logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

இதயவன்

சிறுகதை வரிசை எண் # 65


தலைப்பு: குணவதி பதினாறு வயதில் திருமணம் முடித்து பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 100 கிலோ மீட்டர் இருக்கும். கோலார் தங்க வயல் அருகில் "கே.ஜி.எஃப்" ஊரில் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் குணவதி அப்பா ஏழுமலை. ஒன்னும் புரியவில்லை குணவதிக்கு புதிய இடம், புரியாத பாஷை, தெரியாத மொழி பயத்துடன் திகைத்து நின்றாள். சொந்தமாக "சைக்கிள் ஷாப்" வைத்துள்ளார் கணவர். விவசாய குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து 8ம் வகுப்பு வரை படிப்பையும் நிறுத்தி விட்டார் குணவதி அப்பா. அறியாத வயதில் புரியாமல் எல்லாம் நடந்து விட்டது. எப்படி வாழ்க்கை நடத்த போறேனோ மனதில் எண்ணியவாறு பயத்துடன் இருந்தாள். இதில் வேற தனிக்குடித்தனம் வைத்து விட்டார்கள். கணவர் கடைக்கு போனால் இரவு வர 10 இல்ல 11 மணி ஆகும். ஆனால் வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்கி கொடுத்தார் கணவர் ராஜா. அப்பா வேற சொல்லிட்டு அழுது விட்டு போய் இருக்கிறாய் என் பொண்ணுக்கு ஒன்னும் தெரியாது மாப்பிள ஏதாவது தப்பு பண்ண மன்னித்து விடுங்கள், சாப்பாட்டில் குறை இருந்தாலும் சொல்லி புரிய வையுங்கள் அடிக்க வேண்டாம் என்று. எப்படியோ குணவதி வாழ்க்கையும் ஓடி இரண்டு வருடம் ஆனது. அழகான ஒரு பையன் பிறந்து 10 மாதத்தில் தத்தி, தத்தி நடக்க ஆரம்பித்தது. திடீரென்று குழந்தைக்கு ஜுரம் வந்து கை, கால், தலை எல்லாம் விழுந்து விட்டது என்ன செய்வதென்று ஒன்னும் புரியவில்லை அழுத்தி புலம்பிக் கொண்டிருந்தாள் அப்பா, அம்மாவும் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். மாமியார் இதுவரை வரவில்லை. எல்லாம் "ஒரே குட்டையில் ஊறிய மட்டை" தான் சொந்த அத்தை மகனுக்கு தான் பெண் கொடுத்தார்கள் இருந்தாலும் பிடிக்கவில்லை மாமியார் ருக்குமணிக்கு. வேலூர் "சி.எம்.சி" ஹாஸ்பிடல் சேர்த்து குழந்தையை பார்த்தார்கள். டாக்டர் என்ன ஆச்சி என் செல்லத்துக்கு என்று குணவதி பயத்துடன் கேட்டால். சின்ன ஜுரம் தான் என்று டாக்டர் சொன்னாலும் மனம் ஒரு இடத்தில் நிற்கவில்லை இங்குட்டு, அங்குமாய் ஓடிக்கொண்டு இருந்தால். கணவர் ராஜாவும் ஒன்னும் ஆகாது என்று சொல்லியும் அழுதுகிட்டே இருந்தால் குணவதி. மணி இரவு 10 மணி ஆகியும் குழந்தை வெளி வரவில்லை. யாரும் சாப்பிடவும் இல்லை. 10:15-க்கு டாக்டர் வெளியே வந்தார் வேகமா ஓடி வந்து என்னாச்சி டாக்டர் குழந்தை இன்னும் வரவில்லை ராஜாவும், குணவதிவும் கேட்க எல்லாம் ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து இருக்கேன் மா ரிசல்ட் வந்ததும் சொல்றேன் யாருனா ஒருவர் மட்டும் நைட் இருங்க என்று சொல்லிவிட்டார் டாக்டர். உடனே குணவதி நான் மட்டும் இருக்கிறேன் என்று சொல்ல. நான் போய் சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு போறேன் என்று மாமனார், மாமியார் அழைத்து வெளியே வந்து விட்டார். காலையில் மணிக்கு 6-மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கடையில் இட்லி மனைவிக்கு வாங்கி ஹாஸ்பிடல் வந்து விட்டார் ராஜா. குணவதி நைட் எல்லாம் தூங்க வில்லை போல கண் இரண்டும் ரெட் கலரா இருந்தது இத சாப்பிடு டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்டுக்கொண்டே சாப்பாடு கொடுத்தார். ஒண்ணுமே சொல்லங்க டாக்டர் வந்த தான் தெரியும் குணவதி சொல்ல, சரி போய் பல்லு விளக்கிட்டு வந்து சாப்பிடு ராஜா டேபிள் மேல் வக்காந்தார். சரியாக பத்து மணிக்கு டாக்டர் வந்தார். ரிப்போர்ட் ரெடியாய் சிஸ்டர் என்று கேட்டுக்கொண்டேன் உள்ள போனார். ரெடி சார் சொல்லி சிஸ்டர் போக. பயத்துடன் மனம் பட பட என வேகமாய் துடித்தது குணவதிக்கு. உள்ளே வர சொன்ன டாக்டர். மனசை கொஞ்சம் தேத்திக்கோங்க மா இரண்டு பேரும். பையனுக்கு "போலியோ" அட்டாக் ஆகியுள்ளது. அதனால கொஞ்சம் நாள் பெட்ல இருக்க வேண்டி வருமா என்று சொன்னதும் மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டாங்க குணவதி. சார் என்ன சொல்லிக்கொண்டே ராஜா குணவதியை தூக்கும்போது சிஸ்டர் தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளிக்க. மனம் பயத்துடன் இரண்டு பெயரும் கேட்க ட்ரீட்மெண்ட் எடுத்த எல்லாம் சரியாயிடும் மா. கவலை வேண்டாம் என்று டாக்டர் சொல்ல. எத்தனை நாள் இருக்க வேண்டும் ராஜா கேட்க. ஒரு மாதம் இருந்தால் போதுமா டாக்டர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ராஜாவும் கடையும் சரிவர திறக்கவில்லை செலவுக்கு பணம் வேறு இல்லை. என்ன பண்றதுன்னு யோசி கிட்டே இருந்தால் ராஜா. சில இடம் கடன் கூட வாங்கியாச்சு இனிமேல் கேட்ட தர மாட்டாங்க என்று மனசுக்குள்ள நினைக்க. மாமனார் இந்தாங்க மாப்பிள்ளை கொஞ்சம் படம் இருக்கு செலவுக்கு வச்சிக்கோங்க என்று சொல்ல. மனம் கொஞ்சம் நிம்மதியா இருந்தது. அப்படியா ஒரு மாதம் போனது குழந்தைக்கு தலை, கைகள் எல்லாம் சரியாச்சு. ஆனா கால் மட்டும் துவண்டு நடக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு ஆபரேஷன் எல்லாம் செய்து ஒன்னும் சரிப்பட்டு வரல. டிச்சார்ஜ் பண்ணிவிட்டார்கள். குழந்தையை தோள்மேல தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார்கள். ஆறு மாதம் போனது வருமானம் சரிவர இல்லை. சாப்பாட்டுக்கு என்ன பண்றது தெரியவில்லை. கஷ்டம் மேல் கஷ்டம் வந்து கொண்டே இருந்தது. குணவதி அப்பா வாங்க எல்லாரும் எங்க ஊருக்கே வந்து விடுங்கள் என்று சொல்ல. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா தாதாபுரம் கிராமத்தில் வந்து விட்டார். ராஜாவுக்கும் விவசாயம் பத்தி ஒன்னும் தெரியாது. பத்து கிலோமீட்டர் தொலைவில் சைக்கிள் ஷாப் கடையும் ஒன்னு பார்த்து வைத்து கொடுத்துவிட்டார் ஏழுமலை. குணவதி அப்பா உடன் சேர்ந்து விவசாயம் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டு அவர் விவசாயம் பண்ண ஆரம்பித்து விட்டார். அதில் இருந்து வரும் வருமானமும், கடையில் இருந்து வருவதை வைத்து மூன்று வருடம் போனது. அடுத்து இரண்டு அழகான மகன்கள் பிறந்து சிறப்பாக வாழ்க்கை போய்க்கொண்டு இருக்க எல்லார் வீட்டில் இருப்பது போல் மாமியார் கொடுமையும் ஆரம்பித்தது. குழந்தைகள் வீட்டுக்கு வந்தால் வரக்கூடாது என்று சொல்லுவதும். ஏதாவது கேட்டால் திமிர பேசுவது மகனிடம் கலகம் மூட்டி விட்டு சண்டை வர வைத்து விடுவார்கள் மாமியார் ருக்மணி அம்மாள். இடையில் வேற ராஜா அண்ணனிடம் பாகப்பிரிவினை பிரச்சனை வந்து விட்டது. அதையும் போராடி ராஜா பெயருக்கு மாற்றி கொடுத்தார் ஏழுமலை மாமனார். ஒரு நாள் வேர்க்கடலை கொள்ளையில் எடுத்துக்கொண்டு இருக்க மாலை ஆறு மணி அளவில் மழை பிச்சு உதறுது. ஒரு சின்ன பையன் ஓடி வந்து மூச்சு இறக்க குணவதி இடம் ஆயா வீட்டுக்கு சந்துக்குள் கிழ விழுந்து இருக்காங்க என்று சொல்ல பயத்துடன் ஓடி வந்து பார்க்க ருக்மணி அம்மாள் மூச்சு இல்லாமல் இருக்க தண்ணீர் தெளிக்க எழுந்திருக்கவில்லை. பயந்தது போல் இறந்து விட்டார் ருக்குமணி. மழை வேற நீக்கவே இல்லை. எல்லோருக்கும் தந்தி கொடுத்தார்கள். மறுநாள் நான்கு மணிக்கு சடங்கு எல்லாம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. ருக்குமணிக்கு மூன்று மகன்கள் கடைசி பையன் தான் ராஜா. இரண்டு அண்ணன் கோலார் கே.ஜி.எப். தான் வசித்து வருகிறார்கள். அவங்க வந்ததும் எடுத்து விடலாம் என்று எண்ணி இருந்தார்கள். தாய்க்கு தலை பிள்ளை கொள்ளி வைக்க வேண்டும் என்று காத்து இருக்க. கடைசிவரை யாரும் வரவில்லை. குணவதி, ராஜாவும் சடங்கு எல்லாம் செய்து முடித்தார்கள். இரவு 11-மணிக்கு இரண்டு அண்ணன்கள் வந்தார்கள். சொத்து பிரச்சினையால் அவர்கள் வருவதில்லை. பொய் தான் சொல்லி நம்பலை கூப்பிட்டு இருக்காங்க போல என்ற எண்ணம் வேறு அவர் மனசுக்குள். வீட்டுக்கு வந்த போது உண்மை என்று நம்பினார்கள். ஏழுமலை எல்லா விபரம் சொல்லி திட்டினார். ருக்குமணி எரித்த இடம் மட்டும் போய் பார்த்து விட்டு காலை 6-மணிக்கு கிளம்பி விட்டார்கள் இரண்டு பேரும். எவ்வளவு கொடுமை படுத்தினாலும் கடையில் எடுத்து போட்டது எல்லாம் குணவதி தான். வாழ்க்கையில் கஷ்டம் என்று சொல்லும்போது குணவதி தான் உறுதுணையாக இருப்பார் ராஜாவுக்கு. பெயருக்கு தகுந்தது போல் குணமாகவும், நம்பிக்கையாகவும் வாழ்ந்து மாற்றுத்திறனாளி பையனையும் படிக்க வைத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தோல்விகள் வரும்போது மனம் தளராமல் முயற்சியை மூச்சு போல் நினைத்து முயன்றால் வெற்றி நிச்சயம். இதயவன். (9600034018) அஞ்சல் முகவரி 8/438, ராணி நகர், முதல் தெரு நன்மங்கலம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் Pin: 600129. மின்னஞ்சல் முகவரி: rgbaskar1005@gmail.com

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.