Ela.Vasudevan
சிறுகதை வரிசை எண்
# 328
தாய் கிழவி
ஒரு வாய் வாங்கிகோ.... ஒரு வாய் வாங்கிக்கோனு தனது பேத்திகள கெஞ்சியும், அதட்டியும் சோறு ஊட்டிகிட்டிருக்கும் விஜயலட்சுமிக்கு இப்ப வயசு 70. தன்னோட வாழ்க்கை முழுக்க பிறருக்காவே வாழ்ந்துகிட்டு இருக்க இவ 3 ஆண் பிள்ளைகள பெத்தவ.... தன்னோட 16 வயதுவரை அப்பாவின் பேரன்பில் வளர்ந்த விஜயலட்சுமியின் பள்ளி படிப்பு வயசுக்கு வந்த காரணத்துக்காக தனது அம்மா, பெரியம்மாவாளயே நிறுத்தப்பட்டுச்சு..... அடுத்து நடந்ததோ அத விட வேதனை.... தம் பொண்ணு மனசுல நினச்ச உடனேயே அதை நினவாக்கிய அவ அப்பா முருகையன் திருமண விசயத்துல ஏமாந்துட்டாரு... மரண படுக்கையில் இருக்கும் போது.... உன் வாழ்க்கையதான் சீரழிச்சிட்டேமா.... அப்டீனு கண்ணீர் சிந்தினார்... அதுக்கு காரணம்... மிராசுதாரர் மகன் அப்டீனு நம்பி... தன்னம்பிக்கைனா என்னானு கேக்ர அளவுக்கு இருந்த இளங்கோவன பிடிச்சி கட்டி வச்சிட்டாரு... அமரர் கல்கியோட வரிகள அவர் தொடர் எழுதும் போதே... படிச்சி சிலாகிச்சி... அந்த பக்கங்கள கத்தரிச்சி சேகரிக்கும் அளவுக்கு வாசிப்பு பிரியை விஜயலட்சுமி.... ஆனா அவ வாக்கப்பட்ட இடமோ.... புத்தகம் படிச்சா கெட்டுப்போயிருவாங்கனு நம்பிகிட்டிருந்த கூட்டம்.... இதுமட்டும் இல்ல... பெண் என்பவள் ஆண் செய்யும் அசிங்கங்களை கழுவி மொழுவ வந்தவள். மொத்தத்தில தான் நினைப்பதை சொல்வதை செய்யும் உணர்ச்சியற்ற ஒரு பிராணி அவ்வளவுதான்.. இதுவே இளங்கோவனக்கு தெரிந்த மானுடம். அவரையும் குற்றம் சொல்ல முடியாது ஏன்னா அவரோ கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்தவர். அப்பாவோ கையில் இருக்கும் செல்வத்தை ஊருக்கு வாரி இறைத்து நல்ல பேர் வாங்குவாரு.... ஆனா பிள்ளை வளர்ப்புன்னா என்னன்னு தெரியாதவரு... இவங்க மத்தியில பிறந்ததுனால எது தப்பு எது சரி அப்படின்னு எதுவும் தெரியாது ஆளாளுக்கு ஒன்னு சொல்ல அது கேட்டு வளர்ந்தவரு இளங்கோவன்... அதனால புதுசா சம்பாதிக்க தெரியாது கையில் இருக்க எல்லாத்தையும் விக்க தெரியும் அதுவும் அடிமாட்டு விலைக்கு. இந்த சூழலில் 16 வயதில் திருமணமாகி வந்த விஜயலட்சுமி வாழ்க்கையின் தொடர் அலக்களிப்புகளால இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றா... ஆனா அதுவும் அவளுக்கு கை கூடல அதன் பிறகு கணவன் கூட போராடிகிட்டே தான் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வந்த அனைத்தையும் இழந்து தன் மாமனார் விட்டு சென்ற இரண்டு ஏக்கர் விளைநிலத்தையும் மூன்று மணக்கட்டையும் வித்து விடாமல் காப்பாத்துறா.... இதற்காக கிராமத்தில் இட்லி மாவு அரைத்துக் கொடுக்கும் தொழில் செய்ய தொடங்குகிறாள் இதில் அவள் கை கால் புண்ணாகி போகிறது. ரத்தம் சிந்தி வளர்த்தார் என்ற வாசனத்தை பல முறை நாம் கேட்டிருப்போம்... ஆனா இவ உண்மையாவே.... ரத்தம் சிந்திதான் தன் பிள்ளைகள காப்பாத்துனா... விஜயலட்சுமி இப்டீனா... இளங்கோவனோ தம் பிள்ளைகள ஊர்லயே இல்லாத அரிவாளியா ஆக்குரேனு மொத ரெண்டு பசங்கள 5 பள்ளி கூடம் மாத்தி.... 10ஆவது தாண்டவே தண்ணி குடிக்கிற மாதிரி ஆக்கிட்டாரு.... மூனாவது மகன மட்டும் அரசு பள்ளியில தான் சேக்கனும்னு விஜயலட்சுமி கண்டிச்சு சொல்லிட்டதால.... அவன் மட்டும் பட்டப்படிப்ப முடிச்சான்.... இந்நிலையில.... மூத்தவன் நடிகராகனும்னு சென்னை கிளம்ப.... நடூளவன் என்ன செய்ரதுனே தெரியாம மூத்தவன பின் தொடர்ந்து சென்னை வந்துட்டான்.... மூத்தவன் சம்பாதிச்சி.... நடூளவனையும், நடூளவன் சம்பாதிச்சு... சின்னவனையும் படிக்க வைப்பாங்க.... நாம நிம்மதி பெருமூச்சு விடலாம்னு விஜயலட்சுமி காத்திருந்த போது... பிள்ளைகளோட இந்த முடிவு மண்ண அள்ளி போட்ருச்சு.... இதுல மூணாவது மகன் டிகிரி முடிச்சிட்டு விவசாயத்துல ஜெயிக்கனும்னு காத்திருந்த போது.... நிலத்த அடமானம் வச்சு மூத்த மவன் கல்யாணம் சிறப்பாவே நடந்தது.... இதனால சின்ன மவனும் , மொத்த குடும்பமும் சென்னைல குடியேற, டிகிரிய காமிச்சி வேலைக்கு போனான் சின்ன மவன்.... இதற்கிடையில் திருமண வாழ்க்கையும், சென்னை வாழ்க்கையும் மனித குணங்களில் ஏற்படுத்திய தாக்கம் வார்த்தைகளா வந்து விழ.... விஜயலட்சுமி நொறுங்கி போனா... பத்தா குறைக்கு நடு மவன்... காதல் வசப்பட்டு வந்து நிக்க.... மொத்தமாவே உடஞ்சி போய்ட்டா... விஜயலட்சுமி... சொந்த பந்தங்களோட ஏளன பேச்சுக்கு இடையில்... அடமானம் வச்சிருக்க நிலத்துல மேலும் கொஞ்சம் பணம் வாங்கி நடு மவன் கல்யாணத்தையும் முடிச்சிட்டா..... அடுத்த சில வருடங்களில் சின்ன மவன் கல்யாணத்த பன்னலாம்னா... நிலத்து மேலயும் காசு வாங்க முடியல.... கடைசியா... சின்ன மவன் மூலமாவே வட்டிக்கு கடன் வாங்கி அவன் கல்யாணத்தை முடிச்சி வச்சிட்டா.... மத்தவங்களுக்காகவும்.... மூத்தவங்க சொல் படியும் வாழ்ந்த விஜயலட்சுமிக்கு.... தனித்தனி மனமும், தனித்தனி சந்தோசங்களும் கொண்ட மருமகள்கள பாக்கும் போது ரொம்ப வியப்பாவே இருந்தது... மொத ரெண்டு பிள்ளையும் மாமியார்கள கூட்டி வந்து பிள்ளை வளர்க்க வச்சிக்க ..... அம்மாவ தான் வச்சிப்பேனு அடம்பிடிச்ச சின்னவன் கூட விஜயலட்சுமி இருந்தா... மவன் என்னதான் தன்னை கடவுளாவே நினச்சாலும் மருமவளோட சின்ன சின்ன கசப்புகளோட நாட்கள் கடந்துச்சு.... இப்படி தன் வாழ்க்க முழுக்க மற்றவர்களுக்கே அர்ப்பணித்த விஜயலட்சுமி அதன் தொடர்ச்சியா பேரப்பிள்ளைகளே வாழ்க்கைனு வாழ்ந்துட்டு இருந்தா.... இதற்கிடையில 80 வயசுல படுத்த படுக்கையான... இளங்கோவன்... இறந்தே போராரு... அப்பதான்.... பூர்வீக சொத்த வித்து காச கொடுனு நடு மவன் வந்து நிக்க.... இருக்குற ஒரு பிடிமானத்தையும் விட முடியாதுனு பெயவனும், சின்னவனும்.... வாதம் பன்னானுங்க..... கையெல்லாம் கொத கொதனு புண்ணா போக.... இரவு பகலா மாவு அரைச்சி....உடல் நொந்து சொத்த காப்பாத்தி வச்சா.... நடூளவனோ விக்கனுன்றான்...
பெரியவனோ கண்டுக்கவே மாட்றான்.... சின்னவனோ வேலைய விட்டுபுட்டு அத்துன நாள் லீவுல வர முடியாம தவிக்கிறான்.... இப்படி திசைக்கு ஒருத்தன் நிக்க.... இதுக்கா.... இப்டி கஷ்டப்பட்டு இந்த சொத்த காப்பாத்தினோம்.... இப்ப அந்த சொத்தாலயே.... மனம் நோக வேண்டியதா இருக்கேனு.... விஜயலட்சுமி நொந்து போனா... புராணத்தில் மட்டும் கேள்விபட்ட அற்புதமான தாயா இருந்த போதும்... தன்னோட ஆளுமையில ரெண்டு புள்ளையயும் வளர்க்க முடியல.... மூணாவது பயலதான் தன் போக்குல கொஞ்சமாவது தன்னோட குணம் இருக்க மாதிரி... வளர்க்க முடிஞ்சது.... வாழ்க்கைய ஓட்ட பொருள் ஈட்டி கொண்டிருக்கும் போது மத்தவங்களோட ஆளுமையில பிள்ளைகள் வளர்ந்து நின்னுட்டாங்க. இப்போ மூணு பேரு வெவ்வேறு விதமா வளர்ந்து நிக்குது. இதுல மூத்ததும்.... நடூளதும் விஜயலட்சுமி எல்லைக்குள்ளயே இல்ல... ஆனாலும் இப்பவும் ஓடிட்டே இருக்கா விஜயலட்சுமி.... இப்பவும் பேரப்பிள்ளைகளுக்கான பணிகள செவ்வனே செஞ்சிகிட்டு.... இப்படி தனக்கான ஒரு நொடிப் பொழுது சிந்தனையும் இல்லாம தன் குடும்பத்தின் நலம் பத்திய சிந்தனையோடயே வாழும் விஜயலட்சுமிக்கு பிடிச்ச ஒரே விஷயம் என்ன தெரியுமா வாசிப்பு... வாசிப்பு மட்டும் தான்.... குறைந்தபட்சம் அந்த சந்தோசத்தையாவது கொடுப்போமே என குற்ற உணர்ச்சியோடு அப்பப்ப புத்தகங்களை வாங்கி கொடுத்து திருப்தி அடைஞ்சி வாரன் கடைசி மவன்... அந்த வரிசையில இப்ப வாங்கி கொடுத்துருக்க புத்தகம்.... ஜெயகாந்தனோட ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ....
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்