logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Jeya Murugan

சிறுகதை வரிசை எண் # 88


விழுதுகள்..... ஏ..புள்ள..ஓடாதே...நில்லு...எங்..கண்ணுல்லா..எம்தங்கமிலா....தே...நில்லு..நில்லு....சொன்னா..கேட்கவே..மாட்டியளே.னு..செல்லமாகொஞ்சி கூப்பிடும்..ராமாத்தா..வை .நோக்கி..ஒரு நிமிசம் நின்னு..தலைய சாய்ச்சி..ஒரு பார்வை பார்த்து விட்டு..மீண்டும் அதிக உற்ச்சாகத்துடனுடன் துள்ளி குதித்து ஓடுகிறது..லட்சுமி ஈன்ற செவள கன்றுக்குட்டி... ஏப் புள்ள நீயும்மா..எனக்கு போக்கு காட்டுதே..னு..பின்னால ஒடிவரும்..ராமாத்தா....அவள் ஒன்றும் பேரழகி இல்லைதான்.. இருந்தாலும் .அவளுக்கு எப்போதும் ஒரு கர்வம்..உண்டு..இருக்காதா.பின்னே ...அவள் அப்பாக்கு ஆச்சி..ராக்குசம் ஆச்சிய போலவே இருக்கானு .எல்லாரும் சொல்லும்போது..மனதுக்குள்..சிரித்துக் கொள்வாள்..ராக்குசம் ஆச்சி..ஏழு சகோதரிகளுள் ஐந்தாவதாக பிறந்தவள்..அவளும் இப்படித்தான்...அவளுக்கு இரண்டு பெண்குழந்தைகள் ...அதோட..லட்சுமி..பேச்சியம்மானு..இரண்டு பசுக்களும் இருந்தது..ராக்குசம் ஆச்சியோட..வீட்டுக்காரரு..நம்ம மாசானம் தாத்தா......கேலி கிண்டலுக்கு பஞ்சமில்லாதவரு..நம்ம ராக்குசம் ஆச்சி..கொஞ்சம் சுமாராகத்தான் சமைக்கும் .அப்போல்லாம் .அவரு..ஒரு முறிய துருவி..போடு..ஒரு முறிய அரைச்சிப் போடு .ஆனாலும் கறி..பஸ்ட்டு..அடேப்புள்ள..ராக்குசம்..இம்புட்டுதானே...சமையலுனு .இதுக்கு போய் சுணங்குதியேனுவாரு...அந்த ஊருல..யாருக்காவது..சுளுக்கு..பிடினு..வந்ததுதானா..நம்ம மாசான தாத்தாகிட்ட தான் போவாங்க...அவரு..என்னா..என சுமைய தூக்கீனேரு..இங்க வந்துட்டிரு..னு கேலி பேசிக்கிட்டே..ஒரு வாதமடக்கி மரத்தில இருந்து ஒரு குச்சிய ஒடைச்சி .இந்தாரும் இடுப்புக்கு நேரா பிடியும்னு சொல்லி..மறுபக்கத்த தான் பிடிச்சிக்கிட்டு ...சங்கு..உருள..சக்கரம் உருள..பூமி..உருள..பூமாதேவி..உருள..னு..மந்திரம் சொல்லிக்கிட்டு...அந்த கம்ப லைட்டா மேலும் கீழும் ஆட்டினா..எப்படியாபட்ட வாய்வுப்பிடிப்பும் பறந்து போயிரும்லா... ஆனைக்கும்..அடி சறுக்கும்ன மாதிரி..எங்க மாசான தாத்தா..குளத்தில..மறுகால் விழுகிற இடத்தில குளிக்க போனபோது..தவறி விழுந்திட்டாரு..அதை பக்கத்து வீட்டு ஆறுமுகம் அண்ணே .குளிக்க போகும்போது..ஏதோ..முடி மிதக்கிற மாதிரி தெரியுதேனு பார்க்க..இங்க ஆச்சி ..தாத்தாவ காணோம்னு ..தேட..இப்படித்தான் எங்க தாத்தா.எங்களை எல்லாம் விட்டு பிரிஞ்சி போனாரு .....இது கொஞ்ச நாளா..ஒரு சோகக்கதையா...பேசப்பட்டு வந்தது..மாசானம்தாத்தாவுக்கு..இரண்டு பெண்பிள்ளைகள்.மூலம் ஏழு பேரன்கள்...நாலு பேத்திகள்.....அவங்க வகையறாவா .இருபத்திநாலு..பேத்திகள்..ஒன்பது...பேரன்கள்...இப்போ .நம்ம ராமாத்தா ..இருக்காளே...அவளும்..ஒரு பேத்திதான் ..இன்னும் மாசான தாத்தாவும் .இராக்குசம் .ஆச்சியும்..நினைவுகளில்.வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாங்க .ஆலமரத்தின் வேர்களாய்...எழுபத்திரெண்டு..பேரன் .பேத்திகளை.விழுதுகளாய் தாங்கி கொண்டு ....இதில் நானும் ஏழாவது பேத்தியாக..விழுதுகளின்..தொடர்ச்சியாக....... விழுதுகள்.... ..

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.