தே.சுபஸ்ரீ
சிறுகதை வரிசை எண்
# 333
சாணியை அள்ளிப்போட்டு "பரக் பரக்" என்று பெருக்கிக் கொண்டு இருந்தாள் குள்ளம்மா. மண்ணெல்லாம் தெறித்து ஓடிக் கொண்டு இருந்தது. "ஏங்கா எக்கா சோறாக்கியாச்சா" என்று சின்னபாப்பா கேட்டது குள்ளமாளுக்கு கேட்க வில்லை என்பதை "ஏண்டியம்மா சோத்துக்கு ஒங்க ஊட்டுக்கு வந்துடுவேன் என்றா... என்னனே கேக்கமாட்ற" என்று மீண்டும் சின்னபாப்பா கேட்ட போது உணர முடிந்தது. "இல்லக்கா பக்கத்து வீட்டு பொண்ணுக்கு கல்லியாணமில்ல அதுக்கு போட்டுகிற ரேடியா சத்தத்துல எங்கக்கா கேக்குது... என்னடி நீ வந்தா சாப்பாடு போடாமயா போப்போற...இல்ல இல்லனுதான் சொல்வனா... ஏன்டி இப்டிலா பேசற..." " சரி... விடுக்கா... அந்த பொண்ணுக்கு நெலங்கு வெக்க போறாங்க... போய்டு வரலாமே...காலயில எழுந்ததுல இருந்து மூனு மூச்சி வந்து போய்ட்டா... அதாங்கா போயிட்டு வரலாம்..." " ஆமாண்டி என்னையு தான் கூப்டா நானும் வரண்டி... சாப்பாடு நிமித்திட்டு வந்துறனே..." "சரிகா நிமித்திட்டு வா..." "வாடி போலாம்..." அக்கா நல்ல பொண்ணுக்கா நல்லா படிச்சுது... அம்மா சொல்ற பையன கல்லியாணம் பண்ணிக்க போது... காலேஜ் முடிக்க போது... பொண்ணுக்கு போதாதா... "இந்த பொண்ணுக்கு என்ன போடுறாங்கக்கா..." "பைய வீட்ல நல்ல வசதியான குடும்பம்... நாலஞ்சி வண்டி இருக்கு பணத்துக்கு எந்த கொறையும் இல்ல சின்ன பையனுக்கு தனி வீடு... பெரிய பையனுக்கு தனி வீடு... இப்டி இருக்கும் போது அந்த பைய வீட்ல என்ன கேப்பாங்க... பொண்ண குத்தா போதும் என்று சொல்லிட்டாங்கலாம்..." "நல்லா தா பாத்துப்பாங்ககா..." சின்னபாப்பா நெலங்கு வச்சி அந்த பொண்ண நல்லா வாழ்த்திட்டு வந்தா. "கஷ்டப்பட்டு ரெண்டு பொண்ண வளத்தா... எப்டியோ ஒன்னுத்த கர சேத்துட்டா..." "ஆமாங்கா..." என்று இருவரும் பேசிக்கொண்டே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். எதிரில் ஒரு அம்மா வந்தாள். "ஏண்டி குள்ளம்மா என்பது மட்டுமே உரக்க விழுந்தது. மீதமெல்லாம் "அந்த குப்பு பொண்ணுக்கு வந்தவாழ்க்கைய பாத்தியா" என்றெல்லாம் குசுகுசுவென்று சொன்னது குள்ளம்மாவின் காதுக்கு மட்டுமே விழுந்தது. அவள் பேசுவதற்கு எல்லாம் ஆமாம்சாமி போட்டாள். "எங்க வீட்ல கீரது மெட்ராஸ் கல்லியாணத்துக்கு போகுதாம்... நான்தான் குப்பு வீட்டு கல்லியாணத்துக்கு வரனும்..." "ம்ம்" என்று வேண்டா வெறுப்பா தலையசைத்தாள் குள்ளமா. "சரி நா போய்ட்டு பொழுதுபோன பிறகு வரேன்... லாரில போலாம்..." "நானும் மாடுகட்டிட்டு வர" என்றாள் குள்ளம்மா. அந்த எதிர்வீட்டம்மா, குள்ளம்மா வீட்டைவிட்டு நடந்தாள். பெருமூச்சை விட்டாள் குள்ளம்மா. அழகியை அலங்காரம் செய்து முடித்துவிட்டு, முதலில் புள்ளையார் கோயிலை வணங்கி பிறகு கிராம தேவதை கோயிலை வணங்கிவிட்டு பொண்ணை பத்திரமாக அழைத்துச்சென்றாள் குப்பு. அழகியின் எண்ணோட்டமெல்லாம் இருவரின் குடும்பத்திலும் எந்த கெட்ட சகுனமும் நடக்க கூடாதென்றே இருந்தது. "குப்பு ஒத்த பொம்பளையா இருந்து எப்டியோ கரசேத்துட்டா... கெட்டிகாரப் பொம்பள தான்" என்று ஒரு சிலரும் "அவளுக்கு வந்த வாழ்வ பாத்தியா என்று ஒரு சிலரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே கல்லியாணம் குப்பு நினைத்ததுப் போல் நடந்து முடிந்தது. "ஒரு வருசத்துல ஒரு புள்ளைய பெத்துத்தாமா என்றால் அழகியின அத்தை. பத்து மாதத்தில் வீட்டிற்கு புது வரவு வந்தது. "கருப்பாயி நீ மாதிரியே உன் மருமகள் பெத்துக் கொடுத்துட்டா பாரு" என்றான் பச்சையப்பன். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள்... ஆனால் அழகிக்கு அதெல்லாம் கடந்து ஆசை வரதன் மீது இருந்து கொண்டே இருந்தது பத்து வயது வித்தியாசம் இருந்தாலும் அவன் அரவணைப்பில் ஊறிப் போனவள். குப்பு ஒங்க வீட்ல எப்படிமா பாத்துக்குறாங்க என்று கேட்டது தான் தாமதம் அம்மா நல்லா பார்த்துக்கிறாங்க ...இதுவரைக்கும் எந்த வேலைக்கும் அனுப்புனதும் இல்ல... வீட்டை விட்டு அனுப்புனும் இல்ல... என்ன நல்லா தான் பாத்துக்குறாங்க என்னோட 21வது பிறந்தநாளுக்கு கூட அஞ்சு சவரன் நகை எடுத்து வந்தாங்கமா குழந்தை பிறந்ததுல இருந்து இன்னும் கவனிப்பு அதிகமாகிருச்சு மா என்றெல்லாம் அழகி அவளுடைய கணவனை புகழ்ந்து தள்ளினால் நிஜமாகவே வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவளை பொத்தி பொத்தி வளர்க்கத் தொடங்கினார்கள் அழகிக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் அவள் அம்மாவைப் போய் பார்த்ததே இல்லை. இதைப் பற்றி வரதனிடம் பேசினாள் அழகி. "சரி மா பைக்ல கூட்டிட்டு போயி விட்டுட்டு வரேன்.என்று கருப்பாயி இடம் சொல்லிவிட்டு கிளம்பினான். முந்தானிய புடிச்சுக்கோமா பார்த்து போயிட்டு வாம்மா என்றால் கருப்பாயி. ஆயாவுக்கு டாட்டா சொல்லுடா என்று அழகி குழந்தையின் கையைப் பிடித்து அசைத்தாள். "போயிட்டு வர அத்த பாத்துமா வண்டி மறைந்தது. அழகியை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பினான். அழகியின் ஃபோனில் சினிமா பாடல் ஒலித்தது அவள் ஓடிப்போய் எடுக்க முயன்றால் அது அழைப்பாக தான் இருக்கும் என்று புலனானது. என்னங்க வீட்டுக்கு போயிட்டீங்களா... நான் விஷம் குடிச்சிட்டேன்... சாரிமா... என்று போதையில் கூறியதுதான் உடனே ஐயோ...ஐயோ... என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று கத்தினால் வேறு சத்தம் கேட்கவில்லை வீட்டில் உள்ள எல்லோருக்கும் போன் செய்து பார்க்கிறாள் யாரும் எடுக்க எடுத்த பாடு இல்லை வரதன் வீட்டிற்கும் அழைத்திருக்கிறான். எல்லோரும் போகும் முன் கழனியின் வண்டியின் பக்கத்தில் விஷம் குடித்துவிட்டு இறந்து கிடந்தான். அழகிக்கும் மீண்டும் போன் வந்தது அழைத்தவர் பேசும் முன்பே அவருக்கு என்னாச்சு என்ன ஆச்சு என்று தேம்ப தொடங்கினாள் அவள் போயிட்டமா என் என்று குரல் கேட்டது இப்படி ஆயிடுச்சு அந்த பாவி கடவுளுக்கு கண் இருக்கா இல்லையானே தெரியலையே உங்க ஆத்தா காரி தான் ஒண்டிக்கட்டையா இருந்தாலும் பார்த்தா உனக்கு இந்த கதையா இதெல்லாம் கடவுளுக்கே அடுக்குமா என்று பக்கத்து வீட்டு பாட்டி சொல்லி அழ தொடங்கினாள் வரதன் வீட்டிலிருந்து வண்டி அனுப்பி இருந்தார்கள் அழுது கொண்டே சென்றாள். குழந்தை அழுவதும் சிரிப்பது மாதிரி இருந்தது எல்லா சடங்கும் முடிந்த து இதெல்லாம் நடந்தும் ஒரு வருடம் ஆகிவிட்டது அழகியின் அம்மா கல்யாணம் என்று இழுத்தால் அதையெல்லாம் வேணாமா குழந்தை இருக்கா அவனை பார்த்துட்டு இருந்தாலே போதுமா என்று அம்மாவுக்கு பதில் கொடுத்தால் அவள் மனதில் ஆசை இருக்கவும் செய்கிறது பரதனின் அம்மா நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா வரத ஞாபகமா இருக்க உன்னோட பையன என்கிட்ட கொடுத்துடுவியா இல்ல நீ வளர்ப்பியா என்று நாசுக்கா கேட்க தொடங்கினாள் உறவுக்காரன் எல்லாம் பெண் குழந்தை இருந்தா கூட பரவாயில்லை எங்க வீட்டு வாரிசு என்று மாமியாரு வீட்ல யாராவது கேப்பாங்களோ, கல்யாணம் ஆயிருச்சுன்னா குழந்தை நிலைமை என்ன ஆகும் இது கிராமம் வேற எங்கயும் வெளியில கூட போக முடியல ஐயோ நம்ம குடும்பத்துல இதுவரைக்கும் ரெண்டாம் தாரம் எல்லாம் நடந்ததே கிடையாது என்று பல கேள்வி உறவுகள் எழுப்புகிறது இதற்கெல்லாம் குழப்பமான மனநிலை தவித்தால் அழகி அந்த வீட்டிலேயே அடஞ்சி இருக்க ஒரு மாதிரி இருக்கு ஏறு வேலைக்காச்சும் போரால்னே பல யோசனைக்குப் பிறகு போ என்றால் இடுப்பில் குழந்தை கையில் அன்ன கூடையில் மண்வெட்டி போட்டு எடுத்துக்கொண்டு வேகநடை போட்டால் ஒவ்வொரு நாளும் அழகியிடம் மாற்றம் காண்கிறார் கருப்பாயி நம்ம வீட்டில என்ன காசா இல்ல நீ எதுக்குமா கஷ்டப்படணும் உனக்கு என்ன தலையெழுத்தா என்றால் கருப்பாயி நாலு பேரு கூட பேசினா மனசுக்கு ஆறுதலா இருக்கும் காசுக்காக போகல அத்தை சரி பார்த்து போயிட்டு வா என்று வேண்டாம் வெறுப்பா சொன்னால் அப்படியே பல நாள் தொடர அழகிக்கு ஒரு தோழி பழக்கம் ஆகிறாள் ஆறுதலாக பேசுகிறாள் பல நாள் பேச்சுக்குப் பிறகு வரதன் பற்றி கேட்கிறாள் தோழி விதி வந்துச்சு போயிட்டாரு அவரு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் இப்ப இல்லையே என்று அழுது கொண்டே சொன்னால் ஒரு நாள் கூட அழாத நாளே இல்லை ஞாபகம் வந்துட்டே இருக்கு என்று மீண்டும் மீண்டும் அழகி பேச்சை தேம்பித் தேம்பி சொல்லத் தொடங்கினாள் இப்படி பேசுவதை எல்லாம் ரோட்டில் போகும்போது மட்டுமே நடைபெறும் நடைபெறும் ஏரி வேலையில் போய் பேசினால் அழகிய மாமியார் கிட்ட யாராவது போய் சொல்லிடுவாங்க சொல்லிட்டாங்கனா இவ தான் எல்லாத்தையும் கற்றுக் கொடுத்துட்டாள் என்று சண்டைக்கு வருவாங்கன்னு அழகியின் தோழி அதனால பேசுவதே இல்லை இவள் அழுகை தீரவே இல்லை பரதனின் புராணம் நீண்டு கொண்டே இருந்தது நான் ஒன்னு சொல்லவா அதை கேட்டுட்டு அவங்க கூட சண்டையும் போடக்கூடாது அதே சமயம் உங்க மாமியார் கிட்ட கேட்கவும் கூடாது தெரிஞ்சா மாதிரி காட்டிக்கவும் கூடாது என்ன உன்னோட புருஷன் 30 வயது வரைக்கும் கல்யாணம் ஆகாம இருந்தானே, ஏன் நினைக்கிற ஒரு பொண்ணு கூட பழக்கம் ஏற்பட்டு ஊர் சுத்திக்கிட்டு இருந்தது காரணம் இது ஊருக்கே தெரியும் நானே பலமுறை காலநிலை 2 பேரையும் சேர்த்து வைத்து பார்த்து இருக்கேன் இந்த செய்தி சொந்த பந்தம் அக்கம் பக்கம் என என் ஊருக்கே தெரியும் இப்படி இருந்தா யார் தான் பொண்ணு தருவாங்க அந்த பொண்ணுக்கு ரெண்டு ஆண் குழந்தை இருக்கு கொஞ்சம் ஆச்சு அறிவு இருக்கா அந்த பொண்ணுக்கு வேற நபர் கூட பழக்கம் ஏற்பட்டது அது தெரிஞ்சு உன்னோட புருஷன் அந்த பொண்ணு கூட ஒரே சண்டை எனக்கு உன்ன புடிக்கல அப்படி சொல்லிட்டு அவள் வேலைய பார்த்துக்கிட்டு அவள் போயிட்டா இந்த சண்டை எல்லாம் உங்க கழனியில் தான் நடந்தது எவ்ளோ பேரு வேடிக்கை பார்த்தாங்க நான் செத்துப் போயிடுவேன்னு கையில ஏதோ வச்சுகின்னு கத்திட்டு இருந்தா அக்கம் பக்கம் இருந்தவங்க அதை புடுங்கி போட்டாங்க அப்புறம் எப்படி இப்படி நடந்தது தெரியல இதை கேட்டு அழகி கோபத்திலும் அழுது கொண்டே இருந்தாள். வீடு வந்தது வீட்டுக்குள் நுழைந்தால் பாரு முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு இதுக்கு தான் வேலைக்கு போக வேணாம்னு சொன்னேன் என்றால் கருப்பாயே நம்ம வீட்டு குழந்தையை கூட்டிட்டு போயிடுவாளோ என்று மனதில் அசை போட்டால் கருப்பாயி அதற்குள் அவளை அறியாமலே வேலைக்கு எல்லாம் போகாதமா எனக்கு எல்லாம் தெரியும் அத்தை கருப்பாயி அதிர்ந்து போனால் இந்த உலகத்துல யார் தான் ஒழுக்கமா இருக்கா நான் இருக்க நான் இருக்க அத்தை வாயடைத்து போனாள் கருப்பாயி அழகி அறைக்குள் விரைந்தால் பெட்டியை திறந்து அதில் இருந்த புத்தகத்தை எடுத்து தூசி தட்டினாள். தலைப்பு தூசி தட்டு
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்