என்று எண்ணாயிற்று என்ன ஆயிற்று என்று அம்மா கதறினார்…. பின்பு நானும் அலறி அடித்துக் கொண்டு அறைக்குள் சென்றேன் எப்பவும் கம்பீரமாக இருக்கும் அப்பா சற்று முகம் வாடிய நிலையில் அப்படியே தனது படுக்கையில் படுத்திருந்தார் எத்தனை முறை கூப்பிட்டும்…. அவர் கண் விழிக்கவே இல்லை. பிறகு, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்தோம் டாக்டர் என வாடிய முகத்தோடு பாலு மருத்துவரிடம் நடந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருந்தான்….. அவருக்கு லைட்டா நெஞ்சு வலி தான் வேற ஒன்னும் இல்ல நீங்க நினைக்கிற மாதிரி பயப்படுற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை அப்படி இருந்தா நான் சொல்லி இருப்ப இல்ல இனிமேல் இப்படி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார் இப்ப கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் அப்புறமா பேசுங்க அவரிடம் என்றார் டாக்டர். சரிங்க டாக்டர்….. சில மணி நேரம் கழித்து நார்மல் வார்டுக்கு அவனுடைய அப்பாவை மாற்றினர். பிறகு அம்மா அவரை கவனித்துக் கொண்டிருந்தார் அப்போது அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து கொடுத்தான் பாலு… பாலு அவனோடு சேர்த்து இன்னும் இரண்டு குழந்தைகள் இந்த தம்பதிக்கு உண்டு. ஆனால்,அவர்கள் பெரிதும் இவர்களை கண்டு கொள்வதில்லை பாலு கடைக்குட்டி என்பதாலும், மிகவும் செல்லமாக வளர்ந்த பையன் என்பதாலும் அவனுக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைய வேலைகளுக்கு ஆஃபர் வந்த போதும் அவனுக்கு அப்பா அம்மாவை விட்டு பிரிந்து செல்ல மனமில்லை அதனால் அவர்களுடனே இருக்கிறான். மற்ற இரு மகன்களும் பெரும்பாலும் இவர்களை கண்டு கொள்வதே இல்லை. அதை பெரிதும் யோசிப்பதும் இல்லை இவர்களும், தங்களுக்கு பாலு மட்டும் போதும் என்ற எண்ணத்தோடு இருந்தனர். பாலுவும் அவன் அப்பா அம்மா பார்த்த பெண்ணை கட்டிக்கொண்டு அவர்களுடைய இருந்து வந்தான் அவனுக்கு “ஆரோவ்” என்ற ஒரு மகனும் இருக்கிறான்…. பாலுவின் சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள பொய்க்காரப்பட்டியில் அவர்களுக்கு சொந்தமாக சில வயக்காடுகளும் ஒரு பண்ணை வீடும் உள்ளது அங்கு பெரும்பாலும் போவதில்லை… அண்ணன்கள் இருவர் வந்தால் மட்டும் தன்னுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்காக அங்கு செல்வர் பாலு தற்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்…. சென்னையில் பாலுக்கு சொந்தமாக ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு உள்ளது அங்கு தனது குடும்பத்தோடு வசித்து வருகிறான்…. சில நாட்கள் கழித்து பாலு ஆஸ்பத்திரியிலிருந்து தனது தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தான்.. அப்போது இன்னும் சில நாட்கள் வீட்டில் இருந்தே ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியிருந்தார் பாலுவை கையசைத்து கூப்பிட்டார் சுப்பு உடனே பாலு அவரை நோக்கி வந்தான் ஆஸ்பத்திரியில் எவ்வளவு பணம் செலவானது, என கேட்டார். அதை எப்படி நீ புரட்டினாய் என விசாரித்தார். அதற்கு பாலு லோன் எடுத்து தான்’ ப்பா ரீட்மென்ட் பார்த்தேன் என்றான்…. இனி அதை எப்படி கட்டுவ என்று கவலையோடு சுப்பு கூறினார். இனி நானும் எந்த ஒரு வேலைக்கு போக முடியாது வீட்லதான் ஓய்வு எடுக்குற மாதிரி இருக்கும் நீ குடும்பத்துல இருக்கிற நிறைய செலவுகளை எப்படி சமாளிக்க போற என்று புலம்பினார். அதெல்லாம் கவலைப்படாதீங்க’ப்பா ஓவர் டைம் டூட்டி பார்த்தா எல்லா கடனும் அடிச்சிடலாம் என்றான் பாலு இருந்தாலும் சுப்புவிற்கு மனம் சம்மதிக்கவில்லை நமக்கு சொந்தமான கொஞ்ச நிலம் மதுரையில் இருக்குல்ல அதை வேணா வித்து உன்கிட்ட கொடுத்துர’வா என கேட்டார். அதை வாங்க மறுத்தான் பாலு. எங்கள படிக்க வைக்கிறதுக்கு நீங்க ரொம்ப பணம் செலவழிச்சிட்டிங்க ரொம்ப தூரம் கஷ்டப்பட்டுட்டீங்க விடுங்கப்பா வயசான காலத்துல எதுக்கு அந்த நிலம்தான் உங்ககிட்ட இருக்கு இருக்கட்டும்’ப்பா பாத்துக்குக்கலாம்… பார்வதி மெதுவாக சுப்புவின் அருகில் வந்து அமர்ந்தார். நம்ம பெத்த மூத்த பசங்க ரெண்டு நம்மளை பார்க்கிறதே கிடையாது இவன் தான் நம்மள கடைசிவரை பார்க்க போறான்றது நல்லா தெரிஞ்சு போச்சு அந்த சொத்தை வித்து இவன்கிட்டே கொடுத்துடுவோம் என்று கூறினால் பார்வதி அதைத்தான் நானும் அவன் என்கிட்ட சொன்ன ஆனா அதை வேண்டாம் என்று மறுக்கிறான்…. அலைபேசியில் மணியானது ஒலித்தது சுப்பு யாராக இருக்கும் என்று மெதுவாக எடுத்துப் பார்த்தான். ரவி என்று வந்திருந்தது ரவி வேறு யாரும் இல்லை சுப்புவின் மூத்த மகன் தான் மறுபடியும் மறுபடியும் போன் ஒலித்தது அதை எடுக்க மனம் என்று சுப்பு கையில் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பார்வதி அங்கு வந்தால் யாருங்க போன் பண்றாங்க ஏன் எடுக்காம இருக்கீங்க என்று கேட்டால் அதற்கு சுப்பு பதில் பேசாது போனை அவளிடமே கொடுத்தான் பார்த்தால் ரவி என்று வந்திருந்தது அவளுக்கு முகத்தில் சந்தோஷமானது அள்ளித் தெளித்தது… ஹலோ! எப்படி இருக்கிற ரவி? என்று போனை அட்டென்ட் செய்து பேசினாள். அதற்கு ரவி நான் எல்லாம் நல்லாதான் இருக்கான் இங்கு எனக்கு ஒரு பண பிரச்சனை இருக்கு அதுக்கு மதுரையில் இருக்க நம்ம சொந்த இடத்தை வித்து தருவீங்களா என கேட்டான் பதில் பேசாது பார்வதி சுப்புவே பார்த்துக் கொண்டிருந்தாள் சரி தரேன் என்றாள் உடனே போனை அணைத்து விட்டான் ரவி. சுப்புவும்,பார்வதியும் பாலு விடம் சொல்லாமல் மதுரைக்கு கிளம்பினர். அங்கு சென்று தனக்கு சொந்தமான நிலத்தை ஒருவரிடம் கிரயம் பேசி விற்றனர். பாலு பலமுறை போன் செய்தும் அவர்கள் எடுக்கவில்லை பிறகு அனைத்தையும் பெற்று பணமாக்கி மீண்டும் வாழும் வந்தனர். பிறகு மணிக்கும்,ரவிக்கும் போன் செய்து சென்னையில் உள்ள பாலுவின் வீட்டுக்கு வரும்படி தகவல் கொடுத்தனர். அவர்கள் இருவரும் பாலுவின் வீட்டிற்கு வந்தனர். பிறகு தாங்களுடைய நிலத்தை விற்று பணமாகி தொகை இவ்வளவு என்று கூறினர். உடனே மணியும்,ரவியும் நம்முடைய நிலம் இவ்வளவு தொகைக்காக விக்கப்பட்டது என்று இருவரும் கேட்டனர். இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் பாக்கி உள்ளது மற்ற எல்லாவற்றையும் வித்த பணம் இது என்றாள் பார்வதி. சரி அம்மா அப்பா இருவரையும் இனி நாங்களே பார்த்துக் கொள்கிறேன் என்றனர் ரவியும், மணியும் நீயும் எவ்வளவு நாள் தான் அவங்கள வச்சு பாத்துப்ப நாங்களும் கொஞ்ச நாள் வச்சுக்கிறோம் என்று பாலுவிடம் கூறினர்கள். இப்போதைக்கு ஆளுக்கு 50 ன்னு பிரிச்சுக்கிடுவோமா என கேட்டான் ரவி அதெல்லாம் ஒன்னும் வேணாம் டா நமக்கு அம்மா அப்பா தான் முக்கியம் என்றான் மணி. அதற்கு பாலு பதில் பேசாத அமைதியாக இருந்தான். ஏம்பா உனக்கு எது வேண்டாமா? என கேட்டான் சுப்பு… அதற்கு பாலு பணம் எல்லாம் எது வேண்டாம்’ பா உங்களோட ஆசிர்வாதம் இருந்தா போதும் எங்களுக்கு என்றான். உங்க புண்ணியத்துல நான் நிறையவே சம்பாதிக்கிறேன் உங்கள நான் கடைசிவரை பார்த்திருக்கிறேன் என்ன கேட்டான். அதற்கு சிரித்தபடியே தனது மூத்த மகன்கள் இருவரையும் பார்த்தார் சுப்பு நீங்களும் நாங்க பெத்த பிள்ளைய தான் இவனும் நாங்க பெத்த பிள்ளைய தான் இவனுக்கு “பணத்தை பத்தி சொல்லித் தராமல் பாசத்தை மட்டும் சொல்லித் தந்திருக்கும்” ஆனா, உங்களுக்கு “பாசத்தை சொல்லி தராமல் பணத்தை பத்தி மட்டும் தான் சொல்லி தந்து இருக்கோம்”. ஒரே வயிற்றில் பிறந்தாலும் வெவ்வேறு குணங்கள் நான் உங்களுக்கும் இருக்கிறது அன்று நான் “என் தந்தைக்கு விதைத்த விதையை” இன்று “என் பிள்ளைகள்” மூலம் அறுவடை செய்கிறேன். ஏதோ என் மனைவி பார்வதி செய்த புண்ணியம் தான் என் மகன் பாலு மட்டும் தப்பி பிறந்துள்ளான். பாலு பணம் முழுவதையும் அண்ணன்களுக்கு கொடுத்து விடுங்கள் அப்பா என்றான் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றான் பாலு. பிறகு உனக்கு கடன் இல்லையா பாலு நீயும் கொஞ்சம் பணம் எடுத்துக்க என்றான் சுப்பு அதற்கு எனக்கெல்லாம் எதுவும் வேண்டாம்’பா என் உடம்புல வலி இருக்குற வரியை நான் சம்பாதித்து பிழைத்துக் கொள்வோம்’பா மணிக்கும்,ரவிக்கும் சேர வேண்டிய தொகையைப் பிரித்துக் கொடுத்தார் சுப்பு மீதம் இருக்கும் தொகையை பாலுவின் மகனான ஆரோவின் பேரில் பேங்கில் போட்டு விடலாம் என கூறினார்… பாலு அதை மறுத்தான் பிறகு பார்வதி உனக்கு எங்களது பணம் தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் உன்னுடைய பயனில் எதிர்காலத்திற்கு தேவைப்படும் அவன் வைத்துக் கொள்ளட்டும் என்றால் பார்வதி. பதில் பேசாதே அமைதியாக நின்றான் பாலு பிறகு பணத்தைப் பெற்ற மணியும்,ரவியும் உடனடியாக வெளிநாடு கிளம்பினர். ச. சத்தியபானு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.