logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Azarudheen Thameem

சிறுகதை வரிசை எண் # 90


அதுதானே காதல் அந்த பூங்காவில் இலைகள் உதிர்ந்து மலர்கள் வாசம் வீசுகிற நேரம் கையில் ஒரு குட்டி தேவதையை அழைத்துக்கொண்டு வந்தார். நரைத்த முடிகளை டை அடித்து வகிடு எடுத்து நேர்த்தியாக ஒரு கண்டிப்பான ஆசிரியராக தோற்றமளித்தார். ஒரு புன்னகையோடு அமர்ந்து அப்பார்ட்மெண்ட்டுக்கு புதிதா என்றார் ? ஆம் என்றேன் ! உங்களை பார்த்தா கண்டிப்பான ஆசிரியராக இருக்கிறீர்கள் என்றேன் . இல்லை கண்டிப்பான அரசு அதிகாரி என தன் பதவி அனுபங்கள் என பேச தொடங்கினார் என் பிம்பங்களை உடைத்து சுவாரஸ்யமான உரையாடல் அது . வாழ்க்கை தத்துவங்கள் நேர்மையான அணுகுமுறை என பல கதைகள் கண் முன் நிறுத்தினார் . கல்லூரிகளில் தான் கலந்து கொண்ட நாடகங்கள் அப்பொழுதே அரசியல் கருத்துக்கள் பேசிய நினைவுகள் மற்றும் இன்றைய இளைஞர்களின் அனுகுமுறை பற்றி பேசிக்கொண்டிருக்க, தன் பேத்தியின் மழலை பேச்சை கேட்டு தன்னிடம் பேசி புளகாங்கிதம் அடைந்துகொண்டு இருந்தார் ,என்னை பார்த்தவர் மீதமிருக்கும் நினைவுகளை தம் வாரிசுகளிடம் செலவளிக்கும் நேரம் தானே மீதமிருக்கும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது என்றார். ஒரு பூவை போல் தலைஅசைத்தேன் . ஒரு கேள்வி கேட்கவா? என்றேன் சரி என்றார்! பூங்காவில் விளையாடும் தன் பேத்தியை பார்த்து கொண்டே கொஞ்சம் உங்கள் வாழ்க்கை சார்ந்தது என்றேன் எல்லாம் கடந்த இந்த வாழ்வில் தவறாக எண்ண என்ன இருக்க போகிறது என் பக்கங்களை வாசித்து காட்டப்போகிறேன் அவ்வளவு தான் என்றார் . கல்லூரியில் நீங்கள் ஒரு ஹீரோவாக ஒரு துரு துரு இளைஞனாக இருக்க வாசித்து காட்டாத அந்த பக்கத்தை நீங்கள் மறைத்து ஏன் என்றேன் . மறைக்க வேண்டிய பக்கங்கள் அவை என்றார் உங்களுடைய கருத்தின் படி இந்த வயதில் மறைக்க என்ன அவசியம் என்றேன். மீத மிருக்கும் என் வாழ்க்கையில் உடன் இருப்பர்வர்கள் காயம் பட கூடாது என்றார் ! அப்படிஎன்றால் நீங்கள் காயம்பட்டுள்ளீர்கள் ? காயமில்லாத வாழ்வு ஏது ? இதே இந்த முதுமை என் காயங்களை ஆற்றிக்கொண்டிருக்கிறது என்றார் ! கண்ணை மூடி யோசித்தவர் இலேசாக அந்த தளர்ந்த இமைகள் பரிசுத்தமான நினைவுத்துளிகளை வெளிப்படுத்த சட்டென்று கண் திறங்க விழப்போகும் தன் பேத்தியை கயல்! .... கயல்...என வாரி நேஞ்சொடு அனைத்துக்கொண்டார் . கயலோடு என் அருகில் அமர்ந்தவரிடம் அப்படி என்றால் கயலென.... அடுத்த கேள்வியை தொடுக்க கைகள் பிடித்து விசும்பினார் ஆமென தலைகவிழ அது தானே காதல் அது தானே எல்லாம் என்றேன். பரஸ்பர நிசப்தத்தில் நாங்கள் உதிர்ந்த பூக்களை கையில் சேகரித்து கொண்டிருந்தாள் கயல் . தமீம் அசாருதீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in