ச. ராஜ்குமார்
சிறுகதை வரிசை எண்
# 12
பரமசிவமும் ஐந்து முயல் குட்டிகளும்..
ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு ஆற்றங்கரை தாண்டி அந்தபக்கத்தில் இருக்கும் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச பரமசிவம் சென்றுகொண்டிருந்தார்.
நிலத்தையடைந்ததும் முதலில்
கிணற்றருகே சென்று மோட்டார் பட்டனை அழுத்தி தண்ணீரை எடுத்துவிட்டு .. அது பைப் குழாய் வழியாக சென்று நிலத்தை அடையும்
பரமசிவம் மெதுவாக வரப்பில் சென்று போய் பார்ப்பார் ..
அப்படி ஒரு நாள் அதாவது நேற்று அதிகாலை அதே நேரம் ஐந்து மணிக்கு சென்று மோட்டாரை போட்டு தண்ணீரை எடுத்துவிட்டு வரப்பில் சென்றுக்கொண்டிருந்தார்
எதர்ச்சையாக எதிரில் ஒரு முயல் பேட்டரி வெளிச்சத்தில் அது அங்குமிங்கும் எங்கும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது ..
பரமசிவம் பேட்டரியை அணைக்காமல் வெளிச்சத்தை அதன் கண்களுக்கு நேராகவே
பிடித்தபடி. லாவகமாக ஒரு கல்லை கையில் எடுத்து.
படாரென அதன் தலையில் அடித்ததும் கல் விழுந்த வேகத்தில்
சடாரென சுருண்டு அங்கேயே விழுந்தது ..
ஓடிச்சென்று அதை எடுத்து காதுகளை பிடித்து எடுத்து சென்று பம்புசெட்டில் ஒரு பையில் போட்டு மூடி ஒரு கல்லையும் வைத்து விட்டு மீண்டும் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார் ..
தண்ணீர் நிலத்தின் கடைசிவரை பாய்ந்துவிட்டதா என்று பார்த்தார் தண்ணீர் நன்கு பாய்ந்திருந்தது ..
சரி மணி 7 ஆகிவிட்டது இனி வீட்டிற்கு செல்லலாம் என்று
பம்புசெட்டிற்கு சென்று மோட்டாரை நிறுத்திவிட்டு
பையில் கட்டிவைத்திருந்த அந்த முயலை வீட்டிற்கு எடுத்து சென்றார் ..
வீட்டிற்கு சென்றதும் வீட்டில் மனைவியிடம் முயலை கொடுத்து நன்கு சமைக்க சொன்னார் ..
மனைவியோ ஏங்க இப்படி ஒரு உயிர அடிச்சி கொன்னு வந்திருக்கிங்க என்று கேட்டாள் ..
''அதற்கு பரமசிவம் அடி போடி இவளே ஞாயிற்று கிழமை மட்டும் கோழிய அடிச்சி குழம்பு வைக்கிறதில்ல அது மாதிரி தான் பாருடி வேலைய "
"முயல் என்ன நினைக்கும் போது கிடைக்குமா ஏதோ இன்னைக்கி தான் அதிசயமா மாட்டிச்சி அதான் ஒரே போடா போட்டேன் குழம்ப வை நல்லா இருக்கும் " என்று சொல்லிவிட்டு
பள்ளை விளக்கி குளித்து முடிப்பதற்குள் சமையல் நன்றாக கமகமவென தயாராகியிருந்தது ..
சமயலை ஒரு பிடி பிடித்துவிட்டு ..
அன்றாட பணிக்கு சென்றார் ..
பரமசிவம் மாலை பணியெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உடையெல்லாம் மாற்றிக்கொண்டு
நிலத்திற்கு சென்று வயல்களை எல்லாம்
ஒரு எட்டு பார்த்துக் கொண்டிருந்தார் ..
அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு அடர்ந்த புதரில் முயல் சந்தம் கேட்டது ..
அவர் மெதுவாக அந்த இடத்தில் சென்று தழை செடிகொடிகளை சற்று விளக்கி பார்த்தார்
முயல் ஐந்து குட்டிகள் போட்டிருந்தது ஐந்தும் சின்ன சின்ன குட்டிகள் பசியால் வாடி கத்திக்கொண்டிருந்தது ..
அந்த குட்டிகளை பார்த்ததும் மனம் வருந்தியது ..
" நாம் காலையில் ஒரு பெரிய முயலை கொன்றோமே அதன் குட்டிகள் தான் என்று தெரிந்ததும் " ஒரு நிமிடம் பரமசிவம் கண்களில் கண்ணீர் வார்த்தது ..
பார்க்கவே பாவமாக இருந்தது அந்த ஐந்து குட்டிகளையும்
தன் லுங்கியில் போட்டு எடுத்துக் கொண்டு பம்புசெட்டிற்கு சென்று ஒரு பையில் அனைத்து குட்டிகளையும் போட்டு வீட்டிற்கு எடுத்து சென்று
வீட்டில் வைத்திருந்த அரை லிட்டர் பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து
அனைத்து குட்டிகளுக்கும் ஊட்டினார் .. குட்டிகள் ஐந்தும்
நன்கு பாலை குடித்தது ..
இந்த ஐந்து குட்டிகளையும் எப்படி பாதுகாப்பது இதை அப்படியே விட்டால் நாய் கடித்து விடும் இல்லையென்றால் எங்கேயாவது போய்விடும் என்று பரமசிவம் எண்ணினார் ..
இதற்கு ஒரு கூண்டு தயாரித்து நாமே பாதுகாத்து பெரியது ஆனதும்
கொண்டு போய் ஆற்றங்கரை ஓரமாக நிலத்தில் விட்டுவிடலாம் என்றென்னி ..
வேகமாக வண்டிய இயக்கி ஒரு வெல்டிங் கடைக்கு சென்றார் ..
வெல்டிங் கடைக்கு
சென்றதும் முயல் வளர்க்க ஒரு கூண்டு தயார்செய்து தரும்படி அவசரமாக கேட்டார் .. கடைக்காரர் உடனே முடியாது ..
முன்பணம் கொடுத்துவிட்டு போ நாளை மாலை கூண்டு தாயார் செய்து தருகிறேன் என்றார் ..
சரி நம்ம அவசரத்திற்கு கிடைக்குமா என்று நினைத்துக்கொண்டு
இன்று ஒரு நாள் முயல் குட்டிகளை ஏதாவது கோழிகூடை வைத்து மூடி வைக்கலாம் நாளை வந்து கூண்டை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து
முன்பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பினார் பரமசிவம்
வீட்டிற்கு வந்ததும் எண்ணியவாறு முயல் குட்டிகளை கோழிக்கூடையில் வைத்து மூடி அதன் மேல் கனமாக பொருள் ஒன்றை வைத்து விட்டு இரவு உணவை
சாப்பிட்டு உறங்க சென்றார் ..
காலை விடிந்ததும் வழக்கம்போல் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு
முயல் குட்டிகளையும் பார்த்து அதற்கு வேண்டிய பாலையும் வைத்துவிட்டு
பணிக்கு சென்று மாலை
வீடு திரும்புவதற்கு முன் " முதல் வேலையாக வெல்டிங் கடைக்கு சென்றார்..
கடைக்கு சென்றதும் கடைக்காரர் தயாராக பரமசிவம் கேட்டவாரு பெரிய கூண்டாகவும் இல்லாமல் சிறிய கூண்டாகவும் இல்லாமல் ஒரு நடுதண்மையாக கூண்டாக செய்து வைத்திருந்தார் ..
கடைக்காரரிடம் மீதி பணத்தை கொடுத்துவிட்டு
அந்த கூண்டை வாகனத்தில் வைத்து கட்டி வீட்டிற்கு எடுத்து சென்றார்..
எடுத்துச்சென்ற அந்த கூண்டில் ஐந்து முயல் குட்டிகளையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு
அதற்கு தேவையான புல்லை தோட்டத்திற்கு சென்று எடுத்துவந்து அதை கூண்டில் கட்டி தொங்க விட்டு
அவரும் சாப்பிடுவதற்கு சென்றார்
சாப்பிட்டு முடித்து உறங்க சென்ற பரமசிவம்
பாய்ப்போட்டு தலையணையில் தலையை வைத்தார்
மனதில் ஒரு சிறு எண்ணம் தோன்றியது
அந்த ஐந்து முயல் குட்டிகளையும் ஒன்றுக்கூட இரக்காமல் நன்கு வளர்த்து
நம் தோட்டத்திலே மீண்டும் கொண்டு சென்று விட்டுவிட வேண்டும் ..
என்றபடியே
உறங்க ஆரம்பித்தார் ..
ஐந்து முயல் குட்டிகளும் நினைத்தபடி நன்கு வளர்த்தது
அந்த குட்டிகளும் பரமசிவத்தோடு அவர் மனைவியோடும் நன்றாகவே விளையாடிக்கொண்டிருந்தது
சரி முயல் குட்டிகள் தான் பெரியதாகிவிட்டதே இன்று கொண்டு போய் விட்டுவிடலாம் என்று அனைத்தையும் கூண்டோடு எடுத்து சென்று பரமசிவம் தன்
நிலத்திலே கூண்டை திறந்து முயல் குட்டிகளை வெளியே விட்டார்...
ஒரு உயிரை கொன்று புசிக்கும் போது இருந்த மகிழ்ச்சியை விட
அந்த ஐந்து உயிர்களை
நன்கு வளர்த்து அதை நல்லபடியாக அதன் இயற்கையோடு வாழ வழிசெய்து அதை அதன் போக்கில் வாழவதற்கு சுதந்திரம் கொடுத்தேன் என்று நினைக்கும் போது
மனதில் பெருமகிழ்ச்சியாக இருக்கிறது என்று பரமசிவம் ஆனந்த கண்ணீர் விட்டார் ......!!
ச. ராஜ்குமார்
திருப்பத்தூர் மாவட்டம்
8867933021
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்