logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

எழுத்தாளர் ப.லோகு பிரசாந்த்

சிறுகதை வரிசை எண் # 9


முதுமை மெட்ராஸ் பட்டினத்தில் இருந்து என் பாட்டியை சந்திக்க பேருந்தில் சென்றேன். அருமையான "பச்சை பசேர் என அழகிய வயல்வெளிகள்" என்னை வரவேற்றன அப்படிப்பட்ட அழகிய கிராமம்தான் கோபிசெட்டிபாளையம்.பாட்டி பெயர் காளியம்மாள்.என்பது வயதைக் கடந்த வயதான பெண்மணி.என்னை பார்த்த உடனே "இங்க பாருடி என் பேராண்டி மெட்ராஸ் பட்டணத்தில் இருந்து என்னை பார்க்க வந்து இருக்கா"என்று வட்டார வழக்கு மொழியில் செல்ல வார்த்தைகளில் என்னை கொஞ்சினாள். நான் பாட்டிகென வாங்கி வந்த சேலையை அவளிடம் கொடுத்தேன்."இந்த வயசுல இதை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ண போற உன் அம்மாகிட்ட கொடு அவளுக்கு அம்பது வயசு உங்க அம்மா காட்டினா அழகா இருக்கும் நான் கட்டி என்னடா பண்ண போற என்று"கூறினாள்.நான் வாங்கி வந்த தின்பண்டங்களையும் வேண்டாம் என்றாள். அவளிடமிருக்கும் ஆடைகளை விட முதுமை வரைந்த கோடுகளே அதிகம்.அவளின் சிறு வயது புகைப்படம் பார்க்கும்போது "அழகுக்கு இலக்கணம் என் பாட்டி" என்று அடிக்கடி சொல்லுவேன் அவளும் "அட போடா கிறுக்கு பயலே என்று கூறுவாள்" ஆனால் இப்போது சுருங்கிய கன்னங்களும் இயலாத உடல் மொழியுமே வாழ்க்கையாகி விட்டது.நிறைய பந்தங்கள் இருக்கிறது அவளுக்கு ஆனாலும் அவளைச் சுற்றி வெறுமையே எப்போதும் நிறைந்திருக்கிறது. அதிகம் அவளை யாருக்கும் பிடிப்பதில்லை அவளும் யார் துணையும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் தத்தி தத்தி தன்னைத் தானே தாங்கிப்பிடித்து நடந்து கொள்வாள். "பாட்டி நீ தாத்தாவை காதலிச்சு திருமணம் செய்து கொண்டாயா"என்று அடிக்கடி கேட்பேன். சற்றும் கூச்சப்படாமல் அந்தக் காலத்தில் உன் தாத்தாவை எனக்கு பிடித்திருந்தது ஆனால் அதை அவர் வந்து தான் காதலை சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன் இப்படியே விவசாய கூலி வேலைக்கு சென்ற எங்களுக்குள் காதல் வந்தது காதலித்தோம்."இப்போ உனக்கு என்ன வேணும் என்னோட காதல் கதை சொல்ற கேளு" என்று ஒரு மணி நேரம் தனது அழகிய காதல் கதையை என்னிடம் சொல்லுவாள்.என் பாட்டி 1945 லிருந்து 1950 க்குள் நடந்த ஐந்து வருட காதல் கதையது ஒவ்வொரு வாட்டி கேட்கும் பொழுதும் சலிக்காத காதல் கதை அதை கேட்கும் பொழுது எனக்கும் காதலிக்க ஆசை ஏற்பட்டது.. இளமையை மறைந்த பிறகு.. கணவனும் தன்னை விட்டு இறந்த பிறகு.. பிள்ளைகளும் கைவிட்டபிறகு.. பேரன் பேத்தி எங்களோடு,வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு வெற்றிலை தட்டும் உரல் குச்சி மட்டுமே தன் எதிர்காலத்தை மென்றுகொண்டிருக்கும். வெற்றிலை வாங்க வேண்டும் என்றால் "அடே பேராண்டி எனக்கு வெற்றிலை சுண்ணாம்பு பாக்கு வாங்கிட்டு வா கடைக்கு போய்"என்று கூறுவாள்.நான் கடைக்கு செல்லும் போதெல்லாம் வாங்கி வந்து தருவேன் அதுதான் என் பாட்டிக்கு நான் செய்த பெரிய உதவி.அவள் தான் வைத்திருக்கும் மிசுமிசு கண்களோடு வெற்றிலை உரலில் வெற்றிலை பாக்கு இரண்டையும் போட்டு இடித்து மென்று வாயை அசைபோட்டுக் கொண்டிருப்பாள். ஒவ்வொரு வீட்டின் சுவரையும் பிடித்து பிடித்து மெது மெதுவாய் அழகான குழந்தை போல நடந்து வருவாள்.சிலநேரங்களில் அருகிலிருக்கும் கட்டில் உட்கார வைத்துவிட்டு நான் கடைக்குச் சென்று வெற்றிலை வாங்கிக் கொடுத்து அவள் வீட்டில் விடுவேன். இறுகப் பிடித்த என் கைகளை அவள் வீடு கிட்டத்தில் வந்ததும் அவளே விடுவித்துக்கொள்வாள். நான் செய்த உதவிக்கு அவள் மொழியில் முத்தம்தான் அவள் சொல்லும் நன்றி. என் கைகளை இறுக்க பற்றி கொண்டு தங்கம் சாமி"இந்த ஊர்ல இந்த மாவட்டத்துல ஏன் இந்த ஜில்லாவிலேயே நீதான் பெரிய ஆளு அப்படின்னு பேர் வாங்கணும் புகழ் வாங்கணும் நல்லா சம்பாதிக்கணும் ஒரு நாள் நீ நல்லா வருவியா" என்று அடிக்கடி கூறுவாள் பாட்டி என்று சற்று உரைக்கக் கத்தினால் தான் திரும்புவாள். அவள் முகத்தின் சிரிப்பின் சாயலைக் கூட நான் யாரிடமும் இதுவரை பார்த்ததில்லை.அப்படிப்பட்ட அழகு சிரிப்பது. என்னோடு பேசும்போதெல்லாம் அவள் இளமைகாலத்தின் ஏதேனும் ஒரு கதையை சொல்லிவிட்டுப் போவாள். அவளின் சந்தோசம் கண்ணீராய் வழிந்தோடுவதைக்கூட நான் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். எல்லாம் சொல்லி முடித்து கடைசியில் மீண்டும் ஒரு புன்னகைப்பாள் அந்தக் கண்ணீரை இந்தப் புன்னகை துடைத்துவிடும். அவள் பேசினால் பேசிக்கொண்டேயிருப்பாள் பாவம் அவளோடு பேசுவதற்குத்தான் ஆளில்லை. அவள் என்னைக் கடக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு கனம் இதயத்தை அழுத்தும். இன்றைய தலைமுறை முதியவர்களை அடிக்கிறார்கள் உதைக்கிறார்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கிறார்கள் முதுமையின் வலி அறியாமல் சில பிள்ளைகள் "எனக்கு குழந்தை பிறந்தால் கூட உன் கண்ணில் காட்ட மாட்டேன்" என்று" பணம் தான் பெரியது கட்டி கிட்ட மனைவிதான் பெரியவள் என்று இருக்கிறார்கள் பாவம் அவர்களுக்கு தெரியாது முதுமை அவர்களையும் சூழ்ந்து விடும் என்பது" என் பாட்டி காளியம்மாள் போன்ற முதியவர்கள் நிறைய இருக்கிறார்கள். இவர்கள் முதுமையோடு போராடுவதே போதும் இவர்களை தள்ளாடும் வயதில் தனிமையோடும் போராடவிடாதீர்கள்.. அவர்களை அன்பாக அரவணைத்து இச்சமுதாயத்தில் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வுடன் வாழ்வோம். ஒவ்வொருவரும் வாழ்வில் முதுமை தனிமை வரும் அப்போதுதான் நம் தள்ளாடும் வயதில் என்ன செய்வோம் என்று யோசிப்போம் முதுமையின் வலி அறிந்தவனுக்குத்தான் முதுமையை பின்பற்றி நடக்க இயலும் அப்படிப்பட்ட முதுமையை முதியோர்களை நேசிப்போம் முதுமையை வாசிப்போம் முதுமைக்கு மரியாதை கொடுப்போம் முதுமையை போற்றி வணங்குவோம். எழுத்தாளர் ப.லோகு பிரசாந்த் கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம் புலன எண்:9944835875 மின்னஞ்சல்:loguprasanthinc@gmail.com

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.