logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ஏ. லட்சுமி சிவகுமார்

சிறுகதை வரிசை எண் # 85


வலி ம்..ம்.. ஆ.. மா.. வலிக்குதே.. என்று அடிவயிற்றில் கை வைத்து கண்களை திறக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.. அவள் அணிந்திருந்த ஆடைகள் எல்லாம் களைந்து கூந்தல் மயிர் எல்லாம் அங்கங்கே படர்ந்து பரவி முகத்தை மேலும் அலங்கோலமாக்கியது.. கண்களில் அவள் எத்தனை அழுதாலும் கண்ணீர் பெருக்கெடுக்க முடியாத அளவுக்கு கண்களே காய்ந்து போயிருந்தன.. அவளுடைய வலது கன்னத்தில் நக கீரல்களும் உதடு ஒரு பக்கம் பிய்ந்து தொங்கியதும் அந்தோ பரிதாபக் காட்சி.. அங்கு நடந்தவைகளுக்கு யாரும் இல்லை சாட்சி.. அவள் கண்களைத் திறக்க மிகவும் பாடுபட்டாள்..இமைகளின் மேல் இரண்டு பாறாங்கற்களை வைத்தது போல் அவளால் திறக்க முடியாமல் இம்சை செய்தன.. லேசாக மிகவும் பிரயத்தனப்பட்டு கண்களைத் திறந்தாள்.. உடனே ஐயோ அம்மா என்று கரும் இருளை பார்த்து கத்தி.. இரண்டு இமைகளையும் இறுக மூடி கொண்டாள்..உடனே..மயங்கி விட்டாள்.. ம்.. ஆ.. வலிக்குதே..என்று அந்தப் பெண் கண்களை லேசாக திறந்தாள்.. சார் அந்தப் பொண்ணு கண்ணை முழிச்சிடுச்சு என்று அங்கே இருந்த நர்ஸ் குரல் கொடுத்தார்.. உடனே ஒரு நடுத்தர வயது போலீஸ்காரர் அங்கே வந்தார்.. மா.. நீ யாரு.. உன் பேர்.. என்ன என்று கேட்டார்.. ஐயா நான் எப்படி இங்கே வந்தேன்.. என்றாள் அந்தப் பெண்.. அம்மா நீ மயக்கம் போட்டு ரோட்டோரத்துல கடந்த..பொதுமக்கள் தான் போலீசுக்கு தகவல் தெரிவித்து உன்ன இந்த கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் கொண்டாந்து சேர்த்தாங்க.. உனக்கு என்ன நடந்ததுன்னு இனிமே நீ தாம்மா சொல்லணும்.. உங்க சொந்தக்காரங்களுக்கு தகவல் சொல்லணும் சொல்லு.. ஐயா நான் படிப்பு முடிச்சுட்டு மொத முறையா ஒரு வேலையில சேர்ந்து.. முதல் நாள் வேலைக்கு போனேன்.. போயிட்டு திரும்ப வரும்போது பஸ் ஏறதுக்காக ஸ்டாப்பிங்ல வெயிட் பண்ண.. அப்ப சர்ருண்ணு ஒரு காரு வந்துது..கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள.. திடீர்னு யாரோ ஒருத்தர் காரில் என்ன தூக்கி போட்டுக்கிட்டு..வேகமா கார் கிளம்பிடிச்சி... நானும் திரும்பி முகத்தை பார்க்கறதுக்குள்ள.. என்னை மயக்க மருந்து போட்டு கூட்டிட்டு போய்ட்டாங்க.. நான் மயக்க தெளிஞ்சி பார்க்கும்போது ஒரு இருட்டு ரூமுக்குள்ள இருந்தேன்.. அங்க வச்சு ஒரு ஆள் என்ன...என்ன.. என்று மேலும் கூற முடியாமல் விக்கி.. விக்கி.. முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.. அதே நேரம்..அவசர அவசரமாக 25 வயது மதிக்கக்கூடிய ஒரு இளைஞன் ஓடி வந்து அவள் முன்னே நின்று என்னுடைய பிரண்ட ஒரு பொண்ணு ஏமாத்திட்டா அப்படின்னு அவன் ஏற்று தற்கொலை செய்து கொண்டான்.. அவனுடைய சாவுக்கு காரணமாய் இருந்தது நீதான் அப்படின்னு தப்பா அடையாளம் காட்டிட்டாங்க.. நானும் குடி போதையில் இருந்ததால் தெளிவில்லாமல் இந்த மாதிரி தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னித்துவிடு இதற்கு என்ன தண்டனை நீ எனக்கு கொடுத்தாலும் சம்மதம் தான்.. நான் பண்ண தப்புக்கு பிராயச்சித்தம் தேட நினைக்கிறேன்.. போதை தெளிந்த பிறகு தான் நான் ஒரு பொண்ணுக்கு தப்பு பண்ணி இருக்கேன் அப்படின்னு எனக்கு உரச்சிது தயவு செஞ்சு நான் என்ன செய்யணும்னு சொல்லு நான் செஞ்சிடுறேன்..உனக்கு நானே வாழ்க்கை கொடுக்குறேன் மா.. ச்சீ தூ..நாயே..யாருக்கு வேணும் உன் வாழ்க்கை பிச்சை.. அரும்பா இருந்து மலர வேண்டிய பூக்களை கசக்கி எறிஞ்சி..அவங்க வாழ்க்கையே வீணாக்கிட்டு..ஆம்பள என்ற திமிர் ல ஆடறீங்க.. தப்ப எப்படியாவது சரி கட்டிடலாம் என்ற எண்ணம் இருக்கறதால தான் மேலும் மேலும் தப்பு பண்ணிக்கிட்டே இருக்கீங்க..நீங்க என்ன தப்பு பண்ணாலும் பார்த்துக்கிட்டு..வாய மூடிக்கிட்டு வந்துருவேன்னு நினைச்சியா..சார்..இவன் மேல நான் என்னை கெடுத்து என் வாழ்க்கையை சீரழிச்சிட்டான் என்று புகார் கொடுக்கிறேன் இவனை அரெஸ்ட் பண்ணுங்க.. என்றாள் அந்தப்பெண்.. யாரும் எங்களுக்கு வாழ்க்கை கொடுக்க வேணாம்..எங்க வாழ்க்கைய கெடுக்காம இருந்தா போதும்..என்று கையெடுத்து கும்பிட்டால்..அந்த பெண்..வலி மறந்து விடும்..வலி கொடுத்தவர் மறந்து போவதில்லை..

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.