logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Santhosh Ragul

சிறுகதை வரிசை எண் # 53


இரும்பு மனுஷி விக்ரம் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை. அப்பாவின் இறந்த உடலையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான். அப்பாவின் உடலை சுற்றி எல்லாரும் அழுது கொண்டு இருந்தார்கள். ஆனால் அம்மா அழவில்லை ஒரு சின்ன கலக்கம் கூட இல்லை. இரும்பு மனுஷி போல அமர்ந்திருந்தாள். விக்ரமுக்கு என்ன நடந்து இருக்கும் என்று யோசிக்க முடியவில்லை “எப்படி அப்பாவை கொலை செய்திருப்பார்கள்?” “வாய்ப்பே இல்லை அப்பாவை தொட எவனுக்கு தையிரியமிருக்கு?” வெங்கடேசன் கூட ஏற்கனவே நிறைய தடவை பிரச்சனை ஆகிருக்கு ஆனா, ஒரு தடவ கூட அப்பா மேல எவனும் கை வச்சதில்ல பலமுறை அப்பாவை கொல்ல அவன் திட்டம் போட்ருக்கான் அப்ப எல்லாம் தப்பிச்சவரு இப்ப மட்டும் எப்படி? நம்ம ஆட்களிலே எவனாவது துரோகம் செய்திருப்பானோ என்று விக்ரமுக்கு தோன்றியது. நேற்று மாலை சண்முகம் அண்ணன் தெருவில் இரத்தம் சொட்ட ஓடி வருவதை விக்ரம் காலேஜ் முடிந்து வரும்போது பார்த்தான். “ஐயாவை வெட்டிடானுங்க... அநியாயமா கொன்னுட்டாய்ங்களே..” சண்முகம் இரத்த காயங்களோடு ஓலமிட்டது அந்த தெருவின் மாலை நேர அமைதியை குலைத்தது. விக்ரம் சண்முகத்தை பார்த்ததும் ஓடி வந்தான். என்ன ஆயிற்று என்று கேட்க அப்பாவை வெங்கடேசன் கொன்று விட்டதாக சண்முகம் சொன்னார். அவருடைய உடம்பில் ஆழமாக வெட்டியிருப்பதால் இரத்தம் வழிந்தது. அவர் உயிர் போய் கொண்டிருப்பதை உணர்ந்த விக்ரம் அவரை உடனே வண்டியில் ஏற்றி ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பினான். விக்ரம் கைகள் சட்டையெல்லாம் இரத்த கரையானது. வீட்டுக்குள் சென்ற போது அம்மா வழக்கம் போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். விக்ரம் பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தான். இரத்தக்கறையான சட்டையை பார்த்தால் அம்மா என்ன ஏது என்று கேட்பார். அப்பா கொலை செய்யப்பட்டது தெரிந்தால் அம்மா மனம் உடைந்து விடுவார். பின்வாசல் வழியாக சென்ற போது அப்பாவின் ஆட்கள் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள். “இப்ப உங்களுக்கு சந்தோசமாய்யா? உங்க சண்டையினால இன்னிக்கி என் அப்பாவ பறிகொடுத்துட்டு நிக்குறேன் சந்தோஷம் தானே” விக்ரம் கோபமாக மெல்லிய குரலில் கேட்டான. அவன் கண்களில் கண்ணீர் இருந்தது. அங்கே இருந்த யாரும் பேசவில்லை சிறிது நேரத்திற்கு பின் மௌனம் கலைந்தது. அங்கு இருந்த ஒருவன் கேட்டான், “அப்பாக்கு நடந்தது உங்களுக்கு எப்படி தம்பி?” விக்ரமுக்கு கோபம் தலைக்கேறியது இருந்தாலும் பொறுத்துக் கொண்டு “சண்முகம் அண்ணன நான் தான் வண்டில அனுப்பிட்டு வரேன் பொழைப்பாரா மாட்டாரான்னு கூட தெரியல” கையில் இருக்கும் ரத்தக்கறைகளை கழுவிவிட்டு சட்டையை மாற்றி கொண்டான். “நீங்கலாம் என்னயா புடிங்கிட்டு இருந்திங்க அப்பாவையும் சண்முகம் அண்ணனையும் தனியா அனுப்பிட்டு?” “வெங்கடேசன் மீட்டிங்ன்னு போன் பண்ணபோ எல்லாரும் அப்பா கூட தான் இருந்தோம் அவர்தான்,”சாயங்காலம் நேரம் ஆச்சு எல்லாரும் வீட்டுக்கு போங்க” அப்படின்னு சொல்லிடு சண்முகத்த மட்டும் கூட்டிகிட்டு கெளம்புனாரு” விக்ரம் அதற்குபின் எதுவும் பேசவில்லை தலையை பிடித்து கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்தான். அவனுடைய அம்மாவுக்கு விஷயம் தெரிந்தால் என்ன ஆகும் என்று பயந்து கொண்டிருந்தான். “தம்பி நீங்க எதுக்கும் கவல்படதிங்க நாங்கலாம் எதுக்கு இருக்கோம் அந்த வெங்கடேசன் தலைய நாளைக்கு காலைக்குள்ள நம்ம ஊரு சுடுகாட்டுல உருளும்” என்று அப்பாவின் ஆட்களில் இருந்து ஒருவன் சொன்னான். “ஆமா தம்பி அப்பதான் அப்பாவோட ஆத்மா சாந்தி அடையும்” என்று மற்றவர்களும் அதை ஆமோதித்தார்கள். ஆனால் விக்ரமோ பிரமை பிடித்தவன் போல உட்கார்ந்திருந்தான். இதற்குள் அப்பாவின் ஆட்கள் ஆளுக்கொரு அருவாளை எடுத்துகொண்டு வெங்கடேசனை பழிவாங்க தயாராயினர். “ஒருத்தன வெட்டுறதுக்கு எதுக்கு இத்தன பேரு போறீங்க? அருவாள எனக்கிட்ட குடுங்க நான் போறேன்” “தம்பி உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் எங்ககிட்ட விட்றுங்க” “ஏன்? என்னால வெங்கடேசன வெட்ட முடியாதுன்னு நெனக்கிறிங்களா?” “அப்படியில்ல தம்பி உங்களுக்கு எதுக்கு வேண்டாத வம்புன்னு தான்” இப்படி பேசி கொண்டு இருக்கும் போதே விக்ரம் அருவாளை பிடுங்கி கொண்டு வெங்கடேசனை பழி வாங்க கிளம்பினான். அதற்குள் அப்பாவின் ஆட்கள் அவனை தடுத்தனர். “வேண்டாம் தம்பி சொன்னா கேளுங்க அருவாள எங்ககிட்ட குடுங்க நாங்க பாத்துக்குறோம்” விக்ரம் கையிலிருந்து அருவாளை வலுகட்டாயமாக பிடுங்கினர். ஆனாலும், விக்ரம் முரண்டு பிடித்தபடியால் அருவாளை பிடுங்கும்போது தவறி கீழே விழுந்தது. கொல்லைபுறத்தில் ஏதோ சத்தம் கேட்கவே அம்மா கொல்லைபுறம் வந்தார் அப்பாவின் ஆட்களுடன் விக்ரமை பார்த்தவுடன்... “டேய் விக்ரம் நீ எப்ப வீட்டுக்கு வந்த பின்வாசல் வழியா வந்தியா? சரி வா வந்து சாப்பிடு அப்பா ஏதோ சின்ன வேலை விஷயமா பக்கத்துக்கு ஊருக்கு போயிருக்காரு வர்றதுக்கு நேரமாகும் போல நீ சீக்கிரம் சாப்பிட்டு படிக்கிற வேலை இருந்தா பாரு” அம்மாவை பார்த்தவுடன் மிகவும் பயந்து போன விக்ரம் பின் சமாளித்தவாறே தான் வந்து சாப்பிடுவதாக கூறினான். தான் சட்டையை மாற்றி இருப்பதை அம்மா கண்டுபிடிக்காமல் இருப்பதை நினைத்து நிம்மதி அடைந்தான். சிறிது தூரம் சென்றவுடன் “டேய் விக்ரம், நீ ஏன் வேற சட்டையை போட்ருக்க காலையில காலேஜ்க்கு இந்த சட்டையா போட்டுகிட்டு போன?” என அம்மா கேட்டார். திடுக்கிட்ட விக்ரம், "இல்லம்மா அது வந்து.. சட்டை..” என திணறி கொண்டிருந்தான். இதை கண்டுகொள்ளாத அம்மா அவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமல் வீட்டுக்குள் சென்றார். அன்று இரவு அப்பாவின் ஆட்களிடம் யாரும் வெங்கடேசனை வெட்ட போககூடாது என கட்டாயப்படுத்தி சொன்னான். அப்பாவின் உடலை எப்படி வீட்டுக்கு கொண்டு வருவது என பேசிக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் வீட்டில் இருந்த போன் அடித்தது. விக்ரம் போனை எடுத்தான்,”விக்ரம் தம்பி, நீங்க தான் போன் எடுத்து இருப்பீங்கன்னு நெனைக்குறேன். நாளைக்கு காலையில அப்பாவோட உடம்பு வீட்டுக்கு வந்துறும்” போன் மறுமுனையில் துண்டிக்கபட்டது. வெங்கடேசன் தான் பேசியது. விக்ரமுக்கு கோபம் நிலைகொள்ளாமல் வந்தது. அவனை எப்படியாவது பழி வாங்கி விட வேண்டுமென்று துடித்தான். போனில் ஆண் பேசி கொண்டு இருக்கும்போதே கண்ணீரும் கோபமுமாய் நின்றுக்கொண்டிருந்தான். ஆனால், “கோபத்தால் எதையும் சாத்தியபடுத்த முடியாது” என்ற அப்பாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. அப்பாவின் ஆட்களிடம் வெங்கடேசனுடன் போனில் பேசியதையும் நாளைக்கு ஆக வேண்டிய காரியங்களையும் ஏற்பாடு செய்ய சொன்னான். அம்மாவிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது என மிகவும் குழம்பி போனான். வெங்கடேசனின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அந்த ஊரில் ஆட்சி செய்து வருகிறார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசனின் குடும்பத்திடம் வேலை செய்த அத்தனை ஊர்க்காரர்களுக்கும் அரசாங்கம் நிலத்தை பிரித்து கொடுத்தது. இருப்பினும், வெங்கடேசனின் குடும்பம் வைத்தது தான் அந்த ஊரில் சட்டம். ஊர்க்காரர்களும் அதற்கு மறுப்பு பேசாமல் குறிப்பிட்ட அளவு பணத்தை தந்து கொண்டிருந்தார்கள். அதை எதிர்த்து முதலில் நின்றது விக்ரமின் அப்பா தான். அதனால் தான் அப்பாவுக்கு அவ்வளவு மரியாதை. அப்பா சென்னைக்கு சென்று படித்து விட்டு திரும்பிய பின் ஊரில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ரைஸ் மில் தொழிலை ஆரம்பித்தார். அப்போது தான் வெங்கடேசன் செய்யும் அநியாயங்கள் அப்பாவுக்கு புரிய ஆரம்பித்தது. பிறகு அப்பாவும் வெங்கடேசனுக்கு எதிராய் திரும்ப அன்றிலிருந்து தொடங்கியது இந்த பிரச்சனைகள் அப்பாவுக்கும் வெங்கடேசனுக்கும் ஏற்கனவே பலமுறை தகராறு ஏற்பட்டு பஞ்சாயத்து வரை சென்றிருக்கிறது. அப்போதெலாம் ஊர் பெரியவர்கள் தலையிட்டு சமாதனம் செய்து வைப்பார்கள். ஆனால், அம்மாவுக்கு இந்த சண்டையில் துளியும் விருப்பமில்லை. வெங்கடேசன் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டால் பிரச்சனை முடிந்து விடும் என அடிக்கடி சொல்வார். “இப்போ சரின்னு நாம பணம் கொடுத்து அடங்கி போய்டோம்னா அப்புறம் அவன் ஊர்ல இருக்குற எல்லார்கிட்டேயும் பணத்தை மறுபடியும் புடுங்க ஆரம்பிச்சுருவான். அப்புறம் நாம எல்லாம் எப்படி தொழில் பண்றது நமக்குன்னு ஒரு அடையலாம் வேணாமா?” “இப்போ யாரு உங்கள அடங்கி போக சொன்னா அவன் கேக்குற பணத்தை கொடுத்துட்டா நம்மளயும் நம்ம பாக்டிரியையும் விற்றுவான்ல அதுக்கப்புறம் நமக்கு பிரச்சனை இருக்காது.” “யாரு அவன் விட்ருவானா ? ஊருக்கு தான் அவன் மில் ஓனர் உள்ளுக்குள்ள எப்படின்னு எனக்கு தெரியும் அவன் பேர்ல எத்தன கேஸ் இருக்கு தெரியுமா? அவன்கிட்ட பணம் இருக்குறதால போலீஸ் அவனுக்கு கும்பிடு போட்டு போவுது.” இப்படி அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சத்தம் போட்டு பேசுவதால் விக்ரம் காதை பொத்திக்கொண்டுதான் படிப்பான். அடுத்த நாள் விடியற்காலையில் அப்பாவின் உடல் ஒரு சாக்கு மூட்டையில் வந்து வீட்டுக்கு முன் கிடந்தது விக்ரம் தான் முதலில் வந்து பார்த்தான். அப்பாவின் முகத்தை பார்த்ததும் கதறி அழ முற்பட்டவன் தன் அழுகையை அடக்கி கொண்டு அப்பாவின் ஆட்களுக்கு விஷயத்தை சொன்னான். விடியற்காலையில் வீட்டின் முன் விக்ரமும் ஆட்களும் கூடியிருப்பது அம்மாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஓடிவந்து அப்பாவின் உடலை பார்த்ததும் அம்மா கதறி அழுதார். அனைவரும் தடுத்தும் பிரயோஜனமில்லை அவள் அழுதது அந்த தெருவின் கடைசி வரை எதிரொலித்தது. “என் புருஷன இப்படி கொன்னுடாய்ங்களே, உங்கள யாரவது தொட முடியுமா எத்தன பேரு வந்தாலும் ஒத்தையா நிப்பீங்களே நீங்களா இப்படி கெடக்கிறிங்க” விக்ரம் எவளவோ ஆறுதல் கூறியும் பயனில்லாமல் அம்மா கதறி அழுதார். “அவன் கேக்குற பணத்த கொடுத்து இருந்தா இன்னைக்கு எங்களோட இருந்திருப்பீங்களே” சற்று நேரத்தில் அம்மா மயங்கி விழுதார் . விக்ரம் அம்மாவை வீட்டிற்க்குள் கொண்டு சென்று உட்கார வைத்தான். மற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. உறவினர்கள் பல பேருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்று மாலை அப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து கருமாதி முடியும் வரை விக்ரம் ஒரு முறை கூட அழவில்லை. இது அம்மாவுக்கு ஆச்சர்யத்தை தந்தது. அப்பாவின் ஆட்களுடன் விக்ரம் பேசிக் கொண்டிருந்தபோது அம்மா அவனை அழைத்து பேசினார். “அப்பா செத்தது உனக்கு முன்னாலயே தெரியுமா?” விக்ரம் எதுவும் பேசவில்லை அமைதியை நின்றான். “கேக்குறேன்ல அப்பா செத்தது உனக்கு முன்னாலயே தெரியமா பதில் சொல்றா?” “தெரியும்மா.. சண்முகம் அண்ணன நான் தான் அன்னைக்கு வண்டி ஏத்தி ஆஸ்பிட்டலுக்கு அனுப்புனேன் அப்பா செத்த அன்னைக்கே வெங்கடேசன வெட்டனும்னு தான் இருந்தேன்.” “சண்முகம் அண்ணே இவன் சொல்றது நெசமா?” அம்மா சண்முகம் அண்ணனை கூப்பிட்டார். சண்முகம் அப்போது தான் ஆஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகி இருந்தது. “ஆமாம்மா அன்னைக்கு தம்பி தான் என் உசுரையே காப்பாத்திச்சு அந்த வெங்கடேசன கொல்றதுக்கு தான் இன்னும் இந்த உசுர கைல புடிச்சுட்டு இருக்கேன்” வெங்கடேசனை பழிவாங்கும் எண்ணத்தை சொன்னதும் அம்மா திடுக்கிட்டார். விக்ரம் அவனை வெட்ட போவதாகவும் அப்போது தான் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையும் என்றும் சண்முகம் அண்ணன் சொன்னார். “அவனையும் கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போக போறியா? என் புருஷன பறிகொடுத்த மாறியே உன்னையும் நான் பறிகொடுக்கனுமா?” என அம்மா கண்ணீரோடு கேட்டார். “பின்னே அவன உசுரோட விட சொல்றிங்களா? அப்புறம் நாங்க எல்லாம் இருந்து என்னத்துக்கு” என சண்முகம் கோபத்தில் கத்தினான். விக்ரம் எதுவம் பேசவில்லை பழிவாங்கும் உணர்ச்சியும் அம்மாவின் அழுகையும் அவனை குழப்பியது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான். “அவன் யாரையும் கொல்ல மாட்டான். அதுக்கு நானும் விட மாட்டேன். சண்முகம் அண்ணே, இனிமே விக்ரம் இங்க படிக்கவேணாம். சென்னைக்கு அனுப்புங்க அவன் அங்க போய் படிக்கட்டும்” என்று அம்மா உறுதியோடு சொன்னார். விக்ரம் குழப்பத்தோடு அம்மாவை பார்த்தான். தான் வெங்கடேசனை பழி வாங்கியே ஆக வேண்டும் என்று தீர்மானமாய் சொன்னான். “வேணாம். நீ சென்னைக்கு போய் நல்லா படிச்சுட்டு திரும்ப வா எனக்கு அது போதும்” என அம்மா கண்கலங்கி சொன்னார். ஒரு வாரம் கழித்து விக்ரம் சென்னைக்கு கிளம்பினான். அம்மா அவனை வழியனுப்பி வைத்தார். அம்மாவின் வார்த்தைகள் விக்ரம் நினைவில் வைத்து கொண்டான். “நீ நல்லா படிச்சுட்டு திரும்பி வா “ அம்மா நிஜமாகவே இரும்பு மனுஷி தான்...!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.