ச. சத்தியபானு
சிறுகதை வரிசை எண்
# 8
பயணம் முடிவதில்லை
தெரு தெருவாக சுற்றினாலும் இந்த ஐந்தாவது கதவு எண் வீட்டை மட்டும் காணவில்லையே.
எதிரில் நின்றவர் என்னப்பா இந்த தெருக்களை அடிக்கடி சுற்றி வராயே.
அது ஒன்னுமில்லை சார் என்றான் மணி.
நீ வேற டிப்டாப்பா டிரஸ் பண்ணினுட்டு வந்திருக்கா. அடிக்கடி இந்த தெருமுனையில் நின்று இந்த வீட்டா வேற குறு குறுவென பார்த்துகிட்டே இருக்கா. யாருப்பா நீ.
அதற்கு மணி பதில் பேசாது ஒரு யோசனையாக நின்றுக் கொண்டிருந்தான்.
ஏப்பா…. ஏப்பா… உனது பெயர் என்னப்பா?
அதற்கும் ஏதும் பதில் பேசாமலே நின்றிருந்தான் மணி.
நீ இப்போ உண்மையா சொல்லால அவ்வளவு தான் உன்ன திருட்டு பையன் நினைக்க வேண்டியது தான்
சார் இது என்ன வம்பு போச்சு, என்னைப் பார்த்தா திருடன் மாதிரியா இருக்கு நானே ஒரு வேலை விஷயமா ஒருத்தரை தேடி வந்தேன் சார்.
அதான் என்ன வேலைப்பா
இங்கா ஐந்தாவது நம்பர் வீடு எது சார்.
இங்கா மொத்தம் ஆறு அடுக்குமாடி குடியிருப்பு இருக்கு, அதுபோக தனி வீடுகளாக ஐம்பது இருக்கு தம்பி. நீ எந்த ஐந்தாவது நம்பர் வீட்ட கேட்கிறா.
புரியலா கொஞ்சம் தெளிவாக கேளு தம்பி.
அந்த வீட்டுக்காரரின் பெயர் உனக்கு தெரியுமா தம்பி.
அதான் சார் தெரியலா என் மேனேஜருக்கு போன் பண்ணேன் அவரும் போனை எடுக்கலா சார். அவர் தான் மெட்டையா ஐந்தாவது நம்பர் வீடு, மாணிக்கம் தெரு, அண்ணா நகர் என சொல்லி அனுப்பி விட்டார்.
எனக்கு ஒரு நாள் பொழுது வீணா போச்சு சார்.
சரி தம்பி திருப்பி அவருக்கு போன் பண்ணி கேளுப்பா…
நானும் விடமா போன் அடிக்க தான் செய்கிறேன் அவர் தான் போனை எடுக்கலா.
காலையிலிருந்து ஒரு பத்து தடவையாவது இந்த தெருவாக சுற்றி வந்திருப்பேன் சார்.
இப்பவாவது சொல்லுப்பா உன் பெயரென்ன?
அதற்கு மணி சார். நீ எந்த ஏரியப்பா நான் இந்த ஊர் இல்ல நான் விருதுநகர் மாவட்டம் சார். இங்க ஒரு தனியார் பேங்கில் வேலை பார்க்கிறேன் சார்.
நீ எத்தனை வருடமா வேலை பார்க்குகிறப்பா.
நான் ஒரு வருடமா இந்த பேங்கலா வேலை பார்க்கிறேன் சார்.
ஓகோ….. அந்த பேங்கு அதிகாரி தான் உன்னை இந்த வேலைக்கு அனுப்புனதா….
ஆமாம் சார்..
திருப்பி போன் பண்ணி பாரு அது யாரு என்ன கேளு எனக்கு தெரிச்ச வாங்கலா இருந்தா உனக்கு சொல்றேன் மணி.
சரிங்க சார் கொஞ்சம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா சார்.
சரி சரி வாப்பா உன் கிட்ட பேசிட்டு இருந்ததுலா என் வேலையா மறந்துட்டேன்.
என்ன வேலை சார் இன்னைக்கு கரண்ட் பில் கட்டணும் தம்பி. இன்னைக்கு லாஸ்ட் நாளுன்னு சொன்னாங்கப்பா.
அப்படியா சார்.
நம்ம தண்ணீர் கேட்டதற்கு பதிலே சொல்லாமல் வேற எதையோ பேசிக்கிட்டே இருக்குறரே.
தண்ணீர் இல்லாமல் வாய்யெல்லாம் ஒரே வறட்சி இருக்கே.
சரி மறுபடியும் ஒரு முறை கேட்டு பார்ப்போம்.
என்ன சொல்கிறார் என பார்த்து விட்டு அருகில் உள்ள கடையில் வாங்கி குடித்து விடுவோம் என நினைத்து கொண்டே அவரிடம் தண்ணீரை கேட்க வரும் போது “விக் விக் என்று தொண்டை நீரியில்லாமல் எனக்கும், எனக்கருகில் இருக்கும் அவருக்கும் தூது விட்டது”.
பிறகு உடனே அவர் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து கொடுப்பார் என நினைத்தேன்.
ஆனால் அவரோ அருகில் உள்ள கடைக்காரரிடம் பாட்டிலில் தண்ணீர் வாங்கி வந்து கொடுத்தார்.
எனக்கு தாகம் தீர்ந்ததும் சற்றும் யோசிக்காமல் அவர் என்னிடம் இருபது ரூபாய் தாப்பா என்றார்.
எதற்கு இருபது ரூபாய் இந்த வாட்டர் பாட்டிலுக்குப்பா மணி.
மணி திகைத்து போனான். மனதிற்குள்ளேயே அவரை திட்டி தீர்த்தான்.
பிறகு வேறு வழியில்லாமல் பையில் இருந்து ஒரு பச்சை கலர் இருபது ரூபாய் நோட்டை அவரிடம் நீட்டினான்.
இப்படியும் ஒரு மனிதன் பூமியில் இருக்கிறானா. இவன் கிட்ட போய் இவ்வளவு நேரம் பேசுநோமா நினைச்சு பார்த்தாலே கோபம் கோபமா வருது.
சரி அவன் வரதுக்குள்ளா நம்ம இடத்தை விட்டு போயிவோம். காலம் கலிகாலமாச்சு.
இதுவே நம் ஊரா இருந்தா யாராக இருந்தாலும் வீட்டுக்குல்லா கூப்பிட்டு பேசுவாங்க…
தண்ணீர் வேணுமா சாப்பாடு வேணுமா உபசரித்து அனுப்பு வாங்க
நம்ம ஊர் மக்கள் நம்ம ஊர் மக்கள் தான்.
நகரத்து மக்கள் நகரத்து மக்கள் தான்
நாகரிகம் மாறினாலும் நம் கலாச்சாரம், பண்பாடு மாறாத மக்கள்.
எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் பசியறிந்து உணவிடுவதிலா நம்ம கிராமத்து மக்கள் அடிச்சுகா முடியாது.
அந்த இடத்தை விட்டு சற்று தூரம் சென்றான் மணி மறுபடியும் மேனேஜருக்கு போன் செய்தான் அவர் போனை எடுத்து பேசினார்.
மணி அவரிடம் முழு விவரத்தையும் கேட்டு விட்டு போனை கட் செய்தான். பிறகு அங்கு யாராவது வருகிறாரா என பார்த்தான்.
சற்று நேரம் ஆனது. இவனே ஒவ்வொரு வீடாக தேடி தேடி பார்த்தான்.
எதிரில் மறுபடியும் அவர் வந்தார். இவன் பதில் பேசாது அந்த இடத்தை விட்டு சென்றான்.
அதற்கு அவர் மணி….மணி…. என கூப்பிட்டார். இருந்தாலும் கண்டு கொள்ளாது அங்கிருந்து நகர்ந்தான்.
பின்னால் வந்து மணி முதுகில் கை வைத்து என்ன இவ்வளவு நேரம் என் கூட தானா பேசிக்கிட்டு இருந்தா. இப்ப பார்க்காது மாதிரி போற.
என்னப்பா மணி என் மேலா ஏதும் கோபமா மணி.
அதெல்லாம் ஒன்னும் இல்லை சார். யோசனை செய்து கொண்டே அதை கேட்போமோ வேண்டமா என நினைத்தான்.
பிறகு என்னப்பா மணி உனக்கு என்ன பிரச்சினை?
பிரச்சினையெல்லாம் ஒன்றுமில்லா சார் கொஞ்சம் குடிக்க தண்ணீர் தான் கேட்டேன். அதற்கு நீங்கள் கடையில் தான் வாங்கி தர வேண்டும் சார்.
உங்க வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கக் கூடாது சார்.
தவித்த வாயிற்கு தண்ணீர் கூட தர மாடிங்கா சார் நல்ல கொள்கை இப்படி நாலு பேர் இருந்த போதும் சார்.
எங்கலா மாதிரி வழியில் வேலைக்கு வரவங்கா அவ்வளவு தான்.
நீங்களும் சரியா தான் செஞ்சீங்கா. நான் இனிமேல் எங்க போனாலும் என்ன வேலையாக இருந்தாலும் வீட்டிலேயே தண்ணீர் கொண்டு போயிடுவேன்.
வெளியில் கடையில் போயவாது வாங்கி குடிப்பேனே தவிர வழியிலா உங்க மாதிரி ஆளுக்கிட்டெல்லாம் கேட்க மாட்டான் சார்.
என பட்டாசில் தீ பற்றியுடன் சடசடவென வெடிப்பது போல வார்த்தைகளை வாரி வீசினான் மணி..
அதற்கு அவர் சிரித்துக்கொண்டே தம்பி என் வீட்டில் குடிநீர் இல்லைப்பா போர் வாட்டர் தான் அதுவும் சவடு அடிக்கிற மாதிரி இருக்கும் மணி.
நானே அந்த தண்ணீரை வடிகட்டி காய்ச்சி வேறு வழியில்லாமல் குடிக்கிறேன்.
இந்த மினரல் வாட்டர் தண்ணீர் எல்லாம் எனக்கு செட்டாகாது. அதுபோக பையில் கரண்டு பில் கட்டுவதற்கு சரியாக ஆயிரம் ரூபாய் மட்டுமே வைத்திருந்தேன் மணி.
அதான் மணி. அந்த கடைக்காரன் வேற காசு குடுத்துட்டு வாட்டர் பாட்டிலை எடுத்து போக சொன்னான். அதான் கொஞ்சம் நேரத்திலா கொண்டு வந்து கொடுத்துறேன் என்று சொல்லி கொண்டு வாங்கி வந்தேன் மணி.
என்ன மன்னிஞ்சுருப்பா மணி. என்ன தப்பா நினைக்காத மணி.
சரி விடுங்க சார் எனக்கு கோபமெல்லாம் இல்லா சார். முதலா இருந்துச்சு இப்ப உங்க கதையா கேட்டதும் பறந்து போச்சு சார்.
நானும் அதிகாலையில் ஏழு மணிக்கு வந்தேன் சார் இப்ப மாலை மணி மூன்னு ஆக போகுது சார்.
சரி மணி…
மேனேஜரிடம் அந்த வீட்டுக்காரரின் பெயர் கேட்டயா மணி.
கேட்டேன் சார் அவர் பெயர் தனபால் சார் அவர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் உள்ள ஐந்தாவது வீட்டில் குடியிருக்காராம் சார்.
நானும் அதான் அருகில் போய் பார்த்தேன் சார் அந்த தெருவில் ஒரு ஆள் நாடமடம் கூட இல்லா சார்.
அப்படியா? தனபால் ஒருத்தரை எனக்கு தெரியும் ஒரு வேளை நீ தேடி வந்தது அவர இருக்குமோ எனக்கு சந்தேகமாக இருக்குப்பா.
சரி வா அவரும் ஐந்தாவது நம்பர் வீடுதான் மணி. நீ சொல்லற மாதிரி அவரும் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் தான் இருக்காரு மணி.
இருவரும் சேர்ந்து அந்த தெருமுனையை அடைந்தனர்.
தெருவிற்கு எதிரில் உள்ள சுவற்றில் “பயணங்கள் முடிவதில்லை” என ஒரு திரைப்பட விளம்பரமானது ஓட்டிருந்தது.
அந்த விளம்பரத்தைப் பார்த்து மணி சிரித்தான். பிறகு அவரும் பார்த்தார்.
ஐந்தாவது நம்பர் வீட்டை இருவரும் அடைந்தனர்.
மணி சார் இந்த வீட்டில் கதவுலா நம்பரே இல்லா சார்.
முதலா நீங்க இங்கா இருக்கிற காலிங்பெலா அடிங்க சார்.
பலமுறை காலிங்பெல்லை அழுத்தியும் யாரும் வெளியில் வரவில்லை.
யாருமே இல்லாத வீட்டிற்கு அப்புறம் எதற்கு சார் என்னா இங்கா கூட்டிட்டு வந்திங்கா. இந்த வீட்டில் யாருமே இல்லாது போல தெரியுது சார்.
இருப்பா வரேன்…..
என சொல்லி வீட்டிற்குள்ளே நுழைந்தார்.
அய்யோ? ஏன் சார் இப்படி அடுத்தவங்க வீட்டிற்குள் அவங்க அனுமதி இல்லை போகக் கூடாது சார்.
அதெல்லாம் ஒன்றுமில்லா வீட்டிற்குள்ளா வாப்பா மணி….
சரி என்று மணி அவரின் பின்னால் சென்றான்.
அங்கு போய் பார்த்தால் மணிக்கு ஒரே அதிர்ச்சி அந்த வீடு அவருடைய வீடு.
மணி தேடி வந்த தனபாலும் அவரே.
பிறகு மணியிடம் மன்னித்து விடுப்பா நான் தான் தனபால் நான் வீட்டிற்காக போங்குலா லோன் வாங்கியுள்ளேன் மணி.
இரண்டு மாத தவணையைக் கட்ட தவறியதால் பேங்க் அதிகாரி உன்னை வசூல் செய்து வர அனுப்பி உள்ளார் மணி.
அப்படியா? இதெல்லாம் தெரிஞ்சும் ஏன் எதுவும் தெரியாது மாதிரி என் கிட்ட பேசிட்டு இருந்திங்க சார்…
என்னிடம் பணம் இல்லை அதான் மணி….
உன்கிட்ட இப்படி பண்ணேன்…
நல்ல பண்ணீங்க சார்… ரொம்ப நல்ல பண்ணீங்க சார்….. என்று கூறி மனத்திற்குள்ளேயே
மணியோ “என்னுடைய ஒரு நாள் பயணம் இன்னும் முடிய போவதில்லையா” நினைத்தான்.
ச.சத்தியபானு
சிவகங்கை
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்