logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

முத்துவேல்

சிறுகதை வரிசை எண் # 334


தூக்குவாளி வியாழக்கிழமை என்றாலே அவர்கள் நால்வருக்கும் ஒரே ஆனந்தம். "இன்னைக்கு அம்மா சந்தைக்கு போயிருப்பாங்க நமக்கு தின்பண்டம் வாங்கிட்டு வந்துருப்பாங்க" என்று பேசியபடியே பள்ளியில் இருந்து வீட்டுக்கு நடந்தனர். சற்று தூரம் அதிகம் என்றாலும் இன்று விரைவாக வந்துவிட்டனர். அந்த குடிசையில் அவர்கள் ஒரு வருமான வரி சோதனை நடத்தினர் ஆனால் அவர்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை, அம்மா சந்தைக்கு சென்று வந்ததுக்கு சாட்சியாக இருந்தது காய்கறி கூடை அப்போது குடிசையில் நுழைந்த அம்மா சற்று கோபத்துடன் "அங்க என்ன பண்றீங்க அதெல்லாம் ஒன்னும் வாங்கிட்டு வரல, அந்த உப்பு வாளி பக்கத்துல நாலு அதிரசம் இருக்கு எடுத்துக்கோங்க" என்று கூறி தண்ணீர் எடுக்கச் சென்று விட்டார். கொட்டக்காலில் மாட்டி இருந்தது அந்த புது தூக்குவாளியைப் பார்த்த நால்வரும் அதில் ஏதாவது தீனி இருக்கும் என நினைத்து ஒருவர் மீது ஒருவர் ஏறி அதை எடுத்தனர் ஆனால் அதில் ஏதும் இல்லாமையால் ஏமாந்தனர். பக்கத்து ஊருக்கு அப்பா பாறைக்கு வேலைக்கு போறாராம் அதனால கஞ்சி கொண்டு போக வாங்கிட்டு வந்துருக்கன் இன்னைக்கே ஒடச்சுராதீங்க என்று கூறி தண்ணீர் பானையை இறக்கினார் ஏமாற்றத்துடன் நால்வரும் விளையாடச் சென்றானர். அவர்கள் வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம் ஆனால் இன்று அப்பா பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போவதால் இன்று அவர் வேகமே போயிட்டார் சாயங்காலம் அப்பா வர கொஞ்சம் நேரமாகும் யாரும் இல்லனு தெருவுல ஓடிட்டு இருந்தீங்கனு யாராது சொன்னாங்கனா அப்புறம் பாருங்க என்று கூறிவிட்டு தன் சாப்பாட்டுக் கூடையுடன் தீப்பெட்டி ஆபீசுக்கு கிளம்பிபினார். அடுத்த வியாழன் வரை இதுதான் அவர்கள் வழக்கமான வேலை. (அடுத்த வாரம் புதன் கிழமை) இன்று அப்பாவுக்கு சம்பளம், இரவு சாப்பிட்டதும் அம்மாவும் அப்பாவும் பேசுகின்றனர் " நல்ல இடத்தில வேலை பாக்குறேன் புள்ள முதலாளி தங்கமான மனுசன் நல்ல சம்பளம் தாராரு நல்லா பாத்துகிறார் என்றதும் அம்மாவுக்கு அவ்வளவு சந்தோசம் சட்டையில சம்பளம் வச்சுருக்கேன் தூக்குவாளில தீனி வச்சுருக்கேன் காலையில எடுத்துகுடு அப்பரம் நாளைல இருந்து தினக்கூலியா கேக்கனும் என்று சொல்லிக் கொண்டே தூங்கத் தயாராகினார். இந்த வியாழக்கிழமை காலையில் நால்வர் கையிலும் தின்பண்டம் மாலை வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சந்தையில் இருந்தும் அம்மா நிறையவே திண்பண்டம் வாங்கி வந்திருக்கிறார் நால்வருக்கும் இப்போது வீதியில் நண்பர்கள் அதிகமாகிவிட்டனர். தினக்கூலி என்பதால் இப்போது தினமும் தின்பண்டம் வாங்கி வருகிறார் நால்வரும் இப்போது வியாழக்கிழமை வரை காத்திருப்பது இல்லை. தினமும் ஒன்றாக சேவு, சீவல், தேன்முட்டாயி, கம்புருண்டை, கடலைமுட்டாய், மிக்சர், முறுக்கு, அச்சு முறுக்கு, என தினமும் ஏதாவது ஒன்று அந்தத் தூக்குவாளியைல் இல்லாமல் இருக்காது அதில் அதிகமாக கடலைமுட்டாய் தான் இருக்கும் ஏனெனில் அப்பாவுக்கு கடலைமுட்டாயில் சத்து அதிகம் என்று அதீத நம்பிக்கை. அந்த தூக்குவாளி மூன்றுமுறை மாறிவிட்டது நால்வருக்கும் அந்தத் தூக்குவாளியின் மீதான எதிர்பார்ப்பு மட்டும் குறையவில்லை. அப்பாவுக்கு வேலைப்பார்க்கும் போது காலில் கல் வெட்டிவிட்டது இனி ஆறுமாதம் வேலைக்கு போகமுடியாது என்று டாக்டர் சொன்னதாக அம்மா சொல்லவும் நால்வரும் பெரியவிசயமாக எடுத்துக் கொள்ளவில்லை மீண்டும் அதே கொட்டக்காலில் மாட்டப்பட்டது அந்தத் தூக்குவாளி. அம்மாவின் தீப்பெட்டி வருமானம் வீட்டுச் செலவுக்குப் போதவில்லை நால்வரில் இருவர் தீப்பெட்டி ஆபீசுக்கு அம்மாவுடன் வேலைக்குப் போவதாக முடிவு செய்தனர் அவர்கள் இருவருக்கும் கஞ்சி கொண்டு செல்ல மீண்டும் எடுக்கப்பட்டது அந்தத் தூக்குவாளி இப்போது அந்தத் தூக்குவாளியின் மீதான எதிர்பார்ப்பு ஆறு மாதத்திற்கு பயன்பட வேண்டும் என்பதே. ஓராண்டு ஆனது ஆனால் இன்னும் அப்பாவின் உடல்நிலை சரியாகவில்லை அவரின் மருத்துவ செலவுக்கு சம்பளத்தின் பெரும் பங்கு செலவிடப்படுகிறது.. பழுதடைந்த அந்த தூக்குவாளி மீண்டும் அதே கொட்டக்காலில் மாட்டப்பட்டது இனி நால்வருக்கும் அது நினைவுகளைத் ததும்பத் ததும்பச் சுமந்திருக்கும் அட்சய பாத்திரம் மட்டுமே. -முத்துவேல் இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பாகும் இதுவரை எங்கும் வெளியிடப்படவில்லை என உறுதியளிக்கிறேன் முத்துவேல்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.