logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Mythile Arumugam

சிறுகதை வரிசை எண் # 320


பரிசம் கடலில் இருக்கும் எல்லா ‌சிப்பிகளுக்கும் ஒரே ஆசை. ஓர் அழகிய முத்தை பெத்தெடுக்க வேண்டும் என்ற இச்சை. அந்த முத்துக்களை அடுத்தக் கட்ட நிலைக்கு எடுத்துச் செல்ல தன்னையே பிளக்க தயாராக இருக்கும் சிப்பிகள். அன்று. "பொன்ன அழைச்சுட்டு ‌வாங்க" இரண்டு மாதங்களாக இந்த நாளுக்காக காத்திருந்தாலும், தங்களுடைய குழந்தைகளுக்கு இது இனிய நாளாக இருக்க வேண்டும் என்ற கடிமணம், அவர்கள் பெற்றோர்களின் கண்களில் பதற்றமாக வெளிப்பட்டது. ஆரவாரங்களுக்கிடையே மேளத்தாளம் சப்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. பரந்த வானத்தில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப் போல பெண்களும் புத்தாடைகளில் ஜொலித்துக் கொண்டிருந்தாலும் அனைவரது பார்வையும் மெருகும் நிலவை நோக்கியே காத்திருந்தன. செங்காந்தள் நிற பட்டுச் சேலை உடுத்தி, தங்க ஆபரணங்களால் அலங்கரித்து, கூடவே புன்னகையும் அணிந்து மேடையில் அமர்ந்திருந்தாள். துர்கா. ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த அவளுக்கு, தொடக்கத்தில் இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. 'டார்சி' போன்ற ஓர் ஆணையே மணம் செய்துக்கொள்வேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு புனைவுலகத்தில் வாழ்ந்த அவளுக்கு துருவை பார்த்தவுடன் பிடித்துப்போனது என்று சொல்வது ‌மிகையே. அவன் வசீகரமான தோற்றத்தில் இருந்தாலும், வங்கி மேலாளராக நல்ல பணியில் இருந்தாலும் ‌திருமணத்திற்கு இடைப்பட்ட அந்த இரண்டு மாதங்களில் அவர்கள் பரிமாறி கொண்ட ஓர் இரு வார்த்தைகளே அவளுக்கு அவன் மீதிருக்கிற நம்பிக்கைத் தோன்ற காரணமாக இருந்தது. பல வருடங்களாக மொட்டாக‌ வைத்திருந்த காதல் அன்று அவனது மெல்லியப் பார்வையில் மலர்ந்து. "கெட்டி மேளம்... கெட்டி மேளம்..." சுபமாக முடிந்தது திருமணம். திருமண நாள் மட்டும் தான் போலும். மூன்று மாதங்கள் கழிந்தன. கல்லூரிக்குச் செல்வது, வீட்டு வேலையை செய்வது என அவளது வாழ்க்கை நகர்ந்தது.நேரம் இசைவளிக்கும் போதெல்லாம் களங்கமற்ற மகிழ்ச்சியைக் காட்டிய அவர்களுது திருமண படச்சட்டத்திற்கு எதிரே மெய்மறக்க நிற்பாள். மெய்சிலிர்க்க நகர்வாள். ஆடு மந்தைகளுக்குள் ஊடுருவிய நரி என்றாலும் சரி, பதுங்கும் நரிகளுக்கிடையே சிக்குண்ட ஆடென்றாலும் சரி, சிக்கல் அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானே. எங்கேயோ கேட்ட நினைவு. அதன் உண்மையை இன்று அவள் உணர்ந்தாள். "ஹலோ அப்பா" "துர்கா… அப்பா வெளிய போயிருக்காரு..." என்று அவளின் தாய் கூறினாள். சரி மாஎன்று முடிப்பதற்குள், "கண்ணு ‌கார் இந்த ஞாயித்துக்கிழமைக்கெல்லாம் வந்துரும்...அது விஷயமாதான் அப்பா வெளிய போயிருக்காரு..." "அம்மா..."தழுத்தழுத்த குரலில் "என்ன மா வட்டிக்காரன்ட பேசுற மாதிரி பேசுற..." "அப்படி இல்லகண்ணு... உங்க வீட்ல தான் கேட்டுக்கிட்டே இருக்காங்களே... அதான் சொன்னேன்." "அம்மா....." அவள் கண்களில் வெளியே பகிர்ந்துக் கொள்ள இயலாத ஏக்கம் கண்ணீராய் சொறிந்தது. "கண்ணு... ஏன்டா அழுகிற..." "பாப்பா...." "ஏம்மா... நம்ப வீடு தான்மா என் வீடும்..." "சரி... சரி... முதல்ல அழுகிறது நிறுத்து... இங்கப் பாரு, நாங்க நாளைக்கே வரோம்.... வந்து நம்ப வீட்ல ஒரு வாரம் இருப்பியாம்..." "ம்ம்ம்"என்று குழைந்தாள். "அம்மா... வரப்ப நம்ப காட்ல இருக்க மாங்கா எடுத்துட்டுவா மா..."என் சொல்லி போனை வைத்தாள். என்ன சொல்றாங்க... என்று கத்திக்கொண்டே ரூமிற்குள் நுழைந்தார்கள் குருவும் அவனின் தாய் லதாவும். அவர்கள் வருகையை சற்றும் எதிர்பார்க்காத அவள் திகைத்துப்போனாள். "ஞாயித்துக்கிழமை தரன் சொன்னாங்க அத்தை..." "மையிறு..."என்று ஆவேசத்துடன் அவள் முகத்தில் அறைந்தான். அவள் கண்சிமிட்டாமள் அப்படியே நின்றாள். அவன் மறுபடியும் அறைந்தான். அவள் அசையாமல் நின்றாள். "சரி விட்றா... நடத்தட்டும்... பாக்கலாம் இன்னும் எத்தனை நாளுனு... நீ போ அந்தான... நான் பாத்துக்கிறேன்..." "இங்க பாரு டி... ஒழுங்கா கொடுத்த வார்த்தைய காப்பாத்த சொல்லு உன் பெத்தவங்கள... நீ என்னா நினைசுட்டு இருக்க...சொச்சண்டி நீ... சொச்சம்... பரிசத்தோட சொச்சம் தாண்டி நீ..."என்று தன் வார்த்தைகளை வீசிச் சென்றாள் லதா. சிம்பு சிம்பாக நொறுங்கினாள்‌. ஒரு மணி நேரமாக காத்தாடி மட்டுமே அவளுடன் பேசிக்கொண்டிருந்தது. சுழலும் ஒவ்வொரு வட்டத்திலும் அதே காட்சியையே பிசிரில்லாமல் மீண்டும் மீண்டும் ஒளிர‌ செய்தாள்.அதில் அவளுடைய தவறு ‌எது என்று புரியாத அபலை பெண்ணாக மாறும் முகங்களுக்கிடையே மாறாத வெறுமையை எதிர்நோக்கி நின்றாள். காத்தாடி நின்றது. இன்று. எல்லா நாட்களையும் போலவே ஒரு சாதாரண நாளாக இருந்தது. அழுத்தமோ வேலை நிமித்தமோ அவளைத் துரத்தவில்லை. குற்றமோ மனச்சோர்வோ அவளை தடுத்து நிறுத்தவில்லை. நிம்மதியை தேட‌ மறந்தாள். எல்லோரும் உட்கார்ந்துருக்கும் படத்திற்கு அருகில் அவளும் உட்கார்ந்தாள். யாரும் கவனிக்காத அந்த கண் சிமிட்டும் நேரத்தில் விளக்கை அணைத்தாள். அவளது தாயை தவிர்த்து மற்ற அனைவரும் பணிக்கு சென்றனர். அவருடைய மடியில் படுத்து அவளும் உறங்கினாள். துணுக்கு தன்னுடைய ஒப்படைக்காக வைத்திருந்த காகிதத்தை எடுத்து அமர்ந்தாள் துர்கா. மை சொறக்க எழுதத் தொடங்கினாள். அவளது கடைசிக் குறிப்பை. "நீங்க யாரும் கவலப்படாதிங்க... நான் எங்கேயும் போகல. இங்கையே‌ தான் இருக்கேன். இப்படி கல்யாணம் பண்ணணும் அப்படி பண்ணணும்... பொன்னுக்குப் பிடிக்கலனாலும் பரவால... நம்ம ஜாதிலயே நல்லப் பணக்காரனா பாத்து தன் பெண்ணுக்கு கட்டிவெச்சரனும்னு இருக்கிற எல்லா பெத்தவர்களின் எதிர்பார்பில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.... இந்த சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனுஷனு சுவாசிக்கிற அறியாமையில் நான் இருக்கேன்.லதா போன்ற பலரின் அட்டிகையா நான் ஜொலித்துக்கொண்டு தான் இருக்கிறேன். துரு மாதிரியான பண மோகம் பிடித்தவனிடத்தில் நான் குடிக்கொண்டிருக்கிறேன். பெண் குழந்தையாக பிறந்து பொம்மையாக வளர்ந்து, கைப்பாவையாக புகுந்த வீட்டிற்குச் செல்ல இருக்கும் என்னைப் போன்ற பல மகள்களில் நான் பிண்ணி பிளைந்துள்ளேன். ஜஸ்ட்... ஐ அம் ஸ்லீப்பிங்..." ............... அன்றொரு நாள். லம்போர்கினியில் ஓர் நீண்ட பயணம். கடற்கரைக்கு அருகே வண்டியை நிறுத்தினேன். ஜில் என்று காற்று வீசியது.அங்கு இருந்த கடையில் மிளகாய் பொடி தூவிய மாங்காயை வாங்கி உட்கார்ந்தேன். மணலின் வெம்மை என்னைக் கட்டித் தழுவியது. கடலில் வரும் ஒவ்வொரு அலையும் நான் உனக்காக இருக்கிறேன் ‌என்று இனிமையாக உறுமி சென்றது. சிறிது தூரத்தில் முத்துக்குளித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் கடல் தேவதை பேசுவதைக் காணப் பெற்றேன். நினைவலைகளில் மூழ்கினேன். மையால் தீட்டினேன்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.