logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

க. பூமணி

சிறுகதை வரிசை எண் # 36


சமூகத்தில் அவள் ! ஒன்பது வருடங்கள் ஆகியிருந்தது அவன் என்கிற அவள் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்று . வாழ்க்கையில் யாரும் படக்கூடாத துன்பம் அவள் வாழ்க்கையில் நடந்திருந்தது. மகேஷ் என்ற அவன் மாலினியாக மாறியது அவன் அப்போது ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான் . எங்கு எதிலும் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது. மகேஷின் பெற்றோர் அவன் எது கேட்டாலும் உடனே, வாங்கி தந்துவிடுவர். மகேஷின் பெற்றோர் சேகர், செல்வி. சேகர், செல்வி தம்பதியருக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். ஏங்க, நமக்கு குழந்தை பிறக்குமா… திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. என்னால் தாய்மையை அடைய முடியாத என்று கண்களில் கண்ணீரோடு கணவனை பார்த்து கேட்டால் செல்வி. ஏன், செல்வி இப்படி பேசற, நமக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் கவலைப்படாதே என்று அவள் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினான் சேகர். ஒவ்வொரு நாளும் நகர்வது அவர்களுக்கு நரகமாக இருந்தது. சேகர் அரசுத்துறையில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். ஒரு நாள் சேகரின் வீட்டிற்கு அவரது மாமாவும் , அத்தையும் வந்திருந்தனர். ஆறு மாதத்திற்கு முன்பு தான் சேகரின் மாமா மகளுக்கு திருமணம் ஆகியிருந்தது. ஆறு மாதத்திலே தாய்மை அடைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நற்செய்தியை சொல்வதற்கு வீட்டிற்கு வந்த அத்தை சேகரிடம் ஏம்பா, நம்ம கெளரிக்கு விளக்காப்பு வெச்சி இருக்கிறோம் என்று தான் வாங்கி வந்த பூ, பழம், வெற்றிலையுடன் பத்திரிக்கையை வைத்து அவர்கள் இருவரிடம் கொடுத்தனர். உடனே செல்வி, சித்தி நீங்க பேசிகிட்டு இருங்க நான் காபி போட்டு எடுத்துகிட்டு வர என்று சமையல் அறைக்கு சென்றுவிட்டாள். இந்த சமயத்தில் சேகரிடத்தில் பேசி கொண்டிருந்த அவனுடைய அத்தை, சேகரை தனியாக அழைத்து சென்று, ஏன்டா! உனக்கு ஏன் இந்த மலடி? நல்லாப் பொண்ணு ஒன்னு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிற என்றாள். இதை கேட்ட சேகருக்கு சொல் முடியாத அளவிற்கு கோபம் வந்தது. சேகர் அவனது அத்தையை பார்த்து, அத்தை என் மனைவியை பற்றி இன்னும் ஒரு வார்த்தை பேசினங்க உங்களுக்கு மரியாதை இருக்காது. அவள் ஒன்றும் மலடி இல்லை , நிச்சயம் எங்களுக்கு குழந்தை பிறக்கும் அந்த நம்பிக்கை எங்கள் இருவருக்கும் இருக்கிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்வாய் என்றார். அத்தை, நீங்க என்ன வேணுமானாலும் நினைத்து கொள்ளுங்கள். அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றான் சேகர். அத்தை சொல்றது சொல்லிட்ட கெளரி சீமந்ததிற்கு நீ மட்டும் வந்தா போதும். அந்த செல்வி அதான் அந்த மலடி ஒன்னும் எ! பொண்ண வாழ்த்த வர தேவையில்லை என சொல்ல உடனே சேகர் குறுக்கிட்டு போதும் நிறுத்துங்கள் அத்தை செல்விக்கு இடமில்லாத இடத்தில் எனக்கும் எந்த உரிமையும் இல்லை. நீங்க இங்கிருந்து போகலாம் என்று தன் கண்களில் வரும் கண்ணீரை துடைத்து கொண்டு சமையல் அறையில் நின்று கொண்டிருந்த செல்வியை பார்த்தான் . செல்வி சேகரிடம் என்னங்க, கெளரி விளக்காப்புக்கு நம்ம போறம என்று ஆசையோடு கேட்க சேகர், இல்லை செல்வி நாம போகலை என சொல்ல வரும் போதே செல்வியின் கரத்தில் சேகரின் கண்ணீர்த் துளி விழ அவளுக்கு நிஜம் புரிந்து செல்வி ஆழத்தொடங்கிவிட்டாள் . செல்வியை தன் மார்பின் மீது சாய்த்து கொண்டு செல்வி நமக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும். நம்பிக்கையோடு இரு என்று அவள் தலையை வருடி கொடுத்தான். இருவரும் பல மருத்துவ ஆலோசனைக்கு பிறகு அவர்களின் கனவு மெய்பட போகிறது. அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த சேகருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஹலோ சேகர் இருக்கிறீரா என்று எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. வணக்கம் நான் சேகர் தான் பேசுகிறேன் சொல்லுங்கள் என்றான். சார், நான் நர்ஸ் பேசுகிறேன் உங்கள் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வரவும் என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். சேகருக்கு கண்களில் கண்ணீர் கரைந்தது….. அவன் மனம் முழுவதிலும் செல்வியின் முகமே வந்து வந்து சென்றது. ஒன்று, இரண்டு வருடங்களா… பல வருடங்களின் தவம், எங்கள் இருவரின் நம்பிக்கை, சந்தோஷம் நீ, என் செல்லமே ! இதோ வருகிறேன் என்று மேசை மீது இருந்த சாவியை எடுத்துக்கொண்டு வேகமாக இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான். சேகர் மருத்துவமனையில் செல்வி இருக்கும் இடத்திற்கு வேகமாக நடந்து சென்றான். அங்கு செல்வியின் பெற்றோர் இருந்தனர். வாங்க மாப்பிள்ளை உங்க நம்பிக்கை வீண் போகல…. எங்களுக்கு பேரன் பிறந்திருக்கான் மாப்பிள்ளை என்று சந்தோஷத்தில் பேச முடியாமல் எங்களை மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை என்று சொல்லுபோதே சேகர் அவர்கள் பேசுவதை நிறுத்தி அட விடுங்க மாமா எதற்கு மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க என்றான் சேகர். அறையின் உள்ளிருந்து வெளியே வந்த நர்ஸ் இங்கு யார் சேகர் என்று கேட்டார். நான் தான் மேடம் சேகர், இப்ப என் மனைவி எப்படி இருக்காங்க என்றான். சார், உங்க மனைவியும் குழந்தையும் நலமா இருக்காங்க நீங்க போய் பாருங்க என்றார். சேகர் செல்வி இருக்கும் அறைக்கு சென்றான். கட்டிலில் செல்வி மயக்கத்தில் படுத்து இருந்தாள். செல்விக்கு பக்கத்தில் குழந்தை இருப்பதை பார்த்து அவனது கண்கள் கலங்கியது. சேகர் குழந்தையை தூக்கி கண்ணா, உனக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் டா உன் அப்பா! என்று தன் குழந்தையை கொஞ்சிய வண்ணம் அவனது கண்கள் செல்வியின் பக்கம் திரும்பியது. உடனே, குழந்தையை தொட்டிலில் மெதுவாக வைத்து விட்டு, செல்வியிடம் வந்த சேகர் அவள் நெற்றியில் தன் முத்தத்தை வைத்தான். சேகர், மயக்கத்தில் இருந்த செல்வியிடம் நமக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நம் நம்பிக்கை வீண்போகவில்லை செல்வி என்றான். சேகர் செல்வி பக்கத்திலே அமர்ந்திருந்தான். சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்த செல்வி, என்னங்க என்று அழைக்க உடனே சேகர் கண் விழிச்சிட்டியா செல்வி நீ அம்மாவாகிட்ட செல்வி. நாம குழந்தையை பாருறேன் உன்னை மாறியே இருக்கான் என்று சொல்ல வெட்கத்தில் தன் தலையை சற்று சாய்த்து இல்லைங்க அவன் உங்களை போலவே இருக்கான் பாருங்களேன் என்றாள். ஏழு வருடங்கள் கழித்து அவர்கள் இருவரின் சிரிப்பு சத்தம் அவர்கள் இருந்த அறை முழுவதும் பரவியது. மகேஷ் பிறந்த அந்த நொடியிலிருந்து அவர்களின் வாழ்வில் சந்தோஷம் நிரம்பி வழிந்தது. இப்படியே பல வருடங்கள் ஓடிவிட்டது. மகேஷ் இப்போது பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். வகுப்பில் அவனே முதல் மதிப்பெண் பெற்றான். தனது பள்ளியில் எது நடந்தாலும் தன் தந்தையிடம் சொல்லிவிடுவான். மகேஷ் அவன் பெற்றோரிடத்தில் பழகும் விதம் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு கூட பொறாமையை ஏற்படுத்தியது. ஏனென்றால் தனது பெற்றோருடன், நண்பர்களுடன் பழகுவதை போல பழக்கினான். இப்படி மகேஷின் வாழ்க்கை ஆனந்தமாக சென்று கொண்டிருந்தது. மகேஷ் பண்ணிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால் அவனது பெற்றோர் ஒரு நல்ல கல்லூரியில் மகேஷை சேர்த்துவிட்டனர். திடீரென்று மகேஷின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. என்றுமில்லாத வண்ணம் மகேஷ், அவன் தாய் முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம்யை இவன் பயன்படுத்தினான். இதை பார்த்த சேகர் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. நாட்கள் செல்ல செல்ல மகேஷ் நடந்து கொள்ளும் விதம் பலருக்கு எரிச்சல் ஊட்டும் விதமாக இருந்தது. மகேஷ் சில காலமாக தன் தாய் முகத்திற்கு பயன்படுத்தும் அனைத்தையும் அவனும் பயன்படுத்த ஆரம்பித்தனர். கல்லூரிக்கு சென்றாலும் அவன் வகுப்பில் உள்ள பெண்களை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும் அவர்கள் நடந்து கொள்ளும் விதமாக தானும் நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் மனம் நினைத்தது. மகேஷின் ஹார்மோன் ஏற்படுத்தும் பெரும் மாற்றத்தை அவனால் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், அவன் மனம் தான் ஒரு பெண்ணாக மாறுவதை விரும்பியது. இந்த விஷயத்தை அவனது பெற்றோரிடம் சொல்ல அவனுக்கு தைரியம் வரவில்லை. தான் ஒரு பெண் போல் நடந்து கொள்ளுவதை தவிர்க்க அவன் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முயற்சி முயற்சி செய்தும் அவனால் முடியாமல் போனது. மகேஷின் கல்லூரியில் அவனின் நண்பர்கள் அவனிடம் நம்பிக்கை தரும் விதமாக பேசினார்கள். மகேஷ் உடன் எப்போது பழகுவது போல் பழகினார்கள். எனினும், பலர் மகேஷின் நடவடிக்கையை பார்த்து எதிர்மறையாக பேச ஆரம்பித்தனர். ஒன்பது வருடங்கள் ஆகியிருந்தது அவன் என்கிற அவள் குடும்பத்தை பிரிந்து. வாழ்க்கையில் யாரும் படக்கூடாத துன்பம் அவள் வாழ்க்கையில் நடந்திருந்தது. மகேஷ் என்ற அவன் மாலினியாக மாறியது அவன் அப்போது ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். எங்கு எதிலும் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது. மகேஷின் பெற்றோர் அவன் எது கேட்டாலும் உடனே, வாங்கி தந்துவிடுவர். மகேஷின் பெற்றோர் சேகர், செல்வி தம்பதியருக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். ஏங்க, நமக்கு குழந்தை பிறக்குமா… திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. என்னால் தாய்மையை அடைய முடியாத என்று கண்களில் கண்ணீரோடு கணவனை பார்த்து கேட்டால் செல்வி. ஏன் செல்வி இப்படி பேசற, நமக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் கவலைப்படாதே என்று அவள் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினான் சேகர். ஒவ்வொரு நாளும் நகர்வது அவர்களுக்கு நரகமாக இருந்தது. சேகர் அரசுத்துறையில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். ஒரு நாள் சேகர் வீட்டிற்கு அவரது மாமா, அத்தையும் அத்தையுடன் அவரது மகளும் வந்திருந்தனர். ஆறு மாதத்திற்கு முன்பு தான் சேகரின் மாமா மகளுக்கு திருமணம் ஆகியிருந்தது. ஆறு மாதத்திலே தாய்மை அடைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நற்செய்தியை சொல்வதற்கு வீட்டிற்கு வந்த அத்தை சேகரிடம் ஏம்பா, நம்ம கெளரிக்கு விளக்காப்பு வெச்சி இருக்கிறோம் என்று தான் வாங்கி வந்த பூ, பழம், வெற்றிலையுடன் பத்திரிக்கையை வைத்து அவர்கள் இருவரிடம் கொடுத்தனர். உடனே, செல்வி சித்தி நீங்க பேசிகிட்டு இருங்க நான் காபி போட்டு எடுத்துகிட்டு வறேன் என்று சமையல் அறைக்கு சென்றுவிட்டாள். இந்த சமயத்தில் சேகரிடத்தில் பேசி கொண்டிருந்த அவருடைய அத்தை, சேகரை தனியாக அழைத்து சென்று, ஏன்டா! உனக்கு ஏன் இந்த மலடி? நல்லாப் பொண்ணு ஒன்னு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிற என்றாள். இதை கேட்ட சேகருக்கு சொல் முடியாத அளவிற்கு கோபம் வந்தது. அத்தை என் மனைவியை பற்றி இன்னும் ஒரு வார்த்தை பேசினால் உங்களுக்கு மரியாதை இருக்காது. அவள் ஒன்றும் மலடி அல்ல, எங்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் அந்த நம்பிக்கை எங்கள் இருவருக்கும் இருக்கிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்வாய் என்றார். அத்தை, நீங்க என்ன வேணுமானாலும் நினைத்து கொள்ளுங்கள். அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றான் சேகர். அத்தை சொல்றது சொல்லிட்ட கெளரி சீமந்ததிற்கு நீ மட்டும் வந்தா போதும். அந்த செல்வி அதான் அந்த மலடி ஒன்னும் எ ! பொண்ண வாழ்த்த வர தேவையில்லை என்றார். போதும் நிறுத்துங்கள் அத்தை செல்விக்கு இடமில்லாத இடத்தில் எனக்கும் எந்த உரிமையும் இல்லை. நீங்க இங்கிருந்து போகலாம் என்று தன் கண்களில் வரும் கண்ணீரை துடைத்து கொண்டு பக்கத்து சமையல் அறையில் செல்வி நின்று கொண்டிருந்தாள். என்னங்க, கெளரி விளக்காப்புக்கு நம்மளும் போறம என்று ஆசையோடு கேட்க சேகர், இல்லை செல்வி நாம போகலை என சொல்ல வருவதற்குள் செல்வியின் கரத்தில் அவன் கண்ணீர் விழ அவளுக்கு நிஜம் புரிந்து செல்வி ஆழத்தொடங்கினால். செல்வியை தன் மார்பின் மீது சாய்த்து கொண்டு செல்வி நமக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும். நம்பிக்கையோடு இரு என்று அவள் தலையை வருடி கொடுத்தான். இருவரும் பல மருத்துவ ஆலோசனைக்கு பிறகு அவர்களின் கனவு மெய்பட போகிறது. அலுவலகத்தில் தொலைபேசி அழைப்பு வந்தது. ஹலோ, சேகர் இருக்கிறீரா என்று எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. வணக்கம் நான் சேகர் தான் பேசுகிறேன் சொல்லுங்கள் என்றான். சார், நான் நர்ஸ் பேசுகிறேன் உங்கள் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வரவும் என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். சேகருக்கு கண்களில் கண்ணீர் கரைந்தது….. அவன் மனம் முழுவதும் செல்வியின் முகமே வந்து வந்து சென்றது. ஒன்று, இரண்டு வருடங்களா… பல வருடங்களின் தவம், எங்கள் இருவரின் நம்பிக்கை, சந்தோஷம் நீ, என் செல்லமே ! இதோ வருகிறேன் என்று மேசை மீது இருந்த சாவியை எடுத்துக்கொண்டு வேகமாக இருசக்கரத்தை எடுத்துக்கொண்டு சென்றான். சேகர் மருத்துவமனையில் செல்வி இருக்கும் இடத்திற்கு வேகமாக சென்றான். அங்கு செல்வியின் பெற்றோர் வாங்க மாப்பிள்ளை உங்க நம்பிக்கை வீண் போகல…. எங்களுக்கு பேரன் பிறந்திருக்கான் மாப்பிள்ளை என்று சந்தோஷத்தில் பேச முடியாமல் எங்களை மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை என்று சொல்லுபோது அட, விடுங்க மாமா எதற்கு மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க என்றான் சேகர். அறையின் உள்ளிருந்து வெளியே வந்த நர்ஸ் இங்கு யார் சேகர் என்று கேட்டார். நான் தான் மேடம் சேகர், இப்ப என் மனைவி எப்படி இருக்காங்க என்றான். சார், உங்க மனைவியும் குழந்தையும் நலமா இருக்காங்க நீங்க போய் பாருங்க என்றார். சேகர் செல்வி இருக்கும் அறைக்கு சென்றான். கட்டிலில் செல்வி மயக்கத்தில் படுத்து இருந்தாள். செல்விக்கு பக்கத்தில் குழந்தை இருப்பதை பார்த்து அவனது கண்கள் கலங்கியது. சேகர் குழந்தையை தூக்கி கண்ணா, உனக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் டா உன் அப்பா! என்று தன் குழந்தையை கொஞ்சிய வண்ணம் அவனது கண்கள் செல்வியின் பக்கம் திரும்பியது. உடனே, குழந்தையை தொட்டிலில் மெதுவாக கடத்தி விட்டு, செல்வியிடம் வந்த சேகர் அவள் நெற்றியில் தன் முத்தத்தை வைத்துவிட்டு மயக்கத்தில் இருந்த செல்வியிடம் நமக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நம் நம்பிக்கை வீண்போகவில்லை செல்வி என்றான். சேகர் செல்வி பக்கத்திலே அமர்ந்திருந்தான். சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்த செல்வி, என்னங்க என்று அழைக்க உடனே, சேகர் கண் விழிச்சிட்டியா செல்வி நீ அம்மாவாகிட்ட செல்வி. நாம குழந்தையை பாருறேன் உன்னை மாறியே இருக்கான் என்று சொல்ல வெட்கத்தில் தன் தலையை சற்று சாய்த்து இல்லைங்க அவன் உங்களை போலவே இருக்கான் பாருங்களேன் என்றாள். ஏழு வருடங்கள் கழித்து அவர்கள் இருவரின் சிரிப்பு சத்தம் அவர்கள் இருந்த அறை முழுவதும் பரவியது. மகேஷ் பிறந்த அந்த நொடியிலிருந்து அவர்களின் வாழ்வில் சந்தோஷம் நிரம்பி வழிந்தது. இப்படியே பல வருடங்கள் ஓடிவிட்டது. மகேஷ் இப்போது பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். வகுப்பில் அவனே முதல் மதிப்பெண் பெற்றான். தனது பள்ளியில் எது நடந்தாலும் தன் தந்தையிடம் சொல்லிவிடுவான். மகேஷ் அவன் பெற்றோரிடத்தில் பழகும் விதம் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு கூட பொறாமையை ஏற்படுத்தியது. ஏனென்றால் தனது பெற்றோருடன், நண்பர்களுடன் பழகுவதை போல பழக்கினான். இப்படி மகேஷின் வாழ்க்கை ஆனந்தமாக சென்று கொண்டிருந்தது. மகேஷ் பண்ணிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால் அவனது பெற்றோர் ஒரு நல்ல கல்லூரியில் மகேஷை சேர்த்துவிட்டனர். திடீரென்று மகேஷின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. என்றுமில்லாத வண்ணம் மகேஷ், அவன் தாய் முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம்யை இவன் பயன்படுத்தினான். இதை பார்த்த சேகரும் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. நாட்கள் செல்ல செல்ல மகேஷ் நடந்து கொள்ளும் விதம் பலருக்கு எரிச்சல் ஊட்டும் விதமாக இருந்தது. மகேஷ் சில காலமாக தன் தாய் முகத்திற்கு பயன்படுத்தும் அனைத்தையும் அவனும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான் . கல்லூரிக்கு சென்றாலும் அவன் வகுப்பில் உள்ள பெண்களை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும் அவர்கள் நடந்து கொள்ளும் விதமாக தானும் நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் மனம் நினைத்தது. மகேஷின் ஹார்மோன் ஏற்படுத்தும் பெரும் மாற்றத்தை அவனால் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், அவன் மனம் தான் ஒரு பெண்ணாக மாறுவதை விரும்பியது. இந்த விஷயத்தை அவனது பெற்றோரிடம் சொல்ல அவனுக்கு தைரியம் வரவில்லை. தான் ஒரு பெண் போல் நடந்து கொள்ளுவதை தவிர்க்க அவன் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முயற்சி செய்தும் அவனால் முடியாமல் போனது. மகேஷின் கல்லூரியில் அவனின் நண்பர்கள் அவனிடம் நம்பிக்கை தரும் விதமாக பேசினார்கள். மகேஷ் உடன் எப்போது பழகுவது போல் பழகினார்கள். எனினும், பலர் மகேஷின் நடவடிக்கையை பார்த்து எதிர்மறையாக பேச ஆரம்பித்தனர். மகேஷ் திருநங்கையாக மாறி இருப்பது அவன் குடும்பத்தில் பெரிய பிரலயமாக உருவெடுத்தது. அன்று மகேஷின் பக்கத்து வீட்டார், மகேஷின் தந்தையிடம் வந்து, சேகர் உங்களுக்கு கொஞ்சமாவது மானம் இருக்கா. உங்க வீட்டில ஒன்னு இருக்கே அதை எங்கேயேவது அடிச்சி துரத்த வேண்டியது தானே என கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்தார் சேகர். என்னமா ஆச்சு, எதுக்கு இப்படி பேசறீங்க என்று கேட்டார். அதற்குள் அந்த அம்மா சேகரியிடம் உங்க அருமை மகன் செஞ்ச வேலையை பார்த்தீங்களா ! அந்த மகேஷ் எங்க போனாலும் வந்தாலும் பொம்பளை மாதிரி நடத்துங்கறா…….. பல பேர் எங்கிட்ட வந்து சொல்றங்க, என்னமா உங்க பக்கத்து வீட்டு பையன் இப்படி அப்படி சொல்றங்க. ஏங்க உங்க பையன் ஒரு திருநங்கை அவனை எங்கேயேவது துரத்திவிடுங்க….. என்று சொன்னர். இதை கேட்ட சேகருக்கு தலையில் இடி விழுந்தது போல அப்படியே நின்றிருந்தார். அவர் கண்களில் அவரை அறியாமல் கண்ணீர் வழிந்தது.ஏழு வருட தவம், நம்பிக்கை, பாசம், சந்தோழும் எல்லமே அவன் தானே என்று அவர் மனம் சொன்னது. சேகர் கண்ணீரை துடைத்து கொண்டு அந்த பக்கத்து வீட்டாரிடம் யார் என்ன சொன்னால் எனக்கென்ன? அவன் எப்படியிருந்தாலும் அவன் என் மகன் தான் என்று சொல்லி அவர் ஆழத்தொடங்கினார். உடனே, அந்த அம்மா, போதும் நிறுத்துங்கள்… அவன் உங்களுக்கு பையனாக இருக்கலாம் ஆனால், எங்களுக்கு அசிங்கமாக இருக்கு. அந்த மூதேவியை எங்கேயாவது அனுப்பிடுங்க என்றார். உடனே, சேகர் எதற்காக அனுப்ப வேண்டும் என் மகனை? அந்த தெருவில் வேடிக்கை பார்த்த சிலரும் சேர்ந்து கொண்டு போது நிறுத்துய்யா ! உன் பையனு சொல்றேயே இந்த சமுதாயத்தலே அவனால் தனியாக வாழ முடியுமா? அவன் சொந்த காலிலே நிற்க முடியுமாயா? என்று அவர்கள் கேட்டது சேகரின் நெஞ்சில் சுருக்கென்று தைத்தது. எதுவும் பேசாமல் வீட்டியினுள் சென்று அமைதியாக உட்கார்ந்தார். நேரம் சென்று கொண்டே இருந்தது. வெளியில் சென்றிருந்த மகேஷ் வீட்டிற்கு திரும்பி வந்தான். என்னப்பா அமைதியாக இருக்கீங்க என்னாச்சு பா என்று அவன் கேட்க அவர் மனது அவனை அணைத்து கொள்ள தோன்றியது. உடனே, செல்வி எங்கே இருக்கா… மகேஷா…… இல்ல…. இவனுக்கு இன்னிலிருந்து இந்த வீட்டில் இடம் இல்லை. அவனை இப்பவே வெளியே போக சொல்லு என்றார். செல்வி அலையறிடித்து ஓடி வந்தாள். ஏங்க அவனை போக சொல்றீங்க… அவன் நம்ம பையன் போக சொல்லாதீங்க….. அவன் எங்கே போவான். உடனே, சேகர் அதெல்லாம் எனக்கு தெரியாது அவருடைய பொருட்கள் எல்லாம் இந்த பையில இருக்கு எடுத்துக்கிட்டு போக சொல்லு என்றார். செல்வி கதறி அழுதாள். போகாத மகேஷ் அம்மா சொல்ற வந்துடு டா….கண்ணா அம்மாகிட்ட வந்துடு என்று கதறினாள். அவன் அவளாக போனதுமே அந்த வீட்டின் கதவுகள் தாழ்யிடப்பட்டது. மகேஷ் மாலினியாக மாறி இருந்தாள். இந்த பிரிவின் துயரம் ஒன்பது வருடங்கள் மாலினி வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருந்தது. மாலினி இந்த இடைப்பட்ட காலத்தில் தான் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் ஒரு சிறிய ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்திருந்தாள். ஆரம்பத்தில் ஹோட்டலுக்கு உணவு சாப்பிட வர மக்கள் சற்று தயங்கினார்கள் . பின்பு, கொஞ்ச கொஞ்சமாக ஹோட்டலுக்கு நிறைய பேர் உணவு வந்து சாப்பிட்டனர். மாலினிக்கு பெற்றோரின் நியாபகமாகவே இருந்ததால் அவளுக்கு உறக்கம் என்னவென்பதே மறந்து போனது. ஒன்பது வருடம் அவளது மனவலியை பகிர தந்தை தாய் உடன் இல்லை. மாலினியின் வளர்ச்சி பலபேருக்கு உந்துதலாக இருந்தது. மாலினி தனது ஹோட்டலின் பெயரை கூட அவளது தாய் தந்தையின் முதல் எழுத்திலே எஸ்எஸ் என்றே வைத்திருந்தாள்.நீண்ட நாட்களுக்கு பிறகு சேகர், செல்வி இருவரும் சேர்ந்து கடை வீதிக்கு சென்று வர முடிவு செய்தனர். அதன்படியே, இருவரும் கடை வீதிக்கு சென்று கொண்டிருந்த போது செல்வி திடீரென்று மயங்கி விழுந்துவிட்டாள். சேகர் செல்வியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு வரும் போது ‘சோ‘வென்று மழை பிடித்துக்கொண்டது. கையில் குடையுமில்லை மாத்திரை பையுடன் எங்கேவது ஒதுங்க இடம் தேட, எதிரில் எஸ்எஸ் ஹோட்டல் தெரிந்தது. உடனே, இருவரும் மழையில் நனைந்தபடியே நேராக அந்த ஓட்டலுக்கு சென்றனர். இருவரும் ஹோட்டல் உள் நுழைந்த போது கல்லாப்பெட்டியில் திருமண வயதில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவள் தலையை கீழே குனிந்து கொண்டு கணக்கு போட்டு கொண்டிருந்தாள். சேகரும் அவர் மனைவியும் உள்ளே இருந்த நாற்காலியில் அமர்ந்தனர். சேகர், அங்கிருந்த சர்வரிடம், ஏம்பா இரண்டு காபி கொண்டு வாங்க என்றார். டம்ளாரில் சூடாக இருந்த காபியை இருவரும் பருகினர்.மழை நின்றும் சிறிது தூறலாக தூவிக் கொண்டிருந்தது. என் மகன் மகேஷ் இருந்திருந்தா…. எப்படி பார்த்து இருப்பான் தெரியுமா இந்த மழை காத்துல அவன் என்ன கஷ்டபடறானு தெரியல என அழத்தொடங்கினாள். மகேஷ்…மகேஷ்… அம்மாகிட்ட வந்துடு டா என்று புலம்புவது காற்றில் லேசாக மாலினியின் காதில் விழுந்தது. இவ்வளவு நேரம் கீழே குனிந்து கொண்டிருந்த தலை அவர்கள் பக்கம் திரும்பியது. அங்கு சர்வர் நின்றிருந்ததால் அவர்கள் முகம் சரியாக தெரியவில்லை. சர்வர் அங்கே வந்து என்னமா இங்கு சத்தம், இங்கெல்லாம் அழ கூடாது மா என்றான். தூறிக் கொண்டிருந்த தூறலும் சற்று நின்றிருந்தது. சேகர் மெதுவாக எழுந்து செல்வியை கை தாங்கலாக பிடித்து கொண்டு கல்லாப்பெட்டியின் அருகில் அமர்ந்திருந்த அந்த பெண் நிமிர்ந்து இருவரையும் காண அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. கால் தடுக்கி விழ இருந்த செல்வியை அம்மா என்று ஓடிவந்து செல்வியை அப்படியே தன் கைகளில் தாங்கி கொண்டாள். மகேஷ், மகேஷ் என செல்வியின் உதடு முனுமுனுத்தது. அம்மா, அம்மா நான்தான் உன் மகேஷ் வந்துட்டா மா… கண்களை திறந்து பாருமா என்றாள் மாலினி. சேகர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போயிருந்தார். செல்வி மெதுவாக கண்களை திறக்க எதிரில் ஒரு பெண் யாருமா நீ! என கேட்க மாலினி அம்மா…. அம்மா நான் தான் நா தழுதழுக்க கண்ணா என அவளை அணைத்து கொண்டாள்.மகேஷ் கண்ணா…. உன்னை பிரிந்து ஒன்பது வருடம் நாங்கள் சிறைவாசத்தில் இருந்தோம். சேகர் மகேஷிடம் முன்பு நடந்த அவமானத்தை சொன்னார். என் மகன் மகேஷ் என சொல்ல வந்த சேகர்….. அவர் புத்தி எதோ உரைக்க இல்லை இல்லை….. என் மகள் மாலினி இந்த சமுதாயத்தில் அவளால் தனியாக வாழ முடியும் என்பதை நிரூபித்துவிட்டாள். அவளால் எல்லாம் சாதிக்க முடியும் என்று கண்ணீரோடு சேர்ந்து அழுகை கலந்த குரலோடு கூறினார். உடனே, மாலினியிடம் சென்று சமூகத்திற்கு பயந்து உன்னை வெளியே அனுப்பவில்லை…… என் மகளை இந்த சமுதாயத்தில் தன் சொந்த முயற்சியில் ஜெயிப்பான் என்ற நம்பிக்கை எனக்கு உன் மேல் இருந்தது கண்ணா ! மாலினி !என் மகளே கண்ணே ! நீ என்றும் எங்கள் இருவருக்கும் குழந்தை தான் மகளே என்று இருவரும் அன்று பிறந்த குழந்தையை அணைத்து கொள்ளுவது போல மாலினியை மகிழ்ச்சியோடு கண்ணீரோடு சேர்ந்து அணைத்துக்கொண்டனர்…….. ……..

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.