logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

C GNANASEKAR

சிறுகதை வரிசை எண் # 92


என்னவனே எனும் சப்தம் கேட்டது கால்களில் இன்னும் பெலத்தைக் கூட்டி கைகளின் பிடியை உறுதியாக்கி கண்களின் கூறிய பார்வையில் விவேகம் பொங்க காதுகள் விரைந்து பற்களை அழுத்தி கடித்துக் கொண்டு பெருமூச்சு விட்டு இன்னும் கொஞ்சம் தூரம் தான் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த மலைமேடுகளை சைக்கிளில் ஏறிக் கொண்டிருந்தான் வேலைக்குச் செல்லும் நேரம் அது வீட்டில் விளைந்த காய்கறிகளை பை நிறைய எடுத்துச் சென்று ரோட்டோர கட்டிலில் வைத்து இருட்டும் வரை விற்று முடித்து வீட்டிற்குச் செல்வான் ஞாயிற்றுக்கிழமை அன்று அங்கு சந்தை கூடுவதால் அன்று மட்டும் வருமானம் அதிகமாக கிடைக்கும் அடுத்த நாள் காலையில் ஊரில் உள்ள சிட்டாம்பட்டிகளுக்கு சிக்கனப்படுத்தியிருந்த சில்லறையில் இருந்து மிட்டாய்களை வாங்கி கொடுப்பான் அதனாலேயே ஊரில் உள்ள சிறுசுகள் எல்லாம் இவனை கண்டாலே குதூகலமாகிவிடும் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அன்று அவர்களுக்கும் சேர்த்து சமைத்துக் கொடுப்பான் தாயும் தகப்பனும் இல்லாதிருந்தும் பாட்டியிடம் இருந்து பக்குவமாய் கற்றுக் கொண்ட ரசமும் சாம்பாரும் அருமையாய் சமைப்பான் ஊர்பெரியோரையும் சிறியோரையும் மதித்துப் பேசுவான் எல்லோரையும் நேசித்து பழகும் படியாக அவனுக்கு அப்படி ஒரு அன்பு உள்ளம் இதனாலேயே இவனைப் பார்க்கும் எல்லோரும் அவன் குணத்தின் தீப்பொறியில் மெழுகாய் உருகியபடி அன்போடு அழைப்பர் குமரா என்று அவனுடைய ஊர் மலைப்பகுதிகளில் இருப்பதால் தினமும் சைக்கிளிலே வேலைக்குச் சென்று சாயங்காலம் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விடுவான் அன்று மட்டும் மலையின் நடுவழியிலே சற்று கிளிகள் கீச்சிடும் சத்தம் கேட்டு சைக்கிளில் இருந்து இறங்கி அதை ரசித்துக்கொண்டிருந்தான் கொஞ்சம் அதன் உள்ளே போய் பார்க்க நடந்தான் அது அலங்கரிக்கப்பட்ட தோட்டத்தைப் போலவும் ரகசியமான நீரூற்றுகளைக் கொண்டதாகவும் பாதையெல்லாம் பூக்கள் வரிசையாய் அணிவகுக்க அண்ணாந்து பார்க்கையில் நூற்றாண்டுகளைக் கடந்த மரங்களும் கிளைகள் படர்ந்து பிரம்மிக்க வைத்தது அந்த மரவேர்களின் அண்டையிலே பேடை மயிலை மயக்கியபடியே ஆண்மையில் தோகை விரித்து ஆடியது ஒவ்வொரு அடியையும் மெதுவாக எடுத்து வைத்தது மோகத்தின் கடலிலே பேடையும் மூழ்கி புன்முறுவலோடு அமர்ந்தது கொத்தியிழுத்த வாயில் குனிந்த தலை நிமிர எட்டி வைத்த கால்கள் ஏறி அதன் மேல் அமர்ந்திட ஒன்று சேர்ந்த மயிலினை கண்ட காட்சி கண்ணிலே பட்டு படர்ந்த உணர்வினால் மனம் படபடத்துப் போகவே விந்தை ஒன்று நடந்ததே மனதை நனைய செய்ததே என்று மனம் அங்கு மயங்கியிருக்க இதமான காற்று ஏதோ ஒரு செய்தியை சொல்வது போல் மண்வாசனையை தெரிவித்து உரசிச்சென்று கொண்டிருந்தது அப்பொழுதுதான் மரங்கள் எல்லாம் சரசரவென ஒன்றோடு ஒன்று பேசத் துவங்கின மயிலின் கூட்டம் கலயத் தொடங்கின கிளிகள் எல்லாம் இருப்பிடம் நோக்கி பறக்க ஆரம்பித்துவிட்டன அவ்விடம் முழுவதும் வாசனை வீசத் தொடங்கிவிட்டன ஏனென்றால் பூக்கள் மலர ஆரம்பித்து விட்டன மெதுவான காற்றினால் இலைகள் எல்லாம் உதிர்ந்து கொண்டிருந்தன மரங்களுக்கு நடுவில் இருந்து அழகிய பெண் ஒருவள் வந்தால் உடனே உலகம் முழுவதும் ஏகமாய் மௌனம் கொண்டது செம்பருத்தி கொண்டையிலும் சிவந்த ஆடை மேனியிலும் உடுத்தியவளாய் இலைகள் நிறைந்த தரையிலே கையில் பூக்களோடு நடந்து வந்தால் அவள் வைக்கும் ஒவ்வொரு அடியோடும் குமரனின் இதயம் சேர்ந்து துடித்தது கண்கள் மிளிர்ந்து உடளெல்லாம் சிலிர்த்தது புல்லின் மீது பனி படர்ந்து நீர் துளியாய் மாறும் காட்சி அதிசயமாய் நிகழ்வதைப் போல் அவள் மீது ஒரு பிரியம் அவன் மனதில் அதிசயமாய் நிகழ்ந்தது அன்ன நடையில் வந்தவள் குமரனை பார்த்தவுடன் இன்னொரு அடி எடுத்து வைக்க மறந்தபடியே நின்றால் அவள் கையில் இருக்கும் பூக்கள் காற்றின் மந்திரத்தால் இருவருக்கும் இடையே வந்து விழுந்தது அந்த நொடியில் அவன் மனதின் உணர்வு என்னும் ஊற்றுகளின் அளவு அதிகரித்து பெருவெள்ளமாய் மாறி மௌனத்தின் இரைச்சலோடு ஒருவராலும் பார்க்க முடியாததாய் அவனுக்கும் அவளுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை கிழித்துக்கொண்டு அவள் கண்களின் மீது பாய்ந்தது அவளும் அதில் நனைந்தபடியே நின்றாள் இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையில் நனைத்துக்கொண்டிருக்க இது போதாது என்று மழையும் அவர்களை நனைத்தது இருட்டுகிற நேரம் அது இடியும் மின்னலும் மிகுந்து வானத்தைப் பிழைக்கச் செய்தது அவள் கண்களை சுருக்கி வானத்தைப் பார்த்த போது எங்கு இவள் பயந்து போய் விடுவாளோ என்று குமரன் பயந்து கொண்டிருந்தான் உடனே அவளிடம் உன்னோட வீடு எங்க இருக்கு என்று கேட்டான் கொஞ்சம் தயங்கியபடியே சொன்னாள் கிழக்குப் பக்கத்துல நடந்து போகிற தூரம் தான் என்றாள் சரி இங்க இருந்தா வனவிலங்கால ஆபத்து வரலாம் வீட்டுக்கு போ வேணும்னா அந்த வெளிச்சம் இருக்கிற இடம் வரைக்கும் பாதுகாப்புக்கு நானும் வரேன் ஏதும் சொல்லாமலே நடக்க ஆரம்பித்தாள் மௌனம் சம்மதத்தின் பதிலென குமரனும் உடன் நடந்தான் மழைக்கு ஒதுங்க இடமில்லாத இந்த காட்டில் சிறிய வழி பாதையில் இரண்டு பக்கமும் மண்மேடுகளாக அதன்மேல் மரத்தின் வேரானது நட்டு வைத்த வேலையை போல் வரிசையாய் காட்சி கொடுத்தது அப்பதையில் வலது புறம் அவள் நடக்க இடது புறம் அவன் நடக்க இருவருக்கும் இடையிலே மௌனமும் சேர்ந்து நடக்க இந்த வழிப்பாதை இன்னும் கொஞ்ச தூரமாக இருந்திருக்கக் கூடாதா என உடல் நடுங்கிய வேலையிலும் அவன் உள் மனம் ஏங்கியது தெருவிளக்கின் வெளிச்சம் வரை வந்ததும் அவள் வெளிச்சத்தில் நடக்க குமரன் இருளில் நின்று கொண்டிருந்தான் அவள் வீட்டிற்குள் நுழையும் வரை அவளையே பார்த்திருந்து பின் தன்னுடைய வீடு வந்தான் இரண்டு நாள் கழித்து ஊர் பெரியவர்களை அழைத்துக் கொண்டு அந்த மலைப்பகுதியில் கிழக்குப் பகுதியில் உள்ள அவளின் வீட்டிற்கு பெண் பார்க்க வந்திருந்தான் அன்று தெருவிளக்கின் வெளிச்சத்தில் கண்மணி அவனை விட்டுப் பிரிந்த போது இருளிலே நின்றிருந்த இடத்திற்கு வந்ததும் குமரனுக்கு மனசில் பட்டது இப்போ நானும் வெளிச்சத்துக்கு போகிறேன் என்று வீட்டின் வெளியிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த கண்மணி அனேக நாள் அவன் தன்னை பிரிந்து நின்ற அந்த இருட்டியிருந்த இடத்தை பார்த்து என்றாவது ஒருநாள் விடியாதா என்று ஏங்கிய நாட்கள் உண்டு பாத்திரம் தேய்த்து முடித்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது ஒரு முறை அந்த இடத்தை பார்த்தாள் பார்த்த மாத்திரத்தில் பரவசம் கொண்டு இன்று அங்கு விடிந்ததே என பெருமூச்சு விட்டு கண்களில் நீர் பொங்க கரங்களில் இருந்த பாத்திரம் நழுவ கீழே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் குமரன் இரவிலே அவளோடு நின்று போன பயணத்தை மீண்டும் தொடர்ந்தான் பெண் பார்க்கும் முறை எல்லாம் முடிந்தபோது கல்யாண தேதி குறிக்கப்பட்டது அங்கு வீட்டின் அருகே வாழை மர நிழலினிலே ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டிருக்க குமரா நேரமாச்சு என்று ஊர் தலைவர் கூப்பிடும் வரைக்கும் இருவரும் மௌனத்தின் மொழியிலே பேசிக்கொண்டிருந்தார்கள் தயக்கத்தோடு இருந்த கண்மணி கேட்டாள் உங்க பேர் என்ன சிரித்துக் கொண்டே சொன்னான் குமரன் என்று சரி நான் போய் வரவா கண்மணி என சொன்னதும்அவளுக்கு அப்படி ஒரு வெட்கம் சரிங்க மாமா என்று சொல்லத்தான் அப்படி வெட்கப்பட்டால் என்று பிறகு தான் தெரிந்தது வாழைமரம் வரவேற்பு கொடுக்க மனப்பந்தலும் அருமையாய் அலங்கரிக்கப்பட்டிருக்க கல்யாணம் முடிந்தது அன்பும் பாசமும் பூரணமாய் அவளிடம் இருந்து கிடைக்க புதிய உலகில் வாழ்வது போன்ற மகிழ்ச்சி கொண்டிருந்தான் ஒரு நாள் அதிகாலை 4 மணி அளவில் எழுந்து வீட்டின் பின்னால் கொடிகளால் சூழப்பட்ட பெரிய மரத்தின் கீழ் அழகான பலகையால் செய்யப்பட்ட இருக்கையில் சென்று இருவரும் அமர்கிறார்கள் அவர்களின் இருப்பிடம் மலைப்பகுதியில் அமைந்திருப்பதால் கிராமம் முழுவதும் அவ்வளவு நேர்த்தியாய் அந்த இடத்திலிருந்து தெரியும் அன்று நிலாவும் நட்சத்திரங்களும் அழகாய் காட்சியளித்தன அங்கு ஒருவரை ஒருவர் தழுவியபடி உட்கார்ந்திருக்கிறார்கள் குமரனின் மூக்கு கண்மணியின் சிவந்த கண்ணத்தில் இருந்து மெல்ல மேல் எழும்பி ஆமைப்பயணம் செய்து கண்களின் ஓரங்களில் படர்ந்து சென்று கொண்டிருந்தது பின் நெற்றியில் நின்று அங்கிருந்து ஜீவகாற்றை சுவாசித்துக் கொண்டிருந்தது அந்த உணர்வு சொல்ல முடியாத புதுமைகளை ஏற்படுத்தியது இந்த இருள் சூழ்ந்த கருமையில் பணி படர்ந்த குளிரில் ஒவ்வொரு நொடியிலும் இருக்கும் அதிகமாகிக்கொண்டே இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக அவன் இதழ் அவளின் கண்களை விட்டு கீழிறங்க அவளும் கொஞ்சம் கொஞ்சமாக முகத்தை மேலே நகர்த்த இவையெல்லாம் ரொம்ப மெதுவாக நடந்து கொண்டிருந்தது திடீரென ஒரு சத்தம் வீட்டின் முன் பகுதியில் இருந்து குமரா வேலைக்குப் போக நேரமாச்சு சீக்கிரம் வா என கேட்டது அந்த அருமையான தருணம் மிகுந்த ஏக்கத்தோடு கலைந்தது குமரன் வேலைக்குச் சென்று விட்டான் ஊர் பெண்கள் விறகு பொறுக்க மேல் காட்டிற்கு செல்லும் நாள் அது அந்த ஒரு நாள் பொறுக்கும் விரகிவினால் தான் அந்த வாரமே சமைக்க வேண்டும் அதனால் ஊர் பெண்களோடு கண்மணியும் கயிறை தயார் செய்து கொண்டு சென்று விட்டாள் சாயங்காலம் ஆனபோது குமரன் வீட்டிற்கு வந்து கண்மணி வீட்டில் இல்லாதிருப்பதை பார்த்தான் ஊர் பெண்கள் எல்லாம் விறகு சுமந்து கொண்டு வீடு திரும்பியதைப் பார்த்து கண்மணியும் விறகு பொறுக்கச் சென்றிருப்பதை உணர்ந்தான் ரொம்ப நேரம் ஆகியும் கண்மணியை காணவில்லை ஊர் பெண்களிடம் சென்று கண்மணியை பார்த்தீர்களா என விசாரிக்கும் போது எல்லோரும் தெரியவில்லை என்றே கூறினார்கள் காலையில் எங்களுடன் தான் வந்தாள் சாயங்காலம் நாங்கள் அவளை பார்க்கலையே என்று விசாரிக்கும் பெண்கள் எல்லாம் சொல்லி வந்தார்கள் குமரனின் உள்ளம் பதைபதைத்து உடலெல்லாம் உறுகுளைந்து போக விறகு பொறுக்க இவர்கள் சென்ற இடத்தை விசாரித்து அங்கு சென்றான் முட்கள் நிறைந்த காடுகளில் கண்களும் கால்களும் அலைந்து திரிந்து கொண்டிருந்தன ஒரு இடத்தில் கண்மணி விழுந்து கிடந்ததை பார்த்தான் பார்த்தவுடன் அவன் கண்களெல்லாம் சுருங்கி மெல்லமாக விடும் மூச்சில் அப்படியொரு அழுகுரல் காற்றாய் கரைந்து கொண்டிருந்தது அவளின் காலில் ஏதோ இரண்டு புள்ளிகள் இருக்க அதைச் சுற்றியும் கண்ணிப்போயிருந்தது செய்வதறியாது திகைத்து அவளை அப்படியே தூக்கி நடக்க ஆரம்பித்தான் அந்த இடம் பெரும் மழைப்பிளவுகளுக்கு இடையே சிறிது தூரம் செல்லும் தொலைவாய் இருந்தது இருட்ட ஆரம்பித்துவிட்டது புயலாய் காற்றடிக்க மேகமெல்லாம் கருமையாய் காட்சியளித்தது அந்த மழைப்பிளவை நெருங்க நெருங்க அவனை மழையும் நெருங்கி விட்டது கொட்டும் மழையில் உடல் எல்லாம் நனைந்து போக பாதைகள் எதுவென்று தெரியாதபடி இருள் மறைக்க ஆரம்பித்துவிட்டன மலைப் பிளவுகளின் வழியாய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கற்களின் கூர்மை பாதத்தை பதம் பார்த்துக் கொண்டிருந்தது இடியும் மின்னலும் மனதை ஒதுக்கியது சிறிது நேரம் மின்னலின் வெளிச்சத்திளெல்லாம் மிருகத்தின் கால் தடங்கல் கண்களில் தென்பட்டு இன்னும் பயமுறுத்த இந்த மழையின் கொடுமையில் இருளின் பயங்கரத்தில் கைகள் அவளை சுமக்க முடியாமல் சோர்ந்து போக கால்களும் தள்ளாடிக்கொண்டிருக்க கண்கள் மங்கிப்போக தசைகளெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டன உடல் எல்லாம் இனியும் நகர முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்க அடி மனதில் ஒரு அழுத்தம் எப்படியாவது இவளை காப்பாற்ற வேண்டுமே என கதறிக் கொண்டிருந்தது ஒரு இடத்தில் தடுமாறி கீழே விழுந்து விழுகிறான் கற்களில் பலமாக காயப்பட்ட போதிலும் கண்மணியை பத்திரமாக பிடித்திருந்தான் அந்த முடியாத நிலையில் ஓயாத மலையில் மீண்டும் நடக்க ஆரம்பித்தான் இருள் சூழ்ந்த இந்தக்கருமை எங்கு திக்கு திசை தெரியாத இடத்திற்கு கொண்டு போய் விடுமோ என்ற பயம் அடிக்கடி வந்து போனது எப்படியோ அந்த மழைப்பிளவையும் காடுகளையும் கடந்து ஊருக்குள் வந்தான் அப்பொழுது பெருமூச்சின் சத்தம் நடுக்கத்தோடு அவனிடமிருந்து கேட்டது பற்களை இடித்துக் கொண்டே வைத்தியரின் வீட்டிற்கு சென்றான் வைத்தியரே கதவை திறக்கவும் ஐயா என்று கதறிய குரலைக் கேட்டு வைத்தியச்சி கதவை திறந்தாள் என்ன குமரா இந்த நேரம் என்ன ஆச்சு என்னன்னு தெரியலமா கண்மணி காட்ல மயங்கி கிடந்தா சரி சீக்கிரம் உள்ளே கொண்டு வா ஏங்க விரியம் பாம்பு தீண்டிருக்கு விஷம் அதிகமாயிடுச்சு சீக்கிரம் மருந்த அறைங்க ம்ம் சரி கண்மணியின் ஆடையை வைத்தியச்சி மாற்றி வைத்தியம் பார்ப்பதற்கு ஏற்றபடி தயார் செய்தால் மருந்துச்சாறினை வாயில் பிழிந்து காலில் மருந்துகளை வைத்து கட்டி கால்களை தேய்த்து அனலாக்கி விட்டு வெளியே போய் குமரா எதுக்கும் கொஞ்சம் தைரியமாக இரு விஷம் கைமீரிடுச்சு முடிஞ்ச வரைக்கும் நாங்க எங்களால முடிஞ்சத செய்யறோம் உடனே குமரன் கால்கள் நிலை மாறினது நேற்று அதிகாலையில் அவளோடு உட்கார்ந்திருந்த இடத்திற்கு புலம்பிக்கொண்டே போய் அமர்ந்தான் இன்னும் மலைப் பிளவில் விழுந்த போது நெற்றியில் குத்திய கல் ஆழமாக பதிந்திருந்தது ரத்தம் நிற்காமல் வடிந்துகொண்டே இருந்தது நேற்று அவளோடு அங்கு இருந்த நொடிகளை நினைத்து நினைத்து அந்த கொட்டும் மழையில் கதறிக் கொண்டிருந்தான் ஒரு பக்கம் அங்கே வைத்தியரும் பரபரப்பாக நாடி பிடித்து பார்த்துக் கொண்டும் கண்களை திறந்து திறந்து பார்த்துக் கொண்டும் மருந்து வேலை செய்கிறதா என பார்த்துக் கொண்டும் இருந்தார் இங்கு குமரனும் பலகையின் மேல் உட்கார்ந்து கதறிக்கொண்டிருந்தான் அன்று நட்சத்திரங்கள் எல்லாம் அவனுக்காக அழகாய் பூத்திருந்தன அது ஏனென்று மனதில் யோசிக்கும் போது அன்று குமரனுக்கு ரொம்ப முக்கியமான நாள் என்று தெரிந்தது இப்படியே நேரம் அதிகாலை 4 மணி ஆனது 5 மணியானது 6:00 மணி ஆனது வைத்தியரும் வைத்தியச்சியும் மிகுந்த சந்தோசப்பட்டு கண்மணி பூரணமாய் குணமானதால் எப்படியோ இன்னைக்கு ஒரு உயிரை காப்பாத்திட்டோம் என மன நிறைவடைந்தார்கள் கண்மணி எழுந்ததும் அவளுக்கு நடந்ததையும் குமரன் சுமந்து வந்ததையும் அறிந்து கொண்டாள் அவர் எங்க அப்படின்னு கேட்டு வீட்டிற்கு போய் பார்த்தால் அங்கு குமரன் இல்லை பின் அந்த மரத்தினடியின் பலகையில் உட்கார்ந்திருப்பதை கண்டு அவனிடம் போய் தளிர்ந்த குரலில் நான் அவ்வளவு சீக்கிரமாக உங்கள விட்டுட்டு போயிட மாட்டங்க இனிமேல் என்ன பத்தி கவலைப்படாதீங்க என்று சொல்லி அவன் தோளின் மீது சாய்ந்து உட்கார்ந்தாள் கொஞ்ச நேரம் ஆகியும் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை அப்பொழுதுதான் அந்த மரங்களில் இருக்கும் குருவிகள் கீச்சென்று சத்தமிட்டு படபடவென்று சிறகை அடித்துக் கொண்டு பறக்க பக்கத்தில் குஞ்சுகளை அடைகாத்துக் கொண்டிருந்த கோழி கொக்கரித்துக் கொண்டே அலறியோட மணலில் விளையாடிக் கொண்டிருந்த நாய் குட்டிகள் பயந்தபடியே பார்க்க அங்கே நடவு நட்டுக் கொண்டுடிருக்கும் பெண்கள் நாற்றை கையில் பிடித்தபடியே நிமிர்ந்து பார்க்கும்படியாகவும் என்னவனே எனும் சப்தம் கேட்டது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.