Srinivasan A
சிறுகதை வரிசை எண்
# 89
சுஷ்மிதா
By ஆனந்த் ஶ்ரீனிவாசன்.
அன்று காலை லக்ஷ்மி எழுந்திருக்கும் போது மணி எட்டு.. எழுந்த போது உடல் வலி,அத்துடன் மன வலியும் சேர்ந்து சோர்வை கொடுத்தது.வயது ஒன்றும் அதிகமில்லை 55 தான்.
நமக்குப் பிடித்தமான விசயங்கள் நடக்காது போனால்,இல்லை அது முற்றிலும் பிறரால் புறக்கணிக்கப் பட்டிருந்தால், இம்மாதிரி பிரச்சனைகள் உடலிலும் மனதிலும் வரத்தானே செய்யும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் லக்ஷ்மியின் வாழக்கை இப்போது.
வேலைகாரம்மா சிவகாமிஉள்ளே பாலுடன் வந்தாள் .
சிவகாமி கிச்சன் போய் டீ போட்டுக் கொண்டு வருவதற்குள், காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்த லக்ஷ்மிபிளட் பிரஸர் மாத்திரை போட்டுக்கொண்டுடீயை குடித்தார் .
காலை டிபன் தயார் செய்யும் வேலையில் சிவகாமி தன்னை தயார்படுத்திக் கொண்டுரு ந்த போது .லக்ஷ்மி ஆன்ட்டி ஹாலில் மாட்டபட்டுருந்த போட்டோக்களைப் பார்த்து விட்டுக் கண்களைத் துடைத் துக்கொண்டாள்.
இந்த மனக்குமறலுக்கு மருந்தே கிடையாதா?
காலை டிபன் முடித்தபிறகு சிறிது. நேரம் செய்திதாளில் பார்வையை செலுத்தினார். மனசு அதை நிராகரித்தது. மடித்து வைத்தார்.
மீண்டும் ஹாலில் மாட்டப் பட்டிருந்த போட்டோக்களை பார்த்து பார்த்து மனதுக்குள் அழதார்
சிவகாமி மார்கெட் கிளம்பி போயிருந்தாள்.
நேரத்தை போக்க வேண்டுமே .எனவே லக்ஷ்மி ஆன்ட்டி தொலைக்காட்சியை ஆன் செய்த போது அங்கு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி. ஓடிக்கொண்டிருந்தது
நிகழ்ச்சி நடத்துபவர் பங்கேற்பாளர்களிடம் "நீங்கள் உங்களுடைய வாழ்வை யாருக்காக வாழ்கிறீர்கள்?" என்கிற கேள்வியைக் கேட்ட அடுத்த நொடி அந்தக் கேள்வி தன்னைப் பார்த்து கேட்ட மாதிரி இருந்தது அவருக்கு.
அந்தக் கேள்வி லக்ஷ்மி ஆன்ட்டியின் ஆழ்மனதில் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுத்தது.
கணவனைப் பறிகொடுத்து வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த போது ரமேஷுக்கு 10 வயது. இந்த ஊருக்கு வந்து அவனை நன்கு படிக்க வைத்து அவன் விரும்பிய ராஷ்மி யை கல்யாணம் செய்துவைத்து, கொள்ளை அழகு பேத்தி சுஷ்மிதாவை அவர்கள் தன் கையில் கொடுத்தபோது, சொர்க்கம் இனி சுஷ்மிதாதான் என்று நினைத்தாள்.
சுஷ்மிதா ஒரு அழகு தேவதை. .அவளை தினம் பாத்து பாத்து ரசித்து, அவளுக்காக விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிக்கொடுத்து அவளோடு விளையாடின பொழுதுகள்.தான் கொடுத்து வைத்தவள் என்று எண்ணினாள்.
.
இரண்டு வயது வரை அவளுடன் கொஞ்சம் நேரம் கிரிக்கெட் விளையாட்டு.பின்னர்புட் பால் விளையாட்டு.
அதன் பின்னர்க் காய்கறிகள் பழங்கள் பற்றிய பாடம் . மனித உறுப்புகள் பற்றி சொல்லிக் கொடுத்த பிறகு, ஆங்கிலத்தில் ரைம்ஸ் பற்றிய படிப்பு., அதன் பின் ஒன் டு த் ரீ சொல்லிக்கொடுத்த பிறகு , தாய்மொழி இந்தி யாக இருந்த போதிலும் தன்
பேத்திக்கு தமிழ் நன்கு கற்க வேண்டும் என்று அவளுக்கு ஆத்திசூடி,திருக்குறள் கற்று கொடுத்ததும்.
பயங்கரசுட்டியானசுஷ்மிதா உடனேஅதை கற்றுக்கொண்டு அறம் செய விரும்பு என்று ஆரம்பித்து ஊக்கமது கை விடேல் என்று சொல்லும் போது இரண்டு கைகளாலும் சைகை காண்பிப்பாள்.அதை நினைத்து நினைத்து சந்தோச பட்ட லக்ஷ்மி இப்போது அவள் இல்லாத வெறுமையை பார்க்கின்ற போது மனதுக்குள் அழஆரம்பித்தாள்.
தன்வயது எவ்வளவு இருந்தால் என்ன? சுஷ்மிதாவுக்கு ஒவ்வொரு பாடம் சொல்லிக்கொடுக்கும் போது தானும் ஒரு குழந்தை போல் ஆகி திரும்ப அவள் தன் மழலையில் சொல்கிற போது அனுபவிக்கும் ஆனந்தம் வார்த்தையில்வர்ணிக்க இயலாது.
யானை சவாரிவிளையாட்டு அவளுக்கு மிகவும் பிடிக்கும். தன் உடம்பின் மீது அவளை ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்ட் வந்து இரண்டாவது ரவுண்ட் கேட்கும் போது பாட்டிக்கு மூட்டு வலி "உவ்வா" என்று சொன்ன அடுத்த நொடி அவள் அயோடாக்ஸ் எடுத்து வந்து தேய்த்து விடும் போது அப்படியே கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தது எவ்வளவு சந்தோசத்தை. ஏற்படுத்தியது.
.
பக்கத்தில் உள்ள பூங்காவுக்கு அழைத்து போய், ஊஞ்சல் விளையாட்டு, சீசா விளையாட்டு., சறுக்கு மரம் இவைகள் மூலம் ஆசை தீர அவளுடன் விளையாடும் போது அவள் முகத்தில் சந்தோச ரேகைகள் காணப்பட்டு அவள் அதை கொண்டாடும் விதத்தில் துள்ளிக் குதிப்பது காண கண்கோடி வேண்டும்.
உடல் ரீதியாகக் களைப்பு தோன்றினாலும் குழந்தையின் கள்ளச் சிரிப்பு தேன் மழலை எல்லாக் களைப்பையும் போக்கிவிடும் லக்ஷ்மி ஆன்ட்டிக்கு.
.
ஒரு முறை பக்கத்ததில்லுள்ள சூப்பர் மார்கெட் அழைத்துப் போனபோது அங்கு வைக்கப் பட்டிருந்த காய்கறிகள் பழங்கள் பெயரை கேட்டபோது கடகடவென
சொன்னதும் அங்குள்ளவர்கள் ஆச்ரயபட்டார்கள்.
லிஃப்ட் ஏறும் போது மேல் பட்டனை பிரஸ் பண்ணும் போது பாட்டி பாட்டி ,இது "டிரையாங்கிள் "என்று சொன்னபோது ஒரு முறை சொல்லிக்கொடுத்த விசயம் எப்படி அழகாக குழந்தை திருப்பிச் சொல்கிறது என்று வியந்ததுண்டு.
"அம்மா சாப்பாடு ரெடி."என்று வேலை க்காரம்மா சொன்னதும் சகஜ நிலைக்குத் திரும்பினார் லக்ஷ்மி ஆன்ட் டி.
மதியம் 4 மணி.லக்ஷ்மி ஆன்ட்டியின் வீட்டுக் காலிங் பெல்லை ஆகாஷ் அழுத் தியபோது அவரே வந்து திறந்தார்.
.
"யாரு? "
"நான் தான்ஆன்ட்டி ஒங்க பக்கத்து வீடு ஆகாஷ்!"
!அடடே!! வாப்பா !உள்ளே வா.!!! பாத்து நாலு வருஷம் மேல. ஆச்சுல்ல ?
"அதான் சட்டுன்னு அடையாளம் தெரியல"
"பரவாயில்ல ஆன்ட்டி"
இரு டீ போட்டுக் கொண்டு வரசொல் றேன்."
சிவகாமி இரண்டு டீ கொண்டுவா. குரல் கொடுத்தார்.
"ஆமாம் ! வீட்டிலே ரமேஷ் அண்ணா, ராஷ்மி அண்ணி, குட்டி வாலு சுஷ்மிதா யாரையும் காணோம் "
"எங்கே அவங்க? " "எங்கேயாவது கோடை லீவுக்கு டூர் போயிருக்காங்களா? "
"சுஷ்மிதா குட்டிக்கு டிரஸ் பொம்மைகள்' ஒங்களுக்குத் தங்க வளையல் இரண்டு ஜோடி; ரமேஷ் அண்ணாவுக்கும், அண்ணிக்கும், டிரஸ் வாங்கிருக்கேன் பாருங்க!!நல்லா இருக்கா ?கொண்டு வந்த சாக்லேட் களுடன் சேர்த்து கொடுத்துநமஸ்காரம்செய்தான் ஆகாஷ்.
"நல்லா தீர்க்காயுசாக இருக்க" வாழ்த்துகிறேன் .
"என்ன ஆன்ட்டி? நான் கேட்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் காணும்?"
அதைக் கேட்டதும், லக்ஷ்மிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது..ஒரு நேரத்தில் அவளுடைய எமோஷன்ஸ், கட்டுப் படுத்த முடியாமல், அழ ஆரம்பித்து விட்டாள்.
"ஆன்ட் டி பீ கூல்.!" என்ன நடந்துச்சு ஏன் அழுறீங்க?"
அழுகையை, கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தி விட்டு, இந்த 3வருஷ இடைவெளியின் போது நடந்த விசயத்தைச் சொல்ல ஆரம்பித்தாள்.லக்ஷ்மிஆன்ட்டி.
"அதை ஏன் கேக்குற? எதிர் பார்க்காத விஷயமெல்லாம் இந்த வீட்டிலே நடந்து போச்சு.?"
"என்ன ஆன்ட்டி சொல்றீங்க?"
"நல்லாத்தானே ரமேஷ், ராஷ்மி சுஷ்மிதா இருந்தாங்க?"
"ஆமாம்! "
"அவங்கஇரண்டுபேரும்ஆபிஸ்போனபிறகு,சுஷ்மிதாவோடவிளையாடுவது, அவளுக்குப் பாடம் சொல்லி கொடுப்பது, சாதம் ஊட்டுவது, 3மணி ஆச்சுன்னா, என்னைக் கட்டிகிட்டு தூங்கி போறதும், திரும்ப 6 மணி ஆச்சுன்னா, வேக வைத்த மில்லெட்ஸ், பால் குடிச்சிட்டு, வாசலில், மத்த குழந்தைகளுடன் விளையாடி ட்டு வருவதற்கும் ,அவங்க இரண்டு பேரும் ஆபிஸ் முடிச்சிட்டு வருவதற்கும் சரியா இருக்கும் ."
வந்தவுடன் அவங்க இரண்டு பேரும் டீ குடித்துக் கொண்டே.."ரொம்பத் தேங்க்ஸ் அத்தை !நீங்க மட்டும் சுஷ்மிதாவை இப்படிகவனிச்சு எங்க சிரமத்தை குறைக்ககன்னா எங்க பாடு திண்டாட்டம் தான்னு, வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவா ரமேஷும் அதை ஆமோதிப்பான்."
"அது எனக்கு ஒரு இன்பமயமான காலம்".
"நான் பெத்த ரமேஷ்க்காக அடகு வைத்த இளமையை வட்டியுடன் மீட்டு தந்த தெய்வம் சுஷ்மிதா".
"நான் பெற்ற பிள்ளையிடம் காட்டிய கஞ்ச தனத்தை என் பேத்தி செல்லம் சுஷ்மிதா விடம் நான் காட்டியதில்லை".
"இப்ப அவ இந்த ஊரே விட்டே ,இல்லை இல்லை இந்த ஸ்டேட் விட்டே போயிட்டா ?"
இப்படிச் சொன்னதும் ஆகாஷ் அதிர்ச்சியாகி, "இந்த ஊரை விட்டு போய் எவ்வளவு நாள் ஆச்சு ஆன்ட் டி?"
"ஒரு ஆறு மாசம் இருக்கும்""சுஷ்மிதா இல்லாம நான் வாழமுடியாது தினம் தினம் செத்து கிட்டு இருக்கேன் ஆகாஷ்!"
"ஏன் என்ன ஆச்சு ? "
"நீங்க சொல்ல விரும்பினால் சொல்லுங்க இல்லாட்டி வேண்டாம்?"
"ஊர் உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு .!! உன்கிட்ட சொல்றதுக்கு என்ன "?
"மூணு வருஷம் முன்பு நீயும் ஒங்க குடும்பமும் யு. எஸ் போனதால், விசயம் ஒங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்ல."
"இவவளவு அபிமானம் வைச்சு , என்னையும் அவங்களையும் நீ பாக்க வந்திருக்கே ஒன்கிட்ட சொன்னா, எனக்கு மன பாரம் குறையும் ."
"நான் கேட்டுக்குறேன் ஆன்ட்டி!" !
"இப்ப ஒங்களுக்குத் துணை யாரு?"
"ஒரு வேலைக்காரம்மா பேரு சிவகாமி வந்து துணைக்கு இருப்பாங்க!" தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தாள்.
"நல்லா போய்க் கிட்டிருந்த அவங்க குடும்ப வாழ்க்கையில் பூ நாகம் ஒன்னு புகுந்துச்சு!"
ராஷ்மி ஹைதராபாத் தில் ,ஒரு செமினார்போன போது , முன்னாள் காதலன் சந்தோஷை மீட் பண்ணி, அவன் இங்கே வீட்டுக்கு வந்து , ரமேஷ்டன் நண்பனாகி அதே சமயம் அவனுக்குத் தெரியாமல் ,ராஷ் மியுடன் கள்ள உறவுக்கொண்டு, அவள் ரமேஷை உதறிவிட்டு சந்தோஷ்டன் கிளம்பி போய் விட்டாள்.
'"இரண்டு பேரும் குடும்ப நலகோர்ட் மூலம் பரஸ்பரம் விவாகரத்து வாங்கிட்டாங்க".
"இப்போ ராஷ்மி புனேவில் செட்டிலாயிட்டா!"
"மாதம் ஒரு நாள் குழந்தையைப் பார்த்து விட்டு வரலாம் என்று தீர்ப்பு வந்தும், அதை ரமேஷ் ஏனோ புறக்கணித்தான்னு தெரில."
"நான் எவ்வளவோ கெஞ்சி பார்ததும் சுஷ்மிதாவையும் தன்னுடன் கூட்டிகிட்டு போயிட்டா"ராஷ்மி.
"அந்தப் பிஞ்சு சுஷ்மிதா என்னை விட்டு போகமாடே ண்ணு சொல்லி, அடம் பிடிச்சப்ப, தர தரவென்று இழுத்துக் கொண்டு போன போது இவளுக்குத் துளிக்கூட இரக்கம் இல்லையா என்பது போல் இருந்தது".
"என் உயிரோடு கலந்த சுஷ்மிதாவை பாக்க முடியாமல் தவிக்கிறேன்".
."ஆறு மாசம் ஆச்சு! இப்படிப் பைத் தியம் மாதிரி இருக்கேன் "
"ஹால் பூரா பாரு சுஷ்மிதா ஃபோட்டோ தான் "அவளுடன் நான் எடுத்தக்கொண்டது இது தான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் உயிரை கையில் பிடிச்சு வைச்சுருக்கு !"
"கேக்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கு.
சுஷ்மிதாவை பாத்து பாத்து கவனிச்சு பாசத் தையும் காமிச்ச நீங்க, இப்ப சுஷ்மிதா இல்லைன்னு தெரிஞ்ச பிறகு பாதி உடம்பா ஆயிட்டடீ ங்க,! ஆன்ட்டி."
"ஆமாம் ரமேஷ் அண்ணா ஒன்னும் கேக்கலையா?"
"தனக்குநம்பிக்கைதுரோகம்செஞ்சராஷ்மி மேலயும்,கூடஇருந்துகுடும்பத்தை
கலைச்சசந்தோஷ் மீதும் கோபம் கொண்டு, ஒரு சன்யாசி வாழக்கை வாழ்ந்து கொண்டு இருக்கான்."!
.
"யாரையும் இப்ப அவனுக்குப் பிடிக்கலை" எல்லோரும் கபடதாரி கள் என்கிற உணர்வு தான் இப்ப அவனிடம் மேலோங்கி இருக்கு.
"ரமேஷ் அண்ணா இப்ப எங்கே இருக்கார்?"
"எங்கே இருக்கான்? என்ன வேலை பார்க்கிறான்? எதுவும் எனக்குத் தெரியாது?
"மாதத்தில் முதல் ஞாயிறு வருவான்" சிலவுக்குப் பணம் கொடுத்து செல்வான்.அரை மணி நேரம் கூடத் தங்கமாட்டான்.
.வேலைக்கார அம்மாவிடம் என்னைக் கவனமாகப் பாத் துக்கச் சொல்வான். இதே நிலைமை தான் ஆறு மாசமா".
.
சட்டென்று காலண்டரை பார்த்தான் ஆகாஷ்.
நல்ல வேளை நாளை முதல் ஞாயிறு.ரமேஷ் வந்தவுடன் இந்தப் பிரச்சினை பற்றி ஒரு தீர்வு கிடைக்கப் பாடு படுவோம்.
"சரி ஆன்ட்டி !நான் கிளம்பறேன்; "நான்ஹோட்டலில்தங்கிட்டுநாளைவரேன்."
இப்படி சொன்னதும்,
"என்ன ஆகாஷ் வராதவன், வந்துருக்கே!இரண்டு நாள் தங்கிட்டு போ.எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்".
டின்னர் ஆன்ட்டியுடன் சேர்ந்து சாப்பிட்ட பிறகு ,அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் படுக்கப்போனான்
ஆனால் தூக்கம் வர மறுத்தது. எப்பேர்பட்டகுடும்பம். இப்படி நிலை குலைந்து சீர்கெட்டுப்போயிருக்குஎன்றுவருத்தம்கொண்டான்.அவன் நினைவலைகள் பின் நோக்கி சென்றது.
புறநகர் பகுதியில் லக்ஷ்மி ஆன்ட் டி வீட்டுக்குப் பக்கத்தில் இவர்கள் குடி வர ஆகாஷ் குடும்பமும் ,லக்ஷ்மி ஆன்ட் டி குடும்பமும் ஒருவருக்கொருவர் நன்கு பழக ஆரம்பித்தனர்.
வட இந்தியாவிலிருந்து இவர்களும் புலம் பெயர்ந்தவர்கள். அதுவும் ஆகாஷ் என்றால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.சுஷ்மிதா அப்போது 6 மாத குழந்தை.
அவன் யு எஸ் போகப் பண உதவி செய்த லக்ஷ்மி ஆன்ட்டியை, அவன் வாழ்க்கையில் எப்படிமறக்க முடியும்?
.
மனோதத்துவப் படிப்புக்கு யு எஸ் போய் அங்கேயே வேலை கிடைத்து, இப்போது 3 வருடம் கழித்து ஊர் திரும்பிய ஆகாஷ், இப்படியொரு நிலைமையில் லட்சுமி ஆன்ட்டிய சந்திப்பான் என்று நினைக்கவில்லை ..
பாவம் ஆன்ட்டி ,பேத்திசுஷ்மிதாபிறந்ததுமேல்பாசத்தைக்கொட்டியவள்.திடீரென்று இப்படிப் பட்ட சூழ்நிலைக்குத் தள்ள் பட் டுள்ளாள்.55வயது பெண்மணி உடம்பிலும் ,உள்ளத்திலும் ,நோய் வாய் பட்டுள்ளது கண்டு வருத்தமுற்றான்.
தான் ஒருசைகாலிஸ்ட்எப்படியும்ஆன்ட்டியைசகஜநிலைக்குகொண்டுவரவேண்டும். அது தான் தான்செய்யும் நன்றிக்கடன் என்று நினைத்துக் கொண்டான்.
சுஷ்மிதா மீது பாசத்தை அளவுக்கு மேல் கொட்டி உள்ளார் என்பதும் ;எவ்வளவு நெருக்கமாகஇருந்துஒருவர்பிரிந்துபோனால்ஏற்படும்துயரம்பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பது அவனுக்குத் தெரியும்..பாவம் உடல் மெலிந்து தெம்பு இல்லாமல் போய் விட்டார்
.பாத்துபாத்துசுஸ்மிதாவைவளர்த்தவர்ஆச்சே!ஆன்ட்டியின் உயிர் மூச்சாக இருந்த சுஷ்மிதா இப்போது தன்னுடன் இல்லை என்கிற போது தவிக்கும் தவிப்பு வார்த்தையினால் சொல்ல முடியாது.
ஆகாஷ் இது மாதிரி கேஸ்களை நிறையபார்த்தவன் .நிச்சயம் அவர்களைக் குண படுத்த வேண்டும். மனதுக்குள் நினைத்தவன் எப்போது தூங்கினான்
என்பது தெரியாது.
மறு நாள் காலையில் சீக்கிரமே வந்து விட்டான் ரமேஷ்
ரமேஷை பார்த்ததும் ஆகாஷ் மனம் சங்கடப்பட்டது .
அவரிடம் எவ்வளவு துள்ளல் இருக்கும். அது காணாமல் போய் இருந்தது .
ஆன்ட்டி சொன்னபடி ஒரு சன்யாசி மாதிரி தான் இருந்தார்.
சேவிங் செய்யாத முகம் கண்களில் எப்போதும் சோகம் தெரிந்தது.
பரஸ்பர விசாரிப்புக்கு பிறகு ஆகாஷ் பேச்சை தொடர்ந்தான்
"ஐ ஆம் ரியலி சாரி அண்ணா. "எல்லா விசயமும் கேள்விப்பட்டேன்"
. "இப்போ ஆன்ட் டி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.
"இதை உடனடியாகக் களையனும் ஒங்க ஒத்துழைப்பு வேணும் அண்ணா."
வேண்டுகோள் விடுத்தான்
"ஆகாஷ்.!இதிலே நான் என்ன செய்ய முடியும்?" விரக்தி தெரிந்ததுஅவன் பேச்சில்.
"அப்படில்ல அண்ணா !நீங்க ஒரு முறை புனே போயிட்டு வாங்க .அப்ப ஆன்ட் டி யையும்அழைச் சிட்டுபோங்க! சுஸ்மிதாவைபார்த்துப்பேசினால்ஆன்ட் டி சந்தோஷப்படுவாங்க."
இப்படி ஆகாஷ் சொன்னதும் ஆவேசபட்டான் ரமேஷ்.அந்த ஓடுகாலியை பார்க்க நான் போகப் போவதில்லை."
"
"அண்ணா நீங்க ஏன் அப்படி நினைக்கணும் ?ஒங்க வாரிசு ஒங்க இரத்தம் பார்க்க போங்க. கூடவே அம்மாவும் வந்துட்டு போகட்டும்".
"இல்லை ஆகாஷ் என் மனசு கல்லாயிடுச்சு" எவ்வளவு வற்புறுத்தியும், ரமேஷ் மனம் இறங்கி வரவில்லை என்பது அவன் பேச்சில் தீர்க்கமாகதெரிந்த து
"சரி நீங்க போக வேண்டாம் அண்ணி போன் கொடுங்க"
.
"அவ ஃபோன் நம்பர் என்கிட்ட இல்ல."வாங்கி வைச் சுக்க விருப்பமும் இல்லை."
"சரிஅட்ரஸ் கொடுங்க.நான் என் புனேவில் இருக்கும் நண்பனைவிட்டுச் சந்திக்கச் சொல்லி ஃபோன் நம்பர் வாங்குகிறேன். என்கிட்ட பேச சொல்றேன்“"
"இது தேவையில்லாத ஒன்று ஆகாஷ்."
"இல்லைண்ணா இப்ப நான் கேட்கிறது கூட ஆன்ட் டி மன நிலை உத்தேசித்துத் தான்". பாருங்கஆன்ட் டியை. மனதளவில் நொறுங்கி போய் இருக்காங்க".
வேண்டா வெறுப்பா முகவரியை சொன்னான்.
பின்னர்த் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி விட்டு கிளம்பி போயிருந்தான் ரமேஷ்.
அட்ரஸ் குறித்துக் கொண்டு நண்பனிடம். அந்தக் குறிப்பிட்ட விலாசத் தில் ராஷ்மியைப் பார்க்கும் படி ஃபோனில் தகவல் சொன்னான். தன் குறிக்கோளை சுருக்கமாகச் சொல்லி இந்த விசயத்தில் தீவீரம் பற்றிச்சொன்னான்.
அன்று மாலையே ஆகாஷ் நண்பன் ராஷ்மி விலாசத்தைக் கண்டுபிடித்து அவள் ஃபோன் நம்பரை. வாங்கிகொண் டான் . தன் நண்பனும் ஒரு சைகாலாகிஸ்ட் என்பதால் ராஷ்மி யிடம் இந்தப் பிரச்சினை பற்றிப் பேச முடிந்தது.
ஆகாஷ் பற்றிஏற்கனவே தெரியும் என்பதால் அவளும் பேசினாள்.
"அண்ணி ஒங்க சொந்த விசயம் பத்தி நான் எதுவும் பேசமாட்டேன்"
தான் சொல்ல வேண்டியது பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிட்டுஒரு சைகாலிஸ்டு பார்வையில் "ஆன்ட்டி படும் பாசபோராட்டதுக்கு ஒரே தீர்வு இருக்கு அது ஒங்க கையில தான் இருக்கு அண்ணி."என்றான்
தன் அட்வைஸ் கேட்டு நடந்தால் ஆன்ட்டியின் உயிர் காப்பாற்றப்படும் என்று சொன்னதும்,அவள் மனம் இறங்கி வந்தாள். அவன் சொன்ன விஷயத்துக்கு ஓகே சொன்னாள்.
ஆன்ட்டி நீங்க சுஷ்மிதாவுடன் பேச, பார்க்க ,நான் சொல்ற ஒரே வழி தான் இருக்கு !"
நீங்க ஸ்மார்ட் போன் வைச்சுருக்கிங்களா?"
"இல்லை"
என்ன ஆன்ட்டி ?இந்தக் காலத்திலே எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கும் போது .ஒங்க கிட்ட இல்லைன்னு சொல்றது ஆச்சர்யமா இருக்கு."
"இல்லை ஆகாஷ் சுஷ்மிதா இருந்த வரைக்கும் அதற்கு வாய்ப்பு இல்லை.அவ ஊரை விட்டுப் போனதும் நான் ஒடுங்கி போயிட்டேன்"
பரவாயில்லை ஆன்ட் டி !. இன்றைய அறிவியல் வளர்ச்சி எல்லோரையும் நம் பக்கத்தில் கொண்டுவிட் டுருக்கு அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும். நமக்குச் சாதகமான விசயம் தான்.
உடனடியாக ஒரு விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் வாங்கி வந்து அதை ஆபேர ட்செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தான்.
உடனே ஆன்ட்டியின் வாட்ஸ்அப் நம்பர்க்கு வர சொல்லி விடியோ காலில் சுஸ்மிதாவை பேசச் சொன்னான்.வீடியோவை பார்த்ததும்
"சுஷ்மிதா கண்ணு என்று ஆன்ட்டி கூப்பிட "பாட்டி பாட்டி "என்று சுஷ்மிதாவும் பேச இருவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முத்தமழை பொழிந்தார்கள்.அவர்கள் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர்.
அந்த நிமிடங்கள் வர்ணிக்க இயலாத ஒன்று.
"வறண்ட இதயத்தில் விளைச்சலே
உயிரே உன் வாழ்வில் வெளிச்சம் காட்ட
உருகும் மெழுகாகி கரைவேன்
பயிரே நீ வளர பார்க்கத்தான்
உயிரை உடலில் சிறை வைத்தேன்.
உலக அதிசயங்களின் உச்சம் நீயே.....!..."
எங்கோ எப்பொழுதோ படித்த கவிதை வரிகளை வாய் விட்டு சொன்னார்.லக்ஷ்மி
சுஷ்மிதா கைகொட்டி சிரித்து துள்ளல்.அதைப் பார்த்த லக்ஷ்மி
ஆன்ட்டி மனம் லேசானதை கவனித்தான் ஆகாஷ்.
ராஷ்மியின் ஒத்துழைப்புக்கு நன்றி சொன்னான்ஆகாஷ்.
.அதே சமயம்ராஷ் மியிடம் ஒரு வேண்டுகோளை வைத்தான்.
அண்ணி,ஆன்ட்டி எப்போதெல்லாம் சுஸ்மிதாவை நினைத்து பார்க்க வேண்டும் என்று தோன்றி வாட்ஸ்அப் பில் வீடியோ காலில் வரும்போது ஒத்துழைப்புக் கொடுங்கள் என்றான்..
பாட்டி பேத்தி உறவு என்பது வார்த்தையில் சொல்ல முடியாத பந்தம். ஓங்களுக்கு மன முறிவு ஏற்பட்டது அதனால் பிரிந்தது இதெல்லாம் சுஷ்மிதா குட்டிக்குத் தெரியாது.
அதுக்குத் தெரிஞ்சது எல்லாம் பாட்டியின் அன்பும் அரவணைப்பும் மட்டுமே. நீங்கள் ஒரு நாள் பாட்டி யாக மாறும் போது அந்த உணர்வுகள் ஒங்களுக்குப் புரியும்.
நல்ல வேளை இன்றைய அறிவியல் வளர்ச்சி மூலம் நமக்குப் பிரியமானவர் உலகத்தில் எந்த மூலையில் வசித்தாலும் நேரிடையாகப் பார்க்கவும் பேசவும் முடியும்.
ராஷ்மிக்கு ஆகாஷ் சொன்ன வார்த்தைகள் சரியெனப் பட்டுருக்க வேண்டும். சரியென ஒத்துக்கொண்டாள். வாட்ஸ்அப் கால் மூலம் ஒவ்வொரு முறையும் வர சம்மதித்தாள்.
இனி கவலையில்லை உறவு முறிவுகள், சிக்கல்கள் ,பாச போராட்டத்துக்கு முன் அவைகள் சாதாரணத் தூசி போலத் தான் தெரியும் .
"காலப் போக்கில் எல்லாமே காணாமல் போய் விடும் ".ஆன்ட்டி
.
என்ன தான் நீங்கள் பாசமும் அன்பையும் காட்டினாலும் ரேஷ்மி சுஸ்மிதாவின் அம்மா.
ஒங்க மருமகள் என்கிற பந்தம் முறிந்து போனாலும்.அவங்களுக்குத் தன் பெண் சுஸ்மிதாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வதில் அக்கறை இருக்கும்.
"சுஷ்மிதாவுக்கு உங்கள் அன்பு கூடிய சீக்கிரம் புரியும் !அவள் உங்களைத் தேடி நிச்சயம் ஒரு நாள் வருவாள். "
"அதே சமயம் நீங்க ஒன்னை புரிஞ்சுக்க னும் மாற்றங்கள் என்ற ஒன்றே இந்த உலகத்தில் கடவுள் தோற்றுவித்த நியதி.வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகி விட்டால் யாருடைய மாறுதலும் நம்மைப் பலமிக்கச் செய்யாது."
இதைத் தான் கவிஞர் கண்ணதாசன் "மாறுவதைத் தெரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்" என்று.
ஆன்டடிக்கு. சரியான முறையில் . கவுன்சிலிங் கொடுத்து அதற்கு ஒரு தீர்வு கொடுத்தத் திருப்தியுடன் ஊர் கிளம்பினான் ஆகாஷ்.
.சுபம் .
மொத்த வார்த்தைகள் 1940 முகவர்,தலைப்பு,எழுதியவர் பெயர் சேர்த்து.
முகவரி
65 Fourth Street Kotharinagar Ramapuram Chennai 89.
Mobile 9444958521.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்