PAVITHRASELLAVEL
சிறுகதை வரிசை எண்
# 84
மனித நேயம்
செல்வன் ராதா தம்பதி இருவரும் காலையில் வேலைக்கு செல்ல ரெடியாகி கொண்டிருந்தனர் . இவர்களின் மகன் அரவிந்தும் அருகில் உள்ள நடுநிலை பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான் எப்பொழுதும் போல பள்ளிக்கு ரெடியாகி விட்டு செல்வத்திடம் இரண்டு ருபாய் வாங்கிக்கொண்டு வெளியில்உள்ள பக்கத்துக்கு கடையில் மிட்டைவாங்கி செல்வது வழக்கம் .அன்றும் அதை போலவே மிட்டாய் வாங்க செல்லும்போது அருகிலொரு நாய் நடக்கமுடியாமல் படுத்து இருந்தது அந்த நாய் கர்ப்பமாகவும் இருந்தது .
அது எங்கும் நகராமல் அங்கேயே இருந்தது . அங்கு இருப்பவர்கள் நாயை விரட்டத்தான் செய்கிறார்களே தவிர உணவு யாரும் வைக்கவில்லை.அரவிந்தும் அவன் அம்மாவிடம்அம்மா அங்க ஒரு நாய் படுத்துட்டு இருக்கு பாக்க பாவமா இருக்கு சாப்புல போல பசியாருக்குனு நினைக்கறேன் கொஞ்சம் சாப்பாடு போட்டு தாங்கனு கேட்டான் .அவன் அம்மா தரமறுத்தார்கள்.அந்த நாய் மிகவும் பசியாய் இருந்தது .ஆனால் யாரும் உணவுவைக்கவில்லை மறுநாள் அரவிந்தின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால் கடையில் அவனை உணவு வாங்கச்சொல்லி பணம் கொடுத்தார்கள் இவனும் வாங்கிவிட்டு
கடைக்கு சென்றான் .செல்லும்போது அந்த நாய் இவனை மட்டுமே பார்ப்பதுபோல அவனுக்கு தோன்றியது.
நிறைமாத கர்பம் சற்றும் நடக்க முடியவில்லை .தண்ணீர் குடித்ததோ இல்லையோ தெரியவில்லை சிறுவன் என்பதால் அந்த அளவிற்கு யோசிக்கவும் இல்லை .கடையில் இரண்டு பரோட்டாவை வாங்கிக்கொண்டு பள்ளிக்கு நடக்க ஆரம்பித்தான் .பள்ளியில் முழுக்க அந்த நாய் பற்றிய சிந்தனை மட்டும் தான் அவன் மனதில் மதிய உணவு வேளையில் தனது நண்பர்களிடத்தில் அந்த நாய் பற்றியும் உணவு உண்ணவில்லை எனவும் கூறினான் .அவன் நண்பர்கள் சிரித்தனர் .அந்த நாய் எப்படி போனால் உனக்கு என்ன என்று சொன்னார்கள் .ஆனால் அவனால் இதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .அது பசியுடன் இருக்கிறது என்றுமட்டும் அவனுக்கு புரிந்தது .மாலை பள்ளிவிட்டதும் ஓடி சென்று அந்த நாயை பார்த்தான் .சோகமாக அதே இடத்தில் இருந்தது .அவன் அப்பாவிடம் ஐந்து ருபாய் வாங்கிவிட்டு அருகில் இருக்கும் கடையில் பன் ஒன்றை வாங்கிகொண்டு அந்த நாயின் அருகில் மெதுவாக பயந்து பயந்து சென்றான் .பண்னை தூக்கி அதன் அருகில் போட்டுவிட்டுவேகமாக அவன் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தான் சிறிதுநேரம்கழித்து.வெளியில்அவனும் அவனது நண்பர்களும் விளையாடிகொண்டிருந்தனர்.அந்த நாய் கடை அருகே படுத்திருந்தது .கடைக்காரரோ அல்லது கடைக்கு வருபவர்களோ கண்டுகொள்ளவில்லை விரட்டத்தான் செய்தார்கள்.அந்த கடைக்காரர் கெட்டுப்போன பண்ணினை தூக்கி அந்த நாயிடம் வீசினார் .இதைப்பார்த்த அவன் மிகவும் வருந்தினான் .அடுத்த நாள் காலையில் அம்மா அவனது பாக்ஸில் சாப்பாடுபோட்டு கொடுத்தாள் . .இவன் யார்க்கும் தெரியாமல் ஒரு இலையை அந்த நாய்க்கு உணவினை வைத்துவிட்டு கொஞ்சதூரம் சென்று பார்த்தான் .அந்த நாய் மிகவும் பசியுடன் இருந்ததால் வேகமாக சாப்பிட்டது. இதை பார்த்த அந்த சிறுவனின்மனதில் ஓர் இனம் புரியாத உணர்வு கண்ணில் தண்ணிர் வர ஆரம்பித்தது .மாலை பள்ளி முடிந்ததும் அவன் அந்த நாயை பார்க்க வேகமாக வந்தான் கடைக்கு வந்தவர்கள் அதை கல்லால் அடிக்க தொடங்கினர் . அந்த சிறுவன் அவர்களிடம் வேண்டாம் தாத்தா அது பாவம் நடக்கவே முடியாமல் இருக்கிறது விடுங்கனு அழ ஆரம்பித்தான் . நீ வீட்டுக்கு போ அத விட்டா கடைக்கு வரவங்கள கடுச்சுடும்னு சொல்லி கல்லை வீசினர் அவர்கள் அடித்ததில் அடிபட்டு இரத்தம் வர ஆரம்பித்தது .நாயினால் கத்தகூட முடியவில்லை. இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை உடனே வேகமாக சென்று தனது வீட்டில் உள்ள மருந்தினை எடுத்து வந்தான்.இவனுக்கு பயம் நாய் கடிக்குமோ என்று ஆனால் இவன் அருகில் சென்றும் அது இவனை ஒன்றும் செய்யாமல் பாசத்துடன் வாலை ஆட்டியது .அன்று முதல் அந்த நாய்க்கு யாருக்கும் தெரியாமல் உணவு வைப்பது பன் வாங்கி போடுவது என்று சந்தோசமாக இருந்தான் நாயும் இவன் மீது அன்பு செலுத்தியது .ஒருநாள் அந்த நாயை காணவில்லை இவனும் அங்கும் இங்கும் தேடி அலைந்தான் .கிடைக்கவில்லை என்பதால் அழுக ஆரம்பித்துவிட்டான் .சரியாக உணவு உண்ணாமல் பள்ளிக்கும் செல்லாமல் அந்த நாய் இருந்த இடத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.இவன் அம்மாவிற்கு அரவிந்தை பார்த்து பயம் வந்துவிட்டது ஏன்டா இப்படி இருக்க உனக்கு என்னாச்சு வா மாரியாத்தா கோவில்ல போய் கயிறு கட்டிட்டு வரலானு சொன்னாங்க.இவன் ஒன்றுமே பேசவில்லை அமைதியாக அந்த நாய் இருந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் .கடைக்காரரிடம் போய் இங்க ஒரு நாய் இருந்துச்சுல அத பார்த்திங்களானு கேட்க அது செத்துக்கித்துபோயிருக்கும்னு சொல்லிட்டாரு இரவு முழுக்க இதே யோசனை அவன் அம்மாவிற்கு இவன் ஏன் எப்படி இருக்காருனு தெரில .ராசா கொஞ்சம் சாப்பிடு இல்ல அம்மா ஊட்டிவிடட்டுமானு கேட்க அவன் அம்மாவை கட்டிப்பிடித்து அழுக ஆரம்பித்தான் .ஐயோ ராசா உனக்கு என்னாச்சு கேட்க அம்மா நா சாப்புலனு இவளோ வறுத்த படர அந்த நாய்க்கும் இதேமாறித்தான இருக்கும் வைத்துல தன்னோட குட்டிக்கு பசிக்கும் ஆனா அதுனால எங்கும் போகமுடியாதுன்னுதான உன்கிட்ட சாப்பாடு கேட்ட நீ இல்லனு சொல்லிட்ட இப்ப பாரு அது பசில எங்கியோ போயி செத்துக்கித்து போருக்கும்னு கடைக்கார தாத்தா சொல்லிட்டாரு போ நானும் சாப்டாம செத்துப்போறன்னு சொன்னான் .ஐயோ தங்கமே சத்தியமா அம்மாவுக்கு தெரியாது அது கர்பமா இருக்குனு தெருஞ்சிருந்தா சாப்பாடு வெச்சுருப்பன் ..ஏம்மா அது கர்பமா இருந்ததான் வெப்பயா இல்லனா வெக்கமாட்டியா அதுக்கு யாருமா இருக்கா சொந்தமா வீடு இருக்கா சொல்லு இல்ல அதுனால சொல்லத்தான் முடியுமா அரவிந் அவன் அம்மாவை கேட்டான் என்ன சொல்லுவதென்று தெரியாமல் அழுகத்தொடங்கினாள் .மனுச்சுக்க ராசா இனிமே இப்படி தப்பு பண்ணமாட்டேன் என்ன மனுச்சுக்க சொல்லி மகனை ஆரத்தழுவி கொண்டால் இருந்தாலும் அரவிந்தனுக்கு அந்த நாயின் ஏக்கம் செத்துபோச்சுயென்று . இரண்டுவாரம் கழிந்தது ..காலை ஒரு ஏழு மணி இருக்கும் வெளியில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு ஓடிவந்தான் வந்து பார்த்தால் அந்த நாயும் அதன் ஐந்து குட்டிகளும் இவனை காண வந்தன மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த நாய்குட்டிகளை எடுத்து கொஞ்சினான் அதை பார்த்த அம்மாவிற்கு ரொம்ப சந்தோசம் உணவும் வைத்தால் சாப்பிட்டுவிட்டு அம்மா நாயும் குட்டி நாயும் அதன் இருப்பிடத்திற்கு சென்றன ..கருணை ,மனிதநேயம்,அன்பு இதெல்லாம் விலங்குகளுக்கும் இருக்கும் என்பதனையும் அதன் மீதும் இரக்கம் கொள்ளவேண்டும் என்பதனையும் அரவிந்த் அனைவருக்கும் புரியவைத்துவிட்டான் வாயில்லா பிராணிகளுக்கு உணவு வையுங்கள் உங்கள் அன்பிற்கு அந்த ஜீவன் என்றுமே உண்மையாக இருக்கும்
பவித்ரா செல்லவேல்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்