Sathyaraj
சிறுகதை வரிசை எண்
# 19
"சத்துணவு"
எண்பதுகளின் இறுதியில்,
தொண்ணூறுகளின் துவக்கத்தில்
திரும்பும் திசையின் சுவர்கள் எங்கிலும் ஆங்காங்கே
'ஒரு தம்பதி மற்றும் அவர்களின் ஒரு குழந்தை' என மூவரின் முகத்திலும் புன்னகை ததும்ப அப்போது
அதிகரித்திருந்த மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு மகிழ்ச்சியான ஒரு குடும்பம் எப்படி இருக்கும் என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதன் உதாரணமாக, விளம்பரமாக வரையப்பட்டு
அதன் கீழே
"நாம் இருவர்
நமக்கு ஒருவர்"
எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை
நாம் கண்டிருப்போம்.
அது போலவே தரணிதரன்,ஜெயா தம்பதிக்கு திருமணம் ஆகி ஓராண்டிற்குள்ளாகச் சரிவர உறுப்புகள் வளர்ந்திடாமல் மிகவும் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்து பத்தே நாட்கள் ஆன நிலையில் இறந்துவிட,
வேதனையில் மூழ்கிய அவர்களுக்கு
அடுத்த ஓராண்டிலேயே
ஆண் குழந்தை ஒன்று சுகப்பிரசவத்தில் பிறக்கிறது.
தரணிதரன் தன் மகனுக்கு
ராசி,நட்சத்திரம் பார்த்து ஜாதகம் கணித்து ஆசை ஆசையாய் யோகேஸ்வரன் எனப் பெயர்
சூட்ட, தன் மனைவியிடம்……
“ஏய்! ஜெயா இவனை நல்லா வளர்த்து பெரியாளாக்கணும்டி”
என மகிழ்ச்சியாகக் கூற……..
திருமணம் ஆகி யோகேஸ்வரன் பிறக்கிற இரண்டு ஆண்டுகள் வரையிலும், தரணிதரன்
ஒரு தனியார் நிறுவனத்தில் அதுவும் சொற்ப சம்பளத்தில் சாதாரண விற்பனைப் பிரதிநிதியாகக் குடும்பம் நடத்தவே கொஞ்சம் கஷ்டப்படுகிற நிலையில்தான்
பணியாற்றி வந்தார்.
இந்தியாவிலேயே ஒரு பெரிய பிளாஸ்டிக் கம்பெனியில்
தமிழக மாநிலத்தின் பொறுப்பு மிக்க விற்பனை மேலாளர் பணி.
சுதந்திரம் நிறைந்த மனதிற்கு நிறைவான ஒரு பணி கிடைத்த மகிழ்வில் தரணிதரன்…..
”ஜெயா! எல்லாம் நம்ம மகன் பொறந்த நேரம்,அவன் நமக்குன்னு கடவுள் கொடுத்த யோகம்” எனச் சொல்லி சந்தோஷப்படும் அளவிற்கு தன் மகனின் மீது எல்லையற்ற அன்பு வைத்திருந்தது ஒரு புறம் என்றால்
………………
இந்த வேலை தனக்கு உறுதியாகக் கிடைக்கும் என்ற எண்ணம் சிறு நம்பிக்கையாய் தரணியின் மனதில் துளிர்விட..
“மாமா உங்களுக்கு இப்பப் பண்ணிட்டு இருக்குற வேலையை விடவும், அதிக சம்பளத்துல ஒரு நல்ல வேலை கிடைக்கணும்னு நான்
பிரேயர்ல வச்சு உபவாசம் இருக்கவா?” என ஜெயா அன்புடன் கேட்டதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு…..
“சரிமா..பிரேயர்ல வை” என்று அன்பாகச் சொல்லும் அளவிற்கு மனைவி ஜெயாவுடைய பிரார்த்தனையின் மீதான நம்பிக்கையும்,அன்பும்
மற்றொரு புறம்.
தரணிதரன் பிறப்பால் இந்து மதம் ஆனாலும் “எம்மதமும் சம்மதம்”
என்ற கொள்கையைக்
கொண்டிருந்தார்.இஸ்லாமிய,
கிறிஸ்துவ மதங்களைச் சார்ந்த தனது நண்பர்களோடு சேர்ந்து பள்ளிவாசலுக்கும், தேவாலயத்திற்கும்
சகஜமாகச் சென்று வணங்கும் வழக்கமும் கொண்டிருந்தார்.
ஜெயா தரணிதரனின்
மாமன் மகள் தான் என்றாலும்
திருமணத்திற்கு முன்பே ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்.இதை தனது அம்மா மூலமாக அறிந்து கொண்ட தரணி,”எனக்கு கல்யாணம் பண்ணிக்கற எண்ணமே இல்லம்மா, என்ன தயவு செஞ்சுவிட்ருங்க”..
என்க.
“டேய் தரணி! ஜெயா ரொம்ப நல்ல பொண்ணுடா,அவ நிச்சயமா கல்யாணத்துக்கு அப்புறம்
நம்ம சம்பிரதாயங்களையும், சாங்கியங்களையும் கடைப்பிடிக்கறதோட மட்டுமில்லாம, உன்னயும் நல்லா
பார்த்துக்குவாப்பா”
என அம்மா சொல்லி முடிக்கவும்,
தான் பெரிதும் நேசிக்கிற தனது அம்மாவின் தவிப்பை தவிர்க்க மனமின்றி மணமானவர்கள் தான் தரணிதரன்- ஜெயா தம்பதி.
தரணியின் குடும்பத்தினர் கோவையிலேயே மிகப்பெரும் வசதி படைத்த தனவந்தர்களாகப் பல தலைமுறைகளாக வாழ்ந்தவர்கள்.
சகல வசதிகளோடும் விரும்பியதைச் சுவைத்து சக்திவானாகத் திகழ்ந்து, மகிழ்ந்திருந்த தரணி தன்னுடைய பதின்பருவத்தை அடைந்திருந்த பொழுதில் தரணியின் தந்தையாரால் அதுவரையிலான அவர்களின் அனைத்து சொத்துக்களும் அவர்களை விட்டு
விடைபெற்றிருந்தது.
மூன்று சகோதரிகளோடும்,இரண்டு சகோதரர்களோடும் பிறந்தவரான தரணி அவர்களை விடவும்,
அவரின் அப்பாவிடம் அதிகம் முரண்பட்டு
“நீங்க செய்யறது கொஞ்சம் கூட எனக்கு சரியாப் படலப்பா,
என்னால இதை எல்லாம் ஏத்துக்க முடியாது ” என முரண்டு பிடித்து ஒவ்வொன்றிற்கும் ஏதாவது ஒன்று சொல்ல போய் அப்பாவிற்கு ஆகாத மகனாகவே ஆகிப்போனார்.
எவ்வித சூழலையும் தனது தன்னம்பிக்கையின் மூலமாகக் கடந்து செல்லும் தரணி தன் பள்ளிப் படிப்பை முடித்த பின்
தனது நண்பர்களோடு சேர்ந்து “பேனா நண்பர்கள் குழு” என ஒருங்கிணைத்து கோவையில் பத்திரிக்கை ஒன்றைச் சிறப்புடன் சில காலம் நடத்திக் கொண்டிருந்தவர் தனது பத்திரிக்கைக் குழு நண்பர்கள் ஒவ்வொருவராகப் பணி நிமித்தமாகவும்,திருமணம் என்றும் பிரிந்து செல்ல ஒரு மாற்றத்தை எதிர் நோக்கிய தரணி அன்றைய மெட்ராஸிற்குச் சென்றவர்,மெட்ராஸ் மண்ணின் முதல் வழக்கமாகிப் போகிற வறுமையான வாழ்வைப் பல பணிகள் செய்தும்,அதன் பிறகு நண்பருடன் இணைந்து சிறிய மளிகைக் கடை வைத்து நடத்தியதன் மூலமாகக் கிடைத்த அனுபவங்களே பின்னாட்களில் தரணிதரன் மார்க்கெட்டிங் துறையைப் பெரிதாக தன் தோள்களிலே தாங்கிக் கொள்ள காரணமானது.
இரண்டு சகோதரிகள்,இரண்டு சகோதரர்கள் உடன் பிறந்த ஜெயாவின் குடும்பமோ சாதாரணமான ஒரு நடுத்தரக் குடும்பம் தான்.ஜெயாவின் அப்பா ராமகிருஷ்ணன் கோவையில் பிரபலமாக இயங்கி வந்த
பஞ்சு மில்லின் நிர்வாகி.
அம்மா வேணியோ கோவையிலேயே கர்நாடக இசை ஆசிரியராகக் குடும்பத்தைக் கவனிக்க, குடும்பத்திலுள்ள அனைவருடைய துணிகளையும் துவைப்பதும், சமையல் செய்வதும் என ஜெயா வீட்டை கவனிப்பதுமாக,குடும்பமே தன் உலகம் என வாழ்ந்தவர்.
வருடங்கள் சில கழித்து இவர்கள் தம்பதிகளாக இணைந்ததும்,
யோகேஸ்வரன் இவர்களுக்குப்
பிறந்ததும் யாருமே அவர்களது வாழ்வை எதிர்பாராமல் அரங்கேறும் அரங்கேற்றம் தான் இந்த வாழ்க்கை போல.
யோகேஸ்வரனுக்கு அனைத்து விதமான சத்தான ஆகாரங்களையும்
கொடுக்க நினைத்தவர் Boost,Horlicks,
Bournvita என அனைத்துடனும்,
பல விதமான விளையாட்டுச் சாதனங்களையும் வாங்கிக் கொடுத்து மகனை சந்தோஷப்படுத்தி
அவர்களும் சந்தோஷப்பட்டனர்.
யோகேஸ்வரனுக்கு மூன்று வயது ஆனதும் அருகிலுள்ள பெரிய மெட்ரிகுலேஷன் ஸ்கூலில்
Pre KG-ல் சேர்த்து விட்டு யோகேஸ்வரன் முதல் நாள்
புதுச் சீருடையில் பள்ளிக்குச் சென்று வந்ததும் அவனைப் பார்த்து சந்தோஷப்பட்ட தரணி….
“ஜெயா! இவன இங்கேயே +2 வரைக்கும் படிக்க வச்சிரணும் மா” என்ற தன் கணவனைப் பார்த்து
“நல்ல பேர் போன ஸ்கூல் தான் மாமா இங்கயே படிக்கட்டும்”
என சந்தோஷப்பட்டாள்.
அப்படியே அவனுக்குக் கடைசி வரை நல்ல ஆங்கில வழிக் கல்வியைக் கொடுத்து விட வேண்டும் என்பது தரணியின் திட்டமான திடமான முடிவாக இருந்தது.
நம்மைப் படைத்தவன் நமக்காகப் போட்டு வைத்த திட்டத்தின் முன்பு..
நாம் போடும் திட்டமெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.
தரணியின் குடும்பம் மருதமலைக்குச் செல்லும் வழியிலுள்ள வடவள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
யோகேஸ்வரன் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் இரவில் பதட்டத்துடன் வீட்டிற்கு வந்த தரணி..
“ஜெயா! நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ எப்ப வேணாலும் போலீஸ் நம்ம வீட்டுக்கு வருவாங்க, வந்து என்ன பத்திக் கேட்டா நான் வீட்டுக்கு வரவே இல்லைன்னு சொல்லிடு,புரிஞ்சதா?” எனக் கூறி முடிக்க அதைக் கேட்டு எதுவும் புரியாமல் தரணியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயா….
“என்ன மாமா?
நீங்க என்ன சொல்றீங்க?
என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் பொறுமையா சொல்லுங்க” என்க.
“இப்ப என்ன எதுவுமே கேட்காத ஜெயா,நான் அப்புறமா சொல்றேன்”
எனச் சொல்லிவிட்டு தன் துணிகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு
“நான் போயிட்டு ரெண்டு நாள்ல வந்துடறேன்” எனக் கூறிவிட்டு புறப்பட ஒன்றுமே புரியாமல் ஜெயா அவரைப் பார்த்து திகைத்து நிற்க நாட்கள் இரண்டும் கடந்தது.
வீட்டை விட்டுச் சென்ற தரணி மட்டும் வீட்டுக்கு வந்தார்.தரணி வருவார்கள் என்று சொல்லிச் சென்ற போலீஸ் வீட்டிற்கு வரவில்லை என்பதை ஜெயாவின் பொறுமையான முகமே தரணிக்கு தெளிவுபடுத்தியது.
“மாமா முதல்ல இந்த டீயக் குடிச்சிட்டு போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க, அப்புறமா பேசிக்கலாம்.. நான் டிபன் ரெடி பண்றேன்” என்ற ஜெயாவின் வாஞ்சை மிகு வார்த்தைகளில்
வசமாகிப் போனார் தரணி.
காலை உணவை முடித்துவிட்டு அவராகவே ஜெயாவிடம்…...
“கிளையன்ட் ஒருத்தரு ஒண்ணோ முக்கால் லட்ச ரூபாய்க்கு பர்சேஸ் பண்ணிட்டு என்ன ஏமாத்திட்டாருமா, கம்பெனியிலிருந்து என் மேல கம்பளைண்ட் ரைஸ் பண்ணி இருப்பாங்கன்னு நெனச்சு தான் பயந்தேன்.ஆனா அவங்க அப்படி பண்ணலங்கறத அப்றமா தான் தெரிஞ்சுகிட்டேன்.அவங்க மில்லியனர் கம்பெனிங்கறதால அந்த அமௌன்ட்ட என்ன கட்டிட்டு வேலைல கண்டினியூ பண்ண சொல்லிட்டாங்க..1.75 லட்சத்துக்கு நான் எங்க போய் யார்கிட்ட கேட்பேன்” என்று தரணி சொல்லி முடிக்கும் முன்பே…
“விடுங்க மாமா தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.. நான் நம்பற அந்தக் கர்த்தர் உங்களக் கைவிடல” என்றதும் ஆத்திரமான தரணி..
“உன்னை எல்லாம் பேசிப் பேசி (Brain Wash) மூளைச்சலவை பண்ணிட்டிட்டாங்கடி”
என்று கன்னத்தில் அறைய வீடே சற்று நேரம் நிசப்தமானது.
சமூகத்தில் உறவுகளுக்கு இடையே ஒரு அந்தஸ்தில் அனைவரும் மதிக்கக் கெளரவமாகச் சில காலங்கள் வாழ்ந்த ஒருவருக்கு
‘அந்நிலை இனி தனக்கில்லை‘
என்ற சூழ்நிலை வரும் போது இயலாமை அவர்களை அவ்வாறாக ஆட்டுவிக்கும் என்பது தரணியின் விஷயத்தில் மெய்யானது.
அது வரையிலான வாழ்க்கைப் பற்றிய அவர்களின் கனவு ஒரு நொடியில் தகர்ந்து போனது. இருக்கின்ற வீட்டின் வாடகையைக் கூட கொடுக்க முடியாமல் வீட்டிலிருந்த அனைத்து மேஜை, பாத்திர சாமான்களையும் விற்று
ஒரு சிறிய வீட்டில் குடியேறினர்.
மகன் யோகேஸ்வரனின் யோகமோ,
மனைவி ஜெயாவின்
பிரார்த்தனையோ எதுவும் எந்தவித
சலுகையும் அளிக்க மறுக்க, அழைக்கழிப்புகளுக்கு மத்தியிலே அல்லாட ஆரம்பித்தது அவர்களின் வாழ்க்கை.
அதுவரை வசதி குடியேறி இருந்த அவர்களது குடும்பத்தில் வறுமை வசதியாகக் குடியேறி இருந்தது.
போராடிப் பார்த்த தரணிதரன் சமாளிக்க முடியாமல் ஜெயாவின் தம்பி வீட்டில் அவர்களை தங்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இப்படியாகச் சில மாதங்கள் கடந்த பின்னர் புளியகுளத்தில் மீண்டும் ஒரு சிறிய தனியார் கம்பெனியில் குறைவான சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்த தரணிதரன் ஜெயாவையும் மகன் யோகேஸ்வரனையும் அழைத்து வந்து மூவரும் அங்கேயே சிறிய வீடு பார்த்து குடியேறினர்.
இம்முறை யோகேஸ்வரனுக்கு
வீட்டின் அருகிலுள்ள
“புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி” என்றாகிப் போனது.தலைமை ஆசிரியர் மீண்டும் முதல் வகுப்பில் இருந்து மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும் என்று சொல்ல யோகேஸ்வரன் ஃபெயிலே ஆகாமல்
மீண்டும் முதலாம் வகுப்பில் இருந்து
பள்ளியில் சேர்க்கப்படக் காரணம் அது தமிழ் மொழிப் பள்ளி என்பதே.
ஜெயா தீவிரமாக கிறிஸ்தவ மதத்தை மட்டும் பின்பற்றி வருவதை எண்ணி தரணி அடிக்கடி ஜெயா
மீது ஆத்திரப்படுவதும்,ஜெயாவைக் கண்டிப்பதும் என மகிழ்ச்சி என்றால் என்ன? என என்னும் அளவிற்கு ஆக,
யோகேஸ்வரனுக்கு அப்பாவின் மீது பாசம் போய் பயம் வர ஆரம்பித்தது.
இப்படியாக இரு ஆண்டுகள் செல்ல மீண்டும் தரணி ஜெயாவிடம்…
“மரப்பாலத்துல வீடு பாத்திருக்கேன் நாம அடுத்த மாசமே இங்க காலி பண்ணிட்டு அங்க போகப் போறோம்” என்றதும் மிகவும் சாதுவான தனக்கென்று அது வேண்டும்,இது வேண்டுமென்று நச்சரித்துக் கேட்கக்கூட தயங்குகிற யோகேஸ்வரன்..
“அப்பா..அப்பா…ப்ளீஸ் பா இங்கயே இருக்கலாம் பா,இங்க எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க, ஹவுஸ் ஓனர் வீட்டுல புதுசு புதுசா டெக்ல படம் போடுறாங்க, அது மட்டும் இல்லாம இந்த ஸ்கூல்ல நான் ரொம்ப நல்லாப் படிக்கிறேன் அப்பா” எனக் கெஞ்ச அதற்கு தரணி
வாயின் மீது ஆள் காட்டி விரலை வைத்தவாறே சத்தமிட்டு எழுந்தவாறே……
“நான் சொல்றத மட்டும் தான் கேட்கணும்” என அவனை அடித்து அதட்ட அவன் தேம்பி தேம்பி அழுதவாறே அமைதியாகிப் போனான்.
மனைவியின் வழிபாட்டு முறையை மாற்றுவதற்காக மரப்பாலத்திற்குக் குடிபெயர்ந்த தரணிக்கு தன்னுடைய வாழ்க்கை முறையே மாறப்போகிறது
என்று தெரியாமல் போனது.
மிகவும் சிறிய ஊரான மரப்பாலத்தில் ஒரு சிறிய அரசு நடுநிலைப்பள்ளி மட்டுமே இருந்தது.
பள்ளியில் சேர்க்கப்பட்ட யோகேஸ்வரனுக்கு மலைகளும்,காடுமாக அந்த ஊரே மிகவும் புதிதாகவும்,விஸ்திரமாகவும் இருந்தது.
குறைந்த அட்வான்ஸ்
தொகைக்குப் பேசி அங்கு வீடு மாறிய இரண்டே மாதங்களில் மீண்டும் தரணியின் வேலை பறிபோக அடுத்தடுத்து வாடகை பாக்கியாக கொதித்துப்போன ஹவுஸ் ஓனர்கள் அதற்கு மேலும் பொறுத்திருக்க பொறுமை இன்றி
வீட்டைப் பூட்டி சாமான்களை வெளியே வைத்து விட்டனர்.
செய்வதறியாது திகைத்து நின்ற அப்பா தரணியையும்,ஓரமாக அழுது கொண்டே நின்ற அம்மா ஜெயாவையும் பார்த்த யோகேஸ்வரன் அந்த ஒன்பது வயதில் என்ன செய்வது என்றே தெரியாமல் அழ ஆரம்பித்தான்.
ஜெயா தன் உடன் பிறந்த
இளைய தம்பி வெங்கடேஷிற்கு வீட்டின் வாடகைப் பிரச்சனை குறித்து போட்டிருந்த
லெட்டர் கைக்குக் கிடைத்திருக்கும் போல..
இவர்களின் முன்பு வேகமாக வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கிய வெங்கடேஷ் பதட்டத்துடன்……
“என்னாச்சு மாமா?
என்ன ஜெயா இப்படி…
என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல..என ஆதங்கப்பட்டவாறே….
“மாப்ள! இங்கயே நிக்கணும்டா..நாம புது வீட்டுக்குப் போகணும்ல மாமா அம்மா, அப்பாவக் கூட்டிட்டு போய் பார்த்துட்டு வந்துடறேன் சரியா…
இந்தா சாப்பிடு” எனத் தான் வாங்கிக் கொண்டு வந்திருந்த முட்டை பப்ஸ் பொட்டலத்தை யோகேஸ்வரனிடம் கொடுத்துவிட்டு
அதன் பின் மூவரும் வேகமாக அருகில் இருந்த அந்த ஊரின் மற்ற இரண்டு வீதிகளையும் நோக்கி நடந்தனர்.
அடுத்த வீதியிலேயே ஆயிரம் ரூபாய்
அட்வான்ஸ்,மாதம் 300 ரூபாய் வாடகைக்கு ஒரு வீடு கிடைக்க உடனே நரு டெம்போவைப் பிடித்து சாமான்களை ஏற்றி,இறக்கி
பாலும் காய்ச்சி ஆகிவிட்டது.
அந்த வீட்டிற்குச் சென்ற அடுத்த சில
நாட்களிலேயே தரணிதரனுக்குக் காய்ச்சல் வந்து முகமும்,உடலும்
ஊத ஆரம்பித்து உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகப் பதறிய ஜெயா மீண்டும் தம்பிக்கு தகவல் தர தரணிதரனை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்…
“உங்க சொந்தக்காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிச்சிருங்கம்மா,நேத்தே போயிருக்க வேண்டியது இனி அவ்வளவுதான் தாங்காது மா”
என்றவுடன் இது மருத்துவமனை என்பதே மறந்த ஜெயா உடைந்து அழுக..
“ஜெயா! கவலைப்படாத,கடனவுடன வாங்கியாவது மாமாவ எப்படியாவது பிரைவேட் ஹாஸ்பிடல்ல சேர்த்தி காப்பாத்திடலாம்” எனத் தேற்ற முயற்சிக்க..அதற்கு ஜெயா
“இல்லப்பா.. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு.
நம்ம அம்மா,அப்பாவும் இப்ப உயிரோட இல்லை.நாங்கெல்லாம் சேர்ந்துதான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்.இந்த நிலைமையில நீ! இதுவரைக்கும் பண்ணதே போதும் சாமி.நான் பிரேயர்ல வைக்கிறேன்” என சமாதானமாக இங்கேயே மாமாவின்
மேல் சிகிச்சைக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என யோசித்து
கோவை மேயரிடமிருந்து பரிந்துரைக் கடிதம் வாங்கி சிறப்பு சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றுகின்றனர்.
அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தரணிதரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்த இடைபட்ட காலத்தில் யோகேஸ்வரன் தனது அம்மாவுடன் மருத்துவமனையிலும்,
தனது அத்தை வீட்டிலும் என மாறி மாறி தங்கியிருந்து வந்தான்.
சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆன தரணிதரனை மருத்துவர் ஆறு மாதங்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி
அறிவுறுத்த காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தினசரி 20 ரூபாய் சம்பளத்திற்கு முறுக்கு பிழியும் வேலைக்கு சேர்ந்த ஜெயா குடும்ப பாரத்தை தனது தோள்களில் ஏற்றிக் கொண்டார்.
தினசரி 7 ரூபாய் பஸ் சார்ஜ்க்குப் போக,தினசரி பத்து ரூபாயை மாதம் முழுவதும் எடுத்து வைத்தால் தான் மாத வாடகை 300 ரூபாயைக் கொடுக்க முடியும் என்ற நிலையில் 17 ரூபாய் போக,தினசரி 3 ரூபாயை வைத்துக்கொண்டு மூவரும் மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும்.
சின்ன வயதில் இருந்தே யோகேஷ்வரன் தனது அம்மாவுடன் எங்கு வெளியே சென்றாலும் சாலைகளில் தனித்து விடப்பட்ட முதியோர்களையோ, மாற்றுத்திறனாளிகளையோ
யாரைக் கண்டாலும்…
“அம்மா! இவங்க எல்லாம் ரொம்ப பாவம்ல” என இரக்க மனதோடு அவர்களுக்காக வருத்தப்படுவான். அவனைப் பற்றி,அவனிடம் இல்லாததைப் பற்றி ஒருபோதும் அவன் வருத்தப்பட்டதில்லை.
தனது அம்மா தனக்காகவும், தன் தந்தைக்காகவும் படும் கஷ்டத்தை நினைத்து அப்போதும் அவன் நன்றாக படித்து வந்தான். யோகேஷ்வரனின் அம்மா வேலைக்குச் சென்ற பின்பு அவர்களின் வீட்டில் மூன்றாவதாக ஒரு துணை அவர்களுக்கு என்று இருந்தது.
90-களின் கால கட்டத்தில் ஏழைகளின் வீடுகளில் வானொலிப் பெட்டி தான் அவர்களின் குடும்பங்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கப்படாத குடும்ப உறுப்பினராக இருந்தது.
அதில் கேட்ட ஒரு பாட்டு அப்போது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அடிக்கடி யோகேஸ்வரன் உச்சரித்துக் கொண்டிருந்தான்.
“மயக்கமா..கலக்கமா
மனதிலே குழப்பமா?”
என்ற பாடலில் வரக்கூடிய
“உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”
என்ற வரிகள் என அந்தப் பாடல்
மொத்தமும் அவனை நகர்த்திச் சென்றதாய் உணர்ந்தான்.
யோகேஸ்வரன் தனது பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் மிகவும் பிடித்த மாணவனாக இருந்தான். காலையில் இருப்பதை வைத்து அம்மா செய்யும் உணவை அமைதியாகச் சாப்பிட்டுப் பள்ளிக்குச் செல்லும் அவன் மதியம்
பள்ளியில் வழங்கும் சத்துணவை தானும் சாப்பிட்டுவிட்டு காலி டிப்பனில் தனது அப்பாவுக்கும் வாங்கி வந்து விடுவான்.
தனது மகன் யோகேஸ்வரன் கொண்டுவரும் மதிய சத்துணவு தான் அந்த ஆண்டு முழுவதும் தரணிதரனின் மதிய உணவாக இருந்தது.

படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்