logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Sumathi Rani A

சிறுகதை வரிசை எண் # 31


இனி இப்படித்தான்...... எப்படி தொடங்குவது என தெரியாமல் யோசித்துக் கொண்டே இருக்கின்றாள் மீனா.... எத்தனை யோசித்தும் நகுலிடம் ஏன் என்னால் பேச முடியவில்லை சே....ஏன் நான் இப்படி இருக்கேன்.... மனப்போராட்டங்களை வெல்ல முடியாமல் தனக்குள்ளாகவே பேசிக் கொண்டே இருக்கின்றாள்... சரி இனி யோசித்து ஒரு பிரயோஜனமும் இல்ல எப்படியும் அவன் கிட்ட இத நாம சொல்லியே ஆகணும்.... ஆனா அவன் எப்படி எடுத்துப்பான்னு தெரியலையே அதை யோசிக்க தான் ரொம்ப குழப்பமா இருக்கு.. சரி ஒரு சீட்டு எழுதி போட்டு பார்க்கலாம் சொல்லவா வேணாமான்னு சொல்லலாம்னு வந்தா உடனே எழுதிட வேண்டியதுதான்.... உடனடியாக பேப்பர் எடுத்து அதைக் கிழித்து கடிதம் எழுதவா வேண்டாமா என்று இரண்டு துண்டு சீட்டுகளை எழுதி போட்டு குலுக்கி பயபக்தியோடு எடுத்து பார்க்கிறான் மீனா.... எழுதலாம்... சீட்டைப் பார்த்ததும் அவளுக்குள்ளாக ஏதோ ஒரு தைரியம் வந்து எழுத தொடங்கினாள்.... அன்புள்ள நகுல்... .... இவனுக்கு எதுக்கு அன்புள்ள..... அதான் வேணாம்னு விட்டுட்டு போயிட்டானே வேண்டாம் வெறுமனே நகுல் போதும் இவனுக்கு... நகுல்..... உங்களுக்கு நான் எப்படி தெரியாது ஆனால் ஆரம்ப கட்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நட்பு தொடர எனக்கும் உங்க மேல ஒரு கிரேஸ் இருந்துச்சு அதனால தான் உங்க தொடுதல் எதையும் நான் தவிர்க்கவில்லை ... எப்ப வெளியே கூப்பிட்டாலும் ஒண்ணா போறது கைகோர்த்து நடக்கிறது நல்லா இருந்துச்சு... அதுக்கப்புறம் மீண்டும் ஒரு சந்திப்பு என்னையும் அறியாமல் எப்ப பார்ப்போம் எப்ப பேசுவாங்க அந்த அளவுக்கு இருந்தது... நம் இருவருக்குமான முதல் கட்ட நட்புல ஏதோ ஒரு விதத்தில் ஈர்ப்பு இருந்தது.,. நீங்க சொன்ன உடனே நான்தான் உங்களை தேடி வந்தேன்.. தவிர்க்க விரும்பல அத நானே ஒத்துக்கறேன்..... அடுத்து எப்போ பாப்போம் அப்படின்ற மாதிரி ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்யும் ஆனா இதுவரைக்கும் நான் சொன்னது இல்ல.... எப்படி சொல்ல.. ஒரு முறை நீங்க தந்த அந்த முத்தம் அன்னைக்கு நான் ஒரு மாதிரி டிஸ்டர்ப் ஆனேன்..... ஹார்ட் மெல்டட் கிஸ் ரெண்டு நாளைக்கு ஒரு மாதிரி மயக்கம் தான்... உங்க கிட்ட என்னால் சொல்ல முடியல.... ஏனோ அவாய்ட் பண்ண முடியல... வேணாம்னு சொன்னாலும் உள்ளுக்குள்ள இன்னும் வேணும்னு தான் இருந்துச்சு ஆனாலும் தவிர்த்தேன்.... காரணம் ஒரு விதமான பயம் தான்... கமிட் பண்ணிக்காத இது ஒரு ஜஸ்ட் லைக் தட் ரிலேஷன்ஷிப் தான்னு சொல்லி இருக்கலாம்.... அப்புறம் நான் தான் சொல்லிட்டேன் நான் அதுக்கு எல்லாம் சரிபட்டு வரமாட்டேன்னு.,. நீங்க தான் அதெல்லாம் பாத்துகலாம் னு சொன்னீங்க .... அதுக்கு அப்புறம் உங்க நிராகரிப்பு... என்னனூ தெரியாமல் இருக்கிறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு எதுவா இருந்தாலும் சொல்லி இருக்கலாம்... விலக முடிவு செய்தபின் காரணம் என்னனு சொல்லிருந்தா ஆறுதலாக இருந்திருக்கும்... காரணமே இல்லாமல் விலக்கப்படுறது ரொம்பவே கடந்து போக கஷ்டமா இருக்கு.... இருப்பினும் இதுவரை நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி 🙏 இப்படிக்கு மீனா.... கடிதத்தை பார்த்ததும் மீண்டும் பேசு முயற்சி பண்ணாதீங்க நீங்க திரும்ப என்னோட பேசி என்ன காரணத்தை சொன்னாலும் என் மனம் ஏத்துக்க போறது கிடையாது அதனால நானும் எதுவும் பேச விரும்பல ஆனாலும் என் மனதில் இருப்பதை உங்ககிட்ட சொல்லனும்னு நெனச்சேன் நான் சொல்லிட்டேன் குட் பாய்..... மெல்லிறகாக படபடத்து கொண்டே கடிதத்தை அவரிடம் சமர்ப்பிக்கிறாள் அவனோட மெயிலில்.... ஏதோ இப்போதுதான் மனசு தெளிந்த நீரோடை போல் இருப்பதாய் உணர்கிறாள் மீனா... சுமதிராணி...

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.