logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

முத்தையாமோகன்

சிறுகதை வரிசை எண் # 43


உமிழ்வு ...சிறுகதை... முத்தையா மோகன் ... ..... இப்போதுதான் படுத்தது போல் இருந்தது அதற்குள் யாரோ என்னை எழுப்பி கொண்டு இருந்தார்கள் ,மெல்லகண்விழித்துப் பார்த்தேன் . என் எதிரில் என் மனைவி நின்று கொண்டு இருந்தாள். "என்னங்க எந்திரிங்க வெளியில யாரோ வந்து கதவை தட்டிக்கிட்டு இருக்காங்க "போய் என்னன்னு பாருங்க என்றாள்.மெல்ல எழுந்து கலைந்து இருந்த கைலியை சீர்திருத்திக் கொண்டு கடிகாரத்தை பார்த்தேன் .இரவு 12 முப்பதை காட்டியது .வாச கதவை திறந்தபடி யார் என்று தலையை வெளியே நீட்டி பார்த்தேன் .வாசலில் நாகூர் நின்று கொண்டு இருந்தான் ."டேய் என்னடா நேரத்துல அப்படி என்னடா ஜோலி "என்றேன் .டேய் வேகமா சட்டைய போட்டுகிட்டு என் கூட வாடா" என்றான் மிகவும் பரபரப்பாக ."டேய் என்னன்னு சொல்லி தொலடா என் பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டு வரணுமா இல்லையா" என்றேன் .அவன் என் காதுகளுக்குள் வந்து மெல்லமாய் கிசுகிசுத்தான் .அடுத்த வினாடி எனக்கு பகிரென்று இருந்ததோடு அதிர்ச்சியாய் இருந்தது ."டேய் என்னடா நாகூர் சொல்ற கடலை கானமா? என்ற இனக்கும் திரு அதிர்ச்சியாய் இருந்தது ."டேய் நெஜமாவா டா சொல்ற நாகூர் எனக்கு ஒண்ணுமே புரியல டா " "இங்க பாருடா முகுந்தா நான் சொல்றது உண்மைதான் அங்க வந்து பாரு ஒரே கடற்கரையில் தான் நிக்குது "என்றான் நாகூர் . அவனுடைய டிவிஎஸ் பெட்டியில் நானும் ஏறிக்கொள்ள ஒரே நிமிடம் தான் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம் .ஏதோ திருவிழா கூட்டம் போல ஊர் மொத்தமும் கசகசவென்று நின்று கொண்டு இருந்தார்கள் .மெல்ல மெல்ல கூட்டங்களை விளக்கிக் கொண்டு சென்று பார்த்த போது கடற்கரை இருந்த இடமே தெரியாமல் பொட்டல்கடாய் மாறி போயிருந்தது .இரவு நேரம் என்பதால் எதையும் சரியாக கணிக்க முடியவில்லை இருந்தாலும் சி,றிது தூரம் கடற்கரை இருந்த திசையை நோக்கி நடந்து பார்த்தோம் .கரடு முரடாய் மேடம் பல்லுமாய் நிலங்கள் காட்சியளித்தன எனக்கும் நாகூருக்கும் பயம் மெல்ல மெல்ல தொற்றிக்கொள்ள தொடங்கியது தேவையில்லாத விஷப் பரீட்சை வேண்டாம் என்று மீண்டும் மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடி வர தொடங்கினோம் .18 ஆண்டுகள் ஓடிவிட்டது இந்தோனேசியாவில் தொடங்கி இந்தியாவின் மூளை முடுக்குகள் எல்லாம் ,எத்தனை உயிர் சேதங்கள் எத்தனை அவலங்கள் அப்பப்ப எண்ணி பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது .குறிப்பாக தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி நாகூர் வேதாரண்யம் கடலூர் பாண்டி சென்னை என்று ,மீனவ குப்பங்களை எல்லாம் புரட்டி போட்ட அந்த சுனாமி, காட்டாற்று வெள்ளம் கடலுக்குள் போவதை தான் கேள்விப்பட்டிருக்கிறோம் ,ஆனால் கடல் மொத்தமும் கிளம்பி ஊருக்குள் புகுந்து ஒட்டுமொத்த உயிர்களையும் ஊருக்குலைத்து விட்டதை என்னவென்று சொல்ல ,..சிறை தேடி போகின்ற பறவைகள் என மனிதர்கள் சுறுசுறுப்பை ஓடிக் கொண்டிருந்தார்கள் .யாரும் சற்று கூட எதிர்பாராத தருணத்தில் கடல் நீர் மேலெழுந்து ஊருக்குள் புகுந்தது .வண்டி வசதி கார் என்று இருந்தோரெல்லாம் அவரவர் வசதிக்கு ஏற்ப பயணப்பட்டு கொண்டு இருந்தார்கள் .இதில் கூட்ட நெரிசலில் மிதிபட்டு சேர்த்தோர்களின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம் .நிராகர வாய் அங்கும் இங்கும் செத்துக்கிடந்த பெண்களின் காதில் கழுத்துகளில் என்று இருந்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடியது மனிதநேயமும் மனசாட்சி மற்ற பல திருடர் கூட்டங்கள் . உயிர் தப்பித்தால் போதும் என்று சொந்த வீடு ,வாடகை வீடு ஆடு, மாடு, கோழி ,அத்தனையையும் விட்டுவிட்டு ரஞ்சன் குஞ்சான் குழந்தை குட்டிகளோடு குடும்பமாக திருவாரூரை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள் .திடீரென திருவாரூருக்குள் இத்தனை ஜனக் கூட்டம் பெருக்கெடுத்து ஓடி வருவதை கண்ட திருவாரூர் கார மக்கள் குழப்பம் அடைந்தார்கள் .பின்பு நிலைமையை உணர்ந்து கொண்டு பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் ,தங்களால் இயன்ற உதவிகளை செய்யத் தொடங்கினார்கள் .மிகவும் மன வேதனையோடு அல்லோலப்பட்டு ஓடிவரும் மக்களை கண்ட பலரும் ஆதரவு கரம் நீட்டினார்கள் .சாதி மத இன பேதம் கட்சி பேதமின்றி ....மனிதர்கள் ஒன்று திரண்டு மனிதர்களுக்கு உதவிய காட்சிகளை காண முடிந்தது .ஆங்காங்கே தயிர் சாதம் புளி சாதம் ,சாம்பார் சாதம் என்று அவரவர்கள் தயார் செய்து ஓடி வருகிற மக்களுக்கு பசியாற்றிக் கொண்டிருந்தார்கள் . இதுதான் சமயம் என்று கடைத்தெரு வீடு என்று அகப்பட்டதை எல்லாம் பொன் பொருள் என்று கொள்ளை அடித்து சுருட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது மனிதன் பேய்கள் ..மதியம் ஒரு மணிக்கெல்லாம் முற்றிலும் களை எடுக்கப்பட்டது போல நாகூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி எல்லா ம் மனிதர்களின் தலைகளை தெரியாத வெறும் பொட்டல்காடுகளாய் மாறி போய் கிடந்தது .ஆடு மாடு கோழி குஞ்சு என்று சிறுசு பெருசு இலை ஒரு முதியோர் என்று யாரையும் விட்டு வைக்காமல் அங்கும் இங்கும் மனித உடல்களும் விலங்குகளின் உடல் களுமாய் செத்து செத்து கிடக்க காரணம் ஆகிப் போய் இருந்தது ,ஊரை பாழாக்கி விட்டுப் போயிருந்த சுனாமி . நானும் நான் கூறும் தெருவில் இருந்த சில இளைஞர்களுமா எல்லோரையும் காப்பாற்றி விட வேண்டும் என்கிற ஒரே துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தோம் .நாகப்பட்டினத்தில் மீனவ குப்பங்கள் தண்ணீரில் தத்தளித்து கிடந்தன அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த ஜனக் கூட்டத்தில் யார் இருக்கிறார்கள் யார் செத்தார்கள் என்று தெரியாமல் ஒவ்வொருவரும் மண்டையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம் .கடற்கரையை ஒட்டி இருந்த மருத்துவமனையின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக இருந்தது .உள்புற நோயாளிகள் பலரும் தண்ணீரில் மூழ்கி கிடந்தனர்.இடுப்பளவு தண்ணீரில் என்ன செய்வது ஏது செய்வது என்று அறியாமல் பல நோயாளிகள் செத்து மிதந்தார்கள் . போதுதான் பிரசவம் ஆயிருந்த பெண்களில் சில பேர் தங்களுடைய குழந்தைகளை கையில் ஏந்தி யபடி நீச்சல் அடித்து வந்தார்கள் ...எண்ணற்ற உயிர் வலிகள் என்றுஊரையே உலுக்கிக் கொண்டிருந்தது .எனக்கும் நான் இருக்கும் சக கூட்டாளிகளான பல இளைஞர்கள் செத்துப் போய் இருந்ததை அறிந்து நாங்கள் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தோம் .என் குடும்பத்தை தெரு காரர்களோடு திருவாரூரில் உள்ள அக்கா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டேன் .நாகப்பட்டினமே அழியப்போகிறது என்கிற உணர்வோடு ஒவ்வொருவரும் பரபரத்துக் கொண்டிருந்தார்கள் .அன்று காலையில் சில வினாடிகள் மட்டுமே நடந்து முடிந்த இந்த சம்பவத்திற்காக ,அன்று முழுவதும் ஊரே உயிர்வயதில் நடுங்கி கிடந்தது .வாடிய முகமும் பசித்த வயிறுகளுமாய் ஊர் மொத்தமும் பட்டினியின் பிடியில் தவித்து கிடந்தது .என்ன செய்ய ஊர் எங்கும் கடல் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்க யார் தான் அடுப்பை பற்ற வைப்பார் ?..கிட்டத்தட்ட பெரியவர்களும் குழந்தைகளும் கூட அன்று முழுவதும் உணவு உண்பதையே மறந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .அவன் அவனும் அரும்பாடு பட்டு சேர்த்த சொத்துக்களையும் உடமைகளையும் விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஊரை விட்டு ஓடி கொண்டு இருந்தார்கள் .என்ன செய்வது ஏது செய்வது ,என்று செய்வதறியாமல் நாங்கள் விடிய விடிய விடுத்து கிடந்தோம் உயிர்வயம் இயற்கை பேரிடர் என்று வரும்போதுதான் உண்மையிலேயே மனிதன் சாதி மதம் மறந்து இன பேதம் ஒழிந்து ஒற்றுமையாய் இணைந்து நிற்கிறான் . மறுநாள் காலை எங்கள் தெரு இளைஞர்கள் மொத்த பெயருக்குமே விடிவு என்பது கடற்கரையில் தான் நிகழ்ந்தது .நேற்று காலையில் நடந்த எதையுமே அறியாததைப் போல கடல் அலைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தன .நேற்று காலையிலிருந்து இன்று இந்த நொடி வரை ஓடி ஓடி ஓய்ந்து போன எங்களின் நிலை அறியாமல் எந்தவித சலனமும் இன்றி கடற்கரை பெரும் அமைதியோடு காணப்பட்டது . ஊருக்குள் இருந்த எண்ணற்ற உயிர்களை வாரி சுருட்டி தின்றுவிட்ட மகிழ்வில் ஏப்பம் விட்டபடி ஒருவித ஏளன புன்னகையோடு கரைகட்டி நின்று கொடுத்த மக்களையும் காவலர்களையும் ,கண்டு கடலும் அதனுடைய அலைகளும் சிரிப்பது போல் இருந்தது .ஊரை விட்டு உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருந்த பலரும் மீண்டும் மெல்ல மெல்ல ஊருக்குள் திரும்பிக் கொண்டிருந்தார்கள் .என் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த சாய்தாபானுவின் வீட்டில் அழுகை சத்தமும் வீட்டு வாசலில் பெரும் கூட்டணமாய் தெரிந்தது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்ப்பதற்காக அருகே சென்றேன் .தாய் தாவின் வாப்பா அஸ்கர் அலி மிகவும் கலங்கிய முகத்துடன் இருப்பதை பார்த்த எனக்கு மிகவும் சங்கடமாய் போய்விட்டது ."அப்பா என்ன ஆச்சுங்க வாப்பா ஏன் இப்படி இருக்கீங்க" என்று கேட்டேன் . "தம்பி முகுந்தா சாய்தாவோட கல்யாணத்துக்கு வாங்கி வைத்திருந்த 50 பவுன் நகை யை காணோன்டா என்று கதறினார் .நேற்று ஒரு நாள் பொழுது சுனாமியின் பேரால் பல வீடுகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ,இருப்பினும் காவல்துறையினரால் ஏதும் செய்ய இயலாது தடுமாறிக் கொண்டிருந்தார்கள் . உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த தருணங்களில் இது போன்ற சமூகவிரோதிகளின் திருட்டு செயல்களும் நடக்கத்தான் செய்திருக்கிறது .பாஸ்கர் வாபாவின் குடும்பமும் எங்கள் குடும்பமும் நெடிய நட்பை கொண்டதாக இருந்தது .பாஸ்கர் பாபாவின் வீட்டில் நடந்த திருட்டு ஏதோ என் வீட்டிலேயே நடந்ததை போன்று எனக்கு சங்கடமாய் இருந்தது .இந்தத் திருட்டு என் வீட்டில் நடந்தது போன்று எனக்குள்ளும் ஒருவித கலவரம் தொற்றிக் கொண்டது .தெருவில் யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் ஓடி ஓடி உதவி செய்யும் வாப்பாவின் வீட்டில் இப்படி நடந்திருப்பது மிகவும் சங்கடமாய் இருந்தது .நானும் நாகோரும் இந்த திருட்டை கண்டுபிடிக்க பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தோம் .வாப்பா ஓடு நாங்களும் காவல் நிலையம் சென்று புகார் அளித்தோம் .இருப்பினும் ஒரே அலை மறைமலைப்பில் அங்கும் இங்கும் தவிர்த்துக் கொண்டிருக்கும் போது காவல் அதிகாரிகள் தான் என்ன செய்வார்கள் என்று எங்களுக்கு நன்றாக தோன்றியது . "ஐயா ஊரு கொஞ்சம் அமைதியான சூழ்நிலைக்கு திரும்பட்டும் அப்புறம் விசாரிக்கலாம் "என்று எங்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் .நாகைக்கும் வேளாங்கண்ணிக்கும் இடைப்பட்ட பல இடங்களில் ஏதோ கிணறு வெட்டுவதைப் போல நீலமும் அகலமும் ஆய் குழிகளை பறித்து குவியல் குவியலாய் மனித பிணங்களை கொட்டி மூடிக்கொண்டு இருந்தார்கள் .இதெல்லாம் நடந்து முடிந்து 18 வருடங்கள் ஓடிவிட்டது ,இன்று வரையிலும் ஒவ்வொரு ஆண்டுகளும் நினைவேந்தல்கள் என்று கூறி ஒவ்வொரு மனித சமுதாயமும் அவரவர் விருப்பப்படி அஞ்சலிகளை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் . "ஏண்டா நாகூர் ஏற்கனவே வந்த சுனாமிக்கு கடல் வெறும் 100 மீட்டர் தான் உள்வாங்கி இருந்துச்சு அன்னைக்கே அப்படி ஒரு பெரிய அசம்பாவிதமாய் நடந்துச்சு ஆனா இன்னைக்கு பல கிலோமீட்டர் கடல் உள்வாங்கி இருக்கு ,என்ன நடக்கும்னு பயமா இருக்குடா " "இங்க பாருடா முகுந்தா அன்னைக்கு மாதிரி இன்னைக்கு மறுபடியும் ஏதாவது ஒரு சுனாமியோ அல்லது வேறு விதமான அசம்பாதமே நடந்தா முதல்ல நாம உசுர காப்பாத்திக்க தான் பாக்கணும் புரிந்து நடந்துக்கோ "என்றான் நாகூர் .. உயிர் என்று வரும்போது நாகூரும் சுயநலமாக தான் யோசித்தான் தனக்கு தனக்கு என்று வரும்போது அத்தனை பேரும் குருடர்களாய் மாறி போவதை எண்ணி மனதுக்குள் புகை மூட்டம் எழும்பி கொண்டு இருந்தது எனக்கு . ஏற்கனவே நடந்த சுனாமியின் போதுநாகப்பட்டினத்திலிருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள எப்படி ஓடினார்களோ அப்படியே இன்றும் ஓட தொடங்கினார்கள் .முன்னெச்சரிக்கையாக இருக்கட்டும் என்று நானும் என் குடும்பத்தை திருவாரூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் . பல கிலோமீட்டர்கள் புல் வாங்கி இருந்த கடற்கரையை வேடிக்கை பார்த்தபடி அடுத்த வினாடி என்ன நடக்கும் என்ற கலவரத்தில் கிடந்தது நாகப்பட்டினம் ஆறான தருணத்தையும் மாறாத வடுவையும் ஏற்படுத்திவிட்டு போயிருக்கும் இந்த சுனாமியை நினைத்து காவல்துறையினாரோ மக்களை கடற்கரை பக்கம் செல்ல விடாமல் பாதுகாப்பு பந்தபஸ்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள் .நள்ளிரவில் எழுந்து கடற்கரைக்கு வந்த எனக்கும் நாகூருக்கும் விடிந்ததும் தெரியவில்லை பொழுது போனதும் தெரியவில்லை மீண்டும் ஒரு இரவு வந்த போது எங்களுக்குள் பசி மயக்கம் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது ,ஒரு வழியாய் நானும் நாகூரில் எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் .வீட்டில் கிடைத்தது சாப்பிட்டுவிட்டு எங்களை மறந்து அயர்ந்து தூங்கிப் போனோம் . தூங்கினோமா தூங்கலையா என்று கூட தெரியவில்லை காலை 6 மணிக்கு எல்லாம் சட்டென்று விழித்து விட்டோம் மீண்டும் நாங்கள் இருவரும் கடற்கரை நோக்கி டிவிஎஸ் பிப்ட்டியில் கிளம்பினோம் கடற்கரையிலும் ஒரு சிலரை தவிர வேறு எந்த நாதியையும் காணவில்லை .காவல்துறையினர் மட்டும் அங்கு ஒருவரும் இங்கு ஒருவருமாக உலாத்திக் கொண்டிருந்தார்கள் அந்த காவலர்களை நினைக்கும்பொழுது மிகவும் பாவமாய் இருந்தது அவர்களுடைய வீட்டிலும் மனைவியும் மக்கள் என்று இருக்கத்தானே செய்வார்கள் அவர்களைப் பற்றி கொஞ்சம் கவலைப்படாமல் இங்கு மக்களை காப்பாற்றுவதிலும் மக்களை பேணி காப்பதிலும் கூறியாய் இருக்கிற அவர்களை,பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் துளிகள் பணித்தன .கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடலை காணவில்லை எப்படியும் நான்கு கிலோமீட்டர் ஆவது கடல் உள்வாங்கி இருக்கும் என்று நன்றாக தெரிகிறது காரணம் அந்த மணல் திட்டுகளையும் மணல்மேடுகளையும் பார்க்கும் பொழுது ஏதோ சொர்க்க பூமியை பார்ப்பது போன்று இருக்கிறது மனதுக்குள் ஒருவித கலவரம் ஏற்பட்டது .எப்படியும் இந்த முறை நாகப்பட்டினம் முழுமையும் காணாமல் போய்விடுமோ என்கிற அச்சம் சூழ்ந்தது ஒரு பக்கம் நபிகள் நாயகமும் மறுபக்கம் வேளாங்கண்ணி மாதாவும் நடுப்பக்கம் நெல்லு கடை மாரியம்மனும் காவல் தெய்வங்களாக நின்று கொண்டு இருந்தாலும் ,இயற்கை சீற்றங்கள் என்று வந்துவிட்டால் கடவுள்களை காப்பாற்றுவதும் கூட இயற்கைக்கு அப்பாற்பட்டது தான் என்பதை உணர்ந்து மனிதன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டி இருந்தது .இயற்கை ஏன் இத்தனை அழிச்சாட்டியங்களை செய்கிறது என்று இயற்கையின் மீது கோபம் கோபமாய் வந்தது எனக்கும் நாகூருக்கும் .இப்பொழுது நாகப்பட்டினத்திற்கும் நாகூருக்கும் இடைப்பட்ட தூரத்தில் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தோம் நானும் நாகூரும் அப்போது அந்த நிமிடம் நாங்கள் கண்ட ஒரு காட்சி எங்களை தூக்கி வாரி போட்டது , "டேய் முகுந்தா அங்க பாருடா இது என்னடா பெரிய கூத்தா இருக்கு என்று ஆச்சரியமும்அதிசயமும் பொங்க கத்தினான் நாகூர் .அவன் கூக்குரலிட்டு காட்டிய திசையை நான் நோக்கினேன் உள்வாங்கி இருந்த கடற்கரை ஏரியாக்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறியதும் பெரியதுமாய் வேலிகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன ."அடப்பாவிகளா இது என்னடா அநியாயமா இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டான் நாகூர் .அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்ற கலவரத்தில் ,அவன் அவனும் இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறான் வாழ்வா சாவா என்கிற போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் இரவோடு இரவாக அநியாயக்காரர்கள் அக்கிரமாக்காரர்கள் இப்படி ஒரு அட்டூழியமான செயலை செய்திருப்பதை கண்டு ,மனது மிகவும் வேதனைப்பட்டது . ஜன சமுத்திரத்தின் உச்சபட்ச சுயநல செயலை எண்ணி கலங்கிப் போனேன் நான் ,பாதகம் செய்வோரைக் கண்டால் முகத்தில் காரி உமிழ்ந்து விடு பாப்பா என்ற பாரதியின் பாடல் வரிகள் நினைக்கும் வர ,ஆத்திரமும் கோபமும் கொப்பளித்துக் கொண்டு வர என்னுள் இருந்த பலம் அத்தனையையும் திரட்டி சுயநல பித்தாகிப்போன சன சமுத்திரத்தின் மீது ,கா.......ரி.....த்தூவென்று...உமிழ்ந்தேன் . அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் முகத்தில் யாரோ தண்ணீர் தெளிப்பதை போன்று இருக்க அலறி பிடித்து வாரி சுருட்டி எழுந்து உட்கார்ந்தேன் ,என் முகத்தை தடவி பார்த்த போது ஏதோ திரவம் போன்று கொழகொழவென்று இருந்தது ..என் அருகில் மிகவும் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான் நாகூர் .கண்ணாடி மாளிகைக்குள் இருந்தபடி கல்லு இருந்தாலும் மல்லாந்து படுத்தபடி காரி உமிழ்ந்தாலும் ,நஷ்டம் என்னமோ நம் முகத்திற்குத்தான் என்பது புரிந்த போது அருவருப்பிலும் அவமானத்திலும் கூனி குறுகிப் போனேன் நான் . ....முற்றும்... முத்தையா மோகன் 76 உமா நாம நகர் .1.உப்பிலிபாளையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோயம்புத்தூர் .641 018 . பேச 9659419429 .

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Nagai Asaithambi Avatar
    Nagai Asaithambi - 2 years ago
    அருமையான கரு தோழா,,, பல இடங்களில் எழுத்துப்பிழை இருப்பதால் சிலருக்கு அர்த்தம்புரிய காலதமதமாகலாம் வெற்றிப்பெற வாழ்த்துகள் பல

  • முத்தையாமோகன் Avatar
    முத்தையாமோகன் - 2 years ago
    தங்களுடைய விமர்சனம் என்னை மேலும் செழுமைப்படுத்தும் என்று நம்புகிறேன் . எப்போதும் தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்காக காத்திருக்கிறேன் பேரன்பும் நன்றியும் தோழரே ...

  • அ. வேளாங்கண்ணி Avatar
    அ. வேளாங்கண்ணி - 2 years ago
    சுனாமி நினைவுகளை அப்படியே காட்சி படுத்தியுள்ளீர்கள். சில சில எழுத்துப்பிழைகளை களைந்து பதிந்தால் சிறப்பு.. அ.வேளாங்கண்ணி

    முத்தையாமோகன் Avatar
    முத்தையாமோகன் - 2 years ago
    பேரன்பும் நன்றியும் தோழரே தங்களுடைய விமர்சனம் எனக்கான உரம் என்று நம்புகிறேன் ...