S.sudha
சிறுகதை வரிசை எண்
# 98
பெண்மையின் பயணம்
சர்மிளா நிமிர்ந்த நடையும் நலினமான உடல்வாகும் கொண்டவள்.இரக்ககுணமுடையவள்.அமைதியான பெண்தான், ஆனாலும் அவ்வப்போது கோபம் கொள்வாள்.தனக்காய் அல்ல தன்னைச் சேர்ந்தவருக்காய்.ஒரு நாள் கோவில்ப்பட்டியிலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறுகின்றாள்.அவளது வருகை ஒரு நிமிடம் பேருந்திலுள்ளோரின் கவனத்தை ஈர்க்கின்றது.பேருந்து முழுவதும் நபர்களால் நிறைந்து வளிய,மூன்று பேர் அமரும் இருக்கையில் ஒருத்தி மட்டும் ஜன்னலோரமாய் அமர்ந்திருக்கின்றாள். அவளின் வயது சுமாராக இருபது இருக்கும்.அவள் மனம் பேதலித்த பெண்ணைப்போல்இருக்கின்றாள்.அவள் அருகில் சர்மிளா அமர்கிறாள்.
அந்தப்பெண் சர்மிளாவின் முகத்தை ஆசையுடன் பார்க்கின்றாள்.அவள் "யாராவது நம் அருகில் வந்து அமர மாட்டார்களா?"என்று காத்திருந்தாள் போலும்.சர்மிளா கனிவோடு அவள் முகத்தைப் பார்க்கிறாள்.ஆ!எவ்வளவு நேர்த்தியான புருவங்கள்,வண்டோடும் பார்வைகள்,இதழ்கள் அகல விரிந்த ரோஜா இதழ்கள். அந்த முகம் சர்மிளாவை வசியம் செய்தது.மேலும் அந்த நிலா முகத்தில் வீசிய ஒளி குழந்தையாய்ப் பரிமளிக்க சர்மிளா ஒரு நிமிடம் வியந்து போனாள்.ஆனால் அப்பெண்ணின் கண்களின் சோர்வும் முகத்தின் வேதனையும் உடலின் தளர்வும் அவள் துன்புற்றாள் என்பதை உறுத்திச் சொல்லிக்கொண்டிருந்தது."இல்லை.இவள் பைத்தியம் இல்லை.இவள் ஒரு வெகுளிப் பெண் "என்று மனதிற்குள் ஒரு குரல் மெதுவாய்ச் சத்தமிட்டது.
சர்மிளா அந்த பெண்ணிடம், "நீ எவ்வளவு அழகாய் இருக்கின்றாய்த் தெரியுமா?உன் பெயரென்ன?எங்கிருந்து வருகின்றாய்?"என்று வினவுகின்றாள்.சர்மிளாவின் வார்த்தைகள் கேட்டு அந்தப் பெண்ணின் அழகு மேலும் மிளிர்ந்தது.சர்மிளா ரசிக்கின்றாள்.முகமெல்லாம் சிரிப்பாய்க் கொண்ட பேதை சொல்கிறாள் என் பெயர் பர்வின்.நான் குலசேகரன்பட்டிணத்திலிருந்து வருகின்றேன்.அமைதியாய்க் கேட்கின்றாள் சர்மிளா.கேட்டதுதான் தாமசம் தன்னைப்பற்றி தானே ஒப்புவிக்க ஆரம்பித்து விட்டாள் பர்வின்.அக்கா!நான் என் கணவருடன் வசிக்கின்றேன்.எனக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கின்றாள்.அவள் பெயர் ஆசிஹா.நான் இப்போது என் அம்மா வீட்டிற்கு செல்கின்றேன்.அப்பா நான் சிறுவயதிலிருக்கும் போதே இறந்து விட்டார்.அப்பா என்னைச் செல்லமாக வைத்துக் கொள்வார்.என் கணவர் அன்பாக இருப்பார்.ஆனால் சில நேரம் காரணமே தெரியாமல் கடுமையாக அடிப்பார்.ஏனென்றே விளங்கவில்லை அக்கா.
"அக்கா!நான் மாடு மாதிரியா இருக்கின்றேன்?"என்று கேட்டுவிட்டு தன் முகக்குறியால் பதிலுக்காக அவள் பார்த்திருக்கும் பாங்கும் எட்டியளக்க முடியா ஏக்கங்ளும் கண்டு உள்ளுக்குள் ஏதோ அரிப்பதாய் உணர்கிறாள் சர்மிளா.இல்லை பர்வின்,நீ மிகவும் அழகானவள்.நல்ல உயரம் வண்ணம்,உடற்கட்டு,பூரணசந்திரனை ஒத்த முகம் உடையவள் நீ.அப்போதுதான் சர்மிளா காண்கின்றாள், முக்காட்டிற்டியில் நெருங்கி வளர்ந்த கருகரு முடிகள் பாதி வளர்ந்தும் வளராததுமாய் தன்னை ஒழித்துக்கொண்ருப்பதை."சந்திரனில் அழுக்கை அப்பினாற்போல் ஏதோ உன்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது பர்வின் "என்று சொல்லாமல் ஒளியும் ஒலியுமற்ற வரிகளை மனதிற்குள் உச்சரித்தாள் சர்மிளா.
பர்வின் சொல்கிறாள்.அக்கா என் கணவர் மாடு மாடு என்று திட்டுவார்.பைத்தியம் என்று ஊரெல்லாம் பரப்புவார்.என் மகளையும் என்னுடன் பேச அனுமதிப்பதில்லை.எனது நீண்ட அடர்ந்த முடிகளை வெட்டி என்னை அலங்கோலம் ஆக்குகின்றார்.கொஞ்ச காலம் நன்றாக பேசுவார் கொஞ்ச காலம் யாரோ போல் நடந்துகொள்வார்.எங்கள் பள்ளியில் எல்லோரும் பர்வின் அழகானவள், புத்திசாளி என்பார்கள்.ஆனால் இவர் மாடு, பைத்தியம் என்கிறார்.அப்படி இல்லைதானே? சொல் அக்கா.என்று சர்மிளாவின் பதிலுக்காக ஏங்குகின்றாள்,பர்வின்.மீண்டும் மீண்டும் எழுந்த ஒரே கேள்வி.அவள் எவ்வளவு காயப்பட்டிருக்கிறாள் என்பதன் ஆதாரம்.சர்மிளா சொல்கிறாள் இல்லை நீ அழகான அன்பான பெண்.பர்வின் இப்போது மிகவும் ஆதரவாய் உணர்வதாய்த் தோற்றமளிக்கின்றாள்.சர்மிளாவின் வார்த்தைகள் அவள் மனதில் புது உற்சாகத்தையும் குதூகலத்தையும் அளிக்க பொங்கிய் பெருகிய சந்தோசத்தில் தன் புஜங்களை உயர்த்தி தன் களிப்பினைக் கூட்டுகின்றாள் காட்டுகின்றாள் பர்வின்.
பர்வின் சொல்கிறாள்,அக்கா!தினமும் நான் ஐந்நூறு உக்கிகள் போட சொல்வார்.நானும் தவறாமல்ப் போடுகின்றேன்.அப்படிப் போட முடியவில்லை என்றால், கதவின் பின்புறம் இருக்கும் கம்பை எடுத்து அடிப்பார்.சிகரெட்டால் சூடு வைப்பார்.தோல் உரியும் இரத்தம் வரும்.பலநாள் வலி தாங்காமல் அழுவேன் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்.நீயே பாரேன்! என்று தன் கைகளையும் மறைவான தோள்களையும் கால்களையும் காட்டுகின்றாள் பர்வின்.
காயங்கள், தழும்புகள் ,வரிகள்,ஐயோ!சர்மிளாவின் விரிந்த கண்களில் கண்ணீர் கரை தட்டுகின்றது.கண்களை அடைத்துவிட்டாள்.அடிப்பாவிப்பெண்ணே!எல்லோரும் இயல்பாய் வாழ்ந்திருக்க இந்த சின்ன வயதில் நீ வாழ இத்தனை வேதனைகளையும் அனுபவித்தாக வேண்டுமா?இதயத்துள் ஏதோ பாறமாய் வளிய இமைகள் திறந்து மறுபடியும் பேச்சைத் துவங்குகின்றாள் சர்மிளா.
பர்வின்! !அம்மாவிடம் இதை எல்லாம் சொன்னாயா?என்றாள் சர்மிளா.சொன்னேன் அக்கா.அம்மா அவரைத் திட்டுவார்.அவர் என்னை மிகவும் அடித்துவிட்டால் என்னால் நடக்க முடியால் போகும்.அழுது கொண்டே இருப்பேன்.அப்போது பஸ் காசு கொடுத்து அம்மா வீட்டிற்கு அனுப்பி வைப்பார்.கொஞ்ச காலம் அம்மா வீட்டில் இருப்பேன்.எனது உடல்நிலை சரியானதும் அவரே வந்து எனக்கு ஸ்வீட்டும் அம்மாவிற்கு செலவிற்கு பணமும் தருவார்.அன்பாக பேசி என்னை அழைத்துச் செல்வார்.அம்மா என்னை ஆறுதல் படுத்தி அவருடன் அனுப்பி வைப்பார் இது வாடிக்கை என்கிறாள் பர்வின்.
சர்மிளா அவளின் கணவரைப்பற்றி கேட்கின்றாள்.பர்வின் சொல்கின்றாள்,"கணவனின் பெயர் அப்துல் காசிம்.அறுபது வயதாகிறது.கூழித்தொழிலாளியாக ஒரு டீக்கடையில் வேலை பார்க்கின்றார்."இப்போது சர்மிளாவிற்கு எல்லாம் விளங்கிவிட்டது.அறுபது வயது கூழித்தொழிளாளி 20வயது பெண்ணைத் திருமணம் செய்து அவளைத் தனக்கு மட்டுமே உடைமையாக்க அவளைப் பைத்தியமாய்க் காட்சிப்படுத்துகின்றான் என்று.அவளுக்கு என்ன நடக்கின்றதென்பது புரியாதபடி அவ்வப்போது அடித்து துன்புறுத்தி மனநிலை சரியில்லாதவள் போல் உருமாற்றி தகப்பனற்ற பெண்ணின் இளமைவாழ்வைத் தனதாக்கிக் கொண்ட முதிய கள்வன,அவள் கணவன் புரிந்துகொண்டாள் சர்மிளா.சர்மிளா உள்ளுக்குள் குமுறுகின்றாள்.பேரழகு கொண்ட பேதைப்பெண்ப் பெருங்கிழவனின் மனைவியா?என்று.வலி தாங்க முடியவில்லை அக்கா என்று சொல்லும் பர்வினின் தாயாக தன்னை உணர்கிறாள் சர்மிளா.இவள் கண்ணீரை மாற்றி விட முடியாதா என்று எண்ணுகின்றாள் சர்மிளா. ஒரு ஏழைக் குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் முதலாவதாக பிறந்தவள் சர்மிளா என்செய்வாள்?.உன் அம்மாவின் மொபைல் எண்ணைக்கொடு நான் பேசுகின்றேன் என்று மொபைல் எண் வாங்கி தன் மொபைலில் இருந்து கால் செய்கிறாள் சர்மிளா.மணி அடித்து முடியும் தறுவாயில் எதிர்புறமிருந்து ஒரு பெண் குரல் கேட்கின்றது.
.சர்மிளா விவரங்கள் அனைத்தையும் கூறி ,ஏன் அம்மா பர்வினை உங்களுடனேயே வைத்துக்கொள்ள கூடாதா ,?அவளால் அடி தாங்க முடியவில்லை உடலெல்லாம் காயம் என்கிறாள்.அந்த பெண் பதிலாய், அது எங்களுக்குத் தெரியும். உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ!என்ற உரத்த குரல் ஓங்கி ஒலிக்க,சத்தமில்லாமல் தனக்குள்ளே நொந்தும் நொடிந்தும் போனாள் சர்மிளா.பர்வின்,"பேசினாயா அக்கா?அம்மா என்ன சொன்னார்கள் அக்கா?என்னைக்காப்பாற்றி விடுவாயா அக்கா?நானும் சந்தோஷமாக வாழ்வேனா?"என்ற வெகுளியின் கேள்விகளில் விழுந்து எழ முடியாமல் சிக்கித் திணருகின்றாள் சர்மிளா.அதற்கு முன் தன் கண்களை மூடி மானசீகமாய் வேண்டுகின்றாள்.இறைவா!நான் உதவியற்று நிற்கின்றேன்.இந்த அபலையைக் காப்பாயா?அவளுக்கு துணைபுரியும் என்று வேண்டி,பர்வினுக்கு தைரியம் சொல்லி விடைபெறுகிறாள்.
வருடங்கள் கழிந்தது.ஆனாலும் சர்மிளாவால் அந்த நிகழ்வின் வலிகளை
மறக்க முடியவில்லை.அவ்வப்போது கேட்கின்றாள் தனக்குள்ளேயே."பர்வின் எங்கே இருக்கின்றாய்?எப்படிஇருக்கின்றாய்?இருக்கின்றாயா?"என்ற கேள்விகள் துளைக்க. மாற்றாய் முடிவெடுத்துவிட்டாள் சர்மிளா.தன் வாழ்வினை இது போன்ற அவலங்களை அழிப்பதற்காக அர்ப்பணிக்கத் தயாரானாள்.தன்னைத்தானே புதிதினும் புதிதாய் செதுக்கத் துவங்கிவிட்டாள்.
பெண்ணின் பயணம் இயல்பானது.அதே பெண்மையின் பயணம் பல கரடு முரடான கோணங்களையும் திருப்பங்களையும் தடைகளையும் உடையது.பல துறைகளிலும் பெண்கள் சாதனைச்சரித்திரங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் வேளையிலும் பட்டிதொட்டிகளில் அடிப்படை உரிமைகளும் சந்தோசங்களும் கூட மறுக்கப்பட்டு கண்ணீரிலும் செந்நீரிலும் தன்னைக்கழுவிக் கொண்டிருக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் புரிதல், மனிதாபிமானம்,நீதிசார்ந்த சிந்தனைகள் இல்லாமல் போனதே என்று எண்ணி தன் வாழ்வினையும் இளமைக்காலங்களையும் பணயமாய் வைக்க தயாரானாள் சர்மிளா.அவளுடைய வேள்விப் பயணம் வெற்றிபெற வாழ்த்துவோம்.உடனிருப்போம்.
வாழ்க பெண்மை!
வளர்க சமூகநீதி!
வாழ்வாங்கு வாழ என் இந்திய தேசம்!
-பாலகாந்தி(ஓவியர்,எழுத்தாளர்)பெண்மையின் பயணம்
சர்மிளா நிமிர்ந்த நடையும் நலினமான உடல்வாகும் கொண்டவள்.இரக்க குணமுடையவள்.அமைதியான பெண்தான், ஆனாலும் அவ்வப்போது கோபம் கொள்வாள்.தனக்காய் அல்ல தன்னைச் சேர்ந்தவருக்காய்.ஒரு நாள் கோவில்ப்பட்டியிலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறுகின்றாள்.அவளது வருகை ஒரு நிமிடம் பேருந்திலுள்ளோரின் கவனத்தை ஈர்க்கின்றது.பேருந்து முழுவதும் நபர்களால் நிறைந்து வளிய,மூன்று பேர் அமரும் இருக்கையில் ஒருத்தி மட்டும் ஜன்னலோரமாய் அமர்ந்திருக்கின்றாள். அவளின் வயது சுமாராக இருபது இருக்கும்.அவள் மனம் பேதலித்த பெண்ணைப்போல் இருக்கின்றாள்.அவள் அருகில் சர்மிளா அமர்கிறாள்.
அந்தப்பெண் சர்மிளாவின் முகத்தை ஆசையுடன் பார்க்கின்றாள்.அவள் யாராவது நம் அருகில் வந்து அமர மாட்டார்களா?என்று காத்திருந்தாள் போலும்.சர்மிளா கனிவோடு அவள் முகத்தைப் பார்க்கிறாள்.ஆ!எவ்வளவு நேர்த்தியான புருவங்கள்,வண்டோடும் பார்வைகள்,இதழ்கள் அகல விரிந்த ரோஜா இதழ்கள். அந்த முகம் சர்மிளாவை வசியம் செய்தது.மேலும் அந்த நிலா முகத்தில் வீசிய ஒளி குழந்தையாய்ப் பரிமளிக்க சர்மிளா ஒரு நிமிடம் வியந்து போனாள்.ஆனால் அப்பெண்ணின் கண்களின் சோர்வும் முகத்தின் வேதனையும் உடலின் தளர்வும் அவள் துன்புற்றாள் என்பதை உறுத்திச் சொல்லிக்கொண்டிருந்தது.இல்லை.இவள் பைத்தியம் இல்லை.இவள் ஒரு வெகுளிப் பெண் என்று மனதிற்குள் ஒரு குரல் மெதுவாய்ச் சத்தமிட்டது.
சர்மிளா அந்த பெண்ணிடம், நீ எவ்வளவு அழகாய் இருக்கின்றாய்த் தெரியுமா?உன் பெயரென்ன?எங்கிருந்து வருகின்றாய்?என்று வினவுகின்றாள்.சர்மிளாவின் வார்த்தைகள் கேட்டு அந்தப் பெண்ணின் அழகு மேலும் மிளிர்ந்தது.சர்மிளா ரசிக்கின்றாள்.முகமெல்லாம் சிரிப்பாய்க் கொண்ட பேதை சொல்கிறாள் என் பெயர் பர்வின்.நான் குலசேகரன்பட்டிணத்திலிருந்து வருகின்றேன்.அமைதியாய்க் கேட்கின்றாள் சர்மிளா.கேட்டதுதான் தாமசம் தன்னைப்பற்றி தானே ஒப்புவிக்க ஆரம்பித்து விட்டாள் பர்வின்.அக்கா!நான் என் கணவருடன் வசிக்கின்றேன்.எனக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கின்றாள்.அவள் பெயர் ஆசிஹா.நான் இப்போது என் அம்மா வீட்டிற்கு செல்கின்றேன்.அப்பா நான் சிறுவயதிலிருக்கும் போதே இறந்து விட்டார்.அப்பா என்னைச் செல்லமாக வைத்துக் கொள்வார்.என் கணவர் அன்பாக இருப்பார்.ஆனால் சில நேரம் காரணமே தெரியாமல் கடுமையாக அடிப்பார்.ஏனென்றே விளங்கவில்லை அக்கா.
அக்கா!நான் மாடு மாதிரியா இருக்கின்றேன்?என்று கேட்டுவிட்டு தன் முகக்குறியால் பதிலுக்காக அவள் பார்த்திருக்கும் பாங்கும் எட்டியளக்க முடியா ஏக்கங்ளும் கண்டு உள்ளுக்குள் ஏதோ அரிப்பதாய் உணர்கிறாள் சர்மிளா.இல்லை பர்வின்,நீ மிகவும் அழகானவள்.நல்ல உயரம் வண்ணம்,உடற்கட்டு,பூரணசந்திரனை ஒத்த முகம் உடையவள் நீ.அப்போதுதான் சர்மிளா காண்கின்றாள், முக்காட்டிற்டியில் நெருங்கி வளர்ந்த கருகரு முடிகள் பாதி வளர்ந்தும் வளராததுமாய் தன்னை ஒழித்துக்கொண்ருப்பதை.சந்திரனில் அழுக்கை அப்பினாற்போல் ஏதோ உன்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது பர்வின் என்று சொல்லாமல் ஒளியும் ஒலியுமற்ற வரிகளை மனதிற்குள் உச்சரித்தாள் சர்மிளா.
பர்வின் சொல்கிறாள்.அக்கா என் கணவர் மாடு மாடு என்று திட்டுவார்.பைத்தியம் என்று ஊரெல்லாம் பரப்புவார்.என் மகளையும் என்னுடன் பேச அனுமதிப்பதில்லை.எனது நீண்ட அடர்ந்த முடிகளை வெட்டி என்னை அலங்கோலம் ஆக்குகின்றார்.கொஞ்ச காலம் நன்றாக பேசுவார் கொஞ்ச காலம் யாரோ போல் நடந்துகொள்வார்.எங்கள் பள்ளியில் எல்லோரும் பர்வின் அழகானவள், புத்திசாளி என்பார்கள்.ஆனால் இவர் மாடு, பைத்தியம் என்கிறார்.அப்படி இல்லைதானே? சொல் அக்கா.என்று சர்மிளாவின் பதிலுக்காக ஏங்குகின்றாள்,பர்வின்.மீண்டும் மீண்டும் எழுந்த ஒரே கேள்வி.அவள் எவ்வளவு காயப்பட்டிருக்கிறாள் என்பதன் ஆதாரம்.சர்மிளா சொல்கிறாள் இல்லை நீ அழகான அன்பான பெண்.பர்வின் இப்போது மிகவும் ஆதரவாய் உணர்வதாய்த் தோற்றமளிக்கின்றாள்.சர்மிளாவின் வார்த்தைகள் அவள் மனதில் புது உற்சாகத்தையும் குதூகலத்தையும் அளிக்க பொங்கிய் பெருகிய சந்தோசத்தில் தன் புஜங்களை உயர்த்தி தன் களிப்பினைக் கூட்டுகின்றாள் காட்டுகின்றாள் பர்வின்.
பர்வின் சொல்கிறாள்,அக்கா!தினமும் நான் ஐந்நூறு உக்கிகள் போட சொல்வார்.நானும் தவறாமல்ப் போடுகின்றேன்.அப்படிப் போட முடியவில்லை என்றால், கதவின் பின்புறம் இருக்கும் கம்பை எடுத்து அடிப்பார்.சிகரெட்டால் சூடு வைப்பார்.தோல் உரியும் இரத்தம் வரும்.பலநாள் வலி தாங்காமல் அழுவேன் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்.நீயே பாரேன்! என்று தன் கைகளையும் மறைவான தோள்களையும் கால்களையும் காட்டுகின்றாள் பர்வின்.
காயங்கள், தழும்புகள் ,வரிகள்,ஐயோ!சர்மிளாவின் விரிந்த கண்களில் கண்ணீர் கரை தட்டுகின்றது.கண்களை அடைத்துவிட்டாள்.அடிப்பாவிப்பெண்ணே!எல்லோரும் இயல்பாய் வாழ்ந்திருக்க இந்த சின்ன வயதில் நீ வாழ இத்தனை வேதனைகளையும் அனுபவித்தாக வேண்டுமா?இதயத்துள் ஏதோ பாறமாய் வளிய இமைகள் திறந்து மறுபடியும் பேச்சைத் துவங்குகின்றாள் சர்மிளா.
பர்வின்! !அம்மாவிடம் இதை எல்லாம் சொன்னாயா?என்றாள் சர்மிளா.சொன்னேன் அக்கா.அம்மா அவரைத் திட்டுவார்.அவர் என்னை மிகவும் அடித்துவிட்டால் என்னால் நடக்க முடியால் போகும்.அழுது கொண்டே இருப்பேன்.அப்போது பஸ் காசு கொடுத்து அம்மா வீட்டிற்கு அனுப்பி வைப்பார்.கொஞ்ச காலம் அம்மா வீட்டில் இருப்பேன்.எனது உடல்நிலை சரியானதும் அவரே வந்து எனக்கு ஸ்வீட்டும் அம்மாவிற்கு செலவிற்கு பணமும் தருவார்.அன்பாக பேசி என்னை அழைத்துச் செல்வார்.அம்மா என்னை ஆறுதல் படுத்தி அவருடன் அனுப்பி வைப்பார் இது வாடிக்கை என்கிறாள் பர்வின்.
சர்மிளா அவளின் கணவரைப்பற்றி கேட்கின்றாள்.பர்வின் சொல்கின்றாள்,கணவனின் பெயர் அப்துல் காசிம்.அறுபது வயதாகிறது.கூழித்தொழிலாளியாக ஒரு டீக்கடையில் வேலை பார்க்கின்றார்.இப்போது சர்மிளாவிற்கு எல்லாம் விளங்கிவிட்டது.அறுபது வயது கூழித்தொழிளாளி 20வயது பெண்ணைத் திருமணம் செய்து அவளைத் தனக்கு மட்டுமே உடைமையாக்க அவளைப் பைத்தியமாய்க் காட்சிப்படுத்துகின்றான் என்று.அவளுக்கு என்ன நடக்கின்றதென்பது புரியாதபடி அவ்வப்போது அடித்து துன்புறுத்தி மனநிலை சரியில்லாதவள் போல் உருமாற்றி தகப்பனற்ற பெண்ணின் இளமைவாழ்வைத் தனதாக்கிக் கொண்ட முதிய கள்வன,அவள் கணவன் புரிந்துகொண்டாள் சர்மிளா.சர்மிளா உள்ளுக்குள் குமுறுகின்றாள்.பேரழகு கொண்ட பேதைப்பெண்ப் பெருங்கிழவனின் மனைவியா?என்று.வலி தாங்க முடியவில்லை அக்கா என்று சொல்லும் பர்வினின் தாயாக தன்னை உணர்கிறாள் சர்மிளா.இவள் கண்ணீரை மாற்றி விட முடியாதா என்று எண்ணுகின்றாள் சர்மிளா. ஒரு ஏழைக் குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் முதலாவதாக பிறந்தவள் சர்மிளா என்செய்வாள்?.உன் அம்மாவின் மொபைல் எண்ணைக்கொடு நான் பேசுகின்றேன் என்று மொபைல் எண் வாங்கி தன் மொபைலில் இருந்து கால் செய்கிறாள் சர்மிளா.மணி அடித்து முடியும் தறுவாயில் எதிர்புறமிருந்து ஒரு பெண் குரல் கேட்கின்றது.
.சர்மிளா விவரங்கள் அனைத்தையும் கூறி ,ஏன் அம்மா பர்வினை உங்களுடனேயே வைத்துக்கொள்ள கூடாதா ,?அவளால் அடி தாங்க முடியவில்லை உடலெல்லாம் காயம் என்கிறாள்.அந்த பெண் பதிலாய், அது எங்களுக்குத் தெரியும். உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ!என்ற உரத்த குரல் ஓங்கி ஒலிக்க,சத்தமில்லாமல் தனக்குள்ளே நொந்தும் நொடிந்தும் போனாள் சர்மிளா.பர்வின்,பேசினாயா அக்கா?அம்மா என்ன சொன்னார்கள் அக்கா?என்னைக்காப்பாற்றி விடுவாயா அக்கா?நானும் சந்தோஷமாக வாழ்வேனா?என்ற வெகுளியின் கேள்விகளில் விழுந்து எழ முடியாமல் சிக்கித் திணருகின்றாள் சர்மிளா.அதற்கு முன் தன் கண்களை மூடி மானசீகமாய்
வேண்டுகின்றாள்.இறைவா!நான் உதவியற்று நிற்கின்றேன்.இந்த அபலையைக் காப்பாயா?அவளுக்கு துணைபுரியும் என்று வேண்டி,பர்வினுக்கு தைரியம் சொல்லி விடைபெறுகிறாள்.
வருடங்கள் கழிந்தது.ஆனாலும் சர்மிளாவால் அந்த நிகழ்வின் வலிகளை
மறக்க முடியவில்லை.அவ்வப்போது கேட்கின்றாள் தனக்குள்ளேயே.பர்வின் எங்கே இருக்கின்றாய்?எப்படிஇருக்கின்றாய்?இருக்கின்றாயா?என்ற கேள்விகள் துளைக்க. மாற்றாய் முடிவெடுத்துவிட்டாள் சர்மிளா.தன் வாழ்வினை இது போன்ற
அவலங்களை அழிப்பதற்காகஅர்ப்பணிக்கத் தயாரானாள்.தன்னைத்தானே புதிதினும் புதிதாய் செதுக்கத் துவங்கிவிட்டாள்.
பெண்ணின் பயணம் இயல்பானது.அதே பெண்மையின் பயணம் பல கரடு முரடான கோணங்களையும் திருப்பங்களையும் தடைகளையும் உடையது.பல துறைகளிலும் பெண்கள் சாதனைச்சரித்திரங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் வேளையிலும் பட்டிதொட்டிகளில் அடிப்படை உரிமைகளும் சந்தோசங்களும் கூட மறுக்கப்பட்டு கண்ணீரிலும் செந்நீரிலும் தன்னைக்கழுவிக் கொண்டிருக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் புரிதல், மனிதாபிமானம்,நீதிசார்ந்த சிந்தனைகள் இல்லாமல் போனதே என்று எண்ணி தன் வாழ்வினையும் இளமைக்காலங்களையும் பணயமாய் வைக்க தயாரானாள் சர்மிளா.அவளுடைய வேள்விப் பயணம் வெற்றிபெற வாழ்த்துவோம்.உடனிருப்போம்.
வாழ்க பெண்மை!
வளர்க சமூகநீதி!
வாழ்வாங்கு வாழ என் இந்திய தேசம்!
பெண்மையின் பயணம்
சர்மிளா நிமிர்ந்த நடையும் நலினமான உடல்வாகும் கொண்டவள்.இரக்க குணமுடையவள்.அமைதியான பெண்தான், ஆனாலும் அவ்வப்போது கோபம் கொள்வாள்.தனக்காய் அல்ல தன்னைச் சேர்ந்தவருக்காய்.ஒரு நாள் கோவில்ப்பட்டியிலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறுகின்றாள்.அவளது வருகை ஒரு நிமிடம் பேருந்திலுள்ளோரின் கவனத்தை ஈர்க்கின்றது.பேருந்து முழுவதும் நபர்களால் நிறைந்து வளிய,மூன்று பேர் அமரும் இருக்கையில் ஒருத்தி மட்டும் ஜன்னலோரமாய் அமர்ந்திருக்கின்றாள். அவளின் வயது சுமாராக இருபது இருக்கும்.அவள் மனம் பேதலித்த பெண்ணைப்போல் இருக்கின்றாள்.அவள் அருகில் சர்மிளா அமர்கிறாள்.
அந்தப்பெண் சர்மிளாவின் முகத்தை ஆசையுடன் பார்க்கின்றாள்.அவள் யாராவது நம் அருகில் வந்து அமர மாட்டார்களா?என்று காத்திருந்தாள் போலும்.சர்மிளா கனிவோடு அவள் முகத்தைப் பார்க்கிறாள்.ஆ!எவ்வளவு நேர்த்தியான புருவங்கள்,வண்டோடும் பார்வைகள்,இதழ்கள் அகல விரிந்த ரோஜா இதழ்கள். அந்த முகம் சர்மிளாவை வசியம் செய்தது.மேலும் அந்த நிலா முகத்தில் வீசிய ஒளி குழந்தையாய்ப் பரிமளிக்க சர்மிளா ஒரு நிமிடம் வியந்து போனாள்.ஆனால் அப்பெண்ணின் கண்களின் சோர்வும் முகத்தின் வேதனையும் உடலின் தளர்வும் அவள் துன்புற்றாள் என்பதை உறுத்திச் சொல்லிக்கொண்டிருந்தது.இல்லை.இவள் பைத்தியம் இல்லை.இவள் ஒரு வெகுளிப் பெண் என்று மனதிற்குள் ஒரு குரல் மெதுவாய்ச் சத்தமிட்டது.
சர்மிளா அந்த பெண்ணிடம், நீ எவ்வளவு அழகாய் இருக்கின்றாய்த் தெரியுமா?உன் பெயரென்ன?எங்கிருந்து வருகின்றாய்?என்று வினவுகின்றாள்.சர்மிளாவின் வார்த்தைகள் கேட்டு அந்தப் பெண்ணின் அழகு மேலும் மிளிர்ந்தது.சர்மிளா ரசிக்கின்றாள்.முகமெல்லாம் சிரிப்பாய்க் கொண்ட பேதை சொல்கிறாள் என் பெயர் பர்வின்.நான் குலசேகரன்பட்டிணத்திலிருந்து வருகின்றேன்.அமைதியாய்க் கேட்கின்றாள் சர்மிளா.கேட்டதுதான் தாமசம் தன்னைப்பற்றி தானே ஒப்புவிக்க ஆரம்பித்து விட்டாள் பர்வின்.அக்கா!நான் என் கணவருடன் வசிக்கின்றேன்.எனக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கின்றாள்.அவள் பெயர் ஆசிஹா.நான் இப்போது என் அம்மா வீட்டிற்கு செல்கின்றேன்.அப்பா நான் சிறுவயதிலிருக்கும் போதே இறந்து விட்டார்.அப்பா என்னைச் செல்லமாக வைத்துக் கொள்வார்.என் கணவர் அன்பாக இருப்பார்.ஆனால் சில நேரம் காரணமே தெரியாமல் கடுமையாக அடிப்பார்.ஏனென்றே விளங்கவில்லை அக்கா.
அக்கா!நான் மாடு மாதிரியா இருக்கின்றேன்?என்று கேட்டுவிட்டு தன் முகக்குறியால் பதிலுக்காக அவள் பார்த்திருக்கும் பாங்கும் எட்டியளக்க முடியா ஏக்கங்ளும் கண்டு உள்ளுக்குள் ஏதோ அரிப்பதாய் உணர்கிறாள் சர்மிளா.இல்லை பர்வின்,நீ மிகவும் அழகானவள்.நல்ல உயரம் வண்ணம்,உடற்கட்டு,பூரணசந்திரனை ஒத்த முகம் உடையவள் நீ.அப்போதுதான் சர்மிளா காண்கின்றாள், முக்காட்டிற்டியில் நெருங்கி வளர்ந்த கருகரு முடிகள் பாதி வளர்ந்தும் வளராததுமாய் தன்னை ஒழித்துக்கொண்ருப்பதை.சந்திரனில் அழுக்கை அப்பினாற்போல் ஏதோ உன்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது பர்வின் என்று சொல்லாமல் ஒளியும் ஒலியுமற்ற வரிகளை மனதிற்குள் உச்சரித்தாள் சர்மிளா.
பர்வின் சொல்கிறாள்.அக்கா என் கணவர் மாடு மாடு என்று திட்டுவார்.பைத்தியம் என்று ஊரெல்லாம் பரப்புவார்.என் மகளையும் என்னுடன் பேச அனுமதிப்பதில்லை.எனது நீண்ட அடர்ந்த முடிகளை வெட்டி என்னை அலங்கோலம் ஆக்குகின்றார்.கொஞ்ச காலம் நன்றாக பேசுவார் கொஞ்ச காலம் யாரோ போல் நடந்துகொள்வார்.எங்கள் பள்ளியில் எல்லோரும் பர்வின் அழகானவள், புத்திசாளி என்பார்கள்.ஆனால் இவர் மாடு, பைத்தியம் என்கிறார்.அப்படி இல்லைதானே? சொல் அக்கா.என்று சர்மிளாவின் பதிலுக்காக ஏங்குகின்றாள்,பர்வின்.மீண்டும் மீண்டும் எழுந்த ஒரே கேள்வி.அவள் எவ்வளவு காயப்பட்டிருக்கிறாள் என்பதன் ஆதாரம்.சர்மிளா சொல்கிறாள் இல்லை நீ அழகான அன்பான பெண்.பர்வின் இப்போது மிகவும் ஆதரவாய் உணர்வதாய்த் தோற்றமளிக்கின்றாள்.சர்மிளாவின் வார்த்தைகள் அவள் மனதில் புது உற்சாகத்தையும் குதூகலத்தையும் அளிக்க பொங்கிய் பெருகிய சந்தோசத்தில் தன் புஜங்களை உயர்த்தி தன் களிப்பினைக் கூட்டுகின்றாள் காட்டுகின்றாள் பர்வின்.
பர்வின் சொல்கிறாள்,அக்கா!தினமும் நான் ஐந்நூறு உக்கிகள் போட சொல்வார்.நானும் தவறாமல்ப் போடுகின்றேன்.அப்படிப் போட முடியவில்லை என்றால், கதவின் பின்புறம் இருக்கும் கம்பை எடுத்து அடிப்பார்.சிகரெட்டால் சூடு வைப்பார்.தோல் உரியும் இரத்தம் வரும்.பலநாள் வலி தாங்காமல் அழுவேன் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்.நீயே பாரேன்! என்று தன் கைகளையும் மறைவான தோள்களையும் கால்களையும் காட்டுகின்றாள் பர்வின்.
காயங்கள், தழும்புகள் ,வரிகள்,ஐயோ!சர்மிளாவின் விரிந்த கண்களில் கண்ணீர் கரை தட்டுகின்றது.கண்களை அடைத்துவிட்டாள்.அடிப்பாவிப்பெண்ணே!எல்லோரும் இயல்பாய் வாழ்ந்திருக்க இந்த சின்ன வயதில் நீ வாழ இத்தனை வேதனைகளையும் அனுபவித்தாக வேண்டுமா?இதயத்துள் ஏதோ பாறமாய் வளிய இமைகள் திறந்து மறுபடியும் பேச்சைத் துவங்குகின்றாள் சர்மிளா.
பர்வின்! !அம்மாவிடம் இதை எல்லாம் சொன்னாயா?என்றாள் சர்மிளா.சொன்னேன் அக்கா.அம்மா அவரைத் திட்டுவார்.அவர் என்னை மிகவும் அடித்துவிட்டால் என்னால் நடக்க முடியால் போகும்.அழுது கொண்டே இருப்பேன்.அப்போது பஸ் காசு கொடுத்து அம்மா வீட்டிற்கு அனுப்பி வைப்பார்.கொஞ்ச காலம் அம்மா வீட்டில் இருப்பேன்.எனது உடல்நிலை சரியானதும் அவரே வந்து எனக்கு ஸ்வீட்டும் அம்மாவிற்கு செலவிற்கு பணமும் தருவார்.அன்பாக பேசி என்னை அழைத்துச் செல்வார்.அம்மா என்னை ஆறுதல் படுத்தி அவருடன் அனுப்பி வைப்பார் இது வாடிக்கை என்கிறாள் பர்வின்.
சர்மிளா அவளின் கணவரைப்பற்றி கேட்கின்றாள்.பர்வின் சொல்கின்றாள்,கணவனின் பெயர் அப்துல் காசிம்.அறுபது வயதாகிறது.கூழித்தொழிலாளியாக ஒரு டீக்கடையில் வேலை பார்க்கின்றார்.இப்போது சர்மிளாவிற்கு எல்லாம் விளங்கிவிட்டது.அறுபது வயது கூழித்தொழிளாளி 20வயது பெண்ணைத் திருமணம் செய்து அவளைத் தனக்கு மட்டுமே உடைமையாக்க அவளைப் பைத்தியமாய்க் காட்சிப்படுத்துகின்றான் என்று.அவளுக்கு என்ன நடக்கின்றதென்பது புரியாதபடி அவ்வப்போது அடித்து துன்புறுத்தி மனநிலை சரியில்லாதவள் போல் உருமாற்றி தகப்பனற்ற பெண்ணின் இளமைவாழ்வைத் தனதாக்கிக் கொண்ட முதிய கள்வன,அவள் கணவன் புரிந்துகொண்டாள் சர்மிளா.சர்மிளா உள்ளுக்குள் குமுறுகின்றாள்.பேரழகு கொண்ட பேதைப்பெண்ப் பெருங்கிழவனின் மனைவியா?என்று.வலி தாங்க முடியவில்லை அக்கா என்று சொல்லும் பர்வினின் தாயாக தன்னை உணர்கிறாள் சர்மிளா.இவள் கண்ணீரை மாற்றி விட முடியாதா என்று எண்ணுகின்றாள் சர்மிளா. ஒரு ஏழைக் குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் முதலாவதாக பிறந்தவள் சர்மிளா என்செய்வாள்?.உன் அம்மாவின் மொபைல் எண்ணைக்கொடு நான் பேசுகின்றேன் என்று மொபைல் எண் வாங்கி தன் மொபைலில் இருந்து கால் செய்கிறாள் சர்மிளா.மணி அடித்து முடியும் தறுவாயில் எதிர்புறமிருந்து ஒரு பெண் குரல் கேட்கின்றது.
.சர்மிளா விவரங்கள் அனைத்தையும் கூறி ,ஏன் அம்மா பர்வினை உங்களுடனேயே வைத்துக்கொள்ள கூடாதா ,?அவளால் அடி தாங்க முடியவில்லை உடலெல்லாம் காயம் என்கிறாள்.அந்த பெண் பதிலாய், அது எங்களுக்குத் தெரியும். உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ!என்ற உரத்த குரல் ஓங்கி ஒலிக்க,சத்தமில்லாமல் தனக்குள்ளே நொந்தும் நொடிந்தும் போனாள் சர்மிளா.பர்வின்,பேசினாயா அக்கா?அம்மா என்ன சொன்னார்கள் அக்கா?என்னைக்காப்பாற்றி விடுவாயா அக்கா?நானும் சந்தோஷமாக வாழ்வேனா?என்ற வெகுளியின் கேள்விகளில் விழுந்து எழ முடியாமல் சிக்கித் திணருகின்றாள் சர்மிளா.அதற்கு முன் தன் கண்களை மூடி மானசீகமாய் வேண்டுகின்றாள்.இறைவா!நான் உதவியற்று நிற்கின்றேன்.இந்த அபலையைக் காப்பாயா?அவளுக்கு துணைபுரியும் என்று வேண்டி,பர்வினுக்கு தைரியம் சொல்லி விடைபெறுகிறாள்.
வருடங்கள் கழிந்தது.ஆனாலும் சர்மிளாவால் அந்த நிகழ்வின் வலிகளை
மறக்க முடியவில்லை.அவ்வப்போது கேட்கின்றாள் தனக்குள்ளேயே.பர்வின் எங்கே இருக்கின்றாய்?எப்படிஇருக்கின்றாய்?இருக்கின்றாயா?என்ற கேள்விகள் துளைக்க. மாற்றாய் முடிவெடுத்துவிட்டாள் சர்மிளா.தன் வாழ்வினை இது போன்ற அவலங்களை அழிப்பதற்காக அர்ப்பணிக்கத் தயாரானாள்.தன்னைத்தானே புதிதினும் புதிதாய் செதுக்கத் துவங்கிவிட்டாள்.
பெண்ணின் பயணம் இயல்பானது.அதே பெண்மையின் பயணம் பல கரடு முரடான கோணங்களையும் திருப்பங்களையும் தடைகளையும் உடையது.பல துறைகளிலும் பெண்கள் சாதனைச்சரித்திரங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் வேளையிலும் பட்டிதொட்டிகளில் அடிப்படை உரிமைகளும் சந்தோசங்களும் கூட மறுக்கப்பட்டு கண்ணீரிலும் செந்நீரிலும் தன்னைக்கழுவிக் கொண்டிருக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் புரிதல், மனிதாபிமானம்,நீதிசார்ந்த சிந்தனைகள் இல்லாமல் போனதே என்று எண்ணி தன் வாழ்வினையும் இளமைக்காலங்களையும் பணயமாய் வைக்க தயாரானாள் சர்மிளா.அவளுடைய வேள்விப் பயணம் வெற்றிபெற வாழ்த்துவோம்.உடனிருப்போம்.
வாழ்க பெண்மை!
வளர்க சமூகநீதி!
வாழ்வாங்கு வாழ என் இந்திய தேசம்!
-பாலகாந்தி(ஓவியர்,எழுத்தாளர்)
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்