Pradheep
சிறுகதை வரிசை எண்
# 32
இரை
கண்ணன் பள்ளி விடுமுறை நாட்களில் ஆற்றில் மீன்ப்பிடிக்க சென்று விடுவான் இது அவனுடைய அப்பாவிடமிருந்து பழகிக்கொண்டது.
விடியற்காலை ஐந்து முப்பது மணி .அந்த ஓலக் குடிசையில் அவனும் அவனின் அம்மாவும் மட்டுமே தூங்கிக்கொண்டிருந்தனர். அவனின் அப்பா படம் சுவற்றில் மாட்டப்பட்டு அதன் அருகில் ஒரு மாடவிளக்கு எரிந்து வீட்டினில் ஊடுருவிக்கொண்டிருந்தது.
கண்ணன் எழுந்தி அவன் மூத்திரம் போன அவனது கால்ச்சட்டையை கழட்டிவிட்டு கொல்லபுரம் விளக்கை போட்டு வெளியில் வந்து கொடியில் கிடந்த கால்ச்சட்டையும் மேலே இரு பட்டன் மட்டுமே கொண்ட சட்டையையும் மாட்டிக்கொண்டு சட்டையின் இரு முனைகளையும் முடிச்சிபோட்டுக்கொண்டான் கண்ணன்.
காய்ந்த கிளைகளினால் எறும்புகளின் வருசையைப்போல் சொருகப்பட்ட வேலியில் மாட்டிக்கிடந்த பாட்டிலை எடுத்து இரண்டாக வெட்டி அதன் அடிப்பகுதி பாட்டிலில் இரு எதிர் முனைகளிலும் ஓட்டை போட்டு வேலியில் கிடந்த சணல் கையிரால் கட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டான்.
பாத்திரம் கழுவி ஓடும் குட்டையில் சிறு சிறு குழிப்பரித்து மண்ப்புழுக்கைளைப் பிடித்து வெட்டிய பாட்டில்குள் போட்டுக்கொண்டு வேலியில் மாட்டி வைத்திருந்த தூண்டில் கம்பை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் கண்ணன்.
ஆற்றில் இருப்பக்கங்களையும் இணைத்துச் செல்லும் ரயில் பலத்தின் நடுவில் பக்கவாட்டில் அமர்ந்து தயாராகினான். எங்கோ செல்கின்ற ரயில் ஓசை எழுப்பி அவனை கடந்து செல்கிறது.
ரயில் சத்தத்தை
( சிக்கு புக்கு சிக்கு புக்கு சிக்கு புக்கு )
என்று முனுமுனுத்தபடியே கண்ணன் புழுக்கைகளை வெட்டி தூண்டிலில் மாட்டிக்கொண்டான். ரயில் கடந்து ஓசை அடங்கியது.
கொம்பை கையில் பிடித்துக்கொண்டு தூண்டிலை ஆற்றில் வீசினான். வீசப்பட்ட தூண்டில் ஆற்றில் மூழ்கிப்போனது.கண்ணன் மீன் மட்டுமென கொக்கை போன்று காத்துக்கொண்டிருந்தான்.
மணிகள் கடந்து காத்திருந்ததில் குறைவான மீன்னாலும் நிறைவாகவே வீடு வந்திருந்தான் கண்ணன். துணிய அவுத்துப்போட்டுட்டு போய்த் தேச்சிக்குளி.இரு மா மீன் வெட்டுறத பார்த்துட்டு போறேன். காந்தியின் குரங்கை போல கண்ணங்களில் கை வைத்து உக்காந்து கொண்டே சொன்னான்.
கண்ணனுக்கு மீன் பிடிக்க பிடித்திருந்த மாதிரி மீன் வெட்டுவதையும் பார்க்கவும் பிடித்திருந்தது இதுவும் அவங்க அப்பா வேலனிடம் பார்த்தது தான்
வேலன் ஒரு வித்தகாரன் சில நொடிகளே எடுத்துக்கொள்வான் மீன் பிடிக்கவும் அதை வெட்டவும். இரண்டு புழுக்கைளை சின்ன சின்னதாக வெட்டி ஆற்றில் போட்டுவிடுவான் கூட்டமாக மீன்கள் அந்த புழுக்களை திண்ணும்போது அவன் தூண்டிலை போடுவான். அவன் தூண்டிலுமே மிக வித்தியாசமாக வைத்திருப்பான் எல்லோரும் ஒன்று அல்லது இரண்டு தூண்டில் மட்டுமே வைத்திருப்பார்கள். இவன் ஐந்து அல்லது ஆறு தூண்டில் மேலும் கீழுமாக கட்டிவைத்து புழுக்கைளை கோர்த்து அந்த மீன் கூட்டத்தில் போட்டு ஆறில் ஐந்து தூண்டிலாவது மீன்களை பிடித்துவிடுவான். சிலர் முயற்சி செய்தும் தோற்றேபோனர். வேலன் ராசிக்காரன்னு ஊரில் பேசிப்பதுண்டு.
குளித்து முடித்து விட்டு டிவியில் பார்வையை வைத்து. மீன் குழம்பு வாசனைக்கு மனதை அலைய வீட்டுக்கொண்டிருந்தான் கண்ணன்.மீன் குழம்புடன் சோறுப் போட்டு வைத்து சாப்பிட சொல்லிவிட்டு ரேஷன்க்கடைக்கு சென்றுவிட்டால் வாணி
அலைபாய்ந்த மனசு இப்போது நிலைக்கொண்டு மீனை ருசிக்க தொடங்கியது.மீன் நாக்கில் கரைந்துககொண்டிருக்க கண்ணனின் நண்பன் மணி வீட்டிற்கு வேலியில் நின்று கண்ணனிடன் கண்ணா மேல தெருவில யானை வந்துருக்கு. நில்லு நானும் வரேன்னு சொல்லிவிட்டு கடைசியாக இருந்த சோற்றுடன் மீனையும் வாயில் அல்லிப்போட்டுக்கொண்டு கொல்லபுரத்தில் தட்டை வைக்கச்சென்றவன் தொண்டையில் மீனின் முள் சிக்கி வாயில் வார்த்தையில்லாமல் விக்கிக்கொண்டே கீழே விழுந்துவிட்டான்.
வாணி ரேஷன் கடைக்கு சென்று திரும்புகையில் வாசலில் மணி நிற்பதைப் பார்த்து வாங்க தொற என்ன இந்த பக்கம் என்றுக் கேட்டுக்கொண்டே வந்தவளிடம் யானை வந்திருக்கு அத்த அதான் கண்ணனை கூட்டிப்போக வந்தேன். எங்க கண்ண கொல்லபுரம் போனான் இன்னும் வரல. வாணி கண்ணின் பெயரை சத்தம் போட்டுக்கொண்டே கொல்லைக்கு வந்தவள் கண்ணன் கீழே கிடைப்பதை பார்த்து வந்தவளுக்கு இதயம் நின்று இயங்கியது. கண்ணன் இறந்துவிட்டான் அவனின் கை குட்டையில் கிடக்க சில புழுக்கள் அவன் கையில் ஏரிச்சென்றது...
எனது பெயர் பிரதீப், காரைக்கால் மாவட்டம் கிழிஞ்சல்மேடு கிராமம். (இரை) இது எனது முதல் சிறுகதை
மின்னஞ்சல் : mpradheep04@gamil.com
தொலைபேசி : 9047020722
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்