logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ebenezer arul rajan

சிறுகதை வரிசை எண் # 327


பப்பிக்குட்டி ஏக்கமும் தவிப்புகளின் சாரமும் தான் வாழ்க்கையின் ஊற்றுக்கண்களாக இருக்கின்றன. எதிர்பார்த்து எதிர்பார்த்து வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் நகர்த்த வேண்டியிருக்கின்றது. குழந்தைகளின் மனமும் அப்படிப்பட்டதுதான். வயிற்றிலிருந்து வெளியில் வந்தநாள் முதலே.... குழந்தைகளின் எதிர்பார்ப்பு தொடங்கி விடுகின்றது. இன்னும் சொல்லப்போனால் கருவில் உருவாகும் போதிலிருந்தே.... 'இதுவும் வாடக வீடுதானா ம்ம்....ம்..." என்று சலித்துக்கொண்டான் ஆறு வயதான அமலன். இதோட சேத்து நாலாவது வீடு மாறுறோம்" என்னங்க என்று அவன் மனைவியும் அங்கலாய்த்தவள்தான். எப்படியோ வீடு மாற வேண்டிய கட்டாயச் சூழல் வீடு மாறியாச்சி.. பொருட்களுக்கு என்ன எதிர்ப்பார்ப்பு இருக்க முடியும் குட்டியானையில் மூச்சுமுட்ட ஒன்றுக்குமேல் ஒன்று வைத்தபடி அமர்ந்து கொண்டன.. 'எங்க அம்மா வீட்டுக்கு எதுத்தாப்புலயே கெடச்சிக்கிடுச்சி அதுனால தா மாறிக்கலாம்னு நெனச்சேன் தங்கம்மா.... ஸ்கூல்முடிஞ்சி பிள்ளைக போனா நாம்போற வரைக்கும் அதுகளுக்கு என்னத்தையாவது வயித்துக்கு எங்கம்மான்னா குடுப்பாக....தங்கம்மா..." என்று பழைய கவுஸ் ஓனர் தங்கம்மாவிடம் அவன் மனைவி பேசிக்கொண்டே அண்டை வீட்டார்களிடமும் சிரித்தமுகத்துடன் தலையசைத்தபடியே வந்தாள். பொருள்களையெல்லாம் அம்மா வீட்டின் பின்னால் கிடந்த இடத்தில் இறக்கியாகிவிட்டது. இறங்கிய பொருள்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவள் அம்மா 'பொருளு பூ...ரா ஒரே....தூசியா....ருக்கு எல்லாத்தையும் கழுவிப்பெறக்கித்தான் புது வீட்டுக்குள்ள ஏத்தணும்..." இது அவளது அம்மாவின் உத்தரவு... இல்ல..சஜஸன்... இல்ல...மொதச்சொன்னமாரியே வச்சிக்கலாம்... எந்த உத்தரவுனாலும் சஜஸன் முலாம் பூசப்பட்டுத்தான் வரும். சிலது நேரடியா சஜசனாவே வரும்... எல்லாம் மாமியாருடைய பிரசர் ஏறுவதையும் அது சமனிலையில் இருப்பதையும் பொருத்தது.. அவனுக்கும் வேறு ஏதாவது நல்ல ஜாப் தேடிப்போறதுக்கும் நல்ல சம்பளம் பாக்குறதுக்கும் இந்த வாடகை வீட்டுக்கு மாறியது சரின்னு பட்டது. எப்படியோ அவன் எதிர்பார்ப்பும் அவள் எதிர்பார்ப்பும் நிறைவேற, குழந்தைகள் ரெண்டும், அம்மம்ம செல்போன் உனக்கு தாத்தா செல்போன் என்று சமாதானம் செய்து கொண்டு அந்த வீட்டுக்கு மாறுவதாய் முடிவெடுத்தாச்சி...பொருள்கள் எல்லாம் பளிச்;;;;;;;;;;;;....பளிச்;.... கண் சிமிட்டின.... 'நாளைக்கு காலையில நாலு மணியில இருந்து ஆறுமணிக்குள்ள பால்காய்ச்சணும்.... பக்கத்து வீட்ல மாமாகிட்ட தகவலச் சொல்லி கூப்டும்மா... மருமகனே நீங்க.. பழம்... வெத்தலபாக்கு... உப்பு பாக்கெட்... தேங்கா...பத்தீ... வாங்கிருங்க.." சொல்லிக்கொண்டே பக்கத்தில் மாமியாரின் அண்ணன் வீட்டில் அவனும் அவளும் நிற்கையில் வந்த அம்மாவிடம் 'ஏம்மா என்ன புதுவீடு கட்டியா பால்காய்ச்சுறேன்... சும்மா இருங்கம்மா' என்றபடி 'பாருங்க மாமா இப்பிடித்தான் ஏதாச்சும் தேவையில்லாமச் செஞ்சிக்கிட்டுத்திரியுது.' என்றாள் அவள்.மாமா நையாண்டியாகச் சிரித்தார். மணி பதினொன்று அடித்தது. பிள்ளைகள் படுப்பதற்காக விரித்துக்கொண்டிருக்கையில் 'புது வீட்டக் கழுவிவிட்டமாறித் தெரியல இன்னும் பொருள்கள ஒழுங்கு பண்ணல உங்க வீட்டுக்காரியையுங் காணல... நீங்க அதுக்குள்ள விரிக்கத்தொடங்கிட்டிக... என்று ஒலித்தது கரிசனை முலாம் பூசிய உத்தரவு.. அந்தவீடு வெள்ளையடிக்கப்பட்டு இருந்ததினால் தான் கழுவிவிட வேண்டிய அவசியம்.. அவனும் 'இந்தா பாக்குறேன்த்த என்றபடி போனான்.. வீடு நாலுபத்தியில்... முன்னாடி கொஞ்சம் இடம் பின்னாடி கொஞ்சம்இடம் போட்டுக் கட்டியிருந்தார் அதன் ஓனர். கராறான மனிதர்... அளவான உயரம்... வெளுத்த தலை... ஆடிட்டர் தொழில்... நாலாயிரம் வாடகை... இருபதினாயிரம் அட்வான்ஸ்... பூர்வீக வீடு... வேலை கோயம்புத்தூரில்... எப்பவாவது திருவிழா என்றால் அந்த வீட்டின் மாடியில் இருக்கும்அறைக்கு வந்து ஒருவாரம் தங்குவார்... அந்த வீட்டைப் போயிப் பார்க்கப் போனது முதலே அவன் மகன் மூத்தவன் அம்மா பப்பிக்குட்டி வளக்கலாமாம்மா.... என்று மிகுந்த எதிர்பார்ப்போடு கண்கள் விரியக் கேட்டபடியே நிற்பான்... ஒவ்வொருவரிடமும் கேட்கும் போதும் அதே சிரிப்பு, காது விரைப்பு, மூக்கு விடைப்புடன் கண்கள் விரியும்... குதிச்சிக் குதிச்சி ஓடி வரும்லப்பா... என்ன தாத்தா... ஏங்கூட தாவித் தாவி வந்து கால நக்கி விளையாடும்ல... என்ன அம்மம்ம... யாராவது சரிசொல்லி விடுவார்களா என்பதைக் காட்டிலும்... பப்பிக்குட்டி மீதான அவனது அளவளாவல்.. அதனைப்பற்றியதான ஆச்சர்யம்... அதற்கும்அவனுக்குமான பாஷை... முந்தைய பழைய வீட்டில் நிறைந்து வழிந்தது காலையில் அவனை எழுப்பிவிடும்... காலுக்குள் ஒடிவந்து அவனைச் சுறுசுறுப்பாக்கும்.. அம்மா.... நானு.. இத... ஸ்கூலுக்கு தூக்கிட்டுப்போட்டா... என்பான்.. கொஞ்சநாளாக இருந்;தாலும்....பப்பிக்குட்;டியால் அத்தனை இயற்கையான சந்தோஷசத்துடன் தன் குழந்தையை வைத்திருக்க முடியுமா... என்று அப்பாவாக அவன் ஆச்சர்யப்பட்டதுண்டு? அவனும்அவளும் வாங்கிக்குடுத்த தொள்ளாயிரம் ரூபாய் டிரைன், ஜநூறு ரூபாய் பஸ், இன்னும் சில நூறுகளில் வாங்கித்தந்த ரிமோட் சாமான்களைக் காட்டிலும் இயல்பாகக் குழந்தையின் உயிர்நாடியெல்லாம் பரவி குதூகலமான நிரந்தர சந்தோசத்தை நினைத்து நினைத்துத் தூக்கத்தில் சிரிக்கும் சந்தோஷத்தை உயிர்த்துடிப்பாய்... வாழ்தலைக் குழந்தைகளுக்கும் சரி அவர்களுக்கும் சரி ஒருசேர ஒரு பப்பிக்குட்டியால் தந்துவிடமுடியுமா..? அப்படிக் கொடுத்துக் கொண்டிருந்தவற்றைக் கொண்டுபோய் விடப்போகிறேன் என்று ஒரு நாள் அதிகாலையில் அவன் அவளிடம் சொன்னான்... குழந்தைகள் எழுந்திருக்கும் முன்னால்... ' ஓனருக்குப் பிடிக்கலடி' 'அவரு எரிச்சல் படுறாரு' 'எட்டி இதோ இந்தக் கருத்தவால் குட்டிய உதச்சிட்டு மாடிக்குப் போயிருக்காரு..' மேல் போஷன்லல்லாம் போயி ஆயி இருந்து போட்டுருக்குக..' 'இது ரெண்டும்... சமாளிக்க முடியாதுடி...' என்றதும் 'சரிங்க இந்தாங்க இந்த பைக்குள்ள வச்சிக்கோங்க...' என்று சொல்லிக்கொணடே ஒரு ஜவுளிக்கடைப் பையைத் தந்தாள்.... இவன் அதுகளிடம்.. 'போயி எங்கயாச்சும் பொழச்சிக்கோங்க எங்கiளால இவ்வளவுதான் முடியும்' என்று முனகிக்கொண்டே தூக்கி அந்தப் பைக்குள் வைக்க முயன்றான்.... 'இருங்க... இனிமே அதுக எப்ப சாப்பிடப் போகுதோ...' 'கீழ எறக்கி விடுங்க இந்தக் கஞ்சியக் குடிக்கட்டும்...' என்றவளின் கண்களை உற்றுப் பார்த்தான் அவன்... லேசாக கலங்கி அவை நீர்கொள்ளாமல் ஒதுங்கியிருந்தன... ரோட்டோரத்துல விடாதிங்க... அடிபட்ருங்க.... ஏதாச்சும் நல்ல அணவா இருக்க எடமா பாத்து விட்டுட்டு வாங்க... விட்டதும் வந்துறாதீங்க... கொஞ்ச நேரம் ஒளிஞ்சி நின்னு பாருங்க... அதுக என்ன செய்துங்கன்னு..... ரொம்ப... தேடுச்சுங்கன்னா தூக்கிட்டு வந்துருங்க.... ஏன்னா இரண்டும் பொட்டக் குட்டிங்க... ஆணுன்னா... ஆளாளாக்கு வந்து தூக்கிட்டு ஓடிரும் சனங்க... காதில் கேட்டுக்கொண்டே கொண்டு போய் விட்டு விட்டு வந்தான்.. 'பிள்ளைக கேட்டா என்ன சொல்லப்போறீக' என்றபடியே காப்பி கொடுத்தாள்... 'செத்துப்போச்சின்னு சொல்லு...' 'சிரித்தாள்....' அவன் அமைதியாகப் பார்த்தான்... 'நம்ப மாட்டாங்க...' என்றவள், 'பப்பிங்க ரெண்டும் பெருசாயிருச்சுடாத் தம்பி... அதுங்கள அதோட அம்மா வந்து கூட்டிட்டுப் போயிறுச்சின்னு சொல்லுங்க...' என்று அவனுக்குச் சொல்லிக் கொடுத்தாள்... நெருங்கிய ஒருவரின் திடீர் இறப்பை... அவர் மீது வெகுவாய்அன்பு வைத்திருந்த இதய நோயாளியான ஒருவரிடம் பக்குவமாய்த் தயங்கித் தயங்கி எடுத்துச்; சொல்வது போலவே இருந்தது அவனுக்கு... பப்பிக்குட்டிகள் மட்டுமல்ல.. ஏன் ஐPவ ராசிகள் எல்லாமே மனிதர்களிடம் இப்படியான தாக்கத்தைத்தான் பிரிதலில் ஏற்படுத்துகின்றன... அவற்றின் பிரிதல் மனதைப் பிசைகின்றன... அழுத்துகின்றன... பல நூறுகளுக்கு வாங்கிய பொருட்களைச் சில பத்துகளுக்குப் பழைய விலைக்குப் போடும் போது இல்லாத வருத்தம்... இந்த உயிர்களைப் பிரிதலில் வந்து தொற்றிக் கொள்கிறது... ம்ம்ம்.... இதுக்குத் தான் சொந்த வீடு வேணும்கிறது.... பாப்போம்... பிளான் போடுவோம்.... என்று பெருமூச்சு விட்டபடி காப்பிக்கப்பை வாங்கிக் கொண்டு போனாள்.. நான்கு மாதங்களுக்குப் பிறகும் கூட வண்டியில் செல்கையில் அது நம்ம கருத்த வாலு மாதிரித் தெரியுதுலங்க.... என்பாள்... குழந்தைகளிடம் காட்டுவாள்... இப்படியெல்லாம் நிறைந்து வழிந்தோடிய பப்பிக்குட்டியின் வளர்ப்பு அனுபவங்களுக்கு மத்தியில் தான் இந்தப் புதிய வாடகை வீட்டிலும் குழந்தைகளின் எதிர்பார்ப்பாக அதிலும் பெரியவன் தர்ஷனின் ஆவலாக அது அமைந்துவிட்டிருந்தது... அவன் தான் ஒவ்வொருவரிடமாகக் கேட்டுக் கொண்;டு திரிகின்றான்.. அம்மா சொல்வாள் 'தம்பி பழைய வீட்ல வளத்தோம் வீடெல்லாம் ஆயி இருந்து போட்டுச்சி.... அந்த வீட்டுத் தாத்தா ஓங்கி எத்துனார்ல....உங்க அப்பாவும் ஆயக் கழுவிவிடமுடியலன்னு சத்தம் போட்டது உனக்கும் தெரியும்ல தம்பி ... அம்மா சொல்லிக்கொண்டிருக்கும்போதே குழந்தை அம்மம்மாவிடம் போயிருப்பான்.... அம்மம்மா சொல்வார் ' நாய்க்குட்டில்லாம் வளக்க முடியாதும்மா... வியாதி வரும்... வீட நீட்டா வச்சிக்கமுடியாது... அம்மமைக்கல்லாம் நாயே பிடிக்காது... உங்க தாத்தாதான் நாயி... நாயி...ன்னு சொல்வாரு...ஆனா துப்புன எச்சிக்கி மண்ணள்ளிக் கூடப் போடமாட்டாருடா நான் தான் பாக்கணும்.... தாத்தா சொல்வாhர் நான் பிடிச்சாரன்டா..... ஒங்க பாட்டிதான் சரிப்படமாட்டா.... ஒரு குட்டிய நீங்க கட்டிப்போட்டுட்டுப் போனீகளா.... அத அவ தான் அவுத்து விட்டா அது ஓடிப்போயி வண்டில விழுந்துருச்சுல்ல....குழந்தைக்குத் தாத்தா சொன்னது காதில் விழுந்திருக்காது... பப்பிக்குட்டி அவனோடு விளையாடிய அனுபவங்களை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்து விளையாடத் தொடங்கியிருப்பான்... ஏங்க...... என்ன இங்க நின்னுக்கிட்டு என்ன யோசன... நான் கழுவி விட்டுட்டேன் வாங்க... என்றாள் அவன் மனைவி.. நினைவிலிருந்து திரும்பினான்...மறுநாள் ஓனர் வருவதாக அவரது உறவுக்காரப் பெண் கூறியிருந்தாள்... மருமகனே....இன்னைக்கி வாராராம்.... அட்வான்ஸ எங்க அண்ணனவிட்டு குடுக்கச் சொல்லுங்க.. நீங்களும் போயி நில்லுங்க... அவரு அக்கவுண்ட் நம்பர் தருவாராம்.. அதுல வாடகையப் போட்டுவிடணுமாம்... என்ன ஏதுன்னு வெவரங் கேட்டுக்கோங்க பாலக் காய்ச்சி வீட்ட ஒப்படைச்சாச்சி இனி நீங்களாச்சி அவளாச்சி.... வீட்ட சுத்தபத்தமா வச்சிக்கோங்க.... நானும் கூடமாட வந்து அவளுக்கு ஏதும் ஒண்ண பாத்துக் குடுத்துக்கிடுதேன்.... என்றார். சற்றுநேரத்திற்கெல்லாம் புலிவருது புலிவருது என்று சொன்ன புலி வீட்டு ஓனராக உண்மையில் வந்தது... வந்தவரிடம் அட்வாண்ஸ் தொகையை நீட்டியபடியே என்ன தர்மலி;ங்கம் எப்டி இருக்க நம்ம தங்கச்சி மவாதான் இருக்கப்போறா... என்றார் மாமியாரின் அண்ணன். பதிலுக்கு அவரும்... ஏய்....வாப்பா.... அப்பிடியா சரிப்பா....நல்லா இருக்கட்டும்... இருவருமே ஒருகாலத்தில் பள்ளித்தோழர்கள் என்பதால் பேச்சு நீண்டது. அவன் பக்கத்தில் நின்றிருந்தான்.. தங்கச்சியோட மருமகன் காலேஜ்ல புரொபஸரா இருக்காரு.. என்று அறிமுகம் செய்துவைத்தார். இவன் கும்பிட்டான்.... பதிலுக்கு அவரும்... பேச்சு போய்க்கொண்டிருக்க... தர்ஷன் மெதுவாகத் தொண்டைக்குழிக்குள் கேட்டான்.... முதலில் அவன் கேட்டதை ஓனர் கவனிக்கவில்லை....எல்லாம் பேசி முடித்து மாடியில் இருக்கும் அவரது ரூமிற்கு விருவிருவென்று ஏறினார் மீண்டும் சற்று சத்தமாகக் கேட்டான்.... பப்பிக்குட்டி வளக்கலாமா.....? கண்கள் குளமாகி இருந்தன....

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.