Pasupathi
சிறுகதை வரிசை எண்
# 4
சிவப்பு பெட்டிக்குள் விழுந்த பகடிவதை
"அண்ணா, பதனஞ்சாம் நம்பர் ரூம் எங்கணா இருக்கு?" மெல்லிசையால் மெர்கூட்டினான் மாதேஷ் அவனைப் பற்றி கூற வேண்டுமென்றால் இருபுருவங்களுக்கிடையே சந்தன பொட்டு, தார்சாலையில் நேராக இழுக்கப்பட்ட வெள்ளைக்கோடு போல் நடுநெற்றியில் இடப்படட் திருநீறு, வட்டவடிவமான முகத்தில் பொருத்தப்பட்ட காந்தி கண்ணாடி. சிவந்த உதடு மானிற மேனி என அவனை வரையறுக்கலாம்.
பல் துலக்கிக் கொண்டே, எச்சிலை வாயில் வைத்தபடி "மேல நேரா போய் லேப்ட்ல பர்ஸ்ட் ரூம், போ.. "என்ற கனத்த குரலில் லுங்கிய இடுப்பில் மடித்து கட்டினான் மருது..
டேங்ஸ் ணா , என்ற படி கீழே இருந்த தகரப்பெட்டி அவன் கை அசைவுக்கு ஏற்றபடி படியேறியது.
"டேய் மச்சான்...மேல ஒரு பழம் வரும் பாத்து நாசுக்கா புடிச்சிவை" என்றபடி விடுதியின் வெளியே, கொடிக்கம்பம் அப்பாலே உள்ள மண்தரையில் போனில் பேசியபடி எச்சிலை துப்பினான் மருது ...
மாதேஷ், செருப்பை பதினைந்து என்று எழுதப்பட்ட சுவரின் கீழே கழற்றி விட்டு , உள்ளே நுழைந்தான் .
அறையின் மூளைகளில் ஆங்காங்கு சிலந்திகள் வசிக்கும் ஒற்றடை, இரண்டு பேன்கள் மாட்ட வேண்டிய இடத்தில் மொதுவாக சுழலும் ஒரேயொரு பேன்..
ஏழு கட்டில்கள் ஈரடுக்காய் கிழக்கு, மேற்கு, வடக்கு என போடப்பட்டு, போர்வைகள் கீழே விழுந்து கிடக்க, வாயில் அசடு வழிய இரண்டு பேர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கட்டிலில் படுத்து உறங்கி கொண்டு இருந்தனர். மூன்று பேர் ஒரு கட்டிலில் அமர்ந்தபடி ஏதோவொரு ஆங்கில படத்தை பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் மூன்று பேர் கருவிழியில் நீலநிற ஒளி அலைபாய்ந்து கொண்டு இருந்தது .தரையில் இரண்டு பாய்கள் விரிக்கப்பட்டு இருந்தன. அதில் ஆங்காங்கே வீசப்பட்ட புத்தகங்கள் போல் நால்வர் படுத்து உறங்கி கொண்டு இருந்தனர். சுவரில் மேலே முருகன் காலாண்டரும் அதன் அருகே முழங்கால் தெரியும் பில்லா பட நாயகியும் ஒட்டப்பட்டு இருந்தது.
திராட்சை பழத்தைப் போல் ஒருவன் கையில் விலக்கமாற்றை வைத்துக்கொண்டு அலைமோதிக்கொண்டே மாதேஷை பார்த்தான்.
"ஹாய் புரோ ...மாதேஷ்" என்ற படி விலக்கமாறை பிடித்து இருந்தவனின் கையை குலுக்கினான்.
அவனும் பதிலுக்கு ஹாய் என்ற படி ராஜா என கூறிவிட்டு திரும்பவும் அலைமோத ஆரம்பித்தான்.
தன் கையிலிருந்த தகரப்பெட்டியையும், தோலில் மாட்டப்பட்டிருக்கும் பையைக் கழற்றி கீழே வைத்தான். சுற்றியும் பார்த்தான் எந்தவொரு கட்டில் மேலும் ஒரு தலையணை, போர்வை என எதுவுமில்லை . அவன் தன் தகரப்பெட்டியை தூக்கி டம்மென்று வைத்தான் . கீழே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவன் திடுக்கென்று எழுந்து "அடிங் ஒம்மாள" என்ற வாடைக்காற்று, சத்தத்துடன் வீசியது. அவன் வாயும் வாடைத் தான்,வாயிலிருந்து வந்த சொல்லும் வாடைத் தான்.
கண்கள் இரண்டும் வெகுண்டது , கால்கள் இரண்டும் பக்கவாட்டில் நடைப்போட்டது, ஓர் பயத்துடன் நின்றான் மாதேஷ்.
அலைமோதிய ராஜாவின் கால்கள் விலக்கமாறை ஓர் மூளையில் போட்டுவிட்டு வெளியே சென்று விட்டன.
"யாரா நீ ?"என்றபடி வாடைக்காற்று இன்னும் மாதேஷை வாட்ட தொடங்கியது.
"ம்ஆதேஷ்" என்றது அவன் மெல்லிய குரல்.
உள்ளே நுழைந்த மருது "டேய் பட்றா.. பட்றா.. ஃபர்ஸ்ட் இயர் போல விடு.. விடு.." என்றான்.
வாடைக்காற்று திரும்பவும் கட்டிலில் கரை ஒதுங்கியது.
"டேய் தம்பே!
"இந்தா.." என்றபடி இரண்டு சிறிய பிளாஸ்டிக் பக்கெட்களை கொடுத்தான்
"போய் கீழ சோறு, குழம்பு இருக்கும் இரண்டுலயும் நிரப்பிட்டு வா..."
"அப்படியே , நா வரப்ப ஒருத்தன் வெளிய போனான்ல அவன அப்படியே வரசொல்லு ..." என்று பிரஸை உதறினான்.
மாதேஷ், கீழே இறங்கும் போது ராஜா எதிரே வர கண்டான்.
"ராஜா உன்ன சீனியர் கூப்புட்டாரு".. என்றபடி சமையல் அறைக்கு இரண்டு பக்கெட்களும் சென்றது..
ஃபிரோ என்ற சொல் ராஜாவாக அவன் வாயில் வலம் வந்தது.
அக்கா சாப்பாடு, சாம்பாரு வேணும் எங்க இருக்கு?...
கண்ணில் நீர் வழிய வெங்காயத்தை அரிந்து கொண்டு இருந்தாள் நல்லம்மாள் . பெயருக்கு ஏற்றார் போல் நல்லம்மாள் தான்.
அவளே எழுந்து, பச்சை பக்கெட்டில் வெண்சோறு நிறைய நிறையப் போட்டாள், சாம்பாரை சிவப்பு பக்கெட்டில் முக்கால் வரை ஊற்றினாள் . "தீர்ந்து போன வா அள்ளி தாரேன்".. என்று விட்டு மிச்ச வெங்காயத்தை அரிய ஆரம்பித்தாள் அதே கண்ணீருடன்...
இரண்டையும் மூடிப்போட்டு மூடிவிட்டு விடுதி பாதுகாவலர் அறையை தாண்டினான்..
டேய் தம்பி ...
இங்க வாடா ..
மருத போய் கூப்புடு..
சரிங்க சார்..
என்றபடி தன்னுடைய ரூமுக்கு சென்றான்...
"ராஜா.., மருதுங்கிறது யாரா?
வார்டன் கூப்புட்டாரு"... என்றபடி பக்கெட்களை கீழே வைத்தான்...
ராஜாவின் கண்கள்," டேய் உன்ன சோறு ,சாம்பார வாங்கிட்டு வர சொன்னார்ல! அவர் தான்" என்றது இன்னும் இரண்டு பக்கெட்களை எடுத்தபடி ராஜா சமையல் அறைக்கு சென்றான்.
முருகனின் பாதத்திற்கு கீழே உள்ள கண்ணாடியில் தன் தலைமயிரை வாறிகொண்டு இருந்தான் மருது...
"அண்ணா, வார்டன் கூப்புட்டார்ணா"..
என்ற சொல்லை கேட்டவுடன், சீப்பை அப்படியே போட்டுவிட்டு வேகமாக ரூமை விட்டு நகர்ந்தான்.. அது அந்த சொல்லுக்கு கிடைத்த மரியாதை அல்ல.. வார்டன் மேல் உள்ள மரியாதை..
வேகம் எடுத்த மருதுவின் கால்கள்,வார்டன் அறையில் போய் தான் நின்றது...
"ஐயா" என்ற ஒருமித்த சிரிப்புடன் உள்ளே போனான் மருது...
"மருது வாயா இங்க"...
"இங்க பாரு என்னனு"..
"என்னயா இது"..
" பிரித்து படி"… என்ற படி மருதுவின் வலது கையில், ஒரு காகிதம் ஐயாவால் கைமாற்றப்பட்டது.
அவனும் மனதிற்குள் படித்தப்படியே ஐயா நான் பாத்துக்கிறேன் என்றபடி ஒரு வகை கோபமாய் விடுதியின் தாழ்வாரத்தை அடைந்தான்....
"டேய் அந்த பெல்ல அடிடா"...
மணி டங்... டங்... என்று ஒலிக்கப்பட்டது. இந்த மணி மாணவர்கள் சாப்பட அழைக்க வைக்கப்பட்டது . ஆனால் சீனியர்கள், ஜூனியர்களுடன் கலந்துரையாட பயன்படுத்துகின்றன.
மாதேஷ் உட்பட ரூம்மீல் இருந்த அனைவரும் மருதுவின் முன்னாள் அஸம்பல் ஆனார்கள்....ராஜா தயிரும்,ரசமும் நிறைந்த பக்கெட்டுடன் நின்று கொண்டு இருந்தான் ...
"டேய், என்னடா பண்ணிவச்சிருக்கீங்க"... என்று சிங்கம் போல் முழங்கினான்..
"என்னடா?".. மருது, "என்னாச்சி?".. என்றான் அவன் வகுப்பு நண்பன் நடராஜன்.
"எவனோ ஒருத்தன், கம்பிளய்ன்ட் போட்டு இருக்கான் ரெட்பாக்ஸ்ல" ...
"எவனு ஒழுங்கா சொல்லிரு? இல்லனா ஓத்தா வாங்கிகட்டிக்க போறீங்க".. என்று நரம்புபுடைக்க மருதுவின் அருகே வந்து கத்தினான் கரண் ...
"டேய், சும்மா இருடா ! பன்றது எல்லாம் பண்ணிட்டு இங்க வந்து கத்திட்டு இருக்க" ... என்று அடக்கினான் மருது...
அவன் சொல்லுக்கு கரணின் கத்தல் காணமல் போனது...
"நான் தான் சொன்னேன்ல… எதாவது பிரச்சனைனா ஏன் கிட்ட வந்து சொல்லுங்கனு பெரிய புழுத்திங்க மாட்டோம் ரெட் பாக்ஸ்ல போட்டு இருக்கிங்க"....
"இதுதான் முதலும் , கடைசியா இருக்கனும் இனி எவனாவது ரெட் பாக்ஸ்கிட்ட போனீங்க அம்புடுதான் நியாபகம் வச்சிக்கோங்க என்று சீறினான் மருது"..
"போங்கடா எல்லாம்" என்றதும் அனைவரும் வண்டுகள் முரல்வது போல் "எவன் பாத்த வேலயா இருக்கும்?" "ஒரு வேல அந்த நாலு பேரா இருக்குமோ!" முணகி கொண்டே இருந்தனர்.
டேய் கரணு உன்ன பத்தி தான் எழுதிருக்கான் பாத்துக்கோ ....
எவன் தெரியட்டும்... பாத்துகிறேன்.. அவனுக்கு இருக்கு பல்லை கடித்துக் கொண்டு தன் கோபத்தை காட்டினான்...
சரி விடு .. விடு ... நம்ப பசங்க தானே என்று சமாதானம் படுத்தினான் மருது...
அவன் கோபத்தை பார்த்தபடி ராஜாவும்,மாதேஷும் தனது அறைக்கு சென்றனர்.
என்னாச்சு? ராஜா.. என்ன நடந்தது?..
மாதேஷின் கேள்விகள் அம்புகள் போல் ராஜாவை துளைக்க ஆரம்பித்தன..
"இங்க வேணாம் , வா வெளியில் போகலாம்" என்றபடி பக்கெட்டுகளை வைத்தபடி மெயின் ரோட்டுக்கு அருகில் உள்ள புளியமரத்தின் அருகே உள்ள கல்லூரி காமவுண்ட் சுவர் திட்டில் அமர்ந்தனர்.
"டேய், நா சொல்றத வேற யாருக்கிட்டயும் சொல்லிட மாட்டேல"...
"டேய் சொல்டா... நான் எதுவும் சொல்ல மாட்டேன்" ...
ஆனாலும் ராஜாவுக்கு ஒரே மனநெருடல் இவனிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று உறுத்திக் கொண்டு இருந்தது ...
சொல்டா... அதுதான் சொல்லமாட்டேன் சொன்னேன்ல..
இரண்டாவது முறையும் அதே சொல் ராஜா நம்பகத்தன்மையை அளித்தது.
டேய் மருது அண்ணா பற்றி சொல்லுடா?
அவரு ஜூவாலஜி ஃபைனல் இயர் படிக்கறாரு... ரொம்ப நல்ல மனுசன் மத்த சீனியர் மாறி இல்ல.. அவரையே இன்னைக்கு இப்படி கத்தவச்சிட்டானுங்க..
அதனால தான் வார்டன் லேட்டர அவர்கிட்ட கொடுத்தாரா ?
டேய் நம்ப ஹாஸ்டல் வார்டனே இவர் தான் டா ... வார்டன் இவரோட தூரத்து சொந்தம் .அதனால இவரும் வார்டனும் நெருக்கமா தான் இருப்பாங்க ...
நம்ப பசங்களுக்கு எதாவது பிரச்சனைனா, இவர் தான் முன்ன நிப்பாரு...
வாயை பிளந்த பிணம் போல் தலையாட்டிக் கேட்டுக் கொண்டு இருந்தான் மாதேஷ்.
சரி அப்படி என்ன தான் பிரச்சனை ரெட் பாக்ஸ்ல லேட்டர் போற அளவுக்கு...
போன வாரம் சனிக்கிழம அந்த கரண் இருக்கான்ல.. அவனும் ஜூவாலஜி தான். ஒரு நாலு பேருக்கிட்ட பிட்டு படத்தைக் காட்டி அவனுங்கல அதே மாறி பண்ண சொல்லிருக்கான் போதையில ... மருது அண்ணாவும் , வார்டன் கூட எங்கயோ போயிட்டாரு.... இவனுங்க அது மாறி பண்ணலனா செகன்ட் இயரு நீங்க தான் பண்ணனுமுனு சிடிர்ட்டா சொல்லிட்டான். அதனால டேய் ஒழுங்கு மயிர பண்ணுங்கடா என்று அவர்களும் கூச்சல் போட ஆரம்பித்தனர். அதனால நிர்வாணமாக ஜட்டியோட நின்னு அதே மாதிரி கண்ணு தண்ணியோட செஞ்சிக்கிட்டானுங்க பாவம்.
போதையில கரண் கீழ விழுந்தான் .. இது தான் சாக்குனு நாலு பேரும் சட்டையை போட்டுக் கொண்டு அந்த இரவே அவனுங்க பிரண்டு ஸ்டே பண்ணிருக்க ரூமுக்கு போனவுனுங்க தான் திரும்பி வரவே இல்லை.
அதுல எவனாவது பாத்த வேலையாத்தான் இருக்கும் என்றான் ராஜா.
இன்னைக்கு மருது அண்ணா இருந்த நாள தப்பிச்சேன் டா ...
அவன் படுத்து இருந்த கட்டில் மேல பெட்டிய வச்சிட்டேன் ... கத்த ஆரம்மிச்சிட்டான்... என்ற பயத்தோடு கரணை பற்றி மாதேஷ் கூறினான்..
டேய் பாத்து நடந்துக்க , இங்க லுங்கி தான் ஹாஸ்டல கட்டனும்... கையில கட்டிருக்க கவுத்தலாம் கழட்டி வீசிரு... நம்ப ரூம்ல, மருது அண்ணாவோட சேத்து அஞ்சி பேரு சூப்பர்சீனியரு... கீழ ஒரு நாளு பேரு படுத்து இருந்தானுங்கள அவனுங்க செகன்ட் இயர்ஸு, நானு ,நீய், ஒரு நாலு பேரு ஓடுனான்ங்கல அவனுங்கல சேத்தி பதினஞ்சு பேரு தான் நம்ப ரூம்ல..
ஆமா, அந்த சம்பவம் நடக்குற அப்ப நீ எங்க போன ...
நாலாம் சனி ,ஞாயிறு ஆனா வீட்டுக்கு போயிருவேன் இவனுங்க அலும்பு தாங்காத நாள..
எதுக்குடா பக்கெட்ல சோறு, கொழம்பு, ரசம், தயிருனு அது நமக்கு தான்...
நமக்குனா?
நம்ப ரூம்ல இருக்க எல்லாத்துக்கும் தான்.
நம்ப ரூம்னா?
நம்பரூம் மட்டுமில்ல, எல்லா ரூம்லயும் இப்படி தான் நடக்குது...
பல வருசமா இப்படி தான் நடக்குது.
இதுல எதாவது கம்மியா இருந்தா சமையல்கட்ல போய் கொண்டு வந்து வச்சருனும், இல்லைனா வச்சிக்கோ பக்கெட்டை இவனுங்கலே ஒடச்சிட்டு நம்பல வாங்கி வெக்க சொல்லுவானுங்க...
வெக்கலைனா?
"நாலுபேத்துக்கு நடந்த மாறி தான் வச்சிக்கோ"..
மாதேஷ் தொண்டையில் எச்சி முழுங்குவது ராஜாவின் கண்ணுக்கு அகப்பட்டது..
இதெல்லாம் தப்பு இல்லையாடா?
டேய் இதெல்லாம் பிராவெர்ப் மாறி வாழையடி வாழையா நடந்துட்டு வர விஷயம் மாத்தவே முடியாது...நீ வந்தாலும் , இதே தான் செய்வ நான் வந்தாலும் இதே தான் செய்வேன்..
நம்ப செய்யலைனாலும், நம்பல செஞ்சது செய்ய சொல்லும் பாத்துக்க...
"டேய், நான் இந்த ஹாஸ்டல் விட்டு போறேன்டா"... என்றான் மாதேஷ்
"ஆமா , கேக்க மறந்துட்டேன்" ... காலேஜ் ஆரம்பிச்சி மூனு மாசம் ஆச்சி இப்ப வந்துருக்க?..
அதுவா, நான் நீட் எக்சாம் எழுதுனேன், சீட் கடச்சிரும்னு பாத்தேன் பட் கிடைக்கல அதுதான் இப்ப வந்து சேந்தேன்...
"என்ன டிபார்ட்மெண்ட்?"
"கெமிஸ்ட்ரிடா" ...
"ஒரே இனம் அடா நீ!" என்ற சிரிப்புடன் ராஜா அவனை கட்டி தழுவினான்.
மதிய வெயில் மட மடவென அடிக்க தொடங்கியது... இருவரும் பக்கெட்களில் ,சீனியர் மீதம் வைத்திருந்த உணவை கப்... கப்... என்று உண்டு விட்டு கல்லூரிக்கு சென்றனர்.
கல்லூரிக்கு வெளியே, மெயின்ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் , சுடிதாரும் துப்பட்டாக்களும் பேருந்து படிகளில் ஏறவும், பேண்ட்சர்ட்கள் படிகளில் இறங்கவும் ஆரம்பித்தனர்.காரணம் இது ஷிப்ட் காலேஜ் பகல் நேரம் 8.30 முதல் 12.30 வரை பெண்களும் , மதியம் 1 முதல் 5 மணி வரை ஆண்களும் படித்து வருகின்றன.
மாதேஷ் முதல் நாள் வருவதை கண்ட இலைகள் காற்று பட்டு உதிர தொடங்கின.
"டேய் காலேஜ்ல ஹாஸ்டல் மாறி ராகிங் இருக்கா"... ,
"டேய் காலேஜ்லாம் வேற லெவல்ல இருக்கும் வா"...
ஒலிபெருக்கியில், விடுதி மாணவர்கள் அனைவரும் விழா மேடைக்கு வர வேண்டும் என்று ஒளிபரப்பப்பட்டது.
விடுதி மாணவர்கள் அனைவரும் விழா மேடைக்கு முன் நின்றன.
ஆனால் இங்கு மருதுவை சூழ்ந்து எவருமில்லை..மருதுவிடம் புகார் கடிதம் ஆனது கிடையாது .. மருதுவை ஆதரித்த வார்டனோ, பிரின்ஸ்பால் பின்னால் தலைகுனிந்து நின்று கொண்டு இருந்தார்..
"இந்த கடிதம் எனது அறைக்கு அருகிலுள்ள சிவப்பு பெட்டியில் கிடைத்தது".
இங்கயுமா ? என்று புருவத்தை உயர்த்தினர். ஹாஸ்டலர்ஸ் அனைவரும்.
ஜூனியர் மாணவர்களை பகடிவதை செய்வது இன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இப்படி நடக்கிறது என்பதை நீங்கள் சொன்னதே கிடையாது . வார்டன் ஆகிய நீங்கள் தான் இதற்கு விதிவிலக்கும் போல. ஆனால் நீங்களே இப்படி செய்வது என்று அவரை பிரின்ஸ்பால் காண அவர் தண்டு முறிந்த செடியை போல அவர், தலை முனிந்த படியே இருந்தார் ..... இனி அறையில் ஜூனியர், ஸீனியர் என ஒன்றாக இருப்பது நீக்கபடவேண்டும். இனி ஜூனியர் தனியாகவும் ஸீனியர் தனியாகவும் இருப்பதே உசிதம் ... சரிங்களா வார்டன், என்ற பிரின்சிபாலின் கண்டிப்பு மிக்க பேச்சு, ஜூனியர்களுக்கு மிக மகிழ்ச்சியையும், சில ஸீனியர் மாணவர்களை சஸ்பேண்டுக்கும் உள்ளாக்கியது. அன்றிலிருந்து, சிகப்பு பெட்டியில் ஒரு கடிதம் கூட விழுந்தபாடு இல்லை, அதேபோல் விடுதியிலும் பக்கெட்களில் ஒரு பருக்கை சாப்பாடுகள் கூட விழுந்தபாடுமில்லை ...
அன்று
ஸீனியர்களால் உடைக்கப்பட்ட பக்கெட்கள் இன்று ஜூனியர்களால் உடைக்கப்பட்டன...
.......முற்றும்.........
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்